(Reading time: 29 - 57 minutes)

 

" ஹா ஹா சரி சொல்லு "

" அம்மா , அத்தை, வள்ளி பாட்டி , அப்பறம் இந்த உலகத்தில் இருக்குற எல்லா அம்மாவும் ரொம்ப கிரேட் நு நெனச்சேன் "

" எனக்கு அதெல்லாம் மனசுல நிக்கல டா ... நீதான் என் பார்வையையும் மனசையும் நிறைச்சு இருந்த.. உன் முகத்தை பார்த்ததும் தான் எனக்கு மறுபடி பிறந்த மாதிரி இருக்கு " என்றான் ஆத்மார்த்தமாய் ..

" ஆஹா , எதுக்கு இவ்ளோ இமோஷன் இப்போ ? நீங்க ம்ம்ம்ம் நு சொல்லுங்க நம்ம அபிமன்யு, அபிநயா ரெண்டு பேருக்கும் ஒரு தம்பி பாப்பா ரெடி பண்ணிறலாம் " என்றாள்  நாணத்துடன் ..

" ஆமா அஜ்ஜு  அபிநயா எங்க ?"

" உங்க அண்ணன் தூக்கிட்டு போயிட்டான் .."

" இல்லையே ரகு அனுவை  தான் தூக்கி வச்சிருந்தான் "

" அடடே என் மக்கு இளவரசி கல்யாணத்துக்கு பிறகுதான் ரகு மேல பாசம் வழியுது போல .. உனக்கு கிருஷ்ணா கிருஷ்ணான்னு ஒரு அண்ணா இருக்கான் ஞாபகம் இருக்கா ?" என்றான் கேலியாய் ...

" ஹா ஹா ... நம்ம நித்து  வாயடி கல்யாணம் ஆச்சே .. கிருஷ்ணா அண்ணா தானே எல்லாத்தையும் எடுத்து செய்றார் .. அதான் கொஞ்சம் கண்வியுஷன் " என்றாள்  சுபி ...

" உனக்கு இதில் ஏதும் வருத்தமா இருக்கா டா ?" என்றான் அர்ஜுனன் .. அவள் பதில் சொல்லுமுன்னே  அங்கு வந்த ஆகாஷ்

" அதெப்படி இருக்கும் அர்ஜுன் ? என் தங்கச்சி வெல்லக்கட்டியாச்சே  " என்று சொல்லி சுபத்ராவின் தலையை வருடி தந்தான் ....

" நெனச்சேன் நீங்க இங்க தான் கதை பேசிட்டு இருப்பிங்க " என்று சொல்லி அங்கு வந்தவள் சாட்சாத் சுப்ரியாவே தான் .. திருமணத்திற்கு பிறகு அவளும் அதிகமாய் பேச தொடங்கி விட்டாள் ..இப்போதும் கூட

" கல்யாண வேலையை பார்க்க சொன்னா , இவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் நந்தி வேலை பார்க்கறிங்களா ? " என்று போலியான கோபத்தில் மிரட்டினாள் ..

" ஆளை விடுங்கடா சாமி .. நான் இந்த விளையாட்டுக்கே வரலை ... நான் போயி என் மகன் மாதவ் எங்க இருக்கான்னு பார்க்குறேன் " என்று ஓடியே விட்டான் ஆகாஷ் ..

" ஹா ஹா .... நீ முறைச்சாலே  கதிகலங்கி போறானே ... கலக்குற தங்கச்சி " என்று ஹை  பைவ் தந்தான் அர்ஜுனன் ..

" எல்லாம் உங்க ஆசிதான் அண்ணா " என்று சிரித்தாள் சுப்ரியா ..

கொள்வோமே .. !

" நான் அபிநயாவை  பார்த்துட்டு வரேன் " என்று செல்ல எத்தனித்தவளின்  கரம் பிடித்து

" வேணாம் .. நீ போனா, ஜாடையா வேகமா ஓடுவ ..இரு நானும் வரேன் " என்று அவளுடன்  நடந்தான் அர்ஜுனன் ..

மீராவின் இடையை நாற்காலியாய்  பாவித்து அமர்ந்திருந்த யதுநந்தனை  குறும்புடன் பார்த்தாள்  மணப்பெண் நித்யா .. மீராவோ ஒரு கையில் குழந்தையும் மறு கையில் இவளுக்கு நகையையும் எடுத்து கொண்டு இருந்தாள் .. நித்யாவின் பார்வையை அப்போதுதான் கவனித்தவள்

" என்னடி லுக்கு விடுற ? " என்றாள் ...

" இல்ல உன் மகன் எவ்ளோ சலுகையாய்  அம்மா இடுப்பில் உட்கார்ந்துகிட்டான் ... இதை மட்டும் கிருஷ்ணா அண்ணா பார்க்கணும் .. ரத்தக் கண்ணீர் வடிப்பார் " என்றாள் ...

" அடிங்க .... அடியேய் ..இங்க யாருடீ கல்யாண பொண்ணு ? நீயா இல்லை நானா ? "

" எனக்கும் அதே டவுட்டுதான் .. அதெப்படி டீ நீலாம்பரி  இவ்ளோ அழகா இருக்க நீ ? " என்று கண்ணடித்தாள் நித்யா ..

