(Reading time: 29 - 58 minutes)

 

" ண்ணா "

" ...."

" கண்ணா "

" ம்ம்ம் ? என்னடா ?"

" ஏன் சோகமா இருக்கீங்க ?"

" நீ சோகமா இருக்கும்போது நான் எப்படி சந்தோஷமா இருக்க முடியும்டா ?"

" அய்யே நான் சோகமா இருக்கேன்னு சொன்னேனா?"

" எனக்கு தெரியும் ... "

" ம்ம்ம்ம் ... அதுக்கு நாம என்ன பண்ண முடியும் கண்ணா ? எது நம்ம கண்ட்ரோல்ல இருக்கோ அதை பத்திதான் நாம கவலை பட முடியும் .. நல்ல கண்ட்ரோல்ல இல்லததை பத்தி வருத்தபட்டு என்ன பிரோஜனம் ? "

" மீரா "

" நான் நல்லா உணர்ந்துதான் சொல்றன் பா .. நான் கவலை பட்டேன் தான் .,... இல்லன்னு சொல்ல மாட்டேன் .. ஆனா அது இயல்பு தானே கிருஷ்ணா ? எல்லாத்துக்குமே கவலை படாத மனுஷன் இருக்கானா ? ஏதோ தனிமையில் நான் அழுதது உண்மைதான் ஆனா உங்களை பார்த்ததுமே எல்லாம் ஓடிருச்சு " என்று சிரித்தாள் .. அவள் சிரிப்பில் லயித்தாலும் அவனால் இயல்பாகமுடியவில்லை.. தன் கரங்களில் அவன் கன்னத்தை ஏந்தி கண்ணோக்கி பேசினாள்  மீரா ..

" நிஜம்தான் கண்ணா .. உங்களை பார்த்ததுமே என் தனிமையும் சோகமும் ஓடி போச்சு .. போனவங்களை நான் கூட்டிட்டு வர முடியாது .. அதே நேரம் என்னோடு இருக்க கிருஷ்ணாவை நான் எப்படி மறப்பேன் ? நீங்க என்னோடவே இருக்கும்போது என்மேல இவ்ளோ அன்பு செலுத்தும்போது என்னால எப்படி சோகமா இருக்க முடியும்னு சொல்லுங்க ... "

" நிஜம்மா சொல்றியா ? "

" அட ஆண்டவா ... சொன்ன கேட்கமாட்டிங்க அப்டிதானே ?? இந்தாங்க இந்த புக்கை  படிங்க "

" என்ன இது ?? "

" ம்ம்ம்ம் என் கிருஷ்ணாவை நெனச்சு நான் அப்பபோ எழுதிய கவிதைகள் ... "

அவள் தந்த டைரியை திறந்து படிக்க ஆரம்பித்தான் கிருஷ்ணன் .. அவனை நினைத்து உருகி உருகி கவிதை வடித்து இருந்தாள்  மீரா ..அவனை ரொம்ப கவர்ந்த ஒரு கவிதை பார்ப்போமா ?

எப்பொழுதும் என் இதழோரம் ரகசிய புன்னகை பூக்க வைத்தாய்

உன் பெயரை யார் சொன்னாலும் ஒரு நிமிடம் நின்று ரசிக்க வைத்தாய்

உன்னை பற்றி பேசுவதற்கு தினமும் ஒரு காரணம் தேட வைத்தாய்

என் இரவுகளுக்கே தெரியாமல் உன்னுடன் உரையாட வைத்தாய்

என்னை தவிர மற்ற பெண்களிடம் நீ பேசும்போது பொறாமை பட வைத்தாய்

உன் பெயர் கொண்ட பாடல்களை விரும்பி கேட்க வைத்தாய்

உனக்காக விழித்திருக்க வைத்தாய்

உன்னை எண்ணி தூங்க வைத்தாய்

எனக்காக வாழ்ந்து தோற்றவள் நான்

இன்று உனக்காக வாழ்கிறேன்

என்றும் உனக்காக மட்டும்

இப்படியாய் ஒவ்வொரு பக்கமாய் படித்து ரசித்து கொண்டிருந்தவன், அவன் போட்டோவை பார்த்தான் . "ஹே இது நானும் ஆகாஷும் காலேஜ் டேஸ்ல எடுத்ததாச்சே ... இதெப்படி ?"

" நான் தான் நித்யாகிட்ட இருந்து சுட்டேன் "

" அடிப்பாவி .... இந்த வேலைய எப்போ பார்த்த ? "

" கண்டிப்பா சொல்லுனுமா ? "

" ம்ம்ம் ஆமா "

" ஹ்ம்ம் நாளைக்கு நம்ம லைப் ல ரொம்ப முக்கியமான நாள் .. அதுனால இன்னைக்கு இதை சொல்லியேதான் ஆகணும்" என்று உல்லாசமாய் சிரித்தாள் மீரா ..

" என்னடா பீடிகை எல்லாம் போடுற ? சிரிச்சு வேற மயக்குற .. "

" ஹா ஹா .. எனக்கு  உங்க மேல எப்போ இருந்து காதல்நு தெரியுமா ?"

" நான் ஊட்டிக்கு வந்தபோது தானே ?"

" ஹ்ம்ம் ... மை பி இருக்கலாம் ... ஆனா எனக்கு கிருஷ்ணா மேல முதல் முதலில் ஈடுபாடு வந்தது நான் உங்களை நேரில் பார்க்குறதுக்கு முன்னாடியே...."

