(Reading time: 17 - 33 minutes)

டிப்பாவி. இவ்வளவு நேரம் நான் கூப்பிட்டேன். என்னென்னவோ சொன்ன. இப்ப ஒரு பேரை நான் சொன்ன உடனே இப்படி பல்டி அடிக்கறியே”

“ஹிஹிஹி. விடுக்கா விடுக்கா. இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா”

“சரி சரி. அவர் எதுக்கு பெங்களூர் போறாரு. அது உனக்கு எப்படி தெரியும். அதுவும் இல்லாம இங்க ஆபீஸ்லயே நான் போனா என்னை பார்க்கலையே, அங்க போனா பேச முடியுமா, நிஜமாவே மாமா ஏதும் வேலை விஷயமா போறாரா. இல்லை சும்மா சொன்னியா”

“ஹேய் கொஞ்சம் பிரேக் விடுடி. நிஜமாவே மாமா பெங்களூர் போறாரு. அதுவும் யார் கூட உங்க அவர் கூட தான்.”

“என்னக்கா சொல்ற”

“ஆமா டீ. அங்க ஒரு கம்பெனி வாங்கற ஐடியால இருப்பாரு போல, அதோட அக்கௌன்ட்ஸ் எல்லாம் பார்க்கணும்ன்னு வரீங்களான்னு கேட்டாராம். அப்புறம் ஐவரும் அந்த கம்பெனி பத்தி விசாரிச்சாரு, ஏற்கனவே எல்லா டீடெய்லும் கலெக்ட் பண்ணிட்டாரு, கம்பெனில எந்த ப்ராப்லமும் இல்லையாம். ஓனரோட பையன் ஜெர்மன்ல இருக்காராம். அதனால இவரும் இங்க இருக்கற ப்ராபர்ட்டி எல்லாம் வித்துட்டு அங்கேயே போய் செட்டில் ஆக போறாராம். அதான். சோ எல்லா ரெகார்ட்ஸ் கிளியரா இருக்குதாம். சும்மா ஒரு முறை போய் செக் பண்ணா போதுமாம். உன் மாமா என் கிட்ட சொன்னாரு, உடனே நான் தான் இது தான் சான்ஸ்ன்னு பிளான் பண்ணிட்டேன். எப்படி”

“ஐயோ அக்கா. சூப்பர்க்கா சூப்பர். நான் அத்தனை மெசேஜ், கால் எல்லாம் பண்ணியும் பேசலை இல்லை, நானே அதுக்கு சீக்கிரம் பழி வாங்கணும்ன்னு நினைச்சிட்டிருந்தேன். நீ கரெக்ட்டா டைம் பிக்ஸ் பண்ணிட்ட”

“அடிப்பாவி, நான் என்ன நினைச்சி பண்ணா, நீ என்னடான்னா இப்படி சொல்லிட்டிருக்க. வேண்டாம்டீ ஒழுங்கா சமாதானமா போகறதை பாரு”

“ம்ம்ம். அதுவும் தான். பர்ஸ்ட் சமாதானம் தான். அப்புறம் உடனே பழி வாங்கும் படலம் தான்”

“என்னவோ செய். எங்களுக்கு நீங்க ரெண்டு பெரும் சேர்ந்தா போதும்”

“ஓகே ஓகே” என்றாள் உற்சாகமாக.

“ம்ம்ம். இப்ப பேசு. யாராச்சும் ஐடியா செஞ்சா வக்கனையா பேசு. இல்லன்னா அப்படியே சீக்கு வந்தவளாட்டும் பேசறது இல்லன்னா யார் மேலயோ இருக்கிற கோவத்தை ஏமாந்த எங்க மேல காட்டறது”

“சரி சரி விடுக்கா”

பெங்களூர் செல்வதற்கு பாலுவை அழைத்து செல்ல வந்த இளவரசன் இனியாவை பார்த்தும் பார்க்காததை போல் திரும்பி கொண்டான். ஆறு மணி கூட ஆகவில்லை. இவ்வளவு சீக்கிரம் இவள் இங்கு இருப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. சிறிது அதிர்ந்து தான் போனான்.

ஆனால் அதை விட அதிர்ச்சி அவளும் வந்து காரில் அமர்ந்தது. அவனுக்கு என்ன ஏது என்றே புரியவில்லை.