" ச்சி  போடி ..அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் இதே பேச்சு " என்று சொல்லி முகம் சிவந்தாள் .. உல்லாசமாய் விசில் அடித்த நித்யா

" பாருடா ... அப்பறம் ?" என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டாள் ..

" நான் என்ன இங்க கதையா சொல்லுறே .. ஷபா  உன்னை வெச்சுகிட்டு கார்த்திக் அண்ணா என்னதான் பண்ண போறாரோ " என்றாள்.

சட்டென ஏதோ நினைவு வந்தவளாய் நித்யா செல்போனை எடுத்தாள் .

தே நேரம் மணமகன் அறையில்,

அபிநயாவை கொஞ்சிக் கொண்டு இருந்தான் கிருஷ்ணன்.

இடுப்பில் கை வைத்துக் கொண்டு கிருஷ்ணனை ரசித்தான் சிவகார்த்திகேயன் .. அட நம்ம கல்யாண மாப்பிளை தானுங்க ! கிருஷ்ணன் யதுநந்தன் மீது உயிரையே வைத்திருந்தான் என்றாள் அனுபல்லவி, அபிநயா இருவரும் தனது கண்களாகவே பாவித்தான் ..

" ஒருவேளை அவனுக்கு பெண்பிள்ளை என்றால் இஷ்டமோ ? என்ன செய்வது மீராவின் உடல்நிலை காரணத்தினால் அடுத்த குழந்தை பெற முடியாதே " என்று மனதிற்குள் நினைத்தான் கார்த்திக். அது நிச்சயம் பரிதாபத்தில் வந்த எண்ணம் இல்லைதான் எனினும், அதை அவன் வாய் விட்டு சொல்லி இருந்தால் என்ன ஆகி இருக்கும் ? இது போன்ற சூழ்நிலைகளை தடுக்கத்தான் அபிராமி அன்று அப்படி ஒரு முடிவெடுத்தார் போலும் ..

" என்ன கார்த்தி என்னையும் என் மருமகளையும் வச்சக் கண் வாங்காம பார்க்குற ?"

" இதெல்லாம் அநியாயம் மச்சான் .. மாப்பிளைக்கு  ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு நீ அபிக்குட்டியோடு லூட்டி அடிக்கிறே .. இது நியாயமா ? "

" ஹா ஹா .. டேய் நீ மாப்பிளைடா .. அந்த வேட்டி  சட்டையை மாத்திட்டு தலை வாரினா முடிஞ்சது .. இதில் நான் எதுக்கு ஹெல்ப் பண்ணனும் " என்றான் கிருஷ்ணன் தோரனையாய் ..

" தேவைதாண்டா .. எனக்கு இது .. இப்போவே நல்ல கொஞ்சிக்கோ, அப்பறம் அடுத்த வருஷம் உனக்கு இன்னொரு மருமகனோ அல்லது மருகளோ வந்துடுவாங்க ... அதுக்கு பிறகு பார்க்குறேன் நீ யாரை கொஞ்சுற ?" என்று வில்லத்தனமாய் சிரித்து சொன்னான் கார்த்திக்.,

" அய்யே .. ஒரு பக்கம் என் தங்கச்சி சுபாவின் பிள்ளைங்க, இன்னொரு பக்கம்  என் செல்ல தங்கச்சி நித்யாவின் குழந்தைங்கன்னு ரெண்டு பேரையும்  ஒன்னாவே கொஞ்சத்தான் போறேன் .. அதை நீயும் பார்க்கத்தான் போற.. இந்த நம்பியார் வேலை எல்லாம் நம்ம கிட்ட வேணாம் ... என் தங்கச்சிங்க எனக்காக சண்டை போடலாம் .. ஆனா எனக்கு ஒண்ணுன்னா ஒரே கூட்டணியில் சேர்ந்து உன்னை காலி பண்ணிடுவாங்க .. ஜாக்கிரதை .. " என்று மிரட்டினான் விரல் நீட்டி ..

" அடேங்கப்பா .. நித்யா மட்டும்னாலே நான் தாங்க மாட்டேன் .. இதுல சுபியுமா ?...ஆளை விடுடா சாமி .. இன்னும் கொஞ்ச நேரத்தில் நானும் குடும்பஸ்தன் ஆகப்போறேனாக்கும் "

சரியாய் அந்த நேரம் அவனது செல்போன் சிணுங்கியது " நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்கை நாளை உன் சொந்தம் " ...திரையில் " நித்த்த்த்த்தி பொண்டாட்டி " என்று பெயர் தெரியவும் கண்களில் மின்னலுடன் பார்த்தான் கார்த்தி .. அதை கவனித்த கிருஷ்ணன்

" அபிம்மா .. நாம சின்ன பசங்க ... நாம எதுவும் பார்க்கல சரியா ?" என்றான் கண்சிமிட்டி .. அவன் பேச்சு புரியாவிடினும் மாமனின் முகபாவனையை கண்டு களுக்கென சிரித்து கை ஆட்டினாள்  அபிநயா ..

" ஹெலோ "

" கார்த்தி எங்க இருக்க ? "

" அடிப்பாவி இந்த நேரத்துல நான் என்ன அத்துவான காட்டுலையா இருப்பேன் ? ரூம்ல தான் "

" கூட யாரு இருக்கா ? "

" உங்கண்ணன் தான் "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.