(Reading time: 8 - 15 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

அவள் சொன்ன ‘நீங்க நினைக்குற மாதிரி எனக்கும் ஏதாவது தோணனும் தானே’ பகுதி விக்கிராந்தை யோசிக்க வைத்தது! ஆனாலும் இப்போதைய பேச்சுக்கு இடையூறு வந்து விடக் கூடாது என்று அதை பின்னே தள்ளி விட்டு,

   

“நான் தான் சொன்னேனே ப்ரியா, ஒருத் தடவை எல்லாத்தையும் ஃபிரான்க்கா மனசு விட்டு பேசிடுவோம். நாம இரண்டுப் பேருமே குழந்தைங்க கிடையாது, அடல்ட்ஸ். நம்ம எதிர்கால வாழ்க்கையை நாமளே பேசி முடிவு செய்யலாம்,” என்றான்.

   

“பேச என்ன இருக்கு? எனக்கு ஆம்பளைங்கனாலே பிடிக்கலை! உங்க இனத்தை நினைச்சாலே அருவெறுப்பா இருக்கு!”

   

“என்னையும் அப்படியா நினைக்குற???”

   

பல்லைக் கடித்துக் கொண்டிருந்த ப்ரியா, விக்கிராந்த் அந்தாஹ் கேள்வியைக் கேட்ட விதத்தில் அவளையும் அறியாமல் அவனைப் பார்த்தாள்.

   

அவளின் பார்வையின் முழுப் பொருள் புரியாத போதும், அவனை அவள் அந்த ‘அருவெறுப்பு’ கேட்டகரியில் வைக்கவில்லை என்பது புரிந்ததால், விக்கிராந்தின் முகம் மலர்ந்தது!

   

“உன் மனசுல இருக்க வலி, கோபம் எல்லாத்தையும் என்னால புரிஞ்சுக்க தான் முடியும். அதை குறைக்க என்னால முடிஞ்ச அளவு முயற்சி மட்டும் தான் செய்ய முடியும். ஆனால் அந்த வலியை தாண்டி வரது உன் கிட்ட தான் இருக்கு. நீ கொஞ்சம் முன்னாடி கேட்ட கேள்விக்கு, நான் அப்படி எல்லாம் எப்போவுமே எதுவுமே சொல்ல மாட்டேன், பேசவே மாட்டேன்னு ஈசியா சத்தியம் செய்து தரலாம்! ஆனால் அது தேவையா? தன்னிரக்கமும், சுய பச்சாதாபமும் தான் யாருக்கும் முதல் எதிரி, அதை நம்ம பக்கத்துல கூட வர விட கூடாது! நான்னு இல்லை இந்த உலகமே உன்னை என்ன சொன்னாலும் கூட ஹர்ட் ஆறதும், ஆகாததும் உன் கையில தான் இருக்கு! உன் வாழ்க்கையை நீ தான் வாழ்ந்தாகனும்! நமக்காக மத்தவங்க வாழ முடியாது! அதே போல அடுத்தவங்க சொல்றது என்னை காயப் படுத்திரும்னு சொல்றது ஸ்டுப்பிடிட்டி!"

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.