(Reading time: 31 - 61 minutes)

 

" டேய் இந்த பேய் படத்துல வர்ற மாதிரி மர்மமா பேசுனே ? அப்பறம் நாளைக்கும் ஷாக் டிரிட்மெண்ட்  பண்ணிதான் உன்னை எழுப்புவேன் "

" யப்பா டேய் சாமி ஆளை விடுடா சொல்லிடுறேன். மீராவுக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்ல . அவளுக்கு 4 வயசு இருக்கும்போதே அவங்க அம்மாவும் இறந்துட்டாங்க . நித்யா என் கிட்ட சொன்ன வரை பார்த்தால் மீராவுடைய சின்ன வயசுல  இருந்தே தனியாதான் இருந்துருக்கா . அவ அம்மா போனதுக்கு அப்பறம் மீராவுடைய அப்பா அவளை பார்குறதே இல்லையாம் . தேவைக்கு அதிகமான பணம், ஆறுதல் அன்பு இல்லாத சூழ்நிலை இதுதான் மீராவுடைய லைப். அதுனாலே அவளுக்கு பணத்து மேல எந்த பிடிப்பும் இல்ல. பட் சுத்தி உள்ளவங்க அவளை பணக்கார பொண்ணாதான் பார்த்தாங்க. வீட்டு வேலைகாரவங்களும் முதலாளியின் மகளாகத்தான் அவளை பார்த்தாங்க "

" ஹ்ம்ம் மாட்டிவீட்டு ஏழை "

" சரியா சொன்னே . அதுனாலேயே மீராவுக்கு கொஞ்சம் communication problem   . ஐ மீன்  அவ எதார்த்தமா சொல்றது பல நேரங்களில் தப்பா போயிடும்.  நெளிஞ்சு வளைஞ்சு அழகான வார்த்தைய பயன் படுத்திலாம் அவ பேச மாட்டா. அவளுக்கு சரின்னா சரி தப்புன்னா தப்பு . யாருக்கும் வளைஞ்சு கொடுக்க மாட்டா. "

" அது நல்ல விஷயம் தானேடா . மனசுல ஒன்னு வெச்சுகிட்டு வெளிய ஏன் வேற மாதிரி பேசணும் ? "

" ம்ம்ம்ம் ஆனா அதை எல்லாரும் சரியா எடுத்துக்க மாட்டங்க தானே ?சரி அதை விடு ..சதாசிவம் சார் ஏன் சூசைட் பண்ணிகிட்டாருன்னு உனக்கு தெரியும் தானே? "

" ம்ம்ம்ம் பிசினஸ் லாஸ், பார்ட்னர் சீட் பண்ணிடாங்க. கடன்  அவமானம் தாங்காம அவர் ........அப்டின்னு கேள்வி பட்டேன் "

" ஆமா அதுக்கப்பறம் இருந்த சொத்துல கடனை அடைச்சிட்டு மத்த  எல்லாம் மீரா எதோ ஆஷ்ராமத்துக்கே தந்துட்டாளாம்"

" ஏன் "

" அவ மேல பாசம் இல்லாத அப்பாவோட பணம் அவளுக்கு வேணாமாம் "

" ஹ்ம்ம் "

" மீரா ரொம்ப நல்ல பொண்ணுடா . இப்போ நம்ம நித்து வேலை பார்குற  அதே ஸ்கூல் ல தான் அவளும் டீச்சர் வேலை பார்க்குறா. சில பசங்களுக்கு கூட படிக்க ஹெல்ப் பண்றான்னு கேள்வி பட்டேன்"

" ம்ம் அது எனக்கும் தெரியும்டா .,...ஆமா நம்ம வாலு  நித்யா , மீராகிட்ட சமாதானம் ஆகியாச்சா இல்லையா ? "

" இன்னுமில்ல டா ... என்னக்கே  ஆச்சர்யம் தான் .. இருந்தாலும் அப்பபோ எனக்கே பொறாமை வர வெச்சுடுரிங்கடா ரெண்டு பேரும் "

" ஹா ஹா உன் முகத்தை பார்த்தா அப்படி எதுவும் தெரிலையே ...சும்மா கதைவிடாம உன் சுப்ரியாவை நெனச்சுகிட்டு தூங்கு ..குட் நைட் "

" என் நேரம் டா ,..உன் ஆளு பத்தி டிடைல் கிடைச்சதும் கலட்டி விடுறியே ? பார்த்துக்குறேண்டா குட் நைட் "

ஒரு புன்னகையுடன் கண்ணை மூடினான் கிருஷ்ணன். ( அப்போ என்ன நடந்திருக்கும் ? அதான் பருத்தி வீரன் ல நம்ம கார்த்தி சொல்வாரே " கண்ணை மூடினா கனவுல நீதானே " )

அதேதான் ! ஏதோ காரிருள்ள மீரா கதறி அழ, கிருஷ்ணா அவளை இறுக அணைத்து சமாதனம் பண்ற மாதிரி. அந்த கனவு கண்டு ரெண்டு ஜோடி கண்கள் திடுகிட்டுவிழித்தன . அது நம்ம கிருஷ்ணாவும் மீராவும்தான்.

