(Reading time: 19 - 37 minutes)

08. உள்ளம் வருடும் தென்றல் - வத்ஸலா

ந்த வீட்டின் கேட்டை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அபர்ணா. பரத்தினுள்ளே சட்டென சிலிர்த்தது. தன்னையும் அறியாமல் அவன் கால்கள் போர்டிக்கோவை நோக்கி நடந்தன.

அவன் அங்கே வந்து நிற்கவும், அது தன்னவனுடைய வீடு என்றே தெரியாமல் உள்ளே நுழைந்த அபர்ணா அவன் முன்னே வந்து நிற்கவும் மிக சரியாக இருந்தது.

இருவரும் சட்டென நிமிர ஒரே நொடியில் சரேலென விரிந்தன  நான்கு கண்களும்.

Ullam varudum thendral

'எங்கே இருக்கே கண்ணம்மா. என்கிட்டே வந்திடேன்'. அவன் உச்சரித்த முடித்த அடுத்த நிமிடத்தில் அவன் கண் முன்னால் அவள் வந்து நிற்க, அதை எதிரே பார்க்காதவனாய், நம்பவே முடியாமல்  அவள் அருகில் வந்தவன், அதுவரை அவன் மனதில் இருந்த தவிப்பில் அவள் முகத்தை அப்படியே ஏந்திக்கொண்டான் தன் கைகளில்.

இமைக்க மறந்தாள் அபர்ணா.

நான் இருப்பது அவனது கைச்சிறையிலா?

என்னை அவனிடம் சேர்த்தது மழைத்தூறலா?

அவன் முன்னால் வந்து நின்றே விட்டேனா?

மொத்தமாய் அவனை வென்றே விட்டேனா?

சில நொடிகள் நம்பவே முடியவில்லை அவளால்.

வியந்துதான் போயிருந்தான் அவன். சவால் விட்டேனே அவளிடம்.! இதோ வந்து நிற்கிறாளே என் முன்னால் என் தேவதை.! எத்தனையோ நாள் காத்திருந்த பொக்கிஷம் கை வந்து சேர்ந்தது போன்ற ஒரு உணர்வுடன் ஏந்திக்கொண்டான் அவள் முகத்தை.

தவித்துக்கொண்டிருந்த அவன் கண்கள் அவள் முகத்தை வருட, அவன் கண்களுக்குள் பார்த்தவளின் கண்களில் எங்கிருந்தோ வந்த வெட்கம் அழகாய் பரவ துவங்கியது. அவன் இதழ்களில் மெல்ல மெல்ல புன்னகை விரிந்தது.

அவர்கள் மேல் சிதறி  தழுவி சென்ற சாரலில் இருவரும் கொஞ்சம் சிலிர்க்க...... 

அவளை ரசித்தபடியே அவன் உதடுகள் ஏதோ சொல்ல விழைய சட்டென கலைந்து விலகினாள் அபர்ணா.

ஹேய்... அவன் குரல் கொஞ்சம் தவித்து வெளியேறியது.

புன்னகையுடன் விலகி சென்று நின்றவள் பார்வை மழை தூறலின் மீது பதிந்தது.

சேர்த்து வைத்துவிட்டாயே.... என்னை என்னவனுடன் சேர்த்து வைத்து விட்டாயே தோழியே... நனைவேன்... இனி எப்போதும் திகட்ட திகட்ட நனைந்து உன்னில்  கரைவேன்....

சின்னதான புன்னகையுடன் அருகே வந்தவன் மழையை நோக்கி நீண்ட அவள் கையை பற்றிக்கொள்ள விழைய......, .

'ஒண்ணும் வேண்டாம். எவ்வளவு தவிக்க விட்டீங்க என்னை... கையை விலக்கிக்கொண்டாள் அவள்.

அப்படியா? எதுவும் வேண்டாமா? அப்புறம் நீ கேட்டாலும் நான் எதுவும் சொல்ல மாட்டேன்.'

'வேண்டாம். சொல்ல வேண்டாம்.' என்று உதடுகள் சொன்னாலும், அவன் வார்த்தைகளை கேட்டுவிட, தவிக்கும் கண்களுடன் அவள் அவனை பார்த்த நொடியில்......

'அபர்ணா. நீ எப்போ வந்தே. எப்படிம்மா இருக்கே.? குரல் கேட்டு சட்டென திரும்பினர் இருவரும்.

புன்னகையுடன் அங்கே வந்து நின்றார் தாத்தா. எப்போமா வந்தே நீ.? ஏன் இங்கேயே நின்னுட்டே? உள்ளே வா

.'ஆங்... வரேன்.... வரேன்... புன்னகையுடன் அவனை தாண்டி நகர்ந்தாள் அபர்ணா.

அவருடன் நடந்தபடியே திரும்பியவளின் பார்வை அவன் முகத்தை உரச, அதில் பரவியிருந்த  ஏமாற்றத்தை பார்க்க கொஞ்சம் பாவமாகவே இருந்தது அவளுக்கு.

