(Reading time: 29 - 58 minutes)

 

"மாமா, உங்களுக்கும் அத்தைக்கும் பெரிய தேங்க்ஸ் .. ஜானகி மாதிரி ஒரு அற்புதமான ஒரு பெண்ணை எங்க குடும்பத்துக்கு தந்ததுக்கு ... முதன்முதலில் அவளின் குழந்தைத்தனத்துக்கு அடிமையாகித்தான் அவளை நேசிச்சேன் .. ஆனா நாங்க மனதளவில் இணைந்த இந்த நாட்களில் நான் ஜானகியை பல ரூபத்துல பார்த்துட்டேன் .. நல்ல மகள், நல்ல மருமகள், நல்ல அண்ணி , நல்ல துணைவி, நல்ல நிர்வாகி, நல்ல தோழி ... அப்பப்பா .. ஒரு பெண்ணுக்கும்தான் எத்தனை முகங்கள் .. அது ஒவ்வொனையும் ஜானகி எவ்வளவு பிரதமா காட்டுறா ... ஜானகிக்கே சொல்லாத ஒரு சீக்ரட் உங்களுக்கு சொல்லவா மாமா ? எனக்கு ஆண்பிள்ளை தான் வேணும்னு முன்னாடி கற்பனை வெச்சிருந்தேன் .. ஆனா இப்போ அது மாறிடுச்சு .. எனக்கு குட்டி ஜானகி வேணும் மாமா .. அத்தையே எங்கள் மகளா பிறந்தா கூட சந்தோஷம்தான் .. ஜானகியை நான் குழந்தையா கொஞ்சினது இல்ல .. அவள் மூலமா வர்ற எங்க பொண்ணை  நான் ஜானகியை வளர்க்குற மாதிரி கண்ணுக்குள்ள வெச்சு பார்த்து இருப்பேன்... ஜானகி மாதிரி ஒரு பொண்ணு லைப் ல கிடைச்ச, எந்த பையனும் பொண்ணுங்களை பத்தின தப்பாந அபிப்ராயம் வெச்சுக்கவே மாட்டான் .. அவ்ளோ தங்கம் அவ ... எந்த நேரத்தில் ஜானகின்னு திருநாமம் வச்சிங்க தெரில .. அவள் ஒழுக்கத்திலும் ஜானகிதேவிதான்... கஷ்டப்பட்டதும் ஜானகி தேவி மாதிரிதான்..அவளின் பெண்மையும் ஜானகி தேவி மாதிரி பவிதரமானதுதான் ..... உங்க பெண்ணை நான் என் உயிராய் பார்த்துக்குவேன் மாமா .. "

அவன் பேச பேச அவளின் கண்ணீர் ஆனந்தத்தில் பெருகியது ..

" ஸ்ரீராம், உங்களை நான் என்னுடைய பிம்பமாகத்தான் பார்க்கிறேன்.. ரெண்டு உடல்களுக்கு பிரிக்கப்பட்ட உயிர்கள் நாம் .. ஜானகி என் மனைவி ஆனாலும் அவளை சேருற அன்பு ஸ்ரீராமுடையது ..ஒருவேளை அவள் உங்களுக்கு மனைவியா இருந்திருந்தா அப்பாவும் என் மனம் அவளுக்காகத்தான்  துடிச்சிருக்கும் .. அந்த தருணத்தில் அவ கிட்ட நீங்க காட்டுற அன்பு ரகுராமின் அன்பாக இருக்கும் .. ஒரே உயிர் தான் நாம ... "

" ராம் " என்று சொல்லி அவன் மார்பில் தஞ்சம் அடைந்தாள் ஜானகி....

" அழாதே சகி ... "

" ..."

" நான் நம்ம உயிரை நல்ல பார்த்துக்குவேன் ஸ்ரீராம் .. அவ கண்ணுக்கு எப்பவும் ஸ்ரீராமும் ரகுராமும் வேற வேறன்னு தோணாத அளவுக்கு நான் அவளோடு இருப்பேன் .. என்னைக்கும் அவள் மீது எனக்கு சந்தேகம் வராது .. அப்படி வந்தா, நான் செத்துட்டேன்னு அர்த்தம் "

" ராம் என்ன பேச்சு இது ?"

" நிஜம்தான் சகி ... இப்போ கூட நான் வந்ததும் உன் கண்ணில் தெரிந்த பரிதவிப்பு .. அதுக்கொரு ஈடு இணை இருக்கா ? என்னலதானே அந்த பரிதவிப்பு ? எனக்காக தானே ? எங்க நான் உனக்கு இதில் இஸ்டமில்லை நு நினைசுகுவேன்னு பயந்த தானே நீ ??? "

" ம்ம்ம்ம்ம்ம் " என்று ஆமோதித்தாள் ..

" என் உயிரை நான் எப்படி சந்தேகப்படுவேன் ஜானகி ???? நானும் இந்த ராமும் ஒரே ராம்தானே ..எங்களில் யாரை பார்த்தா என்ன ? நாங்க ஒன்னுதான்மா ... "

" எனக்கு எனக்கு ..... எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில ராம் "

" நீ எதுவும் சொல்லலனாலும் நான்  புரிந்து கொள்வேன் டா ... இனி நீ அழகூடாது ... எனக்கு உதவி செய் "

" என்ன ராம் ?"

