(Reading time: 49 - 98 minutes)

 

போடா மக்கு” என்று கூறி முதல் திருமண நாள் பரிசை தானே துவங்கினாள் ஒரு முத்தத்தோடு. முத்தம் தந்துவிட்டு வேலைக்கு ஓடும் மனைவியை தடுத்து உன் பரிசு சரி என் பரிசையும் வாங்கிக்கோ என்று கூறி ஒரு பார்சல் தந்தான். அதை ஆர்வத்தோடு பிரித்து பார்த்தவள் அசந்து போனாள். ஒரு திரையில் சின்ன சின்ன பாசிகளால் கோர்க்கபட்ட நூல்கள் இருக்க அதில் அவள் முகம் தத்ரூபமாக செய்யபட்டிருந்தது, பட்டெரி மூலம் இயங்கிக்கொண்டிருந்த அந்த நூல் அசைவுகள் மறுபுறம் சுழற அப்போது அவனின் முகம் அதே வசீகர புன்னகையோடு இருந்தது... அவர்கள் முகம் மட்டும் தான் என்று அவள் எதிர்பார்த்திருக்க அந்த பாசிகள் இன்னொரு புறம் சுழன்றது அதில் தேர்ந்தெடுத்து அவளின் இதழ்கள், அவனின் மூக்கு, அவளின் கண்கள், இவனின் நெற்றி என்று இணைந்து ஒரு சிறு குழந்தையின் முகம் வந்தது... இதை அனைத்தையும் கண்ணெடுக்காமல் பார்த்தவளுக்கு வார்த்தையே வரவில்லை. நிருவை இறுக அணைத்துக்கொண்டவள் ஆசை தீர முத்தங்களை பரிசாக தந்தாள்.

மாலை நேர விழாவும் துவங்கியது, ஒவ்வொருவராக வந்து பரிசு தந்து குழந்தைகளை வாழ்த்திவிட்டு தம்பதிகளுக்கும் வாழ்த்தினை கூறினர். அனு,அஸ்வத் கையில் விபுனும், நிரு, தேஜு கையில் விருஷிக்காவும் இருக்க, அவர்களின் கைகளை பிடித்து பெரியவர்கள் கேக்கை வெட்டினர். மகிழ்ச்சியாக நேரம் போக பெரியவர்கள் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிகொண்டனர் சிறுவர்கள்...பெரியவர்கள் எல்லாம் முன்னால் அமர்ந்துகொள்ள, இளம் தம்பதிகள் பின்னே நின்றுகொள்ள, குட்டீஸ் இரண்டும் முன்னே மடியில் அமர்ந்துகொள்ள அழகாய் சித்திரம் போல் ஒரு புகைப்படம் எடுத்துகொண்டனர்.

(சரி போட்டோ எடுத்திட்டாங்க கல்லாவை மூடுங்கப்பா.... வணக்கம் சொல்லி கதையை முடிப்போம்... யாரோ கூப்பிடுற மாதிரி இல்லை... ஓ அனுவா? என்னம்மா? என்னது அப்படியா? ம்ம்ம்ம் சரி ரொம்ப நேரம் எடுத்துக்காம சீக்கரம் முடிம்மா... ஒன்னுலிங்க அனு ஏதோ அஸ்வத்கிட்ட சொல்லனுமாம், கடைசி சீன் கேக்குறாங்க வாங்க போய் பார்ப்போம்)

ஒருவாராக விழா முடிந்துவிட, சாப்பிட்டு அனைவரும் அவர்கள் அறைக்கு சென்றுவிட்டனர். அஸ்வத் அரை கதவை திறக்க செல்லவும் அனு தடுத்தாள்... “இருங்க இருங்க கண்ணை மூடுங்க...”

“எதுக்கு?”

“நீங்க ஒரு surprise தந்திங்கள்ள அந்த மாதிரி இதுவும் ஒன்னு...” என்று கூறவும் ஆர்வமாக கண்ணை மூடிக்கொண்டு கதவை திறந்தான்.

