(Reading time: 31 - 61 minutes)

 

ட்டி...

எப்படி இருக்கும்னு நான் சொல்லவே வேணாம்... " ஊட்டி" என்ற வார்த்தையை கேட்டாலே மனசுல குளிரும் சில்லென்ற காற்றும் வீசுறது சகஜம் தானே ? சுவர்க்கம் வானத்துல இருக்குனு சொல்றாங்க ... ஆனா இது போன்ற இயற்க்கை அழகு உள்ள இடங்கள் தான் உண்மையான சுவர்க்கம்...கண்களால் ஊட்டியின் அழகை உள்வாங்கிக்கொண்டே லாவகமாக காரோட்டி கொண்டிருந்தான் கிருஷ்ணன்.  ரேடியோவில் ஒலித்த அவனுக்கு பிடித்தமான பாடலை முணுமுணுக்கவும் மறக்கவில்லை அவன்.

பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே

புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே

பச்சை நிறமே பச்சை நிறமே இலையின் இளமை பச்சை நிறமே

உந்தன் நரம்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே

எனக்கு சம்மதம் தருமே எனக்கு சம்மதம் தருமே

தன் அன்பு நண்பன் ஆகாஷை பார்க்கபோகும்  சந்தோசம் அவன் முகத்தில் தெரிந்தது..கூடவே ஆகாஷின் தங்கை நித்யா முகம் ஞாபகம் வர முகத்தில் புன்னகை அரும்பியது. கிருஷ்ணாவிற்கு  சுபத்ரா எப்படியோ அப்படித்தான் நித்யாவும். சென்னையில் குடும்பத்தை பிரிந்து தன் நண்பன்  வீட்டில் தங்கி படித்த காலங்களில்  கிருஷ்ணாவிற்கு நித்யாதான் செல்ல தங்கை, உயிர் தோழியும் கூட .,... ரெண்டு பேரும் சேர்ந்து செய்யாத குறும்புகளே இல்லை. அக்கம் பக்கத்து வீட்டில் அவர்களுக்கு தெரியாமல் பூக்கள் பறிப்பது, ஆகாஷ் உறங்கும்போது அவனை  சீண்டி கோபப்படுத்துவது, சமையல் செய்கிறேன் பேர்வழி என்று சமைலறையையே இரண்டாக்குவது இதெலாம் அவர்களுக்கு கை வந்த கலை.

ன்றைய நினைவுகளில் மூழ்கிவன் ஒரு பூக்கடையை பார்த்த  உடனே காரை நிறுத்தினான் .. ( நம்ம நித்யாவுக்கு பூக்கள்ன்னா கொள்ளை பிரியம் ..சோ ஆசை தங்கைக்கு பூ வாங்கலாம் என்று அவன்  இறங்கி வர ) அதே நேரம் அவன் பக்கத்தில் தன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு கைகளில் பூக்களுடன், முகத்தில் புன்னகையுடனும் இன்று பூத்த புது பூவா என்று பிரம்மிக்க வைத்தாள் மீரா .

அடடா ஒரு தேவதை வந்து போகுதே இந்த வழியில்

புதிதாய் இவள் தேகத்தை யார் நெய்ததோ பட்டுதரியில்

பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே இரு விழியில்

வலியா இது இன்பமா என்ன ஆகுமோ இவள் யாரோ யாரோ

மீராவை பார்த்த கிருஷ்ணா ஏதோ கனவுலகத்தில் மிதந்து கொண்டிருக்க , " பளார்" என்ற சத்தம் அவனை  அவசரமாய் தரையிறக்கி விட்டது ...சத்தம் வந்த திசையில் மீரா ஆக்ரோஷத்தோடு ஒருவனை பார்த்து முறைத்தபடி ஏதோ எச்சரித்துவிட்டு சென்றாள். அறை வாங்கிய  அந்த பெயர் தெரியாதவன் பூக்கடையில் நின்ற சிறுவனை முறைக்க மீண்டும் மீரா ஏதோ சொல்லிவிடு கோபத்துடன்  அங்கிருந்து கிளம்பினாள். சற்று முன் பார்த்த அழகிய பதுமையா இவள் என்று கிருஷ்ணனுக்கே சந்தேகம் வந்துவிட்டது ... பனிபோல் நடந்து வந்தவள் தீயை போல ஜ்வாலை காட்டவும் நம்ம ஹீரோ கொஞ்சம் கதி கலங்கிதான் போனாரு .. அந்த அறை வாங்கிவன் அங்கிருந்து சென்றதும், அந்த சிறுவனிடம் பேசினான் கிருஷ்ணன்.

" தம்பி "

" இந்த ரெட் ரோஸ் கொடுப்பா ...ஆமா இங்க என்ன தகராறு ?  யாரு அந்த பொண்ணு  உன் சொந்தமா ? "

" பொண்ணா ? ஓ மீரா அக்கா  "

( மீராவா ? நான் கிருஷ்ணன் அவ மீரா ... சூப்பர் ல )

" அவங்க எல்லாருக்குமே சொந்தம் மாதிரிதான் சார் ... இதோ இபோ அறை வாங்கிட்டு போனானே அவன்தான் என் அண்ணன்... எங்க அம்மா  அப்பா இங்க உள்ள டீ எஸ்டேட் ல வேலை பார்கிறாங்க ... வீடுல பணத்தட்டுப்பாடு ..அதுனாலே நானும் பூக்கடையில வேலை செய்றேன் ... மீரா அக்காதான் அப்பபோ  அவங்க வீடுல வளர்ற ப்ரெஷ் பூவெலாம் எனக்கு தருவாங்க ...என் அண்ணா  கடையில ஆளு இல்லன்னா  என்கிட்ட காசு வாங்க வந்துடுவான் ... அதான் அக்கா அவனை அடிச்சாங்க .."

