(Reading time: 29 - 57 minutes)

 

" ரி .... மீரா அண்ணாவை தேடுறா .. ஏதோ பிரச்சனையாம் .. கொஞ்சம் இங்க அனுப்பி விடு அண்ணாவை .. "

" ஹே ஏன் என்னாச்சு ?"

அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் காலை கட் பண்ணினாள்  நித்யா ..

" ஏண்டா உன் முகம் இப்படி இருக்கு ..? என்னாச்சு ? "

" நித்தி ...மீராவுக்கு ஏதோ பிரச்சனையாம் .. உன்னை தேடுறதா சொன்னா .. நீ உடனே போ " என்றான் ..

" அட மக்கு பையா .. கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி பியுஸ் போகிட்டியே " என்று மைண்ட் வாய்சில் நினைத்தவன், " சரி டா... வரேன் " என்று அபிநயாவுடன் வெளியில் சென்றான் ... அடுத்த ஐந்து நிமிடங்களில் அதிரடியாய் நுழைந்தாள்  நித்யா ..

" கார்த்தீ "

" அடியேய் .. எப்படி உள்ள வந்த ? "

" இதென்ன கேள்வி கதவு திறந்துதான் .. "

" அடிப்பாவி .. யாராச்சும் பார்த்தா என்னாகும் ? "

" என்ன ஆகும் முகுர்த்த நேரம் சீக்கிரம் வந்திடும்" என்றாள்  அசால்ட்டாய் ..

" யாராச்சும் வந்திருவாங்க நித்தி.. நீ முதலில் உன் ரூமுக்கு போ "

" என்ன நீ .. நான் சொல்ல வேண்டிய டைலாக் எல்லாம் நீ சொல்லுற "

" பின்ன நான் பண்ண வேண்டிய வேலையை நீ பண்ணா ?"

" யாரு நீ ? என்னை பார்க்க இப்படி அதிரடியாய் வந்து இருப்ப ? தம்பீ உங்களை நம்பி நாங்க காத்திருந்தா நேரா 60 கல்யாணம்தான் பண்ணி இருக்கணும் .."

" சரி சரி .. என்ன விஷயமா இங்க  வந்த ? "

அந்த அறையில் கார்த்தி மாட்டி வைத்திருந்த அவனது பெற்றோரின் படத்தை பார்த்தாள் .. அவனது கை பிடித்து அவர்களது அருகில் வந்தாள் ..

" இதுக்குதான் கூப்பிட்டேன் கார்த்தி .. எனக்கு நீயும் நானும் மட்டும் தனியா அத்தை மாமா கிட்ட ஆசிர்வாதம் வாங்கணும் .. எனக்கு தெரியும் நீ அவங்களை எவ்ளோ மிஸ் பண்ணுவன்னு "

" ஹே லூசு .. அப்படிலாம் இல்ல.." என்று சிரிக்க வந்தவனின் பார்வை வேறு எங்கோ சென்றது . அவனது  முகத்தை இரு கரங்களில் ஏந்தி கண்களுக்குள் பார்த்து கேட்டாள்  அவள் ..

" எங்க என்னை பார்த்து சொல்லு .. உனக்கு எந்த வருத்தமுமே இல்லையா  " என்றாள்  நடுங்கும் குரலில் . அவளது கரங்களை பிடித்தவன் அவள் இமைக்கும் நொடியில் வேகமாய் இழுத்து அணைத்து  கொண்டான் .. அவளது தோளில்  அவனது சூடான கண்ணீர் அடைமழையாய் இறங்கியது .. ஏதும் பேசாமல் அவளை அணைத்து  அழுதான் ..

" எனக்கு தெரியும்டா .. எனக்கு மட்டும்தான் உன்னை முழுசா தெரியும் .. தெரிஞ்சும் சும்மா என்னால இருக்க முடியுமா ? அதுனாலத்தான் வந்தேன் .. " என்று பேசிக்கொண்டே அவனுக்கு ஆதரவாய் தட்டி கொடுத்தாள்  நித்யா ..

மெல்ல அவளை விடுவித்தான் கார்த்தி.. உச்சி முதல் பாதம் வரை அவளை பார்வையால் அளந்தான் ..

" சொல்லுடா எப்படி இருக்கேன்? தி கிரேட் கார்த்தியின் வைப்னு  சொல்லிக்கிற அளவுக்கு இருக்கேனா, இல்லை அதை விட சூப்பரா இருக்கேனா ? " என்று சொல்லி கண்ணடித்தாள் நித்யா ..

" வாலு  வாலு .. அதெப்படி டீ .. ஒரு நிமிஷம் உலகத்தில் இருக்குற அத்தனை வானரங்களுக்கும் தலைவி மாதிரி நடந்துக்குற .. ஒரு பக்கம் இப்படி பெரிய பொண்ணு மாதிரி யோசிச்சு பேசி அசத்துற ?" என்று கேட்டுக்கொண்டே  அவளது கன்னத்தை கிள்ளினான் ..

" ஹே நான் கல்யாண பொண்ணு ... இன்னும் கல்யாணம் நடந்தே முடிக்கல ... அதுக்குள்ள  இப்படி பெர்மிட் இல்லாமல் பார்டர் தாண்ட  கூடாது "

சற்றுமுன்பு தாங்கள் இருவரும் நின்ற கோலத்தை எண்ணி சிரித்தான் அவன் .,.

