(Reading time: 17 - 33 minutes)

ப்படியோ அவளை சமாளித்து போனை வைப்பதே ஜோதிக்கு பெரிய விசயமாக போய் விட்டது.

இனியா போனை வைத்த உடனே ஜோதி சந்துருவிற்கு தான் போன் செய்தாள்.

“என்னாச்சி அண்ணி” என்றான் சந்துரு.

“உனக்கு என் மேல இருந்த கோபத்தை தீர்த்துக்கிட்ட இல்ல. எப்படி இப்படி எல்லாம் பிளான் பண்ணி மாட்டி விட்ட”

“ஓஹோ. அப்ப பிளான் சொதப்பிடுச்சா. அது பீல் பண்ற விஷயம் தான் இருந்தாலும், நான் இன்னைக்கு எஸ்கேப் ஆகிட்டேன் போலருக்கே”

“பாவி. நீ பிளான் பண்ணி தானே என்னை இப்படி செஞ்ச”

“இல்லை அண்ணி. இனியா அண்ணி நேர்ல போனா ப்ராப்லம் சால்வ் ஆகிடும்ன்னு தான் நான் நினைச்சேன். இருந்தாலும் எதுக்கும் உங்க கிட்ட சொன்னேன். நீங்க அவசர பட்டு போன் பண்ணி வாங்கி கட்டிகிட்டதுக்கு நான் பொறுப்பா. சொல்லுங்க”

“நீ இதுவும் சொல்லுவ. இதுக்கு மேலயும் சொல்லுவ. இன்னைக்கு உன் டே. சோ நீ நடத்து”

“ஹாஹஹஹா. நீங்க இப்படி பேசறதை கேட்கறதுக்கு எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா”

னியாவிற்கு வீட்டிலும் நிலைமை சரியில்லை. அம்மா முன்பு போல் சரியாக பேசுவதில்லை. எதை பற்றி பேசினாலும் இப்போதெல்லாம் அவளுக்கு எதையும் சரியாக முடிவெடுக்க இயலவில்லை என்று கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்.

முன்பெல்லாம் என் பொண்ணு எதை செஞ்சாலும் சரியா தான் செய்வா என்று சொல்லும் அம்மா, இன்று இப்படி பேசுவதை அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அப்படி நான் என்ன தான் செய்து விட்டேன்.

அம்மாவே எல்லார் வீட்டிலும் உள்ள அம்மாவை போல் காதல் தவறு என்று சொல்லி வளர்த்ததில்லை. ஆனால் இந்த படிக்கும் காலத்தில் செய்யும் காதல் தான் தவறு என்று கூறுவார். அதிலும் அக்காவிற்கே திருமணம் செய்யும் முன்பு யாரையாவது விரும்புகிறாயா என்று கேட்டு விட்டு தான் திருமணம் செய்தார்கள். ஆனால் இப்போது என் நிலைமை ஏன் இப்படி ஆகி விட்டது என்று எண்ணி வருந்திக் கொண்டிருந்தாள்.

னியா நியூஸ் பேப்பரை கையில் வைத்துக் கொண்டு நானும் படிக்கிறேன் என்ற பெயரில் ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தாள்.

ஹாஸ்பிடலில் எப்படியோ நேரம் போய் விடுகிறது. ஆனால் வீட்டிற்கு வந்தாலோ சூழ்நிலையே மாறி நேரம் நகருவதே இல்லை.

ராஜகோபாலும் அங்கு தான் அமர்ந்து கொண்டிருந்தார். அவர் இனியாவை தான் பார்த்துக் கொண்டிருந்தார். பேப்பர் படிக்கிறேன் பேர்வழி என்று அவளின் எண்ணங்கள் இங்கு இல்லாததை பார்த்துக் கொண்டு தான் இருந்தார். ஆனால் என்ன செய்வது. எதையும் தன்னால் சரி செய்ய இயலவில்லையே என்று வருந்துக் கொண்டிருந்தார்.

முன்பெல்லாம் தான் எது செய்தாலும் (தவறு செய்தாலும்) ஏதும் கேட்காத தன் மனைவி இப்போது இந்த விசயத்திற்கு போர்க் கொடி ஏற்றும் போது என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க வேண்டிய நிலையில் தான் இருக்கிறார்.

