(Reading time: 20 - 39 minutes)

 

" மீரா குட்டி எப்படி இருக்க ? உனக்கு அண்ணா ஒரு கிப்ட் வாங்கிட்டு வந்துருக்கேன் என்னநு கண்டு பிடி பாப்போம்"

" டெட்டி பியர் இல்ல டிஷர்ட்  இல்ல ஐயோ அண்ணா சொல்லுங்க என்ன கிப்ட்னு..."

அஸ்வின் அவள் முன்னால் ஒரு iphone மற்றும் ஆப்பிள் லேப்டாப்  மற்றும் மிக பெரிய டெட்டி பியர் ஒன்றை குடுத்தான்.. ( ஹையோ நமக்கு ஒரு அண்ணன் இப்படி இல்லையே) .

மீரா" வாவ் அண்ணா  செம சூப்பர் கிப்ட். தேங்க்ஸ் அண்ணா.." என்று டெட்டி பியர் மற்றும் அண்ணனை கட்டிகொண்டு கண்ணீர் வடித்தாள்...

" ஷ்ஷ்ஷ்ஷ்.....  என்ன டா இது.... கிப்ட் பிடிக்கமா போச்சா என் செல்லத்துக்கு?? ஹ்ம்ம் சொல்லுங்க??"

" அதுக்கு இல்லை அண்ணா.. என்னால உங்க லைப் ஸ்பாயில் ஆகுது.. நீங்க கல்யாணம் பண்ணிகோங்க அண்ணா ப்ளீஸ்... இந்த வீட்டுக்கு அண்ணி வந்த நல்ல இருக்கும்"

" மீரா உனக்கும் எனக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்கும் அதுவும் சேர்ந்து தான் நடக்கும். கூடிய சீக்கிரம் நடக்கும்."

" எனக்கு கல்யாணமா" விரக்தியாக சிரித்தாள்..

அஸ்வின்"  நோ இப்படி ஹோப் இல்லாம பேச கூடாதுநு எவ்ளோ தடவ சொல்லிருகேன்.. ஒகே நோ அழுகாச்சி காவியம்.. நாம கொடைக்கானல் போறோம்... ரெடி ஆகு சீக்கிரம்.. "

" அண்ணா இப்போ தான வந்திங்க... ரெஸ்ட் எடுங்க அப்புறம் போலாம்"

" நோ நோ இன்னைக்கு அப்டெர்னூன் கிளம்பி நைட் ரீச் ஆகனும்.. கெட் ரெடி" என்று செல்லமாக தலை தட்டி சென்றான்.

அஸ்வின், மீரா, சித்தி, அம்மா எல்லோரும் கிளம்பி விட்டனர் அவர்கள் மருமகள் ஸ்ரீமதி பார்க்க.. ( அட அம்மாங்க அஸ்வின்- ஸ்ரீ தான் ஜோடி.. தங்கச்சிய இவ்ளோ தாங்குறாரு பொண்டாட்டிய ஹ்ம்ம் ஹ்ம்ம் பாருங்க பாருங்க)

ங்கே ஸ்ரீ வீட்டில்…..( ஆமாங்க அழுத ஸ்ரீ பாவம் என்ன பண்றாங்க)

    ஸ்ரீ அன்று இரவு முழுவதும் அழுது தீர்த்தாள்.. மனதினுள் பல கேள்விகள் கேட்டு கொண்டாள்.

 ஸ்ரீ ( மனதுள்)

" நானா எனக்கு மாப்பிள்ளை பாருங்கன்னு கேட்டேன்....

எதுக்கு அப்பா என்ன அவருக்கு பிடிக்கமா போச்சி.. நான் என்ன தப்பு பண்ணேன்... ஆரம்பத்திலே இந்த இடம் வேணாம்னு சொன்னேன் அத்தை கிட்ட... இப்போ இவ்ளோ நெருங்கி பழகி காசுக்காக என் மனச தெரியாம இப்படி வேணாம்னு சொல்லிடங்களே.. நான் என்ன அப்பா அவருகிட்ட கேட்டேன்.. நல்ல குடும்பம் எனக்கு வேணும் காசு வேணாம்னு சொன்னேன்.. அத அவரு புரிந்து கொள்ளாமல் போய்ட்டாரு... நான் என்ன அசிங்கமாவ இருக்கேன். கொஞ்சம் குண்டா இருக்கேன் அத கூட குறைச்சி அழகா ஆகி இருந்து இருபேன்... எதுக்கு யாருமே மனச பார்க்க மாற்றங்க..  காசு தான் வாழ்க்கையா... ஐயோ அம்மா என்னால முடியல... " என்று எவ்ளோ நேரம் அழுதாளோ

அவளுக்கே வெளிச்சம்...

காலையில் அவள் எழுந்திருக்கும்  பொழுது கண்கள் வீங்கி மண்டை வலித்தது.

ரூமை விட்டு வெளியில் வந்தபோது எதிர் வந்த அம்மா கோமதி

" ஸ்ரீ காபி தரவா?"

" ஹ்ம்ம்.. " என்றாள்.

