(Reading time: 17 - 33 minutes)

 

னாலும்  ஆயிரத்தில் ஒரு பங்காக அவனிடம் நியாயமிருந்தால்?.....

அப்படியானால் ஆரணிக்கு நேர்ந்த கொடுமைக்கு என்ன விளக்கம்??????

இக்கடிதம் உண்மை என்றால்?....

இவளை இன்றுபோல் இன்னுமாய் துரத்துவான். தொடர்புகொள்ள முயல்வான். அது இவளுக்கும் இவளை விட ரக்க்ஷத்திற்கும் பல மடங்கு பரிதவிப்பை தரும்.

அதோடு ஒருபக்க வாதமாக ஆரணியின் கருத்தை மாத்திரம் கேட்டு முடிவு எடுத்ததாக இருக்க வேண்டாமே!

உள்மனதில் ஒரு எண்ணம்.

‘போன்தானே..... பேசிடலாம்.’

இரு புறமுமாய் வாதத்தில் ஊஞ்சலாடிய உள்ளத்தை சமாதானபடுத்த இரவு 2மணி என்றபோதும் அழைத்தாள் அந்த அகன் ஜெஷுரனின் எண்ணிற்கு.

“ஹப்பா கூப்பிட்டீங்களே! பிழச்சேன்”

முதல் ரிங் தொடங்கவும் அழைப்பை ஏற்ற அவன் இப்படித்தான் பேச்சை தொடங்கினான்.

காத்திருந்திருக்கிறான் இவள் அழைப்பிற்காக. அதுவும் அழைப்பாள் என்ற நம்பிக்கையுடன் இத்தனை மணிக்கும். குறித்து கொண்டாள் மனதிற்குள்.

“என்ன பேசனும்?” கடு கடுத்தாள் நிரல்யா.

“நான் என்ன தப்பு செய்தேன்னு என்னை இப்படி பண்ணிட்டீங்க?” மரியாதையும் கோபமும் ஆதங்கமும் அதை அடக்கிய அறிவும் கலந்த குரல்.

“என்ன தப்புன்னு சொன்னேனே...!”

தொடங்கிய தொனியிலேயே தொடர்ந்தாள் நிரல்யா.

மேடம்” கண்டன அழுத்தமாக வந்தது அவன் குரல்.

“என்ன சொல்றீங்கன்னு யோசிச்சுதான் சொல்றீங்களா?....ரக்க்ஷத் வாயடைக்க அவன்ட்ட நீங்க என்ன வேணும்னாலும் சொல்லலாம்....சரியா சொல்லனும்னா, இப்படித்தான் சொல்லனும். அப்பதான் என்னை கேள்வியே இல்லாம கட் பண்ணுவான்.

ஆனா என்ட்ட நீங்க உண்மையை சொல்லனும்.”

வெறும் மிரட்டலாக இல்லாமல் கட்டளையாக வந்தது அது.

அடுத்த நொடி தழைந்தான்.

“ப்ளீஸ் நிரல்யா....ப்ளீஸ் என்ன காரணம்னு சொல்லுங்களேன் யோசிச்சு யோசிச்சு மண்டையே வெடிச்சிடும்போல இருக்குது.....ப்ளீஸ்....ஆரா வேற என்னை பார்த்தாலே அரண்டு போய்.......’சே’ ன்னு வருது.....ப்ளீஸ் நிரல்யா அவளை பார்க்க உங்களுக்கே பாவமா தெரியலையா? எத்தனை நாள் அவ இப்படி பயந்துட்டே இருப்பா?....என்ன சொல்லி வச்சுருக்கீங்க...”

மொத்த கோபத்தையும் முழுதாக புதைத்து கொண்டு, மலை உச்சியிலிருந்து பாதாளத்துக்கு தன்னை தள்ளியவனிடமே, தன்னை காப்பாற்ற சொல்லி, அகபட்ட சிறு பிடியை பிடித்துகொண்டு தொங்கி கொண்டிருப்பவன் மன்றாடுவது போல் இருந்தது அவனது செயல்.

இதன் அத்தனை வழியாகவும் நிரல்யா உணர்ந்தது அகனுக்கு ஆரணியின் மேல் உள்ள காதலைத்தான்.

குழம்பினாள்.

“ஆராவோட ஷேர்ஸ்க்காக பார்கீங்களா?, ப்ளீஸ்..அது உங்களுக்கே வர்ற மாதிரி செய்றேன்...?” என பேரம் தொடங்கினான்.

“ஷட் அப்,” அலறினாள் நிரல்யா. “நான் காரணத்தை ஏற்கனவே சொல்லியாச்சு”

இணைப்பை துண்டிக்க போனாள். உள்மனது கூவியது ‘வாயில் இருந்து விஷயத்தை வாங்கத்தான் அவன் உன்னை ஊசியாய் குத்தியதே’

“நிரல்யா” என்ற ஒற்றை வார்த்தையை அவன் சொன்ன விதமே இவள் உள்மன கூற்றை உண்மை என உறுதி படுத்தியது.

“அப்படின்னா உண்மையாகவே நான் ஏதோ ஒரு பெண்ணை...தப்பா...அப்படின்னு நீங்க...”

அதிர்ச்சியாய் வலியோடு சொன்னவன்,

 ரேப்?” திடுமென உணர்ச்சியற்ற தொனியில், ஆனால் உயிர் வரை உருவும் குரலில் கேட்டான்.

“அப்படின்னு உங்கட்ட பழி சொன்னது யாரு? என் தங்கை துவியா?...இல்ல.. அவ ஆராட்ட சொல்லி இருப்பா...அத ஆரா உங்கட்ட சொல்லி இருப்பா....”