உள்ளே நுழைந்ததும் அனு கதவை மூடிவிட, அவன் கண்கள் திறக்கவும் இவள் விளக்கை போடவும் சரியாக இருந்தது... எதுவோ எதிர்பார்த்து அவன் கண்ணை திறக்க அங்கு ஒன்றுமே புதிதாக இல்லை, சிறு ஏமாற்றம் அவன் முகத்தில் எட்டி பார்க்க இருந்தாலும் சமாளித்து அவளிடம் திரும்பினான். “எதுக்குடா கண்ணை மூட சொன்ன?”

அவனை போலவே சோர்ந்த முகத்தை வைத்துக்கொண்டு... “சொல்ல முடியாதுடா...” என்று கிண்டல் செய்யவும்... சிரித்துவிட்டான்.

“என்னம்மா?”

“கண்ண மூடுங்க..”

“திரும்பியுமா?”

“ஆமாம்...”

“ஹ்ம்ம் சரி....”

“ம்ம்ம்ம் இப்போ திறங்க...”

அவன் முன் ஒற்றை கால் மண்டியிட்டு 5 மாதத்தில் லேசாக எட்டி பார்த்த வயிற்றை இடிக்காமல் அமர்ந்தவாறு அவனிடம் ஒரு குட்டி பெட்டியை நீட்டினாள், அதில் இருப்பதை பார்த்தவனுக்கு கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது... “ஹே.... இது...”

“அதேதான்... ஷு... அஸ்வத்...” என்று துவங்கினாள்... அவள் ஏதோ சீரியஸ்ஸாக கூற வருவதை பார்த்துவிட்டு ஆச்சர்யத்தோடு கவனித்தான்.

“அஸ்வத்... எங்க அம்மா அப்பாகூட இருந்த போது எப்படி ஒரு தேவதை போல வளர்ந்தேனோ அப்படியே என்னை பார்த்துக்குற...”

“ம்ம்ம்ம்....”

“என்னை குட்டிக்குழந்தை போல பொத்தி பொத்தி வச்சுகுற...”

“ம்ம்ம்ம்...”

“சோ...”

“சோ...”

“ஐ தின்க்....”

“யூ தின்க்....” என்று கேட்டவனின் இதழ்களில் தானாக பெரிதான புன்னகை வந்து ஒட்டிகொண்டது...

“ஐ லவ் யூ....”

“ஹா ஹா ஹா... ஏய் வாலு...” என்று ஆசையாய் அவளை தன் கைகளில் தூக்கிக்கொண்டவன். அப்படியே அவளை தன் மடியில் அமர்த்திக்கொண்டான். அவனது விரல்களை மெல்ல பிடித்து அந்த பெட்டியில் இருந்த A என்று பதித்துதிருந்த மோதிரத்தை போட்டுவிட்டாள். அதை ஆசையாய் பார்த்துக்கொண்டிருந்தவன். “எப்போடி உனக்கிது கிடைச்சிது.”

“தொலைந்தே போகலையே... நீ தவறவிட்ட நான் எடுத்துகிட்டேன்...”

“அடிப்பாவி அவ்வளவு காதலா?”

“அய்ய... ஆசைய பாரு நான் சும்மா வம்பிழுக்க எடுத்து என்கிட்டேயே வச்சுகிட்டேன்... அவ்வளவு தான்...”

“அதுசரி நம்பிட்டேன்... நானும் அப்படி ஒன்னு வச்சிருக்கேன்...”

“என்னது..”

“அது இப்படி சொல்ல முடியாது....”

“அப்பறம்...”

அவளை மடியில் இருந்து இறக்கி கட்டிலில் அமரவைத்துவிட்டு, மீண்டும் அவனின் ரகசிய பெட்டியில் இருந்து ஒன்றை எடுத்து வந்தான்.

“ஏய்... இது எப்புடி உனக்கு கிடச்சிது...”

