(Reading time: 8 - 16 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

ஒரு ஹெல்ப் வேணுமே...”

   

“என்ன ஹெல்ப் கீர்த்தி?”

   

“என் காரை சர்வீஸுக்கு அனுப்பனும், என்னை நாளைக்கு காலையில ஆஃபிஸ்ல ட்ராப் செய்ய முடியுமா?”

   

“ஓகே... ஷ்யுர்...”

   

“மார்னிங் எய்ட் தர்ட்டிக்கு எனக்கு ஒரு கால் இருக்கு...”

   

“அதுக்கு முன்னாடி சீக்கிரமாவே ட்ராப் செய்திடுறேன் மஹாராணி...!”

   

“தேங்க்ஸ்...” என்ற கிருத்திகாவின் கண்கள் மொபைலின் பக்கம் செல்லவும்,

   

“ஹையையோ, இன்னைக்கு தானே மேட்ச்! நான் மறந்தே போயிட்டேனே,“ என்றப்படி டி.வி யை ஆன் செய்தாள்.

   

மேட்ச் முடிந்து கமெண்டரி போய் கொண்டிருக்க,

   

“ஹை, இந்தியா ஜெயிச்சிடுச்சு... ஐ நோ... ஆஸ்த்ரேலியாவை இந்தியா ஜெயிக்காதுன்னு விஜய் சொல்லிட்டு இருந்தான்,” என்று சந்தோஷத்தில் குதித்தாள்.

   

இந்தியா ஜெயித்ததை விட சிறு குழந்தையாக சந்தோஷப்பட்ட கிருத்திகாவின் செயல் தான் தியாகுவிற்கு சந்தோஷத்தை கொடுத்தது.

   

சற்று முன் ஃபோனில் பேசிய கம்பீரம் என்ன? செய்து தான் ஆக வேண்டும் என்று சொன்ன தோரணை என்ன? கேள்வி கேட்டான் என்று அவனை பார்த்து முறைத்தது என்ன? இப்போது கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்து விட்டதாக துள்ளி குதிப்பதென்ன...

   

வர்ண ஜாலமாய் மாறும் கிருத்திகாவின் மனநிலை தியாகுவிற்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.