(Reading time: 55 - 110 minutes)

 

ன்னடா மச்சான்… ரொம்ப ஹேப்பியா இருக்குற?...”

“யாரு நானாடா ஆதி…?...”

“ஆமா… மச்சான்….”

“டேய்… அடி வாங்குவ ராஸ்கல்…”

“ஹாஹாஹா… நல்ல பாட்டுடா… அதான்…”

“ஹ்ம்ம்… ஆமாடா…”

“ஹ்ம்ம்… உன்னோட காலைப்பொழுது இனிமையா ஆரம்பிச்சிட்டு போல மயூரியை நினைச்சிக்கிட்டே…”

“ஹ்ம்ம்… ஆமாடா…”

“சரி அவகிட்ட சொல்லிட்டியா இல்லையா?...”

“இல்லடா இன்னும்…”

“ஏண்டா… லூசா நீ… சீக்கிரம் சொல்லித்தொலைடா…”

“ஆமா… உன் தங்கச்சி இருக்காளே… சரியான கள்ளூனி மங்கி… பார்வையிலேயே என்னை சாய்ச்சிட்டா…”

“டேய்… என் தங்கச்சியை எதாவது சொன்ன… உன்னை… அவ்வளவுதான்… சொல்லிட்டேன்…”

“ஆமா… என் மேல மட்டும் பாஞ்சிடு… அவளுக்கு நல்லாவே தெரியும்டா… நான் அவளை விரும்புறேன்னு… இருந்தாலும் நான் பக்கத்துல போய் லவ் சொல்ல போனா ஓடிடுறா… பின்னே நான் என்னதாண்டா செய்ய?..”

“ஹ்ம்ம்… உண்மைதான்…”

“புரிஞ்சா சரி…”

“ஹ்ம்ம்… கவலைப்படாதடா… இன்னைக்கு சொல்லிடுவ நீ… டோண்ட் வொரி மச்சான்…”

“எப்படிடா சொல்லுற?...”

“அதெல்லாம் அப்படித்தான்… இன்னைக்கு நானும் உங்கூட வரேன்…”

“டேய்… மச்சான்… நிஜமாவா?...”

“ஆமாடா… நிஜம் தான்…”

“பட்… மச்சான்… இன்னைக்கு அந்த ஃபாரீனர்ஸ் கூட மீட்டிங் இருக்கேடா..”

“நான் உன் பிரச்சனையை முதலில் முடிச்சிட்டு அப்புறமா அங்கே போறேன் சரியா?...”

“ஹ்ம்ம்… சரிடா…” என்றவன் ஆதி என்றழைத்தான்…

“என்னடா..”

“….”

“டேய்.. என்னடா முகிலா…”

ஒன்றும் சொல்லாமல் தன் நண்பனை அணைத்துக்கொண்டான் முகிலன்…

அவனுக்கும் புரிந்தது… மெல்ல தட்டிகொடுத்தவன், அவனை இலகுவாக்க “டேய்… அவனா நீ…” என்று சொல்ல,

முகிலன் பதிலுக்கு அவனை அடிக்க முற்பட, ஆதி பட்டென்று கதவை திறந்து வெளியே வந்து விட்டான்…

முகிலன் அலமாரியைத் திறந்து எந்த உடை அணிவது என்று தேடுகையில் அவனின் கண்களில் பட்டது அந்த உடை… ஆம்… மயூரியை முதன் முதலில் சந்தித்த போது அணிந்திருந்த உடை…

சாகரி… ஹேய்.. மயில்… ரெண்டு பேரும் எங்க போயிட்டீங்க?...”

“வா… நந்து… என்ன இன்னைக்கு காலையிலேயே வந்துட்ட… ஸ்கூல் போகலையா?...”

“போகணும் மயில்…”

“சரி எங்கே சித்து?...”

“அவன் தூங்குறான்…”

“ஓ… சரி சரி… பூஸ்ட் தரவா?...”

“ஹ்ம்ம்.. ஒகே… ஆமா.. சாகரி எங்கே…”

“இந்நேரம் எங்க இருப்பா?... பூஜை அறையில் தான்… அதோ…” என்று கை காட்டிய திசையில் மனமுருக ராமனை பூஜித்துக்கொண்டிருந்தாள் சாகரிகா…

“ஓகே… மயில்… அவ வரட்டும்… நான் அதுவரை கொஞ்சம் டீவி பார்க்குறேன்… சத்தம் கம்மியா வச்சு தான்…” என்று சிரித்தாள் நந்து…

“ஓகே… நந்து…” என்றபடி உள்ளே சென்றவள் நந்துவிற்கு பூஸ்ட் கலந்து கொடுத்தாள்… பின், குளித்துவிட்டு வருவதாக அவளிடம் சொல்லி சென்றவள், தன் அறையினுள் நுழைந்தாள்..