" அப்பா இறந்த பிறகு நான் நித்யா வேலை பார்த்த ஸ்குள் ல தான் வேலைக்கு சேர்ந்தேன் .. அப்படித்தான் நானும் அவளும் ரொம்ப க்ளோஸ் பிரண்ட்ஸ் ஆனோம் கண்ணா .. அப்போவே அவளுக்கு எப்பவும் கிருஷ்ணா அண்ணா , கிருஷ்ணா அண்ணாதான் .. முதலில் ரொம்ப கோபம் வந்திச்சு .. பிறகு உங்க காலேஜ் லீலை கேட்க கேட்க ஆர்வம் வந்துடுச்சு .... நித்யா உங்க கூட விடியோ கால் பேசும்போது நான் அப்பபோ பக்கத்தில் தான் இருப்பேன் .. பட் எனக்கு அவ்ளோ இண்டரஸ்ட் இல்லன்னு நெனைச்சு அவளும் உங்க கிட்ட பேச வச்சதில்லை .. பட் என்னால நம்ப முடியாத விஷயம் கனவுதான் கண்ணா .,.. உங்களை நான் கனவுல அடிக்கடி பார்த்துருக்கேன் .. அப்டிதான் உங்க மேல எனக்கு ஈடுபாடு வந்திச்சு .. அப்போ எடுத்த போட்டோதான் இது .. "  அமைதியாய் சிரித்தவளை  இறுக அணைத்து  கொண்டான் கிருஷ்ணன் ...

" ஏன்டீ இதெல்லாம் முன்னாடி நீ சொல்லவே இல்லை ? "

" அதெல்லாம் அப்படித்தான் " என்று கண்சிமிட்டினாள் ... அவளை அன்புடன் அணைத்து  கொண்டான் கிருஷ்ணன் ..

( ரகுராம் - ஜானகி )

ண்ணீருடன் தன தந்தையிடமும் ஸ்ரிராமிடமும் மானசீகமாக பேசினாள்  ஜானகி...

" அப்பா நீங்க ஆசை பட்ட நாள் வந்துடுச்சு பா .... எல்லா அப்பா அம்மா மாதிரி உங்களுக்கும் அம்மாவுக்கும் கூட நான் வளர வளர என் வாழ்க்கையை பத்தி நிறைய கனவுகளும் ஆசைகளும் வந்திருக்கும்ல ? நான் என்ன படிக்கணும், என்ன வேலைக்கு போகணும், குணத்தில் எப்படி இருக்கணும், எப்படி பட்டவரை கல்யாணம் பண்ணிக்கணும் இப்படி நீங்களும் அம்மாவும் நிறைய பேசி இருப்பிங்களே .. அந்த நாள் வந்துருச்சு பா .. நீங்களும் அம்மாவும் இப்போ இங்க இருந்திருந்தா எவ்ளோ சந்தோஷப்பட்டு இருப்பிங்க தெரியுமா ? எனக்கு எவ்ளோ பெரிய அழகான அன்பான குடும்பம் கிடைச்சிருக்கு தெரியுமாப்பா ? அத்தைங்க  இருவருமே என்னை அவங்க பொண்ணு மாதிரி பார்துகுறாங்க .. உங்க மாப்பிளையும் தங்கமானவர் .." என்றவள், இப்போ ஸ்ரீராமின் முகத்தை பார்த்தாள் .. ஏதோ ஒன்று இதயத்தை அழுத்தியது .. அதே நேரம் ஒரு நிம்மதியும் பரவியது ..

" ராம் , ஒரு பக்கம் அவரை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு அதை எப்படி உங்களை பேஸ்  பண்ணி சொல்லனும்னு குழப்பமா இருக்கு ..இன்னொரு பக்கம் நான் உங்களை சந்தொஷபடுத்திட்டேன் நு நிம்மதியா இருக்கும் .. இதுக்குதானே ஆசை பட்டிங்க  ராம் ? என் மனசு மாறனும், என் வாழ்க்கையில் வசந்தம் வரணும் .. நீங்க என்னோடு வாழ்ந்து எனக்கு தரணும்னு நெனைச்ச அன்பு எனக்கு கிடைக்கனும்னு? உங்க ஆசை நிறைவேறிடுச்சு ராம் .. நாளைக்கு எனக்கு கல்யாணம் .. எனக்கு தெரியும் நீங்க இங்க தானே பக்கத்துல இருக்கீங்க ? நீங்க சொன்ன மாதிரி ரகுவை நான் அவரின் அன்புக்காக ஏத்துக்கிட்டேன் .. யாரும் வற்புறுத்தாமல், ஒரு கடமைக்குன்னு இல்லமால் அவரின் அன்பை புரிஞ்சுகிட்டு அதை எற்றுகிட்டேன் .. இப்போ சந்தோஷமா ராம் ? " அவள் கண்ணீர் மல்க அவள் வினவிய நேரம் அவளின் தோள்  தொட்டு அருகில் அமர்ந்தான் ரகுராம் .. மானசீகமாக அவள் ஸ்ரீராமை கேட்ட நேரம் இவன் வந்து அமரவும், இது கூட ஸ்ரீராமின் செயல் என்றே தோன்றியது அவளுக்கு .. எனினும் அதையும் தாண்டி ஒரு பயம் பரவியது . இந்த நள்ளிரவில், ஸ்ரீராமின் படத்தை பார்த்து அழுதவளுக்கு திருமணத்தில் முழுமனதோடு சம்மதம் இல்லையோ என்று அவன் என்னிவிடுவானோ என்று .. அவளின் பயம் அவள் கண்களில் தெரிந்தது .. ரகுராமோ அவளின் தலையை மெல்ல வருடிக் கொடுத்து கையில் இருந்த அந்த போட்டோவை எடுத்தான் ... ஒரு புன்னகையுடன் அவளை ஏறிட்டுவிட்டு  வாய்விட்டு  பேசினான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.