(Reading time: 17 - 33 minutes)

 

ஷ்...ஜெஷுரன் சார்.....கொஞ்சம் பொறுங்க...என் இடத்தில இருந்தும் யோசிங்க” அவன் உணர்ச்சி பிராவகத்தை அதட்டி தடுத்தாள் நிரல்யா.

வலிக்கும் இவள் மனதும், உருகும் இவள் இதயமும் இவள் மூளையை பாதித்தால்...இந்த ஜெஷுரனின் அடுத்த பலி இவளாகாவும் இருக்கலாம்.

“அன்னைக்கு எதுக்காகவோ ஆருவ கஷ்ட படுத்திருக்குது, இப்ப அதே போல வேற சதி இல்லனு...நான் நம்ப ஏதாவது காரணம் வேணுமே எனக்கு...”

நிரல்யாவால் முழுவதுமாய் அவனை நம்ப முடியவில்லை, எனினும் முழுவதுமாய் அவன் தவிப்பை நாடகமென்றும் ஒதுக்கவும் முடியவில்லை.

எந்த வகை உணர்ச்சி நாடகமாடி ஆருவை ஏமாத்தினானோ?

“ப்ளீஃஸ் நிரல்யா தயவு செய்து புரிஞ்சிகோங்க....ஆரா எனக்கு என் உயி..”என தவிப்பாய் கெஞ்சலாய் ஆரம்பித்தவன்

சட்டென தொனி மாற்றினான்.

“ஐ நோ யூ லவ் ரக்க்ஷத்....ஆராவ கஷ்டபடுத்துனவன் நானில்லை. ரியல் கிரிமினல் இஸ் ஆன் லூஸ்...அவன் அடுத்து என்ன செய்ய போறான்? ரக்க்ஷத் குடும்பத்தில் யாருக்கு அடிவிழுந்தாலும் வலிக்க போவது ரக்க்ஷத்துக்கும்தான் மறந்துடாதீங்க...”

இந்த கோணத்தை இதுவரை நிரல்யா யோசிக்கவில்லை. ஆருவுக்காக மன அழுத்தத்தை அனுபவித்து கொண்டிருந்தவளுக்கு குப்பென வியர்த்தது. புது பயம்?

இப்பொழுதே ரக்க்ஷத் சரியாக தூங்கவில்லையோ என அவன் கண்களை காணும் போது தோன்றுகிறது. இதில் இன்னுமாய் வேதனைகளா? அடுத்து ஆபத்து யாருக்கு, எப்பொழுது எதற்கு என தவித்தே நிரல்யா வெருண்டு விடமட்டாளா?

அந்த ஆபத்து அவளது ரக்க்ஷத்திற்கானால்? அவனை விபத்துக்குள்ளாக்கினால்...?

“நோ....இப்ப...அப்படியெல்லாம்..சும்மா மிரட்டாதீங்க ஜெஷுரன்...ஆருவுக்கு நடந்தது விபத்து..”  இவளது காதலை பயன்படுத்தி தூண்டிவிடுகிறான் என நினைத்தாள் நிரல்யா.

“நோ....அது....ப்ளாட்....சதி......நீங்க சொல்றபடி பார்த்தா, ஆருவுக்கு நடந்தது உணர்ச்சி வேகத்தில், சூழ்நிலை வசதியாக அமஞ்சதால நடந்த ஒரு காரியம் மாதிரி தெரியல.....துவிய வச்சு ஆராவ ஏமாத்தி கூட்டிட்டு போயிருக்காங்க...அப்படின்னா அது ப்ளாட் தான?

அப்படி ஆராவ டார்கட் பண்ண என்ன ரீசன்?” என்றவன்

“ஆரா என்ன சொன்னா? அத விளக்கமா சொல்லுங்களேன்...ப்ளீஸ்” என மறுபடியும் கெஞ்சல் மோடுக்கு வந்தான்.

“ஆருட்ட விஷயத்த யார்ட்டயும் சொல்ல மாட்டேன்னு வாக்கு குடுத்திருக்கேன்....எதுக்காகவும் வாக்கு மீற மாட்டேன், இது வரைக்கும் கூட நீங்களாத்தான் யூகிச்சுருக்கீங்க..அதையும் உண்மைனு நான் இன்னும் ஒத்துகிடலை”

அ..என ஆரம்பித்தவன் மௌனமானான்.

