(Reading time: 49 - 98 minutes)

 

மையல் அறைக்கு சென்றவள் கண்கள் விரித்து அப்படியே நின்றுவிட, அவளை பின்புறமாக இருந்து அணைத்தவாறு அவள் காதோரம் “ஐ லவ் யூ மயில்” என்று சரசமாக கூறினான். அவளுக்காக பார்த்து பார்த்து தனக்கு தெரிந்தவற்றை சமைத்து வைத்திருந்தான். அவன் தனக்காக செய்திருக்கிறான் என்ற உணர்வே உள்ளத்தை தொட்டுவிட கண்களில் தானாக நீர் திரையிட்டது.

அவளை தன்புறம் திருப்பியவன் அவள் கண் கலங்கவும் “ஹே என்ன இன்னும் வாயில வைக்க கூட இல்ல, அதுக்குள்ள அழுற?! பார்க்கவே நல்லா இல்லையா?” என்று குழந்தை போல வினவியவனை ஒரு புன்னகையோடு அணைத்துக்கொண்டு “ஆமாடா லூசு” என்று செல்லமாக கடிந்துக்கொண்டு கன்னத்தில் இதழ் பதித்தாள்.

“ஆஹா பார்த்ததுக்கே இவ்வளவு கிடைக்குமா? அப்போ சாப்பிட்டுட்டு இன்னும் நிறையா தாயேன்...” என்று குறும்புடன் கண்சிமிட்டினான். அவன் குறும்புகள் சில நிமிடங்கள் தொடர்ந்துக்கொண்டே போக, “போதும் போதும் வா சாப்பிடலாம்...”

“ஹ்ம்ம்ம்...”

“வாடா” என்று இழுத்து சென்றாள்.

“எப்போடா வந்து இதெல்லாம் செஞ்ச?”

“ம்ம்ம்ம் நான் வரும் போது 7.30 மணி இருக்கும் சரி என் செல்ல மயில் சோர்ந்து போய் வருவாளேன்னு ஏதோ செஞ்சேன்...” என்று அவன் இலகுவாக சொல்ல, அவன் அருகில் இன்னமும் நெருங்கி அமர்ந்துக்கொண்டாள்.

“லவ் யூடா...”

“பாருடா... எத்தனை நாள் கலுச்சு சொல்லுற?!”

“இதை அடிகடி சொல்லி வேற காட்டுவாங்களா? அதெல்லாம் உனக்கே புரியனும்டா மக்கு” என்று செல்லமாக தட்டினாள்.

“அதுசரி... டாக்டர் மேடம்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணுமே...”

அவன் விளையாட்டாக மருத்துவர் என்று குறிப்பிட்டதால் அந்த கதாபாத்திரதிலேயே பேசினாள்... “சொல்லுங்க என்ன விஷயம்?”

“அதுவந்து டாக்டர்... எனக்கு இப்போ தான் கல்யாணம் ஆச்சு..”

“சரி...”

“என்னோடு wife கூட ஒரு டாக்டர் தான்...”

“சரி....”

“எனக்கு தேன்நிலவுக்கு போகணும் போல இருக்கு...”

மெல்ல விரிந்த இதழ்களோடு... “அவ்வளவு தானே கூட்டிட்டு போகவேண்டியது தானே...”

“அதுக்கில்லை என்னோட wife கொஞ்சம் பிஸியான டாக்டர் அதான் வருவாளான்னு தெரியலை...”

“வரலைன்னா யாரையாவாது கூட்டிட்டு போங்க” என்று சிரித்துக்கொண்டே கூறினாள்.

“அப்போ கூட்டிட்டு போகவா டாக்டர்? உங்களுக்கு எந்த மறுப்பும் இல்லையா?!” என்று முகத்தில் குறும்பு மின்ன கண்சிமிட்டி நிரு கேட்க, “போவடா போவ...” என்று பக்கத்தில் இருந்த கரண்டியை வைத்து நாலு அடி வைத்தாள் தேஜு...

மெல்ல விழுந்த அடிகளை லாவகமாக தடுத்தபடி அவளை அணைத்துக்கொண்டான்... “அப்பறம் இது என்னடி கேள்வி என்னோட மக்கு டாக்டர்...” அவன் அணைப்பில் மனம் குளிர்ந்துவிட, மற்றவிஷயங்களுக்கு பேச்சு போனது.

ன்ன பண்றாங்க Mr & Mrs அனு அஸ்வத்... ரொம்ப பிஸியா???” என்றாள்..

“அவங்க மறுவீடு போயிருக்காங்கடி...”

“நேத்துதான் பார்த்து பேசினேன்.. ஒண்ணுமே சொல்லலை..”

“மோர்னிங் தான் பிளான் பண்ணாங்கமா...”

“மறுவீட்டுக்கு இவ்வளவு குட்டி நேரத்துல பிளான் போற்றுக்காங்க...”

“ஊருவிட்டு ஊரு போறதுனா வித்தியாசம் இருக்கும். இதே ஊருன்றதால தெரியலை மயில்...”