" மீரா உன் தனிமை சிறையை உடைச்சு, உன் லைப் ல சந்தோஷத்தை கொண்டு வருவேன் . உனக்கொரு அழகான குடும்பத்தை தந்து கடைசி வரை உன்னோடவே இருப்பேனடா கண்ணம்மா" என்று மனதிற்குள் சொல்லி கொண்டான்.

" அதே கனவு . இந்த ரெண்டு வருஷமா எனக்கு வர்ற அதே கனவு? நீ யாரு கிருஷ்ணா ? என் வாழ்கை விதி நெருப்பால எழுதப்பட்டது  அதுல  உன் வாழ்கையை சேர்த்து நீயும் எறியாதே . நான் உன்னை விட்டு விலகித்தான் போவேன் " என்று மனதிற்குள் சொல்லி கொண்டாள் மீரா.

( நீங்க பாட்டுக்கு சொந்தமா உங்க கதையை எழுதிகிட்டா அப்பறம் எனகென்ன வேலை ?)

றுநாள்,

தோழியிடம் சமாதானம் செய்யும் முறை தெரியாமல் தோட்டத்தில் நடைந்துகொண்டே  நித்யாவை பார்த்துகொண்டிருந்தாள் மீரா. அதை நித்யாவும் கவனித்தாள் தான் எனினும் தோழியை எப்படியாவது கிருஷ்ணனுடன்  பேச வைக்க வேண்டும் என்று அவள் பேசாமல் இருந்தாள் . இதை கவனித்துக்கொண்டிருந்த கிருஷ்ணா தங்கையின் மௌனத்தையும் மீராவின் தவிப்பும் தாங்க முடியாமல் மௌனம் களைந்தான்.

" நித்யா இங்க வா "

" அண்ணா எங்க என்னை கை பிடிச்சு இழுத்துட்டு போறீங்க "

" மீரா "

" என் கிட்ட நீங்க ஒன்னும் பேசணும்னு நான் எதிர்பார்க்கல. பட் எனக்காக நீங்க ரெண்டு பேரும் பேசாம  இருக்காதிங்க . நான் வேணும்னா சென்னை கெளம்புறேன் "

" வேண்டாம் " என்று உடனே தடுத்தது மீராதான். ( அட பாழாப்போன மனமே நேத்து விடிய விடிய நான் சொன்னது என்ன ? நீ செய்றது என்ன?என்று தன்னை தானே திட்டிகொண்டாள் மீரா. )

" ஹே  மீரா நீ கிருஷ்ணா அண்ணாகிட்ட பேசியாச்சுல அது போதும் . இதோ எனக்கு கோபம் போயே போச்சே" என்று சிரித்தாள் நித்யா .

" ஆனா எனக்கு கோபம் போகல " என்ற கிருஷ்ணனை கேள்வியுடன் நோக்கினாள் மீரா .

" எஸ்.... உங்க ரெண்டு பேருக்குமே இந்த ரெண்டு மாசம் லீவ் தானே? நாம வெளிய போகும்போது மீராவும் நம்ம கூட ஜாய்ன் பண்ணாதான் கோபம் போகும் "

மீரா இயலாமையோடு அவனை பார்க்க, கிருஷ்ணன் ஆழ்ந்த குரலில்

" நாங்க எல்லாரும் விரும்பி கூப்டுறோம் மீரா. நீ வந்தா நான் சந்தோஷப்படுவேன் " என்றான்.

இந்த நேரடி தாக்குதலை அவள் எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவள் முகத்திலே தெரிந்தது.

ஏன் என்று புரியாமலே  சரி என தலை அசைத்தாள் மீரா ..

தன் பின்பு வந்த நாட்கள் ரெக்கை கட்டி உல்லாசமாக பறந்தது. கிருஷ்ணா மீராவை ஒருமையில் அழைக்கும் அளவிற்கு இருவரும் பழகி இருந்தனர். ஏன் என்றே புரியாமல் மீராவும் கிருஷ்ணனின் அன்புக்கு கட்டுபட்டாள். அவளின் ஒவ்வொரு தினமும் அவனின் வரவை சார்ந்தே இருப்பதை அவள் உணர்ந்தாள்.  அன்றொரு நாள் இரவு,

" ஹேய் தனியா என்ன பாட்டு கேட்குற ? " என்ற கிருஷ்ணன் அந்த ஊஞ்சலில் அவளின் பக்கத்தில் அமர்ந்து அவள் அனுமதி இன்றியே ஒரு பக்கம் ஹெட் போன் எடுத்து பாடலை கேட்க தொடங்கினான் . அவனின் நெருக்கும் மீராவை இம்சிக்க அவனோ பாடலில் லயித்து கொண்டிருந்தான். சட்டென கண் திறந்தவன் சிவந்த முகத்துடன் அருகில் அமர்ந்தவளை பார்த்து கண் சிமிட்டினான்.

" எப்பா நீலாம்பரிக்கு கோபத்துல மட்டும்தான் முகம் சிவக்கும்னு நான் நெனச்சேனே  ! வெட்கத்துல கூட சிவக்குமா? "

" நீலாம்பரியா ? ஆரம்பிச்சுட்டிங்களா ? யாரு அந்த நித்யா லூசு சொன்னாளா ? ஆமா வெட்கமா யாருக்கு ?"

" யாருக்கா? " என்று

அவன் பதில் சொல்வதற்குள் அவனின் செல்போன்  சிணுங்கியது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.