(Reading time: 8 - 15 minutes)

 

வன் கண்களை கசக்கிக் கொண்டு,

"என்னம்மா?அதுக்காக உன் தூக்கத்தை கெடுத்துப்பியா?"

"உன்னை விட தூக்கம் முக்கியமாடா கண்ணா?"

"போம்மா....உன் பேச்சு 'டூ'"

"ஏன்டா கண்ணா?"

"போய் தூங்கனா தான் பேசுவேன்."-அவர் அதிசயமாய் அவனைப் பார்த்தார்.

'என்னாயிற்று இவனுக்கு?சிறு வயதில் பார்த்ததுப் போல் அழகாய் அடம் பிடிக்கிறான்.இந்த உரிமைக்காக தானே இத்தனை வருடமாய் தவம் கிடந்தேன்?"

"அம்மா????"

"என்னடா?"

"என்னாச்சும்மா?நான் பேசுறதை காதுலையே வாங்கலையா?"

"நீ இப்படி குழந்தைத்தனமா பேசுறது...."

"நான் உன் குழந்தை தான்.நான் தான் முதல்ல...."

"ஆமான்டா...கண்ணா!"

"எனக்கு சூடா! ஒரு காப்பி தறீயா?"

"போய் குளிச்சிட்டு வாடா!"

"ம்.....காப்பி குடிச்சிட்டு நல்லா டிபன் சாப்பிட்டு அப்பறம் குளிக்கிறேன்."

"உதை! போ கண்ணா!"

"மாட்டேன்."

"நான் மதுக்கிட்ட சொல்வேன்."

"அட போம்மா! அவ நான் கொஞ்சம்  கத்தி பேசுனாலே அழுதுடுவா...."

"கண்ணா...!!!!!"

"பார்க்க தான் தைரியசாலி....கரப்பான்பூச்சிக்குக் கூட பயப்படுவா!"

"கண்ணா!"

"எனக்கு இப்படி ஒரு ஃபேர்.நம்பவே முடியலை."

"கண்ணா!"

"என்னம்மா?"-அவர் பின்னால் பார்க்கும்படி சைகை செய்தார்.அவனும் திரும்பினான்.கதவருகே மதுபாலா அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் அவளது திடீர் விஜயத்தால் சற்றே திகைத்தவன்,

"நீ எப்போ டி வந்த?"

"நீங்க என்னப் பற்றி பேசும் போதே வந்துட்டேன்."

"ஆ...கண்ணா! நான் போய் உனக்கு காப்பி எடுத்துட்டு வரேன்."

"அம்மா..."

"காப்பி....ஸ்ட்ராங்கா தானே!"-என்று அவர் அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

"அம்மூ...."

"..........."-அவள் ஏதும் பேசாமல் வெளியே செல்ல திரும்பினாள்.

"அம்மூ...எங்கேடி போற?"-அவன்,அவள் முன்னால் போய் நின்றான்.

"வழி விடு!"

"என்னடி கோபமா?"

"போ...நான் பயந்தாக்குளியோ?சாருக்கு நான் செட்டாக மாட்டேனோ?"

"இல்லடி..."

"பேசாத....போ!"-அவன் வாய்விட்டு சிரித்தே விட்டான்.

"என்ன சிரிப்பு?"-ஆதித்யாவின் கால்கள் அந்த அறையின் கதவை மெல்ல மூடியது.

"ஏ....கதவை ஏன் மூடுற?"-அவன் தன் கைகளை அவள் கழுத்துக்கு மாலையாக்கினான்.மதுவின் மூக்கின் நுனியை செல்லமாய் பிடித்து ஆட்டி,

"அழகா கோபப்படுறடி செல்லம்!"-அவள்,அவன் கையை தட்டி விட்டு,

"இந்த சமாளிக்கிற வேலையெல்லாம் வேணாம்."

"ஏன்டி?"

"நான் உனக்கு சரிப்பட மாட்டேனா?"

"ஏ.....நான் சும்மா சொன்னேன்டா!"