“ம்ம்ம்ம்.... ஏன் நிரு நம்மளும் மறுவீடு போகலாமா?”

“நீங்க முதல்ல என்னோட தேன் நிலவுக்கு ஒரு வழி சொல்லுங்க டாக்டர், அப்பறம் மறுவீடு பத்தி நான் சொல்லுறேன்...”

“நீ பொழச்சுப்படா... சரி இன்னும் ஒரு வாரத்துக்கு appointment கொடுத்திட்டேன். அதுனால நம்ம அடுத்த வாரம் தேன்நிலவு போகலாம்...”

“அப்போ... இந்த வீகென்ட் மறுவீடு போகலாம்...” என்று அவளை போலவே கூறினான் ஆசை கணவன்.

“நேற்று இல்லாத மாற்றம் என்னது...

காற்று என் காதில் ஏதோ சொன்னது...

இது தான் காதல் என்பதா...

இளமை பொங்கிவிட்டதா...” என்று ஓடிக்கொண்டிருந்த பாடலுடன் சேர்ந்து பாடியபடி துணிகளை மடித்து வைத்துக்கொண்டிருந்தாள் அனு.

“ஹ்ம்ம்மம்ம்ம்ம் காதல் வந்து மட்டும் என்ன மாற்றம் வந்துச்சு” என்று தன் சீண்டலை ஆரம்பித்தான். அவனது கிண்டலில் ஓரகண்ணால் முறைத்துக்கொண்டே துணியை மடித்தாள். “நான் உன்ன சொல்லவே இல்லைடி..”

“நானும் என்ன சொன்னியானு கேட்கவே இல்லையேடா...” என்று அவனை போலவே டா வில் அழுத்தம் தந்து கூறினாள். நக்கலாக பதில் சொல்லுபவளையே அளவெடுத்துக்கொண்டிருந்தது அவனது கண்கள்... சோதிக்கும் விதமாகவே காற்றில் சேலை ஒதுங்கி இடை தெரிய வெறும் பெருமூச்சு தான் விடமுடிந்தது அவனால்... பேசிக்கொண்டிருந்தவனது திடிரென சத்தமில்லாமல் போனது உறுத்த அவனை பார்த்தாள். அவன் கண்கள் இருக்கும் திசை அறிந்து துணுக்குற்றவள் “ஒய் என்ன கொழுப்பா??? கண்ண நோண்டிடுவேன்...”

அவள் பேசுவதை கேட்டு வாய்விட்டு சிரித்தவன் “புருஷே இப்படி பார்குரான்னு மிரட்டுற முதல் மனைவி நீயா தான் இருப்படி...”

“ரொம்ப தான்... எல்லைக்குள்ள இருப்பேன்னு பேசிட்டு என்ன கொஞ்சம் கொஞ்சமா advantage எடுத்துக்குற?”

“யாரு நானா? அதுசரி... உன் கைய பிடுச்சு இழுத்தேனா இல்லை கிட்ட தான் வந்தேனா? நான் உன்ன தொடவே மாட்டேன்னு சொல்லவே இல்லையே... எல்லைய தானே மீறக்கூடாது... என்னோட dictionary ல எல்லைக்கு அர்த்தம் வேற மாதிரி எழுதிருக்கு.”

“ஹெலோ இதுவும் எல்லை மீறல் தான்” என்று கையில் இருந்த துணியால் அவனை அடித்தாள். சிறிது நேரம் அவளை சீண்டியவன் “நீ இப்படியே பண்ணினா... அப்பறம் என்னோட மூளை வேற மாதிரி யோசிக்கும் அப்பறம் நானும் பதிலுக்கு எதாவது பண்ணிடுவேன் அப்பறம் என்னை குத்தம் சொல்லகூடாது” என்று குறும்பாக நோக்கவும் சட்டென தள்ளிசென்றுவிட்டாள்.

“விடுங்க அத்தை எப்படி இவ்வளவு வெயிட் தூக்குவிங்க? இருங்க நானே நகத்துறேன்...” என்று உணவு மேஜையை வாகாக நகர்த்தினான். பேசியபடியே ஹேமா காய்கறிகள் நறுக்க, அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான் அஸ்வத். குளித்து முடித்து சேலையை வீட்டில் இருப்பதற்கேற்றவாறு கட்டி அனு வரவும் தன்னையும் மீறி அவன் கண்கள் அவள் புறமே சென்றது. அவன் பார்வை வைத்தே அனு வந்துவிட்டதை உணர்ந்த ஹேமா மெல்லிய புன்னகையுடன் அவளுக்கு காபி எடுத்துவர சென்றார்.

இதற்கிடையில் எப்போதும் போல் அஷ்வத் வம்பிழுக்க பதிலுக்கு அவள் போடா என்று திட்ட, ஹேமாவின் காதில் அது மட்டும் தெள்ள தெளிவாக விழுந்தது. “ஏய் இன்னும் நீ இப்படி கூப்பிடுறதை மாத்திக்களையா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.