(Reading time: 18 - 36 minutes)

ரியாக அதே நேரத்தில் அங்கே கண்களை மூடிய நிலையில் ப்ளைட்டில் அமர்ந்திருந்தான் இளவரசன்.

மனம் முழுக்க இனியாவின் நினைவுடன் முகத்தில் தானாக புன்னகை பூக்க கண்ணை மூடி அமர்ந்திருந்தவனை பக்கத்தில் இருப்பவர் வினோதமாக பார்ப்பதை கூட அறியாமல் அவன் வேலையை அவன் தொடர்ந்து கொண்டிருந்தான்.

என்ன மாதிரி தருணம் இது. அவளை பார்த்ததிலிருந்து எத்தனை இரவு உறங்காமல் கழிந்துள்ளது. சில நேரம் வருத்தத்தில், சில நேரம் கோபத்தில், சில நேரம் அளவுக்கு மீறிய சந்தோசத்தில் என்று எத்தனை இரவுகள். ஆனால் நேற்று என்ன மாதிரியான இரவு. வருத்தம், சந்தோஷம், ஏக்கம் இப்படி கலவையான உணர்ச்சிகள் கலந்த நிலையில் விழித்திருந்த இரவு.

நாளை வேலை இருக்கிறது, இன்று உறங்க வேண்டும், அதனால் பேச முடியாது என்று அவளிடம் கூறிவிட்டு, ஒரு நிமிடமும் உறங்க முடியாத இரவு.

அவள் வருத்தப்படுகிறாள் என்று ஒரு புறம் வருந்தும் மனது.

முன்பு திருமணம் வேண்டாம் என்று சொன்னாள் என்று அவளிடம் கோபப்பட்ட மனது, இன்று அவள் இந்த திருமணம்(நான்) வேண்டும் என்று வருந்துகிறாள் என்று ஒரு புறம் மகிழ்ச்சி கொள்ளும் மனது என்று உணர்ச்சிகளை மாறி மாறி வெளிப்படுத்தும் மனது.

இப்படி பட்ட எண்ணங்களிலேயே இரவு முழுவதும் உறங்காமல் கடைசியாக முடிவு எடுத்து ப்ளைட் டிக்கெட் புக் செய்து இதோ இப்போது வந்து கொண்டிருக்கிறான்.

நாளைக்கு வேலை இருக்கு என்று பிகு செய்து கொண்டு பேச முடியாது என்று கூறியது என்ன. ஆனால் இப்போது அங்கு வேலை செய்ய இயலாமல் இப்போது போய் கொண்டிருப்பது என்ன என்று எண்ணி சிரித்துக் கொண்டான். (எட்டாவது தடவையாக அவனை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தார் அவனின் பக்கத்து சீட் பயணி) (அவன் அவன் பீலிங் அவன் அவனுக்கு, இவரு ஏங்க இப்படி பார்க்கறாரு)

ந்துரு ஜோதியை பார்க்க அங்கு சென்றிருந்த போது லக்ஷ்மி தான் வந்து கதவை திறந்தார்.

அவனை பார்த்த உடன் ஏதோ கோபம் தான் வந்தது அவருக்கு. எல்லோரும் சேர்ந்து தன்னை முட்டாளாக்குவதை போல் தோன்றியது.

“வா சந்துரு” என்று முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு கூறினார்.

ஆனால் சந்துருக்கோ அது எதுவும் தெரியவில்லை. அவனுக்கிருந்த உற்சாகத்தில் அவன் எங்கே அதை எல்லாம் கவனிப்பது.

“அத்தை நல்லா இருக்கீங்களா” என்றான் உற்சாகமாக.

அவன் பேசிய விதமே லக்ஷ்மிக்கு உறுத்தலை தர, தன்னை தானே திட்டிக் கொண்டு “நல்லா இருக்கேன்ப்பா. நீ எப்படி இருக்க. அம்மா எப்படி இருக்காங்க” என்றார்.

“நல்லா இருக்காங்க அத்தை. ஜோதி அண்ணி எங்கே. நான் அவங்களை தான் பார்க்க வந்தேன்”

“ஓ அப்ப என்னை எல்லாம் பார்க்க வரலியா”

இப்போது என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தவனை பார்த்து சிரிப்பு தான் வந்தது லக்ஷ்மிக்கு.

“சரி சரி. நல்லா முழிக்கற. வா உள்ளே. காபி சாப்பிடறியா, டீ சாப்டறியா” என்று விட்டு கிச்சனுக்குள் நுழைந்தார்.

“அத்தை அத்தை. ஜோதி அண்ணி எங்கே. அதை முதல்ல சொல்லுங்க”

“ஐயோ ஒரு நிமிஷம் இரு” என்று கூறி விட்டு சிறிது நேரத்தில் வெளியே வந்தவர் “இரு நான் போய் ஜோதியை கூப்பிடறேன்” என்று “ஜோதி ஜோதி” என்று கூப்பிட்டுக் கொண்டே சென்றார்.

