(Reading time: 55 - 110 minutes)

 

சூப்பர், மயில், சூப்பர் சாகரி… ரெண்டு பெரும் செமயா ஆடினீங்க…. சூப்பர்…” என்று புகழாரம் சூட்டினர் குட்டீஸ் இருவரும்…

“சரி சரி… போதும் பொய் சொன்னது… போங்க ஸ்கூலுக்கு கிளம்புங்க நேரம் ஆச்சு… ஓடுங்க…” என்று அவர்களை செல்லமாக விரட்டினாள்: சாகரி…

“உன்னை… நாங்க வந்து பார்த்துக்கறோம்… பத்மினி.. டாட்டா பத்து.. மயில்…” என்றபடி ஓடிவிட்டார்கள் நந்துவும் சித்துவும்…

பின்னர், இருவரும் கிளம்பி அலுவலகத்திற்கு சென்றனர்…

அங்கே முகிலனும் ஆதியும் காத்துக்கொண்டிருந்தனர் மயூரிக்காக முகிலனின் அறையில்…

“ஹேய்… மயில்… ஏண்டி… என்னாச்சு… ஏன் இப்படி உன் கை நடுங்குது?...”

“…..”

“ஹேய்… லூசு…”

“…..”
“பயப்படாதடீ… நான் உங்கூட தான் இருக்கேன்மா…”

“ஹ்ம்ம்…”

“சரி… நீ இங்கேயே இரு… நான் இப்போ வந்துடுறேன்…” என்றபடி முகிலனின் அறை நோக்கி நடந்தாள் சாகரி…

இவள் அங்கே செல்ல, அங்கே ஆதி மயூரியைத் தேடி வந்து கொண்டிருந்தான்…

“லக்ஷ்மி….”

“அண்ணா…..”

“எப்படிடா இருக்க?...”

“நல்லாயிருக்கேன் அண்ணா… வீட்டில எல்லாரும் நல்லாயிருக்காங்களா?...”

“நல்லாயிருக்காங்கடா ஒருத்தன் தவிர…”  என்று அவளை நிதானமாக பார்த்தான்.. அவள் பதில் பேசாமல் இருக்கவே… “அப்பறம் அப்பா போன் பண்ணாறாடா?... எப்ப உன்னை பார்க்க இங்க ஊருக்கு வறாராம்?...”

“தீபாவளிக்கு வருவார் அண்ணா… அதுக்கு தான் நாள் இருக்கே….”

“ஹ்ம்ம்… அதுவும் உண்மைதாண்டா…”

“அப்பறம்டா… என்ன இன்னைக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்க…. பட் கொஞ்சம் பயப்படவும் செய்யுற மாதிரி இருக்கு?... என்னம்மா ஆச்சு?...”

“வந்து அண்ணா….”

“ஹ்ம்ம்… சொல்லுடா…”

“அப்பாவ நினைச்சா பயமாயிருக்கு அண்ணா… அவர் ஒத்துக்கலைன்னா என்ன செய்யுறது?.... ஆனா என்னால (முகிலன்) அவரை விட்டு விலகவும் முடியலை… அவர் பக்கத்துல வருகிறத என்னால அனுமதிக்கவும் முடியலை… அதனால தான் அவர்கிட்ட பேசாம ஒதுங்கி போறேன்… பயமாயிருக்கு அண்ணா அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்னு யோசிக்க கூட முடியலை…” என்று குழந்தையாக சொல்பவளைப் பார்க்க ஆதிக்கு என்னவோ தான் செய்தது…

“உன் அப்பாகிட்ட எங்க அம்மா-அப்பா பேசுவாங்கடா…. நீ பயப்படமா இருடா… நீ இன்னைக்கு நாள் சந்தோஷத்தை யோசிடா… உன் எதிர்கால சந்தோஷத்துக்கு நான் உறுதி…”

“சரிண்ணா…”

“ஹ்ம்ம்… அப்போ நல்ல முடிவு தான் எடுத்துருக்கன்னு நினைக்கிறேன்….” என்றபடி அவளைப் பார்த்தவன்…

அவளின் வெட்கத்தில் புரிந்து கொண்டான்….

