(Reading time: 29 - 58 minutes)

 

மீராவின் புடவையை போல அதே நிறத்தில் நித்யாவும், ஜானகியின் புடவையின் நிறம் போல சுபியும் அணிந்திருந்தனர் .. அர்ஜுனோ, அவசரபட்டு சொல்லிட்டோமே .. இன்னைக்கே கல்யாணம் பன்னிருக்கலாமோ .. என் தேவதை அழகில் மயக்குறா .. என்று மனதிற்குள் சொன்னான் .. கார்த்தியோ , எதார்த்தமாய் நந்தன்தது போல அருகில் இருந்த பூக்கூடையை வேண்டுமென்றே தட்டிவிட, ஏற்கனவே தேவலோக கன்னிபோல இருந்த நால்வரும் இப்போது பார்க்க உண்மையிலேயே, தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்தது போல காட்ச்சியளித்தனர் ...

ப்ரோகிதர் மந்திரம் சொல்ல, கிருஷ்ணனும் ரகுராமும் தத்தம் ஜோடியை பார்த்து கொண்டே அரைகுறையாக மந்திரத்தை உச்சரித்தனர் .. ஒரு வழியாய் கெட்டிமேளம்  என்று அவர் கூறவும் திருமாங்கல்யத்தை மனதில் காதலை சுமந்துகொண்டு எடுத்து பார்வைகளால்  ஆயிரம் முறை காதலை பரிமாறிவிட்டு, தத்தம் காதலியின் சங்கு கழுத்தில் கட்டி மனைவியாக்கி கொண்டனர் ரகுராமும் , கிருஷ்ணனும் .. நாத்தனார் முறை முடிச்சை, " நான்தான் போடுவேன் " என்று என்றோ சொன்னதை கிருஷ்ணன் மனதில் வைத்து இன்று தனக்கு அந்த வாய்ப்பை தந்ததை எண்ணி நெகிழ்ந்தாள்  நித்யா .. நித்யாவும், சுப்ரத்ராவும்  இந்த ஜோடிகள், எப்போதும் இணைந்திருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு மூன்றாம் முடிச்சை போட்டனர் ..

இதுவரை திருட்டுத்தனமாக பரிமாறி வந்த ஸ்பரிசங்களுக்கு இன்று அங்கீகாரம் கிடைத்த மகிழ்வில், ஒருவரின் ஒருவர்  விரல் பிடித்து அக்னியை சுற்றி வளம் வந்தனர் ..

 ( இனிதே இவர்களின் கல்யாணம் முடிந்தது .. நம்ம அர்ஜுன் -சுபி கல்யாணம் கல்யாணம் என்ன சும்மாவா ?? அதுவும் நம்ம சுபா கல்யாணத்துக்கு முன்னாடி பண்ணின ஒரு கலவரத்தை உங்களிடம் சொல்லியே ஆகணுமே .. ஆனா இன்னைக்கு நேரம் போதாது .. அதனால் அந்த காட்ச்சியை அடுத்த வாரம் சொல்றேன் .. இருந்தாலும் மூன்று பேரின்  திருமணமும் ஒரே எபிசொட் ல நான் தர்றேன்னு சொன்னே இல்லையா ?? உடல்நிலை சரி இல்லை என்ற காரணத்தை வெச்சு அதை ஒதுக்கி வைப்பது நியாயமா ? அதனால் இப்போது நேராக அர்ஜுனன்-சுபத்ரா திருமண வைபவத்திற்கு போவோம் .. இடையில் என்ன நடந்ததுன்னு நான் கண்டிப்பா அடுத்த வாரம் சொல்றேன் )

ர்ஜுனனின் அருகில் அமர்ந்து மந்திரங்களை சொல்லி கொண்டு இருந்தான் கிருஷ்ணன் .. கண்களில் தாரைதாரையா நீர் .. ஒரு பக்கம் தங்கச்சிக்கு கல்யாணம்னு ஆனத கண்ணீர் .. இன்னொரு பக்கம், திருமண வேள்வியில் இருந்து வரும் புகை .. ஹா ஹா ஹா

" என்னம்மா இன்னும் ரெடியாகலையா ?" சிவகாமி

" நான் ரெடிதான் அம்மா .. என் ரெண்டு அண்ணிகளும் என்னை விட்டால்தானே "

ஆம், இந்த நகை போடு, என் சங்கிலி போடு , இது என் பரிசு , எனக்காக இது போடு என்று மீராவும்  ஜானகியும் அவளை ஒரு பாடு  படுத்தி எடுத்து விட்டனர் ...

