(Reading time: 29 - 58 minutes)

 

" ப்போ நம்ம பேத்தி மீரா,அங்க ஊஞ்சலில் உட்கார்ந்து அழுதுட்டு இருக்கா "

"...."

" கையில சேலை இருந்தது .. ஒருவேளை அம்மா ஞாபகம் வந்துடுச்சு போல "

" நீ போயி பேசுனியா ??"

"இன்னுமில்லங்க .. "

" நல்லது "

" ஏன் ??"

" ஜானுமாவும் சோகமாகத்தான் இருக்கா ... இது நீயும் நானும் பேசி சரி பண்ண முடியாது ... "

" வேறென்ன பண்ண போறீங்க ?? "

" கிருஷ்ணனும் , ரகுவும் பேசட்டும் .."

" கல்யாணத்துக்கு முன்னாடி எப்படிங்க சந்திக்க வைக்கிறது ? "

" மனசு கச்டபடுற மாதிரி ஒன்னும் ஆகா கூடாதுன்னு தானே இந்த சாங்கியம் சம்ப்ரதாயம் எல்லாம் செய்யுறோம் .. ? இங்க ரெண்டு மனசு அழுதுகிட்டு இருக்கே அதை எப்படி சரி பண்றது வள்ளி ??? நாம ஒன்னும் அவங்களை காதல் பண்ணிக்க பார்த்துகோங்க பா நு சொல்லலியே ? மனசு விடு பேசிக்க தானே அனுப்புறோம் .. அதெல்லாம் ஒன்னும் தப்பில்லை "

" ம்ம்ம்ம்ம் "

" ரொம்ப யோசிக்கத புள்ள .. நீயும் ரொம்ப சோர்ந்து தெரியுற .. காலையில இருந்து நீயும்தான் எவ்ளோ வேலை பார்த்தன்னு நானும் பார்த்துகிட்டு தானே இருந்தேன் .. "

" நான் மட்டுமா மாமா ? நீங்களும்தானே ? "

" சரி நானும் வரேன் .. நீ முதலில் போயி  உறங்கு .. நான் நம்ம பேரன்க ரெண்டு பேருகிட்டயும்  பேசிட்டு வரேன் ... "

" சரிங்க "

பாட்டியிடம்  பேசிவிட்டு மேலே  வந்த தாத்தா அவர்களின் அறை  கதவை தட்டினார் ..

" தாத்தா " - கிருஷ்ணன், ரகு

" இன்னும் தூங்கலையா ??"

" தூக்கம் வரல தாத்தா .. நீங்க ஏன் தூங்கல ? " - ரகு

" இப்போதான்யா தூங்கனும் .. பெரியவனே நீ மேல மொட்டை மாடிக்கு போற வாசற்கதவை கொஞ்சம் சாத்திட்டு வரியா ? வயசாகுதுல ... தாத்தனுக்கு படி ஏற கஷ்டமா இருக்கு " என்றார் தாத்தா .. தாத்தா சொன்னதிலே ஏதோ காரணம் இருப்பதை உணர்ந்தான் கிருஷ்ணன் .. பின்ன, ஒரு ஊரையே கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துக்கிற தாத்தாவுக்கு மாடிப்படி ஏற கஷ்டமா இருக்குன்னு சொன்னா நம்புற மாதிரியா இருக்கு ? எனினும்

" சரி தாத்தா " என்றுவிட்டு அங்கிருந்து சென்றான் ..

" சின்னவனே"

" சொல்லுங்க தாத்தா "

"இல்ல, நாளைக்கு மணமேடையில  என்னென்ன தேவைன்னு ஒரு லிஸ்ட் போட்டு உன் பாட்டி என்கிட்ட தந்தா .. அது நானுல்ல வரும்போது எங்கயோ விழுந்துடுச்சு போல .. காணோம் .. வாசல்ல தான் இருக்கும் நினைக்கிறன் .. நீ கொஞ்சம் பார்த்துட்டு வரியா ? " என்றார் ..

" சரிங்க தாத்தா .. நீங்க இங்கயே படுத்துகொங்களேன் " என்றான் ..

" இல்லைய்யா  ..உங்க பாட்டிக்கு  ரொம்ப அலைச்சல் இந்நேரம் கால் வலி வந்திருக்கும் .. ஆனா யாருகிட்டயும் சொல்ல மாட்டா .. பாவம் நாளைக்கும் நிறைய வேலை இருக்குல .. நான் அவளை கவனிச்சுக்குறேன் .. நீ போயி எனக்கு அந்த பேப்பரை  தேடி கொடுப்பா " என்றார் ..

தாத்தா வேறு ஏதோ காரணமாகத்தான் தன்னை அனுப்பி வைக்கிறார் என்று உணர்ந்திருந்தான் ரகுராம் ..

" சரி தாத்தா " ....

( மீரா- கிருஷ்ணா )

தாத்தா ஏன் இப்படி பேசினாங்க ? என்று யோசித்து கொண்டே மேலே வந்த கிருஷ்ணனுக்கு மீராவை கண்டதும் அனைத்தும் சொல்லாமலே விளங்கியது .. " லவ் யு தாத்தா " என்று மனதிற்குள் அவரைக்கு தன் காதலை சொல்லி விட்டு

" மீரூ " என்று அவளை அழைத்தான் ... இருளில் அவள் அழுது கொண்டிருந்தது அவனுக்கு தெரியவில்லை .. அவளன்  குரல் கேட்டதுமே அவளின் தனிமை எங்கோ தூர ஓடிவிட்டது .. வாசலில் நின்றவன் ஊஞ்சலில் நமர்ந்தவளின் அருகே மெல்ல நடந்துவந்தான் .. அவனின் ஒவ்வொரு காலடிக்கும், அவளது தனிமை பத்தடி தூரம் சென்றுகொண்டு இருந்தது .. இதுவரை ஏன் அழுதோம் என்பதையே மறந்துவிட்டதுபோல ஒரு உணர்வு .. நிமிர்ந்து அவனது முகத்தை பார்த்தாள் ...