பேப்பர் எடுத்து கொண்டு பின் பக்க கார்டன் சென்றாள். அப்பா குரு மாமா பிரகாஷ் இருந்தார்கள். ஸ்ரீ அவர்களை பார்த்ததும் GoodMorning அப்பா மாமா என்று சொல்லி விட்டு நாற்காலியில் உட்கார்ந்தாள். அப்பா குரு பிரகாஷ்க்கு கண் ஜடை காட்டி கிளம்பி விட்டார்….

" ஸ்ரீ அப்பா ஆபீஸ் கிளம்புறேன்.. பாய் டா" என்று கிளம்பி விட்டார்.

ஸ்ரீக்கு புரிந்தது மாமா தன்னிடம் பேசுவதற்காக இப்படி செய்கிறார் என்று..

" ஸ்ரீ எதுக்கு இப்படி அழுது கண்ணெல்லாம் வீங்கி போய் இருக்கு... உனக்கு அஜய் பிடிச்சுருக்கா.. சொல்லு டா பேசி பாக்குறோம்"

" மாமா எனக்கு அஜய் வேணாம்" என்று புல் தரை பார்த்து வெறித்தாள்.

"ஏன் ஸ்ரீ? பிடிக்கமா தான் நைட் முழுக்க அழுதிய...."

" மாமா, ப்ளீஸ் சத்தியமா சொல்றேன் எனக்கு அஜய் வேணாம்...

 காசு பணம் பார்த்தா ஒரு கல்யாணம் நடக்கணும்... என் மனச புரிஞ்சுகாம ஹை கிளாஸ் ஆளுங்கன்னு வேணாம்னு சொல்லிடாரு... நான் வேளைக்கு போறேன் சொன்னேன்... எனக்கு காசு பணம் முக்கியம் இல்ல...நல்ல குடும்பம் போதும்னு சொன்னேன்.... அது எதுவமே அவர் காதுல விழ வில்லையா??....... என்ன சொன்னிங்க எனக்காக நீங்க அவர் வீட்ல போய் பேசவா.. அது மட்டும் நடக்கட்டும் அப்புறம் நான் உயிரோட இருக்க மாட்டேன்..."

" ஸ்ரீ என்ன இப்படி சொல்ற... இந்த பேச்சு ரொம்ப தப்பு ஸ்ரீ.... உன் மனசு மென்மை ஆனது அதான் நீ தாங்க மாட்டேன்னு அப்படி கேட்டேன்..."

" சாரி மாமா... அவசரத்தில வார்த்தைய விட்டுட்டேன்... எனக்காக நீங்க யாரும் இன்னொரு குடும்பத்து கிட்ட கெஞ்சுரதுல எனக்கு இஷ்டம் இல்ல.... இந்த விஷயம் எனக்கு கஷ்டமா தான் இருக்கும்... எனக்கு கொஞ்சம் டைம் வேணும் இதுல இருந்து வெளில வர... ப்ளீஸ் மாமா அப்பா கிட்ட படிக்க இல்ல வேலை பார்க்க அனுமதி வாங்கி தாங்க... ப்ளீஸ் மாமா"

" ஹே... ஸ்ரீ எதுக்கு இத்தனை ப்ளீஸ்... ஒகே ஒகே அப்பா கிட்ட நான் பேசுறேன்.. நம்ம கம்பெனிக்கு வந்தே வேலை பாரு.. ஓகே..."

" நோ மாமா... நம்ம கம்பெனி வேணாம்.. நான் வெளில போய் வேலை பாக்கணும்... ப்ளீஸ் மாமா, அப்பா கிட்ட அனுமதி வாங்கி தாங்க..."

" சரி சரி உனக்காக கண்டிப்பா கேட்குறேன்.... இப்போ கொஞ்சம் சிரிச்சா நல்ல இருக்கும்.. சிரி உனக்கு ஒரு ஆச்சிரியம் காத்திட்டு இருக்கு...."

ஸ்ரீ புன்னகை செய்தாள்...

" தட்ஸ் குட்... நாம நாளைக்கு கொடைக்கானல் போறோம்.. " என்று உற்சாகமாக சொல்லி அவளை பார்த்தார்..

" அப்படியா... சரி மாமா" என்று எழுந்து கொண்டாள்....

மத்த நேரமாக இருந்தாள் மொத்த பிளான் ஸ்ரீ உடையதாக இருக்கும். இன்று வெளியில் சொல்ல முடியாத வருத்ததுடன் இருக்கிறாள்.. அவள் போடும் திட்டத்திருக்கு முழு குடும்பமும் தலை ஆட்டும்... அவளை பார்த்த உடன் மனம் உற்சாகம் அடையும்.. ( பாவம் அஜய்க்கு குடுத்து வைக்கமா போச்சு...)

எல்லோரும் கொடைக்கானல் கிளம்பினார்கள்... அட நம்ம அஸ்வின் குடும்பமும் போறாங்க.. (சரி ஹீரோ ஹீரோயின் எப்படி மீட் பண்றாங்கன்னு பார்க்கலாம்..)

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.