வ்வாறு அவரவர் அவர்களின் என்ன ஓட்டங்களில் இருக்கும் போதே வீட்டிற்குள் வந்தாள் ஜோதி.

வந்த உடனே அப்பாவிடம் அபியை கொடுத்து விட்டு இனியாவிடம் திரும்பி “இந்த வீக் எண்டு ப்ரீயா” என்றாள்.

“இல்லக்கா. ஹாஸ்பிடல் போகணும்”

“என்னடி இப்படி சொல்ற.”

“என்னக்கா”

“இல்லடீ. நீ ப்ரீன்னா நாம இந்த வீக் எண்டு நாம பெங்களூர் போகலாம்”

“இல்லக்கா. நான் வரல. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எனக்கு ஹாஸ்பிடல் இருக்கு. அதுவும் இல்லாம பெங்களூர் எல்லாம் எனக்கு இண்டரெஸ்ட் இல்லை”

“என்னடி சனிக்கிழமை மட்டும் தானே ஹாஸ்பிடல். லீவ் போட்டுடு. உங்க மாமாக்கு பெங்களூர்ல கொஞ்சம் வேலை இருக்கு.   நாமளும் அப்படியே அவர் கூட போனா, அவர் வேலை முடிஞ்ச பிறகு அப்படியே ஊர் சுத்தலாம். மைசூர் எல்லாம் போயிட்டு வரலாம். என்ன சொல்ற”

“மாமா கூட தானேக்கா போற. நீ போயிட்டு வா. நாம இன்னொரு டைம் போகலாம்.”

இனியாவின் தாய் தந்தை இருவருமே இந்த பேச்சை கேட்டுக் கொண்டு தான் இருந்தார்கள்.

ராஜகோபாலோ “போயிட்டு வாம்மா.” என்றார். மகளின் மனநிலை கொஞ்சம் மாறும் என்று எண்ணி.

ஆனால் லக்ஷ்மியோ இது எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்தார். அவருக்கு ஜோதியின் மேலும் கோபம். அவளும் எல்லாம் தெரிந்தும் தன்னிடம் மறைத்து விட்டாள் என்று. எனவே அவளிடமும் சரியாக பேசுவதில்லை. அவர் பேசுவதெல்லாம் ராஜகோபாலிடம் தான். அதிலும் முக்கால்வாசி சண்டை தான்.

“மாமாக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு. அவர் திடீர்ன்னு வர முடியாம போனாலும் நாம மட்டும் சுத்தி பார்த்துட்டு வரலாம்”

ஜோதி அப்படியே பேசிக் கொண்டே இனியாவை தனியாக வருமாறு கண்ணால் சைகை காண்பித்தாள்.

இனியாவும் “அக்கா நான் ஒரு புது புக் வாங்கி இருக்கேன். என் ரூம்ல இருக்கு வா” என்று அழைத்து சென்றாள்.

ரூமிற்குள் சென்று “என்னக்கா” என்றாள்.

“ஏண்டி ஒழுங்கா கூப்பிட்டா வர மாட்டியா.”

“இதுக்கு தான் உள்ளே வந்தியா. நான் தான் சொன்னேன் இல்லக்கா. எனக்கு லீவ் கிடைக்காது. அதுவும் இல்லாம பெங்களூர் எனக்கு இண்டரெஸ்ட் இல்லக்கா”

“அப்ப நீ வர மாட்ட”

“இல்லக்கா. நான் ஏற்கனவே லீவ் போட்டுட்டேன். அதான். இந்த ஒரு டைம் நீ போயிட்டு வா. நெக்ஸ்ட் டைம் நாம எங்கயாச்சும் போகலாம். ஓகே”

“போடி இவளே. உனக்காக நான் இவ்வளவு கஷ்டப்படறேன். நீ என்னடான்னா இப்படி பண்ற.”

“என்னக்கா சொல்ற”

“உனக்கு இளவரசனை சரி பண்ணணும்ன்ற எண்ணமே இல்லையா”

“என்னக்கா இப்படி சொல்ற. ஏன் இல்லாம”

“அப்புறம் என்ன. கூப்பிட்டா வர வேண்டியது தானே”

“அக்கா. அப்படின்னா அவரும் பெங்களூர் வராரா”

“ஆமா டீ அறிவே”

“அப்படின்னா சரிக்கா. நான் வரேன்” என்றாள் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.