அவன்தான் .. அவனேதான் .. அவன் துயர் தீர்க்க வந்தவன் .. பெயரில் மட்டுமல்ல குணத்திலும் அவன் கிருஷ்ணன்தான் .. அவனை சரணடைந்தவர்களுக்கு அனைத்தையும் தருபவன் .. ஆம்.. அந்த கிருஷ்ணன் சொனனது என்ன ? ஆசையை துறந்து , பற்றை ஒரு நிலைபடுத்தி கடமையை செய் பலனை எதிர்பார்கதே வாழ்வு நலம் பெரும் என்றான் .. இந்த கிருஷ்ணனும் அப்படிதானே ? குடும்பம் மீது ஆசை கொண்டேன் , பிள்ளை செல்வம் மீது ஆசை கொண்டேன் .. அவற்றை இழந்தேன் .. பற்றை அவன் மீது மட்டும் வைத்தேன் .. இனி எனக்கு எல்லாம் அவன்தான் என்று சரணடைந்தேன் .. காதலை கடமையாய்  செய்தேன் .. எதிர்பார்கவில்லை எதையும் .. ஏனெனில் அவன் என்னை எதிர்பார்க்க வைத்ததில்லை. என்று என் மனம் தந்து அவன் மார்பில் சரண் அடைந்தேநொ  அன்றே எனக்கு அனைத்தையும் தந்து விட்டான் .. அழகான குடும்பம், பிள்ளைபோல அவன் , செல்வம், நிம்மதி , சந்தோசம் அனைத்தையும் அப்படியே தந்துவிட்டானே ... இதோ இப்போது கூட, ஒரு மூலையில் தானே அமர்ந்து அழுதேன் ... வந்துவிட்டானே, என் கண்ணீர் துடைக்க... அவன் ஏன் துடைக்க வேண்டும் ?? நான் ஏன் அழ வேண்டும் ? வேண்டவே வேண்டாம் .. என் கிருஷ்ணன் என்னோடு இருக்கும்வரை மீரா ஏன் அழ வேண்டும் .. அந்த மீராவை பலவாறு சோதித்தாலும் அவளை நிழலாய் இருந்து காத்து இறுதியாய் தன்னுடன் இணைத்துகொண்டான் கிருஷ்ணன் ... இங்கு மீராவாகிய நான் அவனை எவ்வளவு சோதித்தேன் ? அனைத்தையும் ஏற்றான் ... நிழால் கொண்டு காதல் கொண்டான் .. எனக்கும் காதலிக்க கற்றுத்தந்தான் .. என்னை அவனுடன் இணைத்துக் கொண்டான் .. கட்டுக்குள் நிற்காமல் கரைபுரண்டது அவளின் காதல் மனம் .. அவன் வரும்வரை காத்திருக்காமல் தானே சென்று அவனை இறுக அணைத்துக்  கொண்டு முகமெங்கும் முத்தமிட்டாள் ... அவளின் அன்பு பரிமாற்றத்தில் திக்குமுக்காடி போனான் கிருஷ்ணன் .. கொடுப்பதில் தானும் வள்ளல் தான் என்பதை நிரூபித்தான் .... இருவருமே மூச்சு வாங்கி விலக , அவள் நெற்றியோடு நெற்றி முட்டி சிரித்தவன், அவளை தூக்கி கொண்டு ஊஞ்சலில் அமர்ந்தான் .. கலைந்திருந்த  அவளின் கூந்தலை ஒதுக்கிவிட்டு அவளின் சிவந்த கன்னத்தை தட்டி கொடுத்தவன் பேச தொடங்கினான் ..

" சரி இப்போ சொல்லு கண்ணம்மா "

" என்ன கண்ணா ? "

" ஏன் அழுத ? "

" நானா ?"

" அடியே .. நான் என்ன உனக்கு ஆஸ்கர் அவார்டா கொடுக்க போறேன் ..இந்த ஒன்னும் தெரியாத பாப்பா லுக் எல்லாம் வேணாம் .. உன்னுடைய ஒவ்வொரு அசைவும் எனக்கு நல்லா தெரியும் .. நீ எப்போ கோபபடுவ, எப்போ சிரிப்ப, எப்போ நீயாகவே என்னை வந்து கொஞ்சுவ  எல்லாம் தெரியும் " என்றவனின் பார்வை அந்த புடவை மீது புதைந்தது .. போடிபோழுதில் அவளின் ஏக்கத்தை புரிந்து கொண்டான் .. இதை என்னால் எப்படி சரி படுத்த முடியும் ? நான் தாய் போல இருக்காலாம் .. ஆனால் தாய் ஆகிவிட முடியாதே .. உன்னை உன்னை எங்க வைத்துவிட்ட விதியை நான் என்ன செய்வேன் கண்ணம்மா ? என்றெண்ணி கொண்டான் .. அவன் முகத்திலும் சோகத்தின் சாயல்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.