(Reading time: 42 - 84 minutes)

 

நீ பொய் சொல்லுற… தாத்தாவும் பாட்டியும் சாமி கிட்ட போயிட்டாங்கன்னு தானே சாப்பிடாம இருக்குற?... என்ற சித்துவின் கேள்விக்கு,

ஆமாண்ணா… இவ அதனால தான் சாப்பிடாம இருக்குறா… நீ வா நாமும் சாமிக்கிட்ட போயிடலாம்… இவளை அதுக்குப் பின்னாடி யாரும் சாப்பிடுன்னு சொல்லமாட்டங்கல்ல என்ற நந்துவின் வாயை வேகமாக பொத்தியவள், அப்படி சொல்லாதேடா… நந்து… இப்ப என்ன நான் சாப்பிடணும்… அவ்வளவு தானே… கொடு… என்றவள் சித்துவிடமிருந்து தட்டை வாங்கி வேகமாக உண்டாள்…

அதைப் பார்த்துக் கொண்டிருந்த நந்து, அத்தை… எனக்கும் பசிக்குது… எனக்கும் ஊட்டுறியா?... அண்ணனும் சாப்பிடலை… என்ற நந்துவிடத்தில், இனி நேரத்துக்கு சாப்பிடலைன்னா ரெண்டு பேருக்கும் அடி தான் சொல்லிட்டேன்… என்றவள் மாறி மாறி அவர்களுக்கு ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டு முடித்தாள்…

அத்தை… நீ எப்பவும் கல கலன்னு இருக்கணும்… இப்படி உம்முனாமூஞ்சியா இருக்காதே… எனக்குப் பார்க்கவே கஷ்டமாயிருக்கு…. என்ற சித்து… என் சாகரி எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும் என்றதும் அவளுக்கு ஆதர்ஷ் நினைவு எழ, அவ்விருவரையும் அணைத்துக் கொண்டாள்…

பார்த்துக் கொண்டிருந்த தினேஷிற்கு கண் கலங்க, காவ்யா அவனை சமாதானம் செய்தாள்… அவன் அப்போது தன் சந்தேகத்தை கேட்க, நான் தான் அவளை அத்தை என்று அழைக்க சொன்னேன் என்றவள், அது தானே முறை… என்று சிரித்தாள்…

கள்ளமில்லாமல் சிரிக்கும் மனைவியிடத்தில், அந்த போன் பற்றி அவன் சொல்ல, அவள் வெலவெலத்துப் போனாள்…

இப்போ என்னங்கப் பண்ணப் போறீங்க என்று அவள் கேட்க, என் தங்கையாவது எனக்கு வேணும் கவி உறவுன்னு நான் சொல்லிக் கொள்ள என்றான் கலங்கிய குரலில்…

ஆறுதலாக அவனை அணைத்துக் கொண்டவள், எல்லாம் நல்லதிற்கு தான் என்றவாறு அவனை தேற்றினாள்…

தினேஷ் வெளிநாடிற்கு செல்லும் நாளும் நெருங்கி வர துவங்கியிருந்த சமயத்தில்… அதற்கு தகுந்தார் போல அந்த போன் காலும்…

ஒரு வாரம் கழிந்தது… தினேஷ் மனைவி மற்றும் குழந்தைகளோடு வெளிநாட்டிற்கு புறப்பட்டான்… மயூரியிடம் சாகரியை கொஞ்சம் கூட இருந்து பார்த்துக் கொள்ளுமாறும், சாகரியிடம், அண்ணன் சீக்கிரம் திரும்பி வந்துடுவேன்மா… நீ அதுவரை ஆதர்ஷ் நிழலில் இருமா… காவ்யாவுக்கு கூட தெரியாது இது நீ எடுத்த முடிவு என்று… அன்று போன் வந்ததென்னவோ உண்மை தான்… ஆனால் என் பின்னே நின்று அனைத்தையும் கேட்டிருந்து விட்டு, என்னிடம் கெஞ்சி என் மனதை மாற்றி நீங்களாவது என்னுடன் கடைசி காலத்தில் இருக்க வேண்டுமென்று நீ கேட்ட விதம் இன்றும் எனக்குள் கேட்கிறதுடா… நீ நல்லாயிருப்பம்மா.. இப்ப ஏதோ நம்ம குடும்பத்துக்கு கஷ்டம் வந்துருக்கும்மா… அப்பா-அம்மா விட்டு பிரிஞ்சேன்… அது என் விதி… ஆனா எந்த ஜென்மத்திலேயும் நீ என்னை விட்டு பிரிய விட மாட்டேன்மா நிரந்தரமா… இது தற்காலிக பிரிவு தாண்டா… பார்த்து பத்திரமா இருடா… நானாகவும் உன்னை கூப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்ட.. நீயாவது அண்ணனுக்கு கூப்பிடுமா… உங்கிட்ட பேசாம என்னாலும் இருக்க முடியாது… என் பசங்களாலும் இருக்க முடியாது… பசங்கன்ன உடனே தான் நியாபகம் வருது… அவங்க எப்படி நீயும் மயூரியும் இல்லாம இருக்க போறாங்களோ தெரியலை… என்றவன் குரல் கம்ம,