“அவர் எங்கே இருக்கார் அண்ணா?...”

“வேற எங்க இருப்பான்?... அவன் ரூமில் தான்… சோக வயலின் வாசிச்சிட்டு தான் இருக்குறான் இன்னும்…”

“ஹ்ம்ம்… நான் அவரைப் பார்க்கணும் அண்ணா… தனியா போக பயமாயிருக்கு… கூட வறீங்களா?...” என்று முழித்தபடி கேட்டாள் மயூரி…

அதை பார்த்து சிரித்தவன் அவளது தலையில் செல்லமாக தட்டிவிட்டு, “லூசுப்பொண்ணு… ஹ்ம்ம்.. சரி வா… பட் வாசலுக்கு கொஞ்சம் முன்னாடியே நான் போயிடுவேன்… நீ தான் உன் மனசுல என்ன இருக்குன்னு அவங்கிட்ட சொல்லணும்… சரியா?...”  என்று கேட்டான்..

“ஹ்ம்ம்…” என்றாள் அவளும் தலையசைத்தபடி…

“மே ஐ கம் இன் சார்?...”

“யெஸ் கம் இன்….”

“சார் நீங்க கேட்ட ப்ராஜெக்ட் டீடைல்ஸ் எல்லாம் இந்த ஃபைலில் இருக்கு… ப்ளஸ் இந்த டாக்யூமெண்ட் எக்செல் ஃபார்மட்டில் உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பிருக்கேன்… கரெக்‌ஷன்ஸ் இருந்தா சொல்லுங்க சார்….”

“ஓகே…. பட் இது மயூ…ரி கிட்ட தான நான் கேட்டேன்…. நீங்க வந்து கொடுக்குறீங்க?...”

“கரெக்ட் தான் சார்…. அவ குறைஞ்சது இன்னும் ஒரு வாரத்துக்கு வரமாட்டா சார்….”

“ஏன்… ஏன்… என்னாச்சு?... மயூ…….ரிக்கு…..?...” என்னாச்சு?...” என்று பதறினான் அவன்….

“ஒன்னுமில்லை… அவளுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிருக்காங்க…. இன்னும் மூணு நாளில் கல்யாணம்…. அப்புறம் ஒரு த்ரீ டேஸ் இந்த மறுவீடு ஃபங்க்ஷன் எல்லாம் முடிஞ்சு வரணுமே,… சோ ஒன் வீக் கூட தான் ஆகும்… சார்….”

“எ………….. ன்………………………….. ன………… து????????????????????????” என்றவன் சீட்டிலிருந்து எழுந்தே விட்டான்….

“நீங்க ஏன் சார் ஷாக் ஆகுறீங்க?... என்னாச்சு?... ஓ… ஒரு வார்த்தை சொல்லாம, இன்விட்டேஷன் கூட கொடுக்காம போயிட்டான்னு வருத்தமா?... ஹ்ம்ம்… எனக்கும் கூட அதே வருத்தம் தான் சார்… எங்கிட்ட போனில் தான் சொன்னா… உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ண சொல்லி…” என்றதும் அவன் கண்களில் கண்ணீர் திரண்டது…. அதை மறைக்க திரும்பி கொண்டான்…

“ச….ரி…. நீ…..ங்…….க….  போ……க……….லா…..ம்….” என்றான் திக்கி திக்கி…

“சரிங்க சார்….” என்று வெளியேற முயற்சித்தவளை… அவனின் கேள்வி நிறுத்தியது….

‘வேற எதும் சொல்ல சொன்னாங்களா?....” என்று உணர்ச்சிகள் துடைத்த குரலில் கேட்டான்…

“ஹ்ம்ம்… சொன்னா…”

என்னது என்பது போல் அவன் அவளைப் பார்க்க…

“அவளே நேரில் வந்து சொல்லுறேன்னு சொன்னா… இன்னைக்கு… இப்போ…..”

“ஓ….”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.