" ஹா .. ஹ... உன்னை என்னதான்டி பண்ணுறது ? யாரு நான் பார்டர் தாண்டுறேனா ? நீதான் வந்ததுல இருந்தே அடாவடித்தனம் பண்ணுற .. உன்னை என்ன பண்ணுறேன்  பாரு " என்று போலியாய்  நெருங்கி வர, நித்யாவோ அசையாமல் சிரித்துக் கொண்டு நின்றாள் ..

" ஏன்டீ .. இந்த அச்சம் நாணம் இதெல்லாம் உன் அகராதியிலேயே கிடையாதா  " என்றான் கார்த்தி .. தனது கன்னத்தை கிள்ளியவனின்  கன்னத்தை இன்னும் அழுத்தமாய் கிள்ளிவிட்டு " நான் என்ன பண்றது மாம்ஸ், உன்னை புதுசா பார்த்தா இதெலாம் தோணுமோ என்னவோ, நீதான் நான் கண்ணை மூடினாலும் திறந்து இருந்தாலும் எனக்குள்ளேயே இருக்குறியே .. அதான் எனக்கு அந்த மாதிரி ஒன்னும் தோணலை .. காலம் காலமா வாழ்ந்த உணர்வு மட்டும்தான் இருக்கு "

" ....."

" சரி சரி ... அதுக்காக இப்படி குறுகுறுன்னு பார்த்து தொலைக்காத ..அப்பறம்  நித்யா வெட்கப்பட்டாள்னு வரலாறு என்னை தப்பாக பேசிடும் "

" ஹ ஹா ஹா "

" ஹப்பா .. அழுமூஞ்சி கடைசியா சிரிச்சுட்டியா ? நமக்காக அத்தை மாமா ரொம்ப நேரமா வெய்டிங்.. வா போகலாம் " என்று சொல்லி அவர்களின் புகைப்படத்தின் முன் இருந்த விலகி ஏற்றி மனமுருக வேண்டினாள்  நித்யா .. இனி அவளின் அரவணைப்பில் தன் மகன் நலமாய் இருப்பான் என்ற நம்பிக்கை அவனது பெற்றோர் ஆசிர்வதித்ததாக நாமும் நம்புவோமாக ..

சுபமுகுர்த்த நேரத்தில், பெரியோர்களின் ஆசியிலும், நண்பர்களின் சிரிப்போசை கலந்த வாழ்ந்திலும் மனம் நிறைந்து நித்யாவின் கழுத்தில் திருமாங்கல்யம் சூட்டி தன்னில் பாதி ஆக்கிக் கொண்டான் சிவகார்த்திகேயன் . அவளுக்கு மூன்றாம் முடிச்சு போட்டு நிமிர்ந்த மீராவின் கண்கள் கிருஷ்ணனை தேட, அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டு நின்றான் .. குடும்பத்தின் மூத்தவனாய்  ஆகாஷும் கண் கலங்கினான் .. வரவே மாட்டேன் என்று முருண்டு பிடித்த வெட்கமும் நாணமும் அவள் முகத்தில் குடிக்கொண்டது .. அதை கண்டுக் கொண்டவனின் மனதில் அத்தனை கர்வம் .. அதே மகிழ்வில் அவளது கரத்தில் குறுகுறுப்பு மூட்டி வம்பு செய்துக் கொண்டே அக்கினியை வளம் வந்தான் கார்த்திக் ..

மீண்டும் அருகில்  அமர்ந்தவளின் தலையில் அர்ச்சதையை தட்டி விடுவது போல நெருங்கி வந்து

" யாரோ வெட்கமே வாராதுன்னு சொன்னாங்களே யாருமா ? " என்றான் அவன் ..

" இனி எல்லாம் அப்படித்தான் .. ஆங் " என்று வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல தோரனையாய்  சொல்லி கண் சிமிட்டி சிரித்தாள் நித்யா ..

அனைவரின் ஆசியோடும் இல்லறத்தில் கால் பதித்தனர் தம்பதியர் இருவரும்.

பூவுக்கு ஓய்வு தராத தென்றலா ?

கடலோடு சேர துடிக்கும் நதி அலையா ?

தாமரையை தொட்டு தழுவும் சூரியனா ?

யாருக்கும் அடங்காத காலத்தை என்னவென்று சொல்வது ???

கண் இமைக்கும் நேரத்தில் உருண்டோடியது காலமெனும் சக்கரம் அதிவேகமாய் ..

20 ஆண்டுகளுக்கு பிறகு,

தனது மூக்கு கண்ணாடி தேடி கொண்டே எழுந்தாள்  மீரா. அவள் அருகில் அமர்ந்து கண்ணாடியை மாட்டி விட்டு நெற்றியில் இதழ் பதித்தான் கிருஷ்ணன் ..

" கண்ணா "

" சொல்லு கண்ணம்மா "

" ம்ம்ம்ஹ்ம்ம்ம் ஒண்ணுமில்ல "

" ஹா ஹா நான் சொல்லவா என்னன்னு ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.