ம்ம்ம். நம்ம ஒரு ஹாட் நியூஸ் சொல்லலாம்ன்னு வந்தா இங்க யாருனா அதை ஹாட்டா சொல்ல விடறாங்களா, அது ரொம்ப ஆறிப் போனவுடனே தான் சொல்ல முடியும் போல என்று வாய் விட்டு புலம்பிக் கொண்டிருந்தவனை

“எக்ஸ்கியூஸ் மீ” என்ற குரல் தடுத்து நிறுத்தியது.

அந்த குரல் கேட்டு திரும்பியவனின் முன் “அவனை பார்த்து சிரித்துக் கொண்டே (கொஞ்சம் நக்கல் கலந்த சிரிப்புடன்) கையில் காபியுடன் நின்றுக் கொண்டிருந்தவளை வியப்புடன் பார்த்தான்.

சில வினாடிகளுக்குப் பிறகு “காபி. ஹாட் காபி” என்றாள் திரும்பவும்.

“ம்ம்ம்” என்றவாறே வாங்கி கொண்டவன் ‘ஐயய்யோ. நாம  புலம்பியது வெளியே கேட்டுடுச்சி போலருக்கே’ என்று எண்ணிக் கொண்டான்.

பின்பு மெதுவாக “நீங்க” என்றான்.

“ம்ம்ம். நான்” என்றாள் கிண்டலாக.

ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் நின்றவன் பின்பு அவளின் கிண்டலை புரிந்துக் கொண்டு “ம்ம்ம். நீங்க யாருன்னு கேட்கறேன்” என்றான்.

“எதுக்கு இப்ப அதை கேட்கறீங்க. அதை தெரிஞ்சிக்கிட்டு தான் என்ன பண்ண போறீங்க”

“அட என்னங்க நீங்க. அத்தை வீட்ல உங்களை இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லை. திடீர்ன்னு வந்து காபி கொடுக்கறீங்க. யாருன்னு கேட்டது ஒரு தப்பா”

“எனக்கு கூட தான் உங்களை யாருன்னு தெரியாது. ஆனா உங்களுக்கு காபி எல்லாம் கொடுத்து உபசரிக்கலை. தமிழர் பண்பாடை கடைப்பிடிக்கறேன். ஆனா நீங்க என்னடான்னா கொடுத்த காபியை ஹாட்டா குடிக்காம என்னை குற்றவாளி மாதிரி விசாரிக்கறீங்க”

“ஐயய்யோ குற்றவாளி மாதிரி எல்லாம் கேட்கலைங்க. யாருன்னு தெரிஞ்சிக்கலாம்ன்னு தான் கேட்டேன்”

“ஓஹோ”

“ஓஹோன்னா”

“ஓஹோன்னு தான் அர்த்தம். எங்க ஊருல இதுக்கு எல்லாம் வேற அர்த்தம் கத்துக் கொடுக்கலைங்க”

“அது சரி. என்னால உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியாது”

“தெரிஞ்சா சரி”

பேசிக் கொண்டே திரும்பியவனின் பார்வை நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்த ஜோதியின் மேல் படிந்தது.

“என்ன அண்ணி அங்கேயே நிக்கறீங்க. உங்களை எவ்வளவு நேரமா தேடறது”

“என்னது. என்ன தேடினீங்களா. நானும் அவ்வளவு நேரமா இங்கே நின்னுட்டு இருக்கேன். பக்கத்துல ஒரு அழகான பொண்ணு நின்ன உடனே அவளை சைட் அடிச்சிட்டு நின்னிட்டிருந்துட்டு என்னை தேடினேன்னு இப்படி அபாண்டமா போய் சொல்றீங்களே.”

“என்ன அண்ணி நீங்க” என்று சங்கடப்பட்டு, நெளிந்து அவன் அவளை பார்க்கும் போது அவளோ வெட்கப்பட்டு கொண்டிருந்தாள்.

‘என்னடா இது இவங்க இப்படி கிண்டல் பண்றதுக்கு இந்த பொண்ணு இப்படி வெட்கப்படுதே என்று இவன் எண்ணும் போதே அவனுக்குள்ளும் ஒரு சந்தோஷம் பரவுவதை அவனால் தடுக்க முடியவில்லை. ஆனால் அவன் உள் மனதோ அப்படி என்றால் ஸ்வேதா? என்று கேட்டது. ஆனால் அண்ணனுக்கு தான் அதில் விருப்பமில்லையே என்றும், ஆனால் அவர் இனியா அண்ணியின் பேச்சை கேட்டு கொஞ்ச நாட்கள் தன்னை பொறுக்க தானே சொன்னார் என்று மாற்றி மாற்றி அவன் மனசாட்சி ஆர்க்யூ செய்து கொண்டிருந்தது.’

“ஏதோ அத்தை பையன் மாமா பொண்ணு போனா போறீங்கன்னு நானும் விட்டுட்டேன்” என்றாள்.

“என்ன” என்றான் சந்துரு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.