”பாரு நல்லா பாரு நீ மறைச்ச உண்மை இதுல தெரியுது பாரு” என சொல்ல அவனோ அந்த பைலை வாங்கிப் பார்த்தான்
ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், தைராய்டு டெஸ்ட், எச்ஐவி டெஸ்ட், இசிஜி எம்ஆர் ஸ்கேன் என அனைத்து டெஸ்ட்டுக்களும் எடுக்கப்பட்டு அதற்கான ரிசல்ட்டுகளும் இருந்தது அதில் அவனுக்கு ஆண்மையில்லை என்ற ரிசல்ட்டும் இருக்கவே அதைக் கண்டு அதிர்ந்து அவளைப் பார்த்தான் அவளோ கோபத்தின் உச்சியில் இருந்தாள்
”இது பொய் ஹரிணி இது சுத்தமா பொய்”
”துரோகி, பச்சை துரோகி“
”இல்லை சத்தியமா இதை நம்பாத, இது பொய், யாரு சொன்னா எனக்கு ஆண்மையில்லைன்னு, நான் நல்லாதான் இருக்கேன்“
”போதும் தருண் என்னை ஏமாத்தினது போதும், உன்னை போய் நம்பினேனே என்னை சொல்லனும்“
”ஹரிணி சத்தியமா நான் சொல்றதை நம்பு, இந்த ரிசல்ட் தப்பு”
”எப்படி உங்களால எனக்கு துரோகம் இழைக்க முடிஞ்சது”
”ப்ச் என்ன பேசற, நான்தான் இது பொய்யுன்னு சொல்றேன்ல“
”எது பொய், ஆஸ்பிட்டல்ல எடுத்த டெஸ்ட் இது, பொய்யுன்னு சொன்னா நான் எப்படி நம்பறது“
”இதையெல்லாமா டெஸ்ட் எடுப்பாங்க“
”இப்ப அதுவா முக்கியம் உண்மையை ஏன் மறைச்சீங்க“