(Reading time: 44 - 87 minutes)

வளுக்கு சில நொடிகள் கழித்தே பொறி தட்ட அவன்  வெறித்து பார்ப்பதைக் கண்டவள்  “யு கண்டினியூ  பாஸ்” என எதுவுமே நடக்காதது போல சொன்னாள்.

 “இன்னைக்கு  ஆரஞ் ஜூஸ்  தான் குடிச்சியா..இல்ல வேற எதுவுமா?” , என முகத்தில் எந்த சலனமும் இன்றி கார்த்திக் கேட்டான்.

“ஐய், துப்பு துலக்கிறதுல கில்லாடி பாஸ். இன்னைக்கு வேற...க்ரேப் ஜூஸ்”  என குழைந்தாள்.

“இவ இப்படி குழையுறா சரியில்லையே” என நினைத்த படி, “எத்தனை வருஷ பழசு வள்ளிக்கண்ணு? என அவன் கேட்க,

“ப்ரெஸ் ஜூஸ் பாஸ்...ஏன் கேக்குறீங்க?”, சந்தியா.

“அப்புறம் ஏன் மப்புல இருக்கிற மாதிரி தள்ளாடி கிட்டு இருக்க?” கார்த்திக்.

“பாஸ், மீ நோ டிரிங்கிங் ஒன்லி ஸ்மோகிங். ஸ்மோக்  பண்ணிட்டு வேலை பாக்க முடியும்.  டிரிங் பண்ணிட்டு வேலை பாக்க முடியுமா?” என ஆரம்பிக்க,

“மொக்கை ட்ராக் ஓட்ட ஆரம்பிச்சிட்டியா? ஆனா இதுலயும் ஒரு நல்லது என்னன்னா உங்க அப்பாக்கிட்ட நீ உதிர்த்த தத்துவத்தை நேரம் கிடைக்கிறப்போ போட்டு கொடுக்குறேன். இப்போ பேக் டு ட்ராக். கடைசியா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.”

“மப்பில இல்லைன்னு சொல்லிட்டேனே பாஸ்” என்றாள் சந்தியா.

“அந்த கேள்வி இல்ல. இந்த ப்ராடக்ட் டிஸ்கஷன் அப்போ கேட்ட கேள்வியை சொன்னேன்” என்றான் கார்த்திக்.

“பாஸ்...ஆக்சுவலா பசில காது அடைச்சு நீங்க பேசுனதே கேக்கலை..ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு ரீப்ளே பண்ணீங்கன்னா நோட் பண்ணிட்டு சொல்றேன்.” என்று விட்டு அவள் அருகில் இருந்த வாழைப் பழத்தை உரித்து சாப்பிட ஆரம்பிக்க, கார்த்திக் அவளை முறைத்தான். “பாஸ் இப்படி பாத்தீங்கன்னா எனக்கு வயிறு வலிக்கும்.” என சந்தியா சொல்ல,   உச் கொட்டிக் கொண்டே தலையில் கை வைத்தவன்,

“மஞ்சிங் மான்ஸ்டர், என் பொறுமைய சோதிக்கிற!!!“ என்று அவளை கடிந்தான்   கார்த்திக்.

“பாஸ் என்னோட ஒர்கிங் ஸ்டைல்  இப்படி தான். ரிலாக்ஸ்டா தான் என்னால வேலை பாக்க முடியும். நீங்க  முதல்ல சொன்னதை சரியா கவனிக்கலை. இப்போ பேக் டு பார்ம். நீங்க ப்ளான் போடுங்க. நான் செய்து முடிக்கிறேன்” என்றாள் சந்தியா.