“ரக்க்ஷத் சாய்ஸ் சூப்பர், உங்க மேரஜ் லைஃப் நல்லா இருக்கும்...நல்லாயிருக்கனும், ஆராவுக்கு அண்ணங்க மட்டுமில்ல அண்ணிகளும் சூப்பர் தான். காட் ப்லஷ் யூ”

மனம் உணர்ந்து அவன் பேசுவதாகதான் நிரல்யாவிற்கு பட்டது. உருகவிடமாட்டேன் என தன் மனதை இழுத்து பிடித்து வைக்க வேண்டியிருந்தது பெண்ணவளுக்கு.

“சரி, அப்ப நான் எட்மாண்டன்ல, ஆராவ பார்க்கவாவது ஹெல்ப் பண்ணுங்க....அவட்ட நானே பேசிக்கிறேன்”

“நோ வே.....எனக்கு உங்க மேல நம்பிக்கை வர்ற வரைக்கும், ஆராட்ட நீங்க தப்பு பண்ணலைனு காண்பிக்க, அவ நம்புற அளவுக்கு ஃப்ரூப் கிடைக்கிறவரைக்கும், நீங்க ஆருவ மீட் பண்ண கூடாது.”

பெரு மூச்சுவிட்டான் அகன்.  “ ஆரா மேல உள்ள உங்க கன்சர்ன் புரியுது...சரி அந்த ஆதாரத்த கண்டு பிடிக்கவாவது எனக்கு ஹெல்ப் பண்ணுங்க”

“ஜெஷுரன் சார்..என் ஸேப்டி பத்தியும் நான் கவனமா இருக்கனும்..”

மௌனம் ஒரு கணம்.

“வலிக்குது நிரல்யா நீங்க இப்படி பேசுறது. என்னை நீங்க ஆரா விஷயத்தில் தப்பா நினைகிறதே கொடுமையா இருக்குது...இதுல...நீங்க..என் ப்ரெண்டோட ஃபியான்சி..... எனக்கு என் தங்கை மாதிரி... எனக்கு துவி மேல பாசம் உண்டு..மரியாத கிடையாது....உங்க மேல ரெண்டும் இருக்குது...உங்க வாயால இப்படி கேட்க்க ரொம்ப கஷ்ட்டமா இருக்குது.”

“வெறும் வார்தையால மட்டுமே நான் உங்கள நம்புற அளவுக்கு நம்ம முன்னாடி உள்ள பிரச்சனை ஒன்னும் சின்னதில்ல ஜெஷுரன் சார்....”

“ஆரா வார்த்தையால சொன்னத நம்புறீங்கதானே? என்ன ஏன் நம்ப கூடாது”

“அவள எனக்கு பெர்சனலா தெரியும். அவ எப்படி பட்டவன்னு தெரியும்....அவ இத சொல்றப்ப அனுபவிச்ச வலி தெரியும்....நம்பாம இருப்பதுதான் கஷ்டம்”

“கிட்ட தட்ட பத்து பன்னிரெண்டு வருஷமா, எங்க இரண்டு குடும்ப பெரியவங்க இருக்கிறப்ப இருந்தே எங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியும். அக்க்ஷத், ரக்க்ஷத்ட்ட கேட்டுபாருங்க என்ன பத்தி...ரக்க்ஷுக்கு ஆராவ எனக்கு கல்யாணம் செய்து கொடுக்கவே விருப்பம் இருந்துது தானே?...இப்ப நான் பேசுறப்ப வலி புரியலையா?”

அவன் கேள்வி லாஜிக்கலாக சரிதான்.

ஆனாலும்...ஆரணி சொல்லும் விஷயத்தில்....வேறு ஒருவனை எப்படி ஜெஷுரனாக ஆரணி புரிந்து கொள்ள முடியும்?

உண்மையில் இந்த ஜெஷுரனின் நோக்கம் என்ன? புரியவில்லை நிரல்யாவிற்கு.

“ஆனா அதே ரக்க்ஷத்தான் ஒரு மூனு வார்த்தயில் உங்க நட்ப க்ளியர் கட் பண்ணதும்....அந்த அளவுதான் நீங்க நம்பிக்கை சம்பதிச்சிருக்கீங்க... “

அகனின் வாயை அடைக்க மட்டும்தான் நிரல்யா இதை சொன்னதே! இவளை தவிர வேறு யார் சொல்லியிருந்தாலும், இவள் வருங்கால கணவன் இப்படி வேகமாக, விசாரணையின்றி நட்பை வெட்டி இருக்க மாட்டான் என இவளுக்கு நன்றாக தெரியும்

“அ..து..அவன எனக்கு புரியுது....விடுங்க....எதுக்காகவும் நம்பவே மாட்டேன்னு..பிடிவாதம் உங்களுக்கு....” பெரு மூச்சு விட்டான் அகன்.

