(Reading time: 17 - 33 minutes)

22. என் இனியவளே - பாலா 

En Iniyavale

னைவரின் பார்வையும் தன்னிடமே இருப்பதை கண்ட இளவரசனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஏதோ இப்போது தான் எல்லோரும் நடந்ததை மறந்து விட்டு சாதாரணமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதுவும் இப்போது கெட்டு விடுமோ என்று பயந்தான்.

எல்லோரையும் ஒரு முறை பார்த்தான்.

அதிலும் இனியாவின் தாயை மட்டும் அவனால் எதிர்கொள்ளவே இயலவில்லை.

திடீரென்று ஏதோ முடிவு செய்தவனாக அபியிடம் திரும்பி “இல்லடா அபி, நீ என்ன அப்படி கூப்பிட தேவையில்லை. என்னை நீ அங்கிள்னே கூப்பிடு” என்றான்.

அபி “ஏன்” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவன் எழுந்து சென்றுவிட்டான்.

திரும்ப எல்லோராலும் சகஜமாக இருக்க இயலவில்லை.

நிலைமையை சகஜமாக்க எண்ணி ராஜகோபாலும் ஏதோ பேச முயற்சி செய்து தோற்றார்.

பின்பு அவசரமாக உண்டு முடித்து அனைவரும் கிளம்பினர்.

ஜோதிக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பி சந்துருவிற்கு போன் செய்தாள்.

“சொல்லுங்க அண்ணி”

“என்ன சந்துரு சொல்ல. நம்ம என்ன யோசிச்சும் எதுவுமே உருப்படியா ஐடியா கிடைக்கவே இல்லையே. என்ன தான் பண்றது சொல்லு”

“ஆமா அண்ணி. ஒரு ஸ்டெப் முன்ன வைச்சா, ரெண்டு ஸ்டெப் பின்னாடி போகுது. அண்ணன் அப்போ வீட்டுல இருந்து கிளம்பி இப்ப தான் வீட்டுக்கு வந்தாரு, வந்து சாப்பிட கூட இல்லை, பசிக்கலைன்னு அவர் ரூம்க்கு போயிட்டாரு, அம்மா வேற பீல் பண்ணாங்கன்னு அவர் கிட்ட பேச போனா ஒரே வார்த்தைல போயிடு இங்கிருந்துன்னு சொல்லிட்டாரு.”

“இதுக்கு என்ன தான் முடிவுன்னே தெரியலையே”

“இதுல நம்ம ரெண்டு பேரும் என்ன தான் மண்டையை உடைச்சி யோசிச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது. இனியா அண்ணி மட்டும் தான் இதுல ஏதாச்சும் பண்ணணும்”

“என்ன சந்துரு சொல்ற. அவளே பயங்கர டென்சன்ல இருக்கா.”

“ஓ மேடம் டென்சன்ல இருக்காங்களா. வெயிட் பண்ணுங்க. கான்பிரன்ஸ் கால் போடறேன்”

இனியா போனை எடுத்த உடனே “சந்துரு உங்க அண்ணனுக்கு என்ன அவ்வளவு கொழுப்பு. ரொம்ப தான். இதெல்லாம் ஓவர்ன்னு சொல்லிடுங்க. சொல்லிட்டேன்” என்று பொரிந்து தள்ளி விட்டாள்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜோதியோ சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

சந்துரு போனில் சிரிப்பு சத்தம் கேட்கவும் இனியா குழம்பி போய் “ஹலோ ஹலோ யாரு” என்றாள்.

சந்துரு “நீங்க ஏன் அண்ணி சிரிக்கறீங்க” என்றான்.

“ஹலோ சந்துரு. இருக்கீங்களா. நான் சிரிக்கலை சந்துரு” என்றாள்.

“அட உங்களை சொல்லலை அண்ணி. உங்க அக்காவும் லைன்ல இருக்காங்க. அவங்க தான் சிரிச்சாங்க”

“ஏன்க்கா உனக்கு என்ன பார்த்தா சிரிப்பா இருக்கா” என்றாள் இனியா கோபமாக.

இப்போது சந்துரு சிரிக்க ஆரம்பித்தான்.

“சந்துருருருருருருரு”

“சரி சரி அண்ணி நான் சிரிக்கலை, முதல்ல உங்க அக்காவை ஏன் சிரிச்சாங்கன்னு கேளுங்க”

“ஹேய் இல்லை டீ. நீ போனை எடுத்த உடனே விலாசு விலாசுன்னு விலாசுனியா. அதான் சிரிச்சிட்டேன்”

“ஏன் அண்ணி. உங்களுக்கு அவங்க என்னை திட்டினா இப்படி சிரிப்பு வருதா. பார்த்துக்கறேன்”

“சரி உங்க சண்டைய அப்புறம் வச்சிக்கங்க. இப்ப எனக்கு எதுக்கு போன் பண்ணீங்க. அதை சொல்லுங்க முதல்ல. இப்படி மாத்தி மாத்தி சிரிக்கறதுக்கு தான் போன் பண்ணீங்களா” என்றாள் இனியா.