" பொண்ணை  அழைச்சிட்டு வாங்கோ " என்று அய்யர் சொன்னதும் சட்டென நிமிர்ந்தான் அர்ஜுனன்,.. வேள்வியில் வந்த தீ பெரிதா அல்லது அவன் கால்களில் துள்ளும் காதல் தீ பெரிதா என்று பட்டிமன்றமே வைக்கலாம் .. அந்த ஊதா நிற புடவையில் அப்சரஸ் போல இருந்தாள்  சுபத்ரா .. எப்போதும் துள்ளி திரியும் மான்போல இருப்பவள் அந்த புடவையில் நளினமாய், அழகு மங்கையை இருந்தாள் .. கண்களில் காதலில் வென்றுவிட்ட களிப்பு, கன்னமோ செவ்வானமாய் சிவந்திருந்தது, ஓரக்கண்ணால் அவனை பார்த்தக் கொண்டே அமர்ந்தாள் ... அவனோ காதல் பெருக்கில்

" யு லுக் டிவைன் " என்று சொல்லி சட்டென கன்னத்தில் முத்தமிட்டு விட்டான் .. அனைவரும் " ஓஹோ " என்று குரல் எழுப்ப,

" எப்படியும் கலாய்க்க  போறிங்கன்னு தெரியுது ...முழுசா நனைஞ்சாச்சு இனி எதுக்கு முக்காடு ? " என்று சிரித்தான் .... சுபத்ராவிற்கோ  வெட்கம் பிடுங்கி தின்றது ..

" சுபீ "

" ம்ம்ம் ?"

" கொஞ்சம் நிமிர்ந்து எல்லாரையும் பாரேன் "என்றான் அர்ஜுனன் ..

தாத்தா - பாட்டி , அபிராமி- சூர்யா, சந்துரு- சிவகாமி, லக்ஷ்மி, பானு, ஆகாஷ்- சுப்ரியா, புவனா- சஞ்சய் , ஷக்தி - சங்கமித்ரா, வருண் , ஜானகி, மது , கீர்த்தனா , ப்ரியா , மலர், மீனா  , இவர்களுடன் அவளின் அன்பு அண்ணன்  கிருஷ்ணன் தன் மனைவி மீராவுடன், அன்பு சிநேகிதி ஜானகி - ரகுராமுடன் ஜோடியுடன் நின்றனர் ..

" பார்த்தியா, இப்போ நம்ம குடும்பம் நிறைஞ்சிருச்சு .. மர்மமாய் இருந்த உன் கிருஷ்ணா அண்ணாவுக்கு அண்ணி வந்தாச்சு .. வாழ்வே இல்லைன்னு இருந்த ஜானகிக்கும்  ரகு வந்தாச்சு .. இப்படி மொத்த குடும்பமும் நிறைஞ்சு இருக்கணும்.. அந்த சந்தோஷத்தை உன் கண்ணில் பார்க்கணும்.. அந்த கண்ணை பார்த்துதான் நான் தாலி கட்டனும் .. அதற்காகத்தான் நம்ம கல்யாணத்தை அவங்க கல்யாணத்துக்கு பிறகு வைக்க சொன்னேன் " என்றான் ..

மகிழ்ச்சியின் லேசாய் அவன் பக்கம் சாய்ந்து அமர்ந்தாள்  சுபத்ரா .. மீண்டும் அனைவரும் கேலி செய்தனர் .. " கெட்டிமேளம் கெட்டிமேளம்  " என்று ப்ரோகிதர் சொல்ல, திருமாங்கல்யத்தை எடுத்து மீண்டும் பார்வையாலே அவளின் சம்மதத்தை வாங்கி தனது கரங்களால் அவளை தன் சரிபாதியாக்கி கொண்டான் அர்ஜுனன் ... மனதில் அப்படி ஒரு கர்வம் அவனுக்கு .. உலகையே வேண்டுவிட்ட உவகை .. பெண்ணவளோ விண்ணில் பறந்தாள் ... சுபத்ராவின் விரல் பிடித்து அந்த சின்ன ஸ்பரிசத்தில் ஆயிரம் மின்சாரங்கள் பாய்ச்சி,  தங்களின் காதல் வாழ்க்கையை திருமணத்தில் தொடக்கி வைத்து அக்கினியை வளம் வந்தான் அர்ஜுன் ..

( இனிதாய் நடந்தேறியது திருமண வைபவம் .. இந்த காதல் ஜோடிகளின் சார்பாகவும் பெரியோர்களின் சார்பாகவும் உங்களுக்கு மீண்டும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் ... அடுத்த எபிசொட் ல நம்ம சுபத்ரா செஞ்ச லூட்டியை சொல்றேன் .. நன்றி )

தொடரும்

Episode # 25

Episode # 27

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.