ஆரம்பத்தில் கஷ்டமாயிருக்கும் அண்ணா.. போக போக பழகிடுவாங்க… நான் போன் பண்ணுறேன் அண்ணா… நீங்க போயிட்டு வாங்க… என்னைக்கு இருந்தாலும் எனக்குன்னு சொல்லிக்க ஒரு உறவு, ஒரு அண்ணன் என் கூடப் பிறந்தவன்னு இருக்குறது நீங்க மட்டும் தான்…. என்று சொல்லி அவனிடம் சொல்லியவள்,

காவ்யாவிடம், அண்ணி, அண்ணனைப் பார்த்துக்கோங்க… அப்பா-அம்மா இழப்பு அண்ணனை ரொம்ப பாதித்து விட்டது... இப்போ என்னோட பிரிவும்…. நீங்க தான் அண்ணி பார்த்துக்கணும்… என் அண்ணனை விதி இருந்தா மறுபடியும் நான் சந்திப்பேன்… என்று சொன்ன சாகரியை அணைத்துக் கொண்டாள் காவ்யா கண்ணீர் மல்க…

அனைவரையும் சமாளித்தவளுக்கு சித்துவையும் நந்துவையும் மட்டும் சமாளிக்க முடியவில்லை…

அவர்களைப் பிரிவது எளிதாக இருக்கவில்லை அவளுக்கு… கண்ணீர் வழிந்ததைத் தடுக்கவும் முடியவில்லை…

அழாதே அத்தை… நாங்க சீக்கிரம் வந்துடுவோம்… இல்ல அண்ணா… என்று தமையனைப் பார்த்து கேட்க,

அவனோ ஹ்ம்ம்… என்று அந்தப் பக்கம் திரும்பி கொண்டான்…

முகம் திருப்பியவனை நேரேப் பார்க்க செய்தாள் சாகரி… சாகரி அத்தை… என்று அவளைக் கட்டிக் கொண்டவன், நாங்க போக மாட்டோம்… உன்னை விட்டு… என்றான் அழுகை மிக…

அண்ணா வேண்டாம் அழாதே… என்று நந்து அவனை தேற்ற, அவன் மசியவில்லை சிறிதும்…

சிறிது நேரத்தில் நந்துவும், நீயும் எங்களோட வந்துடு அத்தை… எங்களுக்கு போக இஷ்டமே இல்லை… என்று அழ ஆரம்பித்து, என் அண்ணனை அழ வச்சிட்டல்ல, உங்கூட சண்டை போ…. என்று அவளிடம் சொல்லியவள், சாகரி ஏறெடுத்து கண்ணீருடன் பார்த்த போது, அத்தை என்று அவளும் அவளைக் கட்டியணைத்துக் கொண்டாள்…

இருவரையும் மாறி மாறி சமாதானம் செய்தாள் சாகரி… சீக்கிரமே தான் அங்கே வருவதாகவும், தான் வரும் போது என்னவெல்லாம் நடந்ததென்று ஒரு டைரியில் எழுதி வைக்க வேண்டுமென்றும், அதை தான் வரும் போது வாங்கிக் கொள்வதாகவும் கூறியவள், முத்தங்களை அள்ளிக் கொடுத்து விட்டு கனத்த இதயத்துடன் வெளியேறினாள் விமான நிலையத்தை விட்டு…

பின் மயூரி வந்து அவர்களிடம் கெஞ்சி கொஞ்சி பேசி சிரிக்க வைத்தாள் அந்த மழலைகளை…

ஒகே மயில் அத்தை… நாங்க போயிட்டு வரோம்… நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் வந்து சேருங்க… நாங்க அங்க உங்களுக்காக காத்திட்டிருப்போம்… என்றபடி விடை கொடுக்க, இவளும் கை அசைத்து விடை கொடுத்தாள்…

அதன் பின் சில நாட்கள் கழித்து, ஆதர்ஷ் வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்… அவளை சந்தித்து ஒரு வருடம் ஆகப் போகிறது… ஆம் அவன் பிறந்த நாள் வர இன்னும் இரண்டு நாட்கள் இருந்தது… அவளைப் பார்த்து பேசினால் நன்றாக இருக்குமே… அவளை அன்று பார்க்க வேண்டும் என்பதற்காக தான் அவன் வெளிநாட்டிற்கு செல்லும் பயணத்தையும் தள்ளி வைத்திருந்தான்… என்னிடம் பேசிட மாட்டாயா சகி… என்று அவன் வாய் சொல்லி முடிக்கும் முன், ஆதர்ஷிற்கு சாகரி போன் செய்தாள்…

தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்... அடுத்த வாரத்தோடு சீதை-ராமின் பின்னோக்கிய காதல் நதியின் பயணம் முடிவடைந்துவிடும்... ஹ்ம்ம்... மீண்டும் அடுத்த வார சீதை-ராம் காதல் நதியில் சந்திக்கலாம்...

தொடரும்

Go to episode # 16

Go to episode # 18

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.