“பர்ஸ்ட் நீங்க கூல் ஆகுங்க அண்ணி. ஏன் இவ்வளவு டென்சன்”

“பின்ன உங்க அண்ணனுக்கு ஏன் அவ்வளவு திமிரு. சொல்லுங்க”

“அண்ணன் என்ன பண்ணாரு அண்ணி.”

“அவரு ஏன் அப்படி சொன்னாரு சந்துரு”

“என்ன நீங்க இப்படி கேட்கறீங்க. அந்த சிடுவேஷன்ல வேற என்ன பண்றது.”

“அவரு அப்படி பேசனதால மட்டும் எல்லாரும் அங்க நார்மலா ஆகிட்டாங்களா என்ன. இவர் ஏன் தேவை இல்லாம பேசினாராம். அவ ஏதோ சின்ன பொண்ணு. ஏதோ சொல்லிட்டு போறா. அதுக்கு இவர் ஏன் ரெஸ்பான்ஸிபிலிட்டி எடுத்து பதில் சொல்லணும். எல்லாருக்கும் தெரிஞ்ச விசயத்துக்கு நாம ஏன் இப்படி பதில் சொல்லணும்.”

“அண்ணி நான் ஒன்னு சொல்றேன். தப்பா நினைச்சிக்காதீங்க. நீங்க ஒரு விஷயத்தை பண்ணும் போது அது மட்டும் தப்பு இல்லை. இப்ப அண்ணன் அதையே பண்ணும் போது அது தப்பா”

ஒரு நிமிடம் அமைதியாக இருந்த இனியா “இப்பவும் நான் பண்ணதுல எனக்கு எந்த தப்பும் இருக்கற மாதிரி தெரியலை சந்துரு. உங்க அண்ணன் பண்ணதையும் எதுவும் சொல்றதுக்கில்லை தான். ஆனா எல்லாருக்கும் நாங்க விரும்பனோம்ன்ற மாதிரியாச்சும் தெரியும்ல, அப்புறம் எதுக்கு நாம அவங்களுக்கு விளக்கம் கொடுக்கணும்ன்றது தான் எனக்கு”

ஜோதி இடை புகுந்து “சரி விடுங்க. இப்ப எதுக்கு நீங்க ஏதோ தேவை இல்லாம விவாதம் பண்ணிட்டிருக்கீங்க. ப்ராப்ளம் சால்வ் பண்ண ஏதாச்சும் சொல்யூஷன் கிடைக்குதான்னு பாருங்க”

“நான் இப்பவே எந்த சொல்யூஷன் கூட எதிர்பார்க்கலை அக்கா. இளா ஏன் அக்கா இப்படி பண்றாரு. அதான் எனக்கு கஷ்டமா இருக்கு”

“ம்ம்ம். அதை உன்னால தான் சரி பண்ண முடியும்ன்னு சந்துரு சொல்றாரு”

“நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து காமெடி பண்றதுக்கு நான் தான் கிடைச்சேனா”

“ஏய் இல்லைடி. நிஜமா சந்துரு தான் இப்படி சொன்னாரு”

“அண்ணி நிஜமா தான் சொல்றேன்.”

“---“

“என்ன அண்ணி ஏதும் பேச மாற்றீங்க.”

“இல்ல எல்லாம் தெரிஞ்சும் நீங்க இப்படி பேசினா நான் என்ன சொல்றது”

“அண்ணி நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. இன்னைக்கு நீங்க எவ்வளவு பேசினீங்க. ஆனா அண்ணனால உங்களை எதுவுமே கோபமா சொல்ல முடியலையே. சோ இது தான் நம்மளோட ஸ்ட்ரோங் பாயிண்ட். அதனால இந்த விசயத்துல நீங்க தான் ஏதாவது பண்ணணும். நாங்க யாரும் எதுவும் பண்ண முடியாது. புரிஞ்சிதா”

“ஹேய் ஆமா சந்துரு. கரெக்ட். அப்படினா இவ தான் இதை சரி பண்ணணும். இளவரசன் சரி ஆகிட்டாளே போதும். அப்பாக்கு ஏற்கனவே டபுள் ஓகே. அப்புறம் எல்லாரையும் கொஞ்ச கொஞ்சமா சரி பண்ணிடலாம்.”

“பார்த்துக்கறேன் அவரை” என்றாள் இனியா ஒரு மாதிரி குரலில்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.