“வாட்?” நிரல்யா அதிர காரணம் இருந்தது. இவன் தங்கை துவி பற்றி ஆரணி சொன்னதில் ஒரு இடறல் நிரல்யா இதயத்தில் உண்டு.

ஆரணி அல்லல்பட்ட அந்த நாளில், வீட்டில் வேலை ஆட்கள் இல்லாத போது, அவர்கள் வீட்டின் வேறு இடத்தில் இருப்பதாகவும்,தேவை என்றால் வருவார்கள் என்றும், துவி ஆரணியிடம் பொய் சொல்லி இருக்கிறாள்.

‘இதை ஆரணியிடம் துருவ நிரல்யாவிற்கு அப்பொழுது விருப்பம் இல்லை, ஆனால்...ஏதும் விஷயம் இருக்குமோ?’

“துவி ஒரு டிரக் அடிக்ட், டிரக்கிற்காக என்ன வேணும்னாலும் செய்வா, என்ட்ட சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு போய்ட்டா, என்ன பழி வாங்கன்னு வந்து ஏதாவது ஊளறி இருப்பா..என்னால ஃப்ரூவ் பண்ண முடியும்.”

அவன் நம்பிக்கையோடு சொன்ன விதம், முற்று முடிய அவனை நம்ப சொல்லி குழப்பியது என்றால், தன் தங்கை பற்றி இப்படி பிறரிடம் சொல்ல வேண்டியிருக்கிறதே என்ற அவன் வலியை தாண்டி, நிரல்யாவின் அடி வயிற்றில் அடித்தது வேறு உண்மை.

“அப்படிபட்ட பொண்ணுட்ட ஆருவ ஏன் பழகவிட்டீங்க...அதுவும் ஆருவ கொஞ்சம் கூட எச்சரிக்காம” கொதித்தாள் நிரல்யா.

அந்த துவி திட்டமிட்டு  ஆருவை ஆபத்தில் மாட்டியிருக்கிறாள் என்ற ஒரே புரிதலை மட்டும் நினைத்துதான் நிரல்யா இதை சொன்னது. துவி செய்ததை விட, இவன் குற்றமல்லவா அதிகம்? அது அந்த நேரத்தில் உணர்ச்சி வேகத்தில் ஒரு நொடி மறந்து போனது நிரல்யாவுக்கு.

“ஆ..ஆரு.....துவி...நான்....தெய்வமே!” அகன் சொன்ன விதத்திலேயே அடிவயிற்றை பிசைந்தது நிரல்யாவிற்கு. ஏதோ பெரிதாக பூகம்பம் வருகிறது.

“அப்படின்னா...துவியால் ஆருவுக்கு ஏதோ பிரச்சனை ஆகியிருக்குது....என்ன பண்ணினா அந்த கழுதை....ஆருவுக்கு என்னாச்சு...?.நீங்க வேற என்னை குறை சொல்றீங்க...ஆரா வேற என்ன பார்த்து பயப்படுறா...பதற்றத்தோடு கணக்கிட்டவன்

அடுத்த கணம் மௌனமானான்.

உயிரற்ற குரலில் வலிக்க வலிக்க தொடர்ந்தான்.

“இவன் கூட ரூம்ல தனியாவான்னு கேட்டீங்க....ஆரு என்ன பார்த்தாலே பயபடுறா....

துவி ஆராவுக்கு எதிரா ஏதோ சதி செய்திருக்கா....அப்படின்னா துவி ஆராவை ஏமாத்தி யார்ட்டயோ மாட்டி விட்டிருக்கா.....

ரேப்னு துவி சொல்லியிருப்பான்னு நான் சொன்னதுக்கு நீங்க மறுப்பு சொல்லலை...அப்ப நடந்த விஷயம் அதுமாதிரி....

அதாவது ஆருவை துவி ஏமாத்தி யார்ட்டயோ மாட்டி விட்டிருக்கா, அண்ட் மை ஆரு இஃஸ் ரேப்ட்,...

மௌனம்.

“ஆனா இதுக்கெல்லாம் நான் காரணம்னு ஆரா புரிஞ்சுகிட்டு இருக்கா....காரணம்னு நினைக்கலை...செய்ததே நான்தான்னு நினைக்கிறா...... இவன் கூட ரூம்ல தனியாவான்னு கேட்டீங்களே, அதுக்கு அர்த்தம் அதுதானே” ஒரு கணம் மௌனம்.

உங்கட்ட ஆரு அவ புரிஞ்சிருக்கிறத சொல்லியிருப்பா...நீங்க நல்ல ஃப்ரெண்டா அத நம்பி....நல்ல அண்ணியா...ரக்க்ஷத் மேல உள்ள அன்பில விஷயத்தை அவனுக்கு விளக்காமலே....என்னை விலக்கிட்டீங்க....”

“ஆருமா” !!!!!

தொலை பேசியில் கூட அவனது வலி, தவிப்பு அப்பட்டமாக தெரிந்தது நிரல்யாவிற்கு.

இவளுக்கு இந்த விளக்கம் பயங்கரமாக வலித்தாலும், முடிவெடுக்க முடியாமல் குழப்பினாலும், அதற்கும் மேலாக தெரிந்தது அவனது தவிப்பு.

சிறிது நேரம் மௌனம்.

“ஆருவ தயவு செய்து என் கையில குடுத்துருங்க.... அவ எத்தனை வலி அனுபவிச்சுட்டு இருப்பா.....நான் பார்த்துபேன்...இனி நான் பார்த்துபேன்...ப்ளீஸ்  நான் சொன்ன ஒவ்வொன்னையும் என்னால ஃப்ரூவ் பண்ண முடியும். எனக்கு .... ஆருவுக்காகவாவது ப்ளீஸ்...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.