(Reading time: 17 - 33 minutes)

ய் என்னடி ஏதோ ரொம்ப கோபமா சொல்ற”

“பின்ன என்னவாம். எல்லாம் சரி ஆகட்டும். அப்புறம் அவர் கதறதை நீ கேட்க தானே போற”

“அண்ணி நானும் இங்கே தான் இருக்கேன். என்னை வச்சிட்டே இப்படி பேசறீங்க”

“ம்ம்ம். எனக்கு என்ன பயம். உங்க அண்ணன் எதிரிலேயே நான் சொல்லுவேன். நீங்க இருந்தா எனக்கு என்ன பயம்”

“அது சரி. எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் மாட்ட வேண்டிய இடத்துல மாட்ட வேண்டியது தான். யாராலையும் காப்பாத்த முடியாது”

“தெரிஞ்சா சரி”

ளவரசன் தன் மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தான். அதில் வந்த இனியாவின் பெயரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் எடுக்கவில்லை.

இனியாவும் பன்னிரெண்டாம் முறையாக முயன்று கொண்டிருந்தாள். அவன் அட்டென்ட் செய்யாததை அவளால் தாங்கி கொள்ளவே இயலவில்லை.

கால் கட் செய்து விட்டு “கால் அட்டென்ட் பண்ணுங்க” என்று மெசேஜ் அனுப்பினாள்.

திரும்பவும் முயன்றாள். அவனோ எடுக்கவில்லை.

“பேச மாட்டீங்களா” என்று அனுப்பினாள்.

திரும்பவும் முயன்றாள். பதில் இல்லை.

“சாக்லேட் வாங்கி தரேன். ப்ளீஸ் பேசுங்க” என்று அனுப்பினாள்.

ஒவ்வொரு முறை முயன்று அவன் எடுக்காததற்கும் ஒரு மெசேஜ் அனுப்பினாள்.

“ஏன் இப்படி பண்றீங்க இளா, யூ ஆர் ஹர்டிங் மீ” என்று அனுப்பினாள்.

இளவரசனுக்கும் கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் அதையும் மீறி அவள் ஒவ்வொரு முறை முயன்று திரும்ப மெசேஜ் அனுப்பியது ஏனோ அவனுக்கு பிடித்திருந்தது.

“அட்லீஸ்ட் ஒரு பிளான்க் மெசேஜ் அனுப்பலாம் இல்ல”

---

“பிளான்க் மெசேஜ் அனுப்பனா எல்லாம் நீங்க கோபமா இல்லைன்னு நான் தப்பா நினைக்க மாட்டேன்ப்பா”

---

“எத்தனை மெசேஜ் அனுப்பறேன். ஒரு ரிப்ளை அனுப்பினா என்னவாம்”

---

“சாக்லேட் பிடிக்காதா, ஐஸ்கிரீம் வாங்கி தரேன்”

---

“வேற என்ன தான் வேணும். ஓவரா பண்ணாதீங்க”

---

“எனக்கும் ஒரு டைம் வரும். அப்ப பார்த்துக்கறேன்”

---

“இளா நிஜமாவே கஷ்டமா இருக்கு. ப்ளீஸ்.......”

---

“அப்படி என்ன பொல்லாத கோபம். அடுத்தவங்களை இப்படி கஷ்ட படுத்தற அளவுக்கு”

 

“முதல்ல நான் ஒரு மெசேஜ் செஞ்சி முடிக்கறதுக்குள்ளே எத்தனை மெசேஜ் சென்ட் பண்ணுவ. இப்ப என்னடான்னா நான் கால் பண்றேன், இத்தனை மெசேஜ் பண்றேன். பட் ரிப்ளை பண்ண மாற்ற இல்ல.”