பாலு தான் “அவங்களும் வராங்களாம். நம்ம வேலைல ஏதும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க. அவங்களுக்கு இது பிக்னிக் மாதிரி” என்றான்.

இளவரசன் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை என்பதால் அதை ஜீரணிக்க அவனுக்கு சிறிது நேரம் எடுத்தது.

இனியா அவனை இப்போது கண்டு கொள்ளவே இல்லை.

அபி தான் பேசிக் கொண்டே வந்து பின்பு தூங்கி விட்டாள்.

பெங்களூர்க்கு சென்று இளவரசனும் பாலுவும் மற்ற இருவரையும் பாலுவின் நண்பனின் கெஸ்ட் ஹவுஸில் விட்டு விட்டு சென்றார்கள்.

அவர்கள் வேலையை கவனிக்க சென்ற நேரத்தில் இவர்கள் ஷாப்பிங் சென்று திரும்பி வந்து விட்டார்கள். அவர்களின் வேலை முடிந்து வரவே கொஞ்சம் லேட் ஆகி விட்டதால் நாளை எங்காவது சென்று வரலாம் என்று முடிவு செய்து விட்டார்கள்.

காலையில் சீக்கிரமே வெளியில் செல்ல வேண்டும் என்று சீக்கிரமே சாப்பிட்டு விட்டு உறங்க சென்று விட்டார்கள்.

இனியாவும் காலையில் பேசிக் கொள்ளலாம் என்று எண்ணி உறங்க தான் சென்று விட்டாள்.

ஆனால் அவளுக்கு தூக்கமே வரவில்லை. எனவே இன்றே பேசி விடுவது என்று எண்ணி பதினோரு மணி அளவில் இளவரசன் அறைக் கதவை தட்டினாள்.

இளவரசன் அலைச்சலின் காரணமாக உறங்கி விட்டிருந்தான். முதலில் அவனுக்கு ஏதோ கனவில் யாரோ கதவை தட்டுவது போல் தான் இருந்தது. பின்பு தான் தூக்கத்தில் இருந்து வெளியே வந்து கதவை திறந்தான்.

தான் மட்டும் தூக்கம் வராமல் தவிக்கும் போது தூங்கிக் கொண்டே வந்து கதவை திறந்தவனை பார்த்த இனியாவிற்கு கோபம் தான் வந்தது. அவனிடம் முதலில் சமாதானமாக பேச வேண்டும் என்பதெல்லாம் மறந்து போனது.

“இங்க ஒருத்தி தூக்கம் வராம தவிச்சிட்டு இருக்காளே அப்படி எல்லாம் தோணாம நிம்மதியா தூங்க வேண்டியது இல்ல, அதெப்படி உன்னால மட்டும் முடியுது. நேத்து எத்தனை மெசேஜ் அனுப்பனேன். அதுக்கு ஒரு ரிப்ளை கூட அனுப்ப முடியலையா. முன்ன ஒரு சின்ன மெசேஜ் பண்ணா கூட திரும்ப ரிப்ளை வரும், இப்ப நான் அத்தனை டைம் கால் பண்றேன், மெசேஜ் பண்றேன், ரிப்ளை பண்ணா குறைஞ்சா போயிடுவ” என்று ஒரே அடியாக ஒருமையில் பேசினாள்.

ஆனால் இளவரசனிடம் இருந்து பதில் தான் வரவில்லை. அவளையே உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.

“அன்னைக்கு சாப்பிடும் போது மட்டும் என்னையே திரும்பி திரும்பி பார்த்துட்டு இருந்த, அப்புறம் என்னவாம். நாங்களா வந்து பேசினா உனக்கு இளக்காரமா இருக்குதா. சொல்லு இப்ப எனக்கு பதில் தெரிஞ்சாகனும். இப்ப பேச போறியா இல்லையா” என்று கத்த ஆரம்பித்தாள்.

இளவரசன் திடீரென்று இனியாவை கட்டி அணைத்துக் கொண்டான்.

முதலில் திகைத்த இனியா அவனை தள்ள முயன்று தோற்றாள். அவள் தள்ள தள்ள அவனின் அணைப்பு இறுகியது.

மெல்ல இனியாவும் அமைதியானாள்.

இருவருமே எல்லா பிரச்சனைகளையும் மறந்து இந்த நிமிடம் நிம்மதியாக இருப்பது போல் உணர்ந்தார்கள்.   

தொடரும்

En Iniyavale - 21

En Iniyavale - 23

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.