“ஆமாம்ணா நம்ம ஆபீஸ்லதான், நான் அப்பவே உங்கப்பாகிட்ட பேசிட்டேன் என் நிலைமையையும் தங்கச்சி பத்தியும் சொன்னேன், அவரும் சரின்னு சொன்னாரு. உங்க தம்பி தினகரன் புதுசா ஒரு ஷோ ரூம் திறக்கறாப்ல அதுல வேலையில சேர்த்துட சொல்லி சொல்லிட்டாரு”
“அதுக்கு இன்னும் 2 வாரம் இருக்கே”
“இருக்கட்டுமேண்ணா கடை திறந்ததும் அவளை சேர்த்துடறேன்”
“அதுவரைக்கும்”
“அதுவரைக்கும் அவள் பத்திரமா ஹாஸ்டல்லயே இருக்கட்டும்”
“முடியாது நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்”
“ஏன் என்னாச்சி இப்ப”
”இல்லை அவள் ஹாஸ்டல்ல இருந்தா மென்ட்டலா டிஸ்டர்ப் ஆயிடுவா” என்றான் ரிஷி
“அதுக்கு”
“அவளை நாளைக்கே வெளிய வர சொல்லி வேலையை கொடுத்துட்டா நல்லாயிருக்குமே”
“யாருக்கு நல்லாயிருக்கும் அவளுக்கா இல்லை அவளை பார்க்கற சாக்கில இருக்கற உங்களுக்கா”
“டேய் அடிவாங்காதடா நான் அவள் நல்லதுக்குதான் பேசறேன்”
“எது நல்லது என் தங்கச்சியை பார்த்துக்க எனக்கு நல்லாவே தெரியும் நீங்க கவலைப்படாதீங்கண்ணா”