“ப்ச்... இது ரிக் பராஜக்ட் மாதிரி லட்சம் இல்ல ...மில்லியன்ஸ்ல இன்வெஸ்ட் பண்ணியிருக்கோம்...என்னோட சேவிங்க்ஸ், நிருவோட ப்ராபெர்ட்டி, பேங்க் லோன் அப்படி இப்படின்னு நிறைய காசு இதுல முடங்கியிருக்கு. இதே கான்செப்ட் வேற யாராவது செய்து நமக்கு முன்னாடி ரிலீஸ் பண்ணா நம்ம ப்ராடக்ட், இன்வெஸ்ட்மென்ட், உழைப்பு எல்லாமே அவுட். கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லாம அசால்ட்டா கவனிக்கலைன்னு சொல்ற?!! டைம் இஸ் ப்ரீஷியஸ். திஸ் ப்ராடக்ட் இஸ் மை ட்ரீம். புரிஞ்சிக்க மாட்டியா?” என்று  கார்த்திக்  கோபமாக கேட்டான்..

அவன் சொல்லவதை கேட்டு, “ஒய் அங்ககிரி பர்ட் ஒய்? ஒய்  திஸ் கொலைவெறி?. சந்தியா நாக்கு பிரளலாம் ஆனா வாக்கு...நெவர்.  ஒரே  ஒரு கண்டிஷன். அரை மணி நேரத்திற்கு ஒருக்க பத்து நிமிஷம் ப்ரேக் வேணும். அப்போ தான் என் மூளை ரெப்ரஷ்  ஆகும். ம்ம்ம்??” என கார்த்திக்கிடம் கேட்டாள்.

அவள் சொல்வதை கேட்டு உச் கொட்டிகொண்டே மறுப்பாக தலையசைத்தவன், “5 நிமிஷம் போதும். அதுக்கு இடையில….எதுக்குன்னாலும் நல்லா கேட்டுக்கோ எதுக்குன்னாலும் ப்ரேக் கொடுக்க மாட்டேன்.” என்றான் கண்டிப்பாக.

“அவசரம்னாலுமா..” அவளுக்கு தோன்றியது. அதை போய் சொல்ல முடியமா என விட்டு விட்டாள். பின் இருவரும் வேலையில் கவனம் செலுத்தினர். சந்தியா மூணு மணி நேரத்தில், அவள் அழைத்த அழைப்பில் காபி கோப்பையுடன் வந்து நிற்கும் லக்ஷ்மி புண்ணியத்தில்  மூணு குவளை காபியை குடித்து முடித்திருந்தாள். அவன் திட்டமிடுதலில் திறமையானவன், இவளோ சாதுர்யமாக செயல் படுத்துதலில் வல்லவள்.  இரு நாட்கள் தொய்வு விழுந்த வேலையை மின்னல் வேகத்தில் முடித்துக் கொண்டிருந்தனர்.

ஐந்து மணி ஆகும் போது  கார்த்திக்கிற்கு மீரா அழைக்க, அதை எடுக்க போன கார்த்திக்கை தடுத்தாள்.  “என்ன பாஸ் பாஸ்ன்னு சொல்லிட்டு  இப்போ நீ தான் ஆர்டர் போடுற” என  சிரித்தான். “ வெட்டி பேச்சு போதும். பிரேக் டைம்ல் உங்களுக்கு ஒரு நிமிஷம் கட்” என அவள் சொல்ல, “யப்பாடி” என்று மேலும் சிரித்தான். “தீயா வேலை பாப்பா சந்தியா” என்றாள் கண்களை சிமிட்டிய படி.

அவளின் சிமிட்டிய கண்களை ரசித்தவன், “வேலை பாக்கட்டினாலும் பத்த வைக்கிற.” என்றவன், “அண்ணி ஏதாவது தேவைன்னா தான் போன் பண்ணுவாங்க. இரு. என்னன்னு கேட்டுடுறேன்” என மீராவை அழைத்தான்.