“அம்மா…” என்றபடி சித்துவின் குரல் கேட்க,

சித்து எழுந்துட்டான் போல, என்றெண்ணியவள், அவசரம் அவசரமாக அவனை தள்ளி விட்டு எழுந்தாள்…

அவன் சிரிப்புடன் அவளையேப் பார்க்க, அவள் வெட்கப்புன்னகை சிந்தினாள்…

“உங்களை வந்து கவனிச்சிக்குறேன்…”

“அதற்காக தான் நானும் வெயிட்டிங்…”

“உங்களை…”

“ஹ்ம்ம்… ஹ்ம்ம்… என்னை...”

“சீ போங்க…” என்றபடி அவனிடமிருந்து விலகி சித்துவிடம் சென்றாள்…

ன்னடா கண்ணா… எழுந்தாச்சா… அம்மா பூஸ்ட் தரவா?...”

“வேண்டாம்… நந்து எங்கே?...”

“வேற எங்க இருப்பா?... எல்லாம் உங்க ஃப்ரெண்ட் வீட்டுல தான்…”

“சரிம்மா… நானும் போய் கொஞ்ச நேரம் பேசிட்டு, நந்துவை கூட்டிட்டு வரேன்…” என்றபடி அவள் வீட்டை நோக்கி நடந்தான் சித்து…

“சரிடா… கண்ணா.. சீக்கிரம் வந்துடு…”

“சரிம்மா…” என்ற அவனின் குரல் வெளியே கேட்ட அதே நேரத்தில், “சரிடி என் செல்லம்…” என்ற தன் கணவனின் குரல் அருகே கேட்டது…

“நான் என் பையனை சொன்னேன்…”

“நானும் என் பொண்ணுகிட்ட தான் சொன்னேன்…”

“ஹ்ம்ம்…” என்று அவள் முறைக்க,

“எதுக்குடி செல்லம் முறைக்குற?... நீ தான சொல்லுவ,,, அடிக்கடி… எனக்கு நீ குழந்தை.. உனக்கு நான் குழந்தைன்னு… அதான்…” என்று கொஞ்சல் மொழியில் சொன்ன கணவனை காதலுடன் பார்த்தாள் காவ்யா…

“ஹேய்… இப்படியெல்லாம் பார்க்காத… அப்புறம்… நீ விடுங்கன்னு கெஞ்ச வேண்டியது வரும்…”

“பரவாயில்லை…” என்றபடி அவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்…

அவளிடம் கொஞ்ச நேரம் கொஞ்சிவிட்டு, “காவ்யா, அந்த காய்கறி எல்லாம் எடு, நான் கட் பண்ணித்தரேன்…” என்றான்…

“இல்லங்க… நானே செய்யுறேன்…”

“குடுடி பேசாம…” என்று அவன் செல்லமாக அதட்ட, அவனிடம் கொடுத்துவிட்டு அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தாள் காவ்யா…

காவ்யா-தினேஷ் இருவருக்கும் சொல்லிக்கொள்ள உறவு என்று யாருமில்லை சொந்தத்தில்… காதல் திருமணம்… நண்பர்களின் படை சூழ நடந்த திருமணம்… தனித்தனியான இருவரும் வாழ்வில் ஒன்று சேர்ந்தனர் சொந்தமாக காதலினால்… அதுவும் காவ்யாவை தன் இருபத்தி மூன்றாம் வயதிலேயே கைப்பிடித்தான் தினேஷ்… அவளுக்கு அப்போது வயது 21… திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் குழந்தை இல்லாமல் தவித்தவர்களுக்கு இறைவன் கொடுத்த முத்துக்கள் தான் சித்து நந்து… இரட்டைக்குழந்தைகள்… அவர்கள் பிறக்கும்போது அவள் பட்ட வேதனை அவன் அறிவான்… அவளை நோகாமல் முடிந்த அளவு அன்றிலிருந்து கவனித்துக்கொள்வான் தான் இருந்தும் பிரசவத்திற்கு பின் அவளால் அதிகம் வேலை செய்ய இயலாமல் போனது அவளின் உடல் நிலை காரணமாக…. அதனாலே காவ்யாவை அதிகம் வேலை செய்ய விடாது பார்த்துக்கொள்வான் தினேஷ்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.