"................"-ஆதித்யா அவளை அணைத்துக் கொண்டான்.

"நீ பயந்தாங்குளி தான்...என்னை பார்க்கும் போது,என்கிட்ட பேசும் போது,உன் கண்ணுல தெரியுற,ஒரு விதமான பயம் எனக்கு ரொம்ப பிடிக்கும்டி."

"............."

"அப்பறம்....நீ என்கிட்ட பேசும் போது...வெளியவே காட்டாம அழகா வெட்கப்படுவியே! அங்கே நான் க்ளோஸ்...."-அவள் தலை குனிந்தாள்.

"இதான்டி....செம்மயா இருக்கு.எனக்கு இதை நினைச்சா திமிரா இருக்கும் தெரியுமா?"

"என்ன?"

"ஆமா....இப்படிப்பட்ட அழகு எனக்கு மட்டும் சொந்தமானதுல்ல,அதான்...வேற யாரும் ரசிக்காத,பெண்ணுக்கே உண்டான அழகு!"

"நீ எப்போ இருந்து கவிதை எழுத ஆரம்பிச்ச?"-அவன் மெல்லியதாக சிரித்துவிட்டு,

"ம்....இந்த கவிதையை பார்த்தப் பிறகு தான்."

".........."

"டேய்...அம்மூ...!"

"ம்....."

"நான் உன்கிட்ட ஒரு உண்மையை மறைச்சிட்டேன்டா!"

"என்ன?"

"நான்....."-அவர்களது அறைக் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.ஆதித்யா சென்று கதவை திறந்தான்.குரு நின்றிருந்தான்.

"அண்ணா உன்கிட்ட...."-என்று ஆரம்பித்தவன்,மதுவை பார்த்தவுடன்,

"அண்ணி நீங்களா?"-என்றான்.

"என்னடா வேணும்?நேரம் கெட்ட நேரத்துல?"-ஆதித்யா.

"நேரம் கெட்ட நேரமா?"-என்று தன் கைக்கடிகாரத்தை பார்த்து,

"சரிதான்....டிஸ்ட்ரப் பண்ணிட்டேனோ?"

"குரு! நாங்க பேசிட்டு தான் இருந்தோம்.நீங்க பேசுங்க....நான் கிளம்புறேன்."

"இல்லை அண்ணி....நீங்க பேசுங்க.நான் அப்பறமா வரேன்."

"இல்லை....நீங்க பேசுங்க.நான் வரேன்."-என்று அவள் வெளியே சென்றுவிட்டாள்.

"அண்ணா...."

"என்ன?"

"தங்கள் பொன்னான நேரத்தில் இந்த அநுஜனோடு சிறிது காலம் ஒதுக்க முடியுமா?"

"டேய்! வாடா!"

ண்களில் முன் பல அழகிய,மந்தகாசமான மனதை மயக்கும் காட்சிகள் விரிந்திருக்கும் மாலை நேரம்.....

கண்களின் உள்ளே அடங்காத ஆழ்மனதோடு ஒட்டிக் கிடந்த பல சம்பவங்களை மனதோடு சிந்தித்தான் ஆதித்யா.ஏதோ ஒரு நெருடல் அவன் மனதோடு இருக்க தான் செய்தது.பல நாட்கள் தனக்குள் பூட்டி அவன் புதைத்து வைத்த ரகசியம் அது.என்ன அது?அவனது,சிந்தனைகள் எதையோ தேடி ஓடின.

தன் அனைவரிடத்திலும் மறைத்த அந்த ஒரு உண்மையை !!!!!!!இந்த உண்மையை எப்படி கூற போகிறோம்?பல வினாக்கள் அவனை கொல்லாமல் கொன்றன.என்ன அவை?அவன் எதை சிந்தித்து தன்னையே தண்டித்து கொல்கிறான்?அடுத்த வாரம் பார்க்கலாமா??

தொடரும்...

Go to EUU # 10

Go to EUU # 12

{kunena_discuss:722}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.