“ம்ம்ம்ம்... எல்லாம் என்னோட மாமியார் தயவில் தான்... அவங்க வர மருமகனுக்காக நீ தூங்கும் அழகை படம் பிடித்து தந்தது... இது நீ ரயில்ல தூங்கும் போது எடுத்தது... இது உன் தோழிகள் எடுத்தது...” என்று அவன் வருசையாக அவள் விரல் சுப்பும் புகை படம் காட்டவும் அவளுக்கு வெட்கமாக இருந்தது.. “ஏன்டா இன்னமும் இதை வச்சிருக்க? நான் இப்போதான் நிருத்திடேன்ல...”

“ஹெலோ... அது என்னோட முயற்சியின் ரிசல்ட்...” என்று கண்களால் அவள் இதழ்களை பார்த்துகூறினான்...

“சீ போடா...”

“பின்ன இல்லையா...” என்று அவள் இதழ்களை வருடியவாறே கேட்டான்.

அவளுக்கு வெட்கம் மேலோங்க கண்கள் தளைந்து நிலம் நோக்கியது...அவளை பருகுவது போல் பார்த்தவன் அவளின் நெற்றியில் இதழ் பதித்து... “நீ பண்ணுறது எல்லாமே அழகு தான்...”

சுற்றி இருக்கும் உலகமே அவர்களின் காதல் மயக்கத்தில் மறைந்து போக, அவளின் மடியில் ஆசையாய் படுத்துகொண்டவனின் சிகையை களைத்து விளையாடினாள்...

முற்றும்

** இது என்னுடைய ரசனையை தட்டி எழுப்பின என்னோட அன்பு சில்சீ நண்பர்களுக்கு... முதல் முதல்ல இந்த தொடரை துவங்கியபோது எவ்வளவு சந்தோஷமாக இருந்தேனோ, அதைவிட ரெட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கேன்... அவ்வளவு ப்ரிண்ட்ஸ் சேர்ந்திருக்காங்க இந்த தொடர் மூலம். ரொம்ப ரொம்ப நன்றி... முதல் நன்றி சில்சீ டீம்க்கு திருத்தம் இருந்து திரும்பி அனுப்பினாலும் பொறுமையாக என்னை அட்ஜஸ்ட் பண்ணிகிட்ட எல்லாருக்கும். அப்பறம் என்னோட சில்சீ readersக்கு கதையை ரொம்ப ஆர்வமாக படுச்சு தவறாமல் அதுக்கு கருத்தும் பதிந்து ஒரு பெரிய ஊன்றுகோலாய் இருந்தீங்க. முதல் முதலில் என் தவறுகளுக்கு கொஞ்சம் கருத்து தந்து என்னை திருத்திய வினோதா மேடம்க்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்... இந்த சில்சீக்கு என்னை கட்டி இழுத்த உஷா மேம், அவங்களோட EPMI கதை தான் என்னோட inspiration அவங்க அடுத்த கதை எழுதுவாங்கன்னு காத்திருக்கேன். அவங்களுக்கு பெரிய தேங்க்ஸ்... அப்பறம் கீர்த்ஸ், மீனா, மனோ, வத்சலா, தேன்ஸ், சாந்தி மேம், afroz, நித்யா, ஜான்சி,மகி இன்னும் யாரையாவது மிஸ் பண்ணிட்டால் கோச்சுக்காதிங்க... எல்லாருக்கும் ரொம்ப நன்றி....

நன்றி சொல்லவே வார்த்தை இல்லையே ன்னு பாட்டு பாடுற அளவுக்கு ரொம்ப பெரிய ஹெல்ப் தான் இந்த தொடர்கதை என்னாலையும் முடியும், எனக்கும் ஏதோ கதை யோசிக்க முடியும்னு சொல்லி தந்த சில்சீக்கு ரொம்ப பெரிய நன்றி... கண்டிப்பா திரும்பியும் ஒரு நல்ல கதையோட வருவேன்... குறைந்தபச்சம் சிறுகதைகளில்...

அப்பறம் பிழை இருந்தால் மன்னிச்சிருங்க இன்னமும் காக்க வைக்க மனமின்றி அவசரமாக எழுதி அனுப்பினேன்...**

Go to Kadhal payanam # 25

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.