அதே நேரம் நிரல்யாவின் தொலைபேசியில், கால் வெயிட்டிங்கில் வந்தது ஆரணியின் எண்.

ஆரணிக்கு இப்பொழுது பகல்தான், ஆனாலும் நிரல்யாவிற்கு இது பின்னிரவு. இந்த நேரத்தில் ஆரு அழைக்கவே மாட்டாள். அழைக்கிறாள் என்றால்...

இருந்த குழப்பமா, அகன் மேல் தோன்றியிருந்த அரை குறை நம்பிக்கையா, ஆரணியின் அகால நேர அழைப்பா, அல்லது வெறும் அவசரமோ அல்லது இவை  அணைத்துமேவோ அகனின் இணைப்பை துண்டிக்காமல், ஆரணியின் அழைப்பை ஏற்க வைத்தது நிரல்யாவை.

கான் கால்.

“நிரு...நிரு...எனக்கு என்னமோ ரொம்ப கஷ்டமா இருக்குது...உன்ட்ட பேசனும்...நீ பக்கத்தில இருந்தா உன் மடியில வந்து படுத்துபேன்...அங்க வந்துரட்டுமா.. ரச்சுட்ட சொல்லேன்..” அடக்கிய அழுகையுடன் கெஞ்சினாள் ஆரணி.

“ஆரு..என்னமா...நீ எங்க விரும்புறியோ அங்க இருக்கலாம்மா...வர்றேன்னா அடுத்த நிமிஷம் உன் அண்ணா இங்க கூட்டிட்டு வரபோறாங்க...எல்லாம் உன் இஷ்ட்டம்தான்...அது உன் அண்ணா..இதில என்ட்ட வந்து...என்னாச்சு ஆரு?” அண்ணியாக போகிறவள் பரிதவித்தாள்.

“என்னமோ...என்னன்னு சொல்ல தெரியலை...உள்ளுக்குள்ள ஒரே தவிப்பா....க்ரீவிங்கா,....எதையோ இழக்க போறமாதிரி பயமா......ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா..”

தாங்க முடியல நிரு....தூங்கவே முடியாதமாதிரி.....தூங்கினா ஒரே கனவு....அது..அது...நீ தப்பா எடுத்துக்க மாட்டல்லா நிரு...என்னால என்ன புரிஞ்சிக்கவே முடியல....உன்ட்ட சொல்ல்லாம்னு தோணிச்சு....அ....அந்த அ..அக...அகன் ஏதோ ரொம்ப பயங்கரமா கஷ்ட படுறமாதிரி கனவா வருது....., அவன் கஷ்ட்டபட்டா நான்  சந்தோஷபடாட்டாலும், இப்படி ஏன் கஷ்ட்டமா இருக்குது.....? அவனுக்கு எதுவும் ஆயிடுமோ?.....பாரு நிரு இவ்வளவுக்கு அப்புறமும்...மனசுக்கு அவன சுத்தமா பிடிக்கலை..ஆனால் உள்ளுகுள்ள இது என்ன?...நான் லூசா?...”

அவள் புலம்பல் தொடர விக்கித்துப்போனாள் நிரல்யா.

அறிவு ஏமாறும்,மனம் எப்பொழுது வேண்டுமானாலும் எத்திசையிலும் பாயும். அதற்கு ஜால்ரா அடிக்கும் சரீரம்.ஆனால் ஆவியின் உள்ளுணர்வு??

காரணமே இல்லாமல் அந்த அகன் ஜெஷுரனை நிரல்யா நம்பியதுற்கு ஆருவின் இந்த தவிப்பு முக்கியகாரணமாயிற்று.

ஜெஷுரனுடன் சேர்ந்து உண்மையை கண்டுபிடிக்க முடிவு செய்தாள்.

அவளது அந்த முடிவு அவளை வேசிதனம் நடக்கும் விடுதிக்கு கூட்டி போகபோகிறது என்றும், பல பைத்தியங்களை வைத்து பராமரிக்கும் மன நோய் இல்லத்திற்கு இழுத்து போக போகிறது என்றும் அவளுக்கு அப்போது தெரியாது.

ரட்சிக்க வேண்டியவன் ரட்சிப்பானா??????????

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:752}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.