" ஹ்ம்ம் பரவாலே உன் அக்கா ஜான்சி ராணின்னு சொல்லு "

" அதெல்லாம் தெரியாதுண்ணா ....ஆனா ரொம்ப  நல்லவங்க ... அக்காதான் என் படிப்புக்கு  உதவி செய்றாங்க "

" அப்போ நீ ஸ்கூல் போலையா டா ? "

" இன்னும் ஒரு மணி நேரத்துல முதலாளி வந்ததும் கெளம்பிடுவேன் அண்ணா "

" சரி டா ..... நல்லா படி .... ஏதும் உதவின்னா என்கிட்ட கேளு டா. நான் வரேன் " என்றபடி  பூக்களுக்கு பணம் தந்துவிட்டு தன் விசிடிங் கார்டு தந்தான் கிருஷ்ணன் .

" மீரா " நல்ல பேரு என்று நினைத்தவனின் மனது உல்லாசமாய் சிறகடித்தது. சிரித்தபடியே காரை செலுத்தியவன் அந்த அழகிய பங்களா  வீடுக்குள் நுழைந்தான்...

" ஹை அண்ணா வந்தாச்சு ..நித்யாவும் வந்தாச்சு " என்று தெய்வத்திருமகள் ஸ்டைல்ல ஓடி வந்தாள் நித்யா. அவர்கள் வீட்டின் பக்கத்துக்கு வீட்டு தோட்டத்து பூக்களை பார்த்து வியந்தவனை நித்யாவின் குரல் திசைத்திருப்ப

" ஹேய் நித்யா குட்டி ...எப்படி டா இருக்கே ? "

" அட போங்கண்ணா  என்னை பார்த்தாதான் என் ஞாபகம் வரும் உங்களுக்கு ...இல்லேன்னா கண்டுக்கறதே இல்ல ... நான் பேச மாட்டேன் போங்க "

" அச்சோடா என் குட்டி தங்கச்சி கோபம் வந்துடுச்சே ... அப்போ இந்த ரெட் ரோசை காலையில பார்த்த தேவதைக்கு தந்திட வேண்டியதுதான் "

" வாவ் அண்ணா ரோஸ் அழகா இருக்கு .....எனக்கே எனக்கா அண்ணா? "

" ம்ம்ம் ஆமாடா உனக்குத்தான் "

" ஆமா தேவதை யாரு ? என்ன அண்ணா ? ஊட்டியில காலை வெச்சதுமே காதலா ? "

" ஹீ ஹீ அதுலாம் அப்பறம் சொல்றேன் ... நீ ஏன்டா இவ்வளோ  காலையில எழுந்துட்டே அம்மா ஆகாஷ் எங்க ? "

" அம்மா தூங்குறாங்க .... தடிமாடும் தூங்குறான் ... நீங்க வரிங்கன்னு சொன்னதும் எனக்குதான் சந்தோஷத்துல தூக்கமே  வரலண்ணா "

கனிவுடன்  அவளை  பார்த்தவன்

" சரி வா நம்ம வீட்டு கும்பகர்ணனை எழுப்பலாம்... ஆமா கேக்கணும் நெனச்சேன் ... பக்கத்து வீடு பூட்டிதானே இருக்கும் ? இப்போ என்ன ? தோட்டம் எல்லாம் வெச்சு அட்டகாசமா இருக்கே ? "

" ஓ அது நம்ம நீலாம்பரியின் கைவண்ணம் ..." ( சோ இந்த பேரை வெச்சதே நம்ம நித்யா தான் .....என்ன நித்யா நீங்க ? மீரா பாவம் இல்லையா? )

" நீலாம்பரியா? யார் அந்த ஆன்டி ? "

" ஆண்ட்டியா? அண்ணா .... அவ என் பெஸ்ட் பிரண்ட் மீரா "

" பெஸ்ட் பிரண்டை நீதானேடா நீலாம்பரின்னு சொன்னே ? "

" ஹஹ அதுவா ? அவளை நான் முதல் தடவை பார்த்தப்போ ரொம்பே திமிர் பிடிச்சவன்னு நெனச்சேன் அண்ணா... ஏதோ ஜான்சி ராணி மாதிரி நியாயத்தை தட்டி கேட்டுடு இருந்தா .  அவ கண்ணுல தெரிஞ்ச கோபமும் மிடுக்கும் பார்த்த உடனே எனக்கு அதான் தோணிச்சு . பட் பழக பழகதான் அவ எவ்வளோ மென்மையானவள் நு தெரிஞ்சது .. ரொம்ப நல்ல பொண்ணு அண்ணா ? "

" உன்னை விடவா  செல்லம் ? "

" ம்ம்ம்ம்கும்ம் இப்போ இப்படிதான் சொல்லுவிங்க ... அப்பரும் அவளை பார்த்ததும் அப்படியே தலைகீழா  மாத்தி பேசுவிங்க " அவள் சொல்லி முடிப்பதற்கும் ஸ்கூட்டியுடன் மீரா அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.