(Reading time: 49 - 98 minutes)

 

துக்கு தானம்மா போன் பண்ணேன்.. வேலை முடிஞ்சிருச்சும்மா... இன்னைக்கே கிளம்புறேன். அனுகிட்ட சொல்ல வேண்டாமா...”

“ஏண்டா?”

“இன்ப அதிர்ச்சியா இருக்கட்டுமா...”

“சரிப்பா...” என்று புன்முறுவலோடு ஒத்துக்கொண்டார்.

காலை எழுந்து திரும்பி படுத்தவள் அருகில் அஸ்வத் படுத்திருந்தான் தொடும் தூரம் அன்றி கொஞ்சம் தொலைவில்... அவள் கண்கள் கசக்கி மீண்டும் பார்க்கையில் அவன் அங்கு இல்லை...

“இப்போ தானே பார்த்தோம்...” என்று குழம்பி போனாள் அனு... வேகமாக எழுந்து குளிக்க சென்றாள், குளித்து வெளிவந்தவள் மீண்டும் அஸ்வத் கட்டிலில் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு தனக்குள்ளேயே குழம்பினாள், இதுவும் பொய்யோ என்று கண்களை மூடி திறந்தாள் அங்கு அவனில்லை... “இன்னைக்கு என்ன அவன் நினைப்பு அதிகமாக இருக்கு...” என்று யோசித்தபடி அவள் வெளியரை வர அவள் மாமாவிற்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தான் அதிர்ச்சியோடு பார்த்துவிட்டு, மாமாவின் முகத்தை ஆராய்ந்தாள் எப்போதும் போல் காலை வணக்கம் சொன்னாரே தவிர பெரிதாக வித்தியாசம் காட்டிக்கொள்ளவில்லை. இப்போது சுத்தமாக குழம்பியது...

“மாமா...”

“என்னம்மா?”

“உங்களுக்கு எதுவும் வித்தியாசம் தெரியலையா?”

“என்ன வித்தியாசம்மா...”

“உங்க முன்னாடி அஸ்வத் இருக்காரு மாமா..”

“என்னம்மா சொல்ற? அஸ்வத் இப்போ மும்பைல இருப்பான்... நீ அவன் நினைப்பிலேயே இருக்க போல...”

அவளும் அதுதான் போல, என்று எண்ணி அவனிடம் பேச நினைத்து அறைக்கு வந்துவிட்டு அவனது கைபேசியை அழைத்தாள்... அவளது பின்னோடு வந்த அஸ்வத் கதவருகே நிற்க, அவனது அலைபேசியின் ஒலி அருகிலேயே கேட்டது...

அவள் திரும்பி பார்த்து “ஏய்... அஸ்வத்.... அப்போ இது நிஜமா...” என்று சந்தோஷத்தில் குதித்து அவனை அணைத்துக்கொண்டாள். இத்தனை நாட்கள் அவனுக்காக ஏங்கி இருந்ததில் அவளின