(Reading time: 20 - 39 minutes)

 

கொடைக்கானல் ட்ரிப் ஆரம்பிச்சாச்சு.....

டிரைவர் கார் ஓட்ட அஸ்வின் முன்னாலும், சித்தி, அம்மா, மீரா பின்னால் உட்காந்து கொண்டார்கள்.. மதியம் கிளம்பினார்கள்.. இரவு அவர்களது

எஸ்டேட் சென்று அடைந்தார்கள்..

 அங்கு ஸ்ரீ வீட்டில்...

இரண்டு கார்களில் கிளம்பினார்கள்.. ஸ்ரீ அவளுக்கு பிடித்த பஜீரோவில் ஏறி கொண்டாள்... ஏறி கொண்டு மௌனமாக சாலைஐ வேடிக்கை  பார்த்து கொண்டு வந்தாள்... போனில் பாட்டு போட்டு ஹெட்செட் மாட்டி கேட்டு கொண்டு இருந்தாள்...

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே

மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா?

பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே

பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ?

உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்

நீ எங்கே எங்கே இன்று உனை தேடி தேடி பார்க்கிறது

உன்னொடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்

நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே

அறியாத வயதில் விதைத்தது ....

அதுவாகவே தானே வளர்ந்தது

புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ....

அட யாரது யாரது பறித்தது?

உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே

அது பாதியில் தொலைந்தடா

நான் கேட்டது அழகிய நேரங்கள் ..

யார் தந்தது விழிகளில் ஈரங்கள்?

நான் கேட்டது வானவில் மாயங்கள் ...

யார் தந்தது வழிகளில் காயங்கள்?

இந்தக் காதலும் ஒரு வகை சித்ரவதைதானே

அது உயிருடன் எரிக்குதடா

ஸ்ரீ கண்ணீரை மறைத்தாள். கொஞ்சம் நேரம் சென்ற பின் தன்னையே திட்டி கொண்டாள்..

"ஐயோ ஸ்ரீ என்ன  இது அழுகாச்சி காவியம்.. இப்போ எதுக்கு பீல் பண்ற.. உன்ன வேணாம்னு சொன்னவனுக்கு நீ எதுக்கு ஒப்பாரி வைக்கணும்.. உன்னால உன் குடும்பம் பீல் பண்ணுது... எல்லாத்தையும் தூக்கி போடு என்ஜாய் பண்ணு" என்று தன்னை தானே கண்டிந்து கொண்டு கலகல என்று பேச தொடங்கினாள்..

அவள் பேச ஆரம்பித்த உடன் எல்லாரும் நிம்மதி மற்றும் சந்தோசம் அடைந்தனர்...

அவர்களும் அன்று இரவே கொடைக்கானல் சென்று ஒரு மாளிகை விடிதியில் தங்கினர்..

ரெண்டு குடும்பமும் சாப்பிட்டு முடிச்சு தூங்க போய்ட்டாங்க.....

( அட நம்ம ஹீரோ ஹீரோயின் எப்போ மீட் பண்ணுவாங்க??)

றுநாள் காலை!

கொடைக்கானலின் காலை பொழுது!

ஸ்ரீ சீக்கிரம் முழித்து கொண்டாள். அறை கதவை திறந்து வெளி வந்து கீழே இறங்கி சென்று  மலை அழகையும் குளிரையும் ரசித்தாள்..

மனதில் நினைத்து கொண்டாள்..

" லைப்ல எவ்ளோ விஷயம் இருக்கு பார்க்க... அத விட்டுட்டு இப்படி எல்லாத்தையும் சங்கட படுத்திட்டேன்... இனிமே என் சோகம் என்னோடு.. யாரையும் என்னோட சேர்ந்து சோக படுத்த மாட்டேன்.. யு கேன் டூ இட் ஸ்ரீ.. யு ஆர் பார்ன் டு மேக் அதர்ஸ் ஹாப்பி... முக்கியமா உன் குடும்பம்... அவுங்கள நீ எப்போதும் கஷ்டபடுத கூடாது... யு கேன் ஸ்ரீ...."  என்று மனதில் முடிவு எடுத்து கொண்டாள்...

எல்லோரும் எழுந்து வந்து கிளம்பினார்கள்..( ரெண்டு வீட்டுலையும் தான்).....

இரு குடும்பமும் காலை lake செல்ல முடிவு எடுத்தனர்(  பாரா நம்ம ரெண்டு பேரோட குடும்ப ஒற்றுமைய..)

பிரகாஷ், வேணி , ராஜ் என்று சிலர் போட்டிங் சென்றனர்..

மணி ( ஸ்ரீயின் அண்ணன் ) ஸ்ரீயிடம் வந்து,

" ஸ்ரீ cycling போலாம் வா"

" வாவ் சூப்பர் போலாம் அண்ணா"

மணி, ஸ்ரீ சைக்கிள் எடுத்து ஓட்ட ஆரம்பித்தனர்..

ங்கே மீரா, அஸ்வின் சைக்கிள் எடுத்து ஓட்ட ஆரம்பித்தனர்.. அஸ்வின் ஸ்ரீ பின்னால் வெகு தூரம் வந்து கொண்டு இருந்தான்..

மணி ஸ்ரீயின் முகத்தை பார்த்து கொண்டே வந்தான்.. ஸ்ரீ , அண்ணன் தன்னிடம் எதோ பேசணும் அதான் சைக்கிள் வர சொன்னான் என்று அவன் பார்வையில் புரிந்து கொண்டாள்..

ஒரு இடத்தில் இறங்கினாள். மணியும் நிறுத்தி கொண்டான்..

" அண்ணா சொல்லுங்க என்ன விஷயம்??" மணி முழித்தான்...

" என்ன ஸ்ரீ நான் எதோ சொல்ல வரேன்னு எப்படி தெரியும்??"

" அண்ணா நான் உன் தங்கச்சி... சொல்லு என்ன விஷயம்??"

"அது அது வந்து.. அது வந்து... "

" என்ன அண்ணா வந்து போய் வாத்துநு.. சொல்லுங்க அண்ணா எதுக்கு இப்படி காமெடி பண்றீங்க.."

" ஸ்ரீ இப்போதிக்கு நீ கல்யாணம் பண்ணிக்க வேணாம்.." ஸ்ரீக்கு அதிர்ச்சியாக இருந்தது.. சரி அண்ணா மேலே சொல்லட்டும் என்று மௌனம் காத்தாள்...

" ஷாக் ஆகாத ஸ்ரீ... நான் அஞ்சலின்னு ஒரு பொண்ண விரும்புறேன்.. அவளுக்கும் உன் ஏஜ் தான்... இப்போ அவுங்க வீட்ல அவளுக்கு மாப்பிள்ளை பாத்திட்டு இருக்காங்க.. உன் கல்யாணம் முடிஞ்சு நான் கல்யாணம் பண்றதுக்குள்ள அவள வேற எடத்தில கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க... சோ நீ இப்போ கல்யாணம் பணிக்காத... நான் முதல கல்யாணம் செஞ்சுகுரனே... ப்ளீஸ்  "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.