---

“என்னை பார்த்தா பாவமா இல்லையா”

---

“எனக்கும் தெரியும் இந்த மெசேஜ் எல்லாம் பார்த்துட்டு தான் நீ இப்படி ரிப்ளை பண்ணாம இருக்கன்னு, நான் ப்யுடர்ல இதுக்காக பழி வாங்குவேன். பாரு”

இளவரசன் இதை படித்து விட்டு வாய் விட்டே சிரித்து விட்டான். அன்று நான் அனுப்பியதை போல் அவளும் அனுப்புகிறாள் என்று. ஆனால் ரிப்ளை மட்டும் செய்யவில்லை.

“அதென்ன இவ்வளவு அடம். திஸ் இஸ் டூ மச்”

---

“ஒழுங்கா பேசிடு. இல்லன்னா இதுக்காக நீ ரொம்ப கஷ்ட படுவ”

---

கடைசியாக பொறுத்து பொறுத்து பார்த்து விட்டு “போடா ஸ்டுபிட். அறிவில்லை உனக்கு. கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே இப்படி அழ வைக்கற. நிஜமாவே இதுக்காக நான் உன்னை சும்மா விட மாட்டேன்.” என்று அனுப்பினாள்.

ஆனால் எதற்குமே இளவரசனிடம் இருந்து ரிப்ளை வரவில்லை.

இனியாவிற்கு எப்படியும் அவன் மெசேஜ் பார்த்திருப்பான் என்று தெரியும் தான். ஆனால் ஏதோ நூறில் ஒரு வாய்ப்பாக அவன் பார்க்காமலும் இருந்திருப்பானோ, பார்த்தால் பேசுவானோ, இல்லை ரிப்ளையாவது செய்வானோ என்று அடிக்கடி மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தூங்கிய பிறகும் இடை இடையில் விழித்து மொபைலை எடுத்து பார்த்தாள். ஆனால் அவனோ ரிப்ளை செய்தால் தானே. அந்த கோபத்துடனே உறங்கி போனாள்.

னியா முந்தைய நாள் தான் அத்தனை முறை கால் மற்றும் மெசேஜ் செய்தும் அவன் திரும்ப பேசாததால் இருந்த கடுப்பால் அடுத்த நாள் ஹாஸ்பிடல் வந்து லஞ்ச் டைமில் நேராக கிளம்பி அவனை பார்க்க சென்று விட்டாள்.

போவதற்கு முன்பு சந்துருவிடம் அவன் எந்த பிரான்ச்சில் இருக்கிறான் என்பதையும் கேட்டுக் கொண்டு கிளம்பினாள்.

ஆனால் அங்கு சென்றும் அவனை பார்க்க இயலவில்லை.

இளவரசனுக்கு இவள் வந்த செய்தி அனுப்ப பட்டும் அவன் வேலை நிறைய இருப்பதாக கூறி பார்க்க இயலாது என்று சொல்லி விட்டான்.

ந்துருவின் மூலமாக இனியா இளவரசனை நேரில் காண சென்ற செய்தி ஜோதிக்கு தெரிந்து ஜோதி இனியாவிற்கு கால் செய்தாள்.

நேற்று சந்துரு போல இன்று ஜோதி மாட்டிக் கொண்டாள்.

அவன் மேல் இருந்த கோபத்தை கொஞ்சம் தன் அக்காவிடமும் காண்பித்தாள் இனியா.

“ஏன்க்கா அப்படி என்னக்கா திமிர். நீயே சொல்லு. அப்படியென்ன கோபம். கோபம் இருந்தா நேரா காட்ட வேண்டியது தானே. அதென்ன நேருல போனா கூட, வேலை இருக்குதுன்னு சொல்லி திருப்பி அனுப்பறது. பார்த்துக்கறேன் அக்கா. எனக்கு ஒரு நேரம் வராமலா போயிடும். எல்லாம் உங்களை சொல்லணும். நீங்க எல்லாம் தானே அவருக்கு சப்போர்ட் பண்றது. அதான் இந்த அளவுக்கு திமிர் ஏறி போச்சி. ஏன் நீங்க எல்லாம் போய் ஏன் இப்படி பண்றாருன்னு கேட்கலாம் இல்லை” என்று அவள் கோபம் தீரும் வரை கோபமாக பேசி முடித்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.