'தவிக்கட்டும் . கொஞ்ச நேரம் தவிக்கட்டும்' முகத்தில் எதையும் கட்டிக்கொள்ளாமல் அவள் நகர பேசாமல் அவளை பின் தொடர்ந்தான் பரத்.

வீட்டுக்குள் நுழைந்த நேரத்தில் தாத்தா சற்று முன்னே செல்ல, இருவரும் ஜோடியாய் உள்ளே நுழைந்தனர்.

அப்போது அங்கே சோபாவில் அமர்ந்திருந்த அத்தையினுள்ளே ஏதோ ஒன்று சிலிர்க்க  சோபாவில் இருந்து சட்டென எழுந்தார் அவர்.

அவர் முகத்தில் பலவித உணர்வுகள் பிரதிபலிக்க அதை அப்படியே படித்துக்கொண்டிருந்தான் பரத். அவருக்குள் என்னென்ன ஓடிக்கொண்டிருக்குமென புரிந்துதான் இருந்தது அவனுக்கு.

'யாருப்பா இது?' அவள் மீதிருந்த பார்வையை விலக்காமல் அத்தை பரத்தை பார்த்து கேட்க, அவன் பதில் சொல்வதற்குள் முந்திக்கொண்டார் தாத்தா.

'இவ அபர்ணா. என்னோட friend.'  என்றார் அவர்.

உங்க friendஆ அத்தை வியப்புடன் கேட்டார். சிரித்தபடியே சொன்னான் பரத் 'இவங்க என் கூட வேலைப்பார்க்கிறாங்க அத்தை'

இவர் பரத்தின் அத்தையா? சட்டென அடுத்த நொடி அவர் பாதம் தொட்டு வணங்கினாள் அபர்ணா.

'நல்லாரும்மா...' தன்னாலே அவர் உதடுகளில் எழுந்த புன்னகையுடன் சொன்னார் அவர்.

நீ உட்காரும்மா என்று மைதிலி விலகிய நொடியில் அபர்ணாவின் காதருகே மெல்ல சொன்னார் தாத்தா 'இவங்க தான் நம்ம ஸ்ட்ரிக்ட் ஆபீசர்'

ஓ! என்றவளின் புருவங்கள் ஒரு நொடி உயர்ந்து இறங்க, 'இந்து எங்கே? என்றார் அத்தை.

'ஆபீஸ்லேர்ந்து வந்து, ரொம்ப டயர்டா இருக்குன்னு சொல்லி அப்படியே மேலே போய் படுத்துட்டா. தூங்கட்டும் மைதிலி. இன்னும் கொஞ்சம் காய்ச்சல் இருக்கு அவளுக்கு' என்றார் தாத்தா.

'விளக்கேத்துற நேரத்திலே என்ன தூக்கம்?. வந்து விளக்கேத்த சொல்லுங்க அவளை.'. என்றார் மைதிலி.

காலையில் அத்தை பூஜையை முடித்து விடுவார். மாலையில் விளக்கேத்துவது இந்துவின் வேலை.

இப்போ என்ன உனக்கு? விளக்குதானே தானே ஏத்தணும் .'அபர்ணா நீ போய் ஏத்துமா' என்றார் தாத்தா.

ஒரே நேரத்தில் எல்லாரும் வியப்புடன் நிமிர்ந்தனர்.

நா...னா.... சற்று திகைத்துப்போனவளாய் கேட்டாள் அவள்.

'நீயேதான். நீ தான் விளக்கேத்தி ஆகணும். போய் ஏத்து போ'. நிறைய அன்பும் கொஞ்சம் கண்டிப்பும் கலந்த குரலில் சொன்னார் தாத்தா.

தனது தந்தையின் எண்ண ஓட்டங்களை புரிந்துக்கொண்டவராய் மெல்ல நிமிர்ந்த மைதிலியினுள்ளே சலனமே இல்லை. மகிழ்ச்சி என்றும் சொல்ல முடியாத, வருத்தம் என்றும் சொல்ல முடியாத  ஒரு உணர்வை பிரதிபலித்தது அவர் முகம். .தனது அத்தையையே  இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் பரத்.

தவிப்பின் எல்லையில் இருந்தாள் அபர்ணா. அவள் மெல்ல திரும்பி பரத்தை பார்க்க கண்களை அவள் புறமாய் கண்களை திருப்பி ஒரு நொடி யோசித்தவன், அழகான புன்னகையுடன், தலையசைத்துவிட்டிருந்தான்.

அந்த தலையசைப்பு, மைதிலி மனதின் மிக சின்னதான ஒரு மூலையை சுருக்கென தைத்தது. அடுத்த நொடி தன்னை சமாதான படுத்திக்கொண்டு அபர்ணாவின் தோளை அணைத்து 'வாம்மா'  வந்து விளக்கேத்து வா.' என்றார் அவர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.