" நான் என் மாமாவுக்கும், என்னில் பாதியான ஸ்ரீராமுக்கும்  சத்தியம் பண்ண விரும்புறேன் .. என்னை சேர்ந்த பிறகு ஜானகி மனம் நொந்து  சிந்திய கடைசி துளி கண்ணீர் இதுவாக இருக்கணும் .. இனி உன்னை நான் இப்படி அழ வைக்க மாட்டேன்னு அவங்களுக்கு நான் சத்தியம் பண்ணனும் .. அதுக்கு நீதான் எனக்கு உறுதுணையா இருக்கணும் .. முடியுமா ? "

கண்களை அழுந்த துடைத்து, அவன் வலது கரத்தில் தன் கரம் வைத்து

" சத்தியம் ராம் .. இனி இப்படி அழ மாட்டேன் .. உங்க சத்தியத்தை நான் காப்பாத்துறேன் " என்றாள்  ஆத்மார்த்தமாய் .. அதன்பின் இருவரும் மனம் தெளிந்து தங்கள் காதலை வார்த்தைகளால் பகிர்ந்துகொண்ட வேளைதான் , சுஜாதா- ரவிராஜ் அங்கு வந்தனர் ..

" ஹே சுஜீ  அண்ணி "

" அப்படா ஒரு வழியா என்னை அண்ணின்னு கூப்பிட மனசு வந்திச்சே ஜானகி " என்றபடி அவளுக்கு முத்தம் தந்தாள் சுஜாதா .. தாய்மை சுஜாதாவை இன்னும் அழகாய் காட்டியது ..

" வா ரவி .. "

" நான் வர்றது இருக்கட்டும் ரகு .. நாளைக்கு கல்யாணத்தை வெச்சுகிட்டு இன்னைக்கு என்ன பண்ணுறிங்க  இங்க ரெண்டு பெரும் ? "

" அது அது .. " என்று அசடு வழிந்தான் ரகுராம் ..

" அண்ணா .. ஆசீர்வாதம் பண்ணுங்க " என்று அவன் பாதம் பணிய வந்தாள்  ஜானகி ..

" ஐயோ என்னம்மா நீ ? என் காலுல விழுந்துகிட்டு ? நல்லா இருடா .. அண்ணனின் அன்பும் ஆசிர்வாதமும் எப்பவும் உனக்கு இருக்கு "

"ஆமா ரவி எதுக்கு இவ்வளோ திங்க்ஸ் வாங்கிட்டு வந்திருக்கே நீ ? "

" பின்ன என் ஒரே ஒரு தங்கச்சி கல்யாணம் .. சும்மா இருப்பேனா ? " என்றான் அவன்,..

" என்னம்மோ அழுதியே அப்பாவை பார்த்து ... பாருடா .. மாமாவே ரவியை அனுப்பி வச்சிருகாறு " என்றான் ரகு வாஞ்சையுடன் ..

" அழுதியா ?" என்று கேட்டு அவளை தாய்மையுடன் அணைத்து  கொண்டாள்  சுஜாதா ..தயாகபோகும் அந்த தேவதையின் அணைப்பினில் அடங்கி போனது ஜானகியின்  துயரங்கள் ..

( இதுதான் நடந்தது .. ஆனந்த கண்ணீர் எதுவும் வந்திருந்தா, எல்லாரும் கண்ணை துடைச்சுகொங்க )

முகுர்த்த நேரம்,

கிருஷ்ணன்- மீரா , ரகுராம் - ஜானகி இருவருக்காகவும் மனமேடை தயாராக இருந்தது .. கிருஷ்ணனின் அருகில் ஆகாஷும் ( மீராவிற்கு அண்ணன் ஸ்தானத்தில் ) , ரகுராம் அருகில்  ரவிராஜும் அமர்ந்து மந்திரங்கள் சொல்லிக்கொண்டு இருந்தனர்... மணப்பெண்களுக்கு அலங்காரம் நடந்து கொண்டு இருந்தது .. மணமேடையில் நாதஸ்வரமும் மேளதாளமும்  முழங்க, வீட்டினுள் நித்யா - கார்த்தியின் உபயத்தில்  சினிமா திருமனப்பாடல்கள் ஒலித்து  கொண்டிருந்தது ....

தாத்தா - பாட்டி , அபிராமி- சூர்யா, சந்துரு- சிவகாமி, லக்ஷ்மி, பானு, ஆகாஷ்- சுப்ரியா, புவனா- சஞ்சய் , ஷக்தி - சங்கமித்ரா, வருண் , ஜானகி, மது , கீர்த்தனா , ப்ரியா , மலர், மீனா  மற்றும் பலரும் மண்டபத்தை சூழ்ந்து நின்றனர் .. அர்ஜுனன் இன்னமும் இதர வேலைகளை கவனித்து கொண்டு இங்கும் அங்கும் ஓடினான் ..  அவனது கண்கள் மட்டும் அவ்வப்போது சுபத்ராவை தேடிக்கொண்டு இருந்தது ..

" முகுர்தநேரம் நெருங்கிடுச்சு பொன்னை அழைச்சிட்டு வாங்கோ " என்றார் ப்ரோகிதர் .. நீலம் மற்றும் பச்சை கலந்த அந்த முகுர்த்த புடவையில் மீறவும், சந்தன நிற புடவையில் ஜானகியும் தேவலோக மங்கை போல ஜொலித்தனர் ..

" டேய் கிருஷ்ணா, வாயை மூடுடா .. ஈ ஈ எல்லாம் வருது பாரு " என்றான் ஆகாஷ் .... ரகுராம் சொல்லவே வேண்டாம், கண்களை தவிர அவன் தேகத்தில் எந்த புலன்களும் பயனளிக்கவே இல்லாதது போல சிலையாய் சொல்லி அமர்ந்திருந்தான் .. வீட்டிலிருந்து பெண்கள் நடந்து வரும்போது அந்த பாடல் ஒலித்தது ..

காதல் கனவா உந்தன் கரம் விட மாட்டேன்

சத்தியம் சத்தியம் இது சத்தியமே

தாய்வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே

 சத்தியம் சத்தியம் இது சத்தியமே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.