“நீங்க வேண்டாமே. மது தனியா போய் பழகட்டும் அண்ணி.” என்று போனில் சொன்னவன், மேலும்,  “அதெல்லாம் நித்தி, நிக்கி இருந்துப்பாங்க. இருங்க ஒரு நிமிஷம்” என்று விட்டு, சந்தியாவிடம் “யாழினியும், அர்விந்தும்  வீட்டில இருப்பாங்க தான?. நித்தி நிக்கியை மது கூட்டிகிட்டு உங்க வீட்டுக்கு வருவா. உனக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லையே” என கேட்க, “அக்கா கோவிலுக்கு போகணும்னு சொன்னாங்க. ஆனா அந்த ப்ளான் கான்செல் பண்ணியாச்சு. அவங்க வர்றதுல்ல எந்த ப்ரிச்சனையும் இல்ல. சக்தியும் மாமி கூட எங்க வீட்டுக்கு வர்றா ” என பதிலளிக்க,  “ஓ” என்றவன் போனில் காத்திருந்த மீராவிடம் “அண்ணி நான் ஒரு அஞ்சு நிமிசத்தில டெக்ஸ்ட் பண்றேன்” என போனை வைத்து விட்டு, சந்தியாவிடம் “அப்போ மதுவை நாளைக்கு வர சொல்றேன்” என்றான்.

“ஏன் கார்த்திக், யோசிக்கிறீங்க. சக்தி எப்படி பட்டவன்னு  உங்களுக்கு தெரியும் தான. அவங்க அம்மா பட்டு மாமி,   ஊர் வம்பு, புரணி பேசுற டைப் இல்ல. பாசிடிவ் ஆன ஆளு. மது மீட் பண்ண வேண்டிய கேரக்டர். அவளை  இப்படியே பொத்தி வைச்சீங்கன்னா அவ என்னைக்கு நாலு பேரு கூட பழகுவா?” என கேட்டாள் சந்தியா. அவள் சொன்னது அவனுக்கு திருப்தி அளிக்க, “ம்.. சரி உன்னை நம்பி அனுப்புறேன். அவகிட்ட ரிக் கால்லுன்னு சாக்கு சொல்லியிருக்கேன். அது ஒரு பத்து நிமிஷம் தான் இருக்கும். காலுக்கு தேவையானது எல்லாமே மதுக்கிட்ட இருக்கு. பாத்துக்கோ” என்றான்.

“ஹ்ம்..சரி பாக்குறேன். மதுக்கு  ஏன் பாஸ் கவுன்சிலிங் இந்த மாதிரி ட்ரை பண்ணலை?” எனக் கேட்டாள் சந்தியா.

“அத்தைக்கு எத்தனை கவுன்சிலிங் கொடுத்திருப்போம். எதுவும் வொர்க் அவுட் ஆகலை. சாகுற வரைக்கும்  அவங்க மாறவே இல்லை. டு பி பிராங்க், மதுவை சைக்க்காலாஜிகல் கவுன்சிலிங் கொடுக்கிறது எங்களுக்கு இஷ்டமில்லை. எங்களை விட நிருவுக்கு சுத்தமா பிடிக்கலை. கல்யாண பேச்சு பேசுனா அவளுக்கு பிடிக்காது தான? அதை ஏன் பேசி அவளை காயப் படுத்தனும்? அவளா மாறட்டும். இல்லாட்டினா என்ன? நாங்க இப்படியே இருந்துட்டு போயிடுவோம். இப்போ என்கிட்ட  வாரம் ஒருமுறை பேசுறா அதுவே போதும் எனக்கு”ன்னு சொல்லிட்டான். மது உன்னை விட ஒரு ஆறு மாசம் தான் மூத்தவ. அதுனால நாமளே அவ மனசை மாத்த  முயற்சி பண்ண இன்னும் டைம் இருக்கு. வேற வழியில்லைன்னா தான் கவுன்சிலிங்.” என்றான் கார்த்திக்.

“இப்படியே நிரு ஒரு தலை ராகம் பாடிக்கிட்டு இருந்தா சமந்தா சாயல்ல இருக்கிற மதுவை யாராவது கொத்திட்டு போகப் போறான்.” என்றாள் சந்தியா.

“அதுக்கு வாய்ப்பே கொடுக்க மாட்டேன் வல்லிகண்ணு. நானும் நிருவும்  ஜூன் 4, திங்கட் கிழமை சென்னைல ஒரு மீட்டிங்க்கு அட்டென்ட் பண்றோம். அதை முடிச்ச பிறகு நான் USக்கு போயிடுவேன். நிரு மலேசியாக்கு போயிடுவான். உன்னோட காலேஜ் வைவா வாஸ் ஜூன் 1, வெள்ளிக்கிழமை தான சென்னைக்கு போக வேண்டியிருக்கும்ன்னு சொன்ன. உன் கூட நானும் மதுவும் வர்றோம். நிருவை வெள்ளிக்கிழமையே வரச் சொல்லிட்டேன். நாலு நாள் டைம் இருக்கு. மதுவும் நிருவும் பாத்து, பேசி இவுங்களுக்கு  ஒரு அண்டர்ஸ்டேன்டிங் வர்றதுக்கு ஒரு சான்ஸ் உருவாக்கி கொடுப்போம். நீ என்ன சொல்ற? ” என்றான் கார்த்திக்.

வியப்பு, குழப்பம், அதிர்ச்சி, ஆர்வமென பல உணர்ச்சிகளின் கலவை அவள் முகத்தில் பிரதிபலிக்க, “கார்த்திக் நான் சென்னை போறதை ஒரு இன்பர்மேஷனுக்கு சொன்னேன். நல்லாயிருந்தா ஒரு தடவை சொல்லியிருப்பேனா? அதை நியாபகம் வச்சு நீங்க இவ்வளோ ப்ளான் பண்ணியிருக்கீங்க. ” என கேட்டாள்.

“என்கிட்ட வார்த்தைய கவனமா விடணும் வல்லிகண்ணு. ஒவ்வொரு வார்த்தையும் இங்க இருக்கும் என மூளையை குறிப்பது போல ஆட்காட்டி விரலால் நெற்றியின் வலது ஓரத்தில்  தட்டிக் காட்டினான்.” என்றான் கார்த்திக்.

“நானும் தான்… ஆனா அங்க இல்லை என் மனசுல”  என தனக்குள்  சொல்லிக் கொண்டாள். “இன்னும் என்னல்லாம் திட்டம் போட்டு வைச்சுருக்கீங்க? ப்ச் என் பர்ண்ட்ஸ்ஸோட இருக்கலாம்ன்னு நினச்சேன்.” என்றாள் கவலையாக.

“சென்னை ஈசிர் ரோட்ல எங்களுக்கு ஒரு பீச் ஹவுஸ் இருக்கு. அங்க இருந்து உங்க காலேஜ் பக்கம் தான? உன் ப்ரண்ட்ஸ் கெட் டு கேதர் அங்க வைக்கலாமே? ஒரு 20 பேர் தாராளமா தங்கலாம். மாடி கேர்ல்ஸ் எடுத்துக்கோங்க. கீழ பசங்க எடுத்துகிடலாம்.  வாட் டு யு  சே?”

“அப்பா அதுக்கெல்லாம்  விட மாட்டாங்க. அங்க ஸ்ரீ வீடு, இல்லாட்டி ஹாஸ்ட்டல் இந்த ரெண்டுல ஒண்ணுல  தான் தங்க வேண்டியிருக்கும்” என்றாள் சந்தியா.

“அங்க இருந்தா உன்  ப்ரண்ட்ஸ்ஸோட எப்படி இருக்க முடியும்? சரி உன் இஷ்டம். இந்த ப்ளான் ஓகேன்னா மேல பேசலாம்.” என்றவனுக்கு யோசனையோடே  “ப்ரண்ட்ஸ்கிட்ட பேசிட்டு நான் சொல்றேன் பாஸ். ஆனா…... “ என பதிலை முடிக்காமல் இழுக்க, அவன்  “ஆனா?? “ என மேலே பேச தூண்ட, “எங்க பசங்க வீடை நாறடிச்சுடுவாங்க. அப்புறம் என்னை குறை சொல்லக் கூடாது. ஓகேவா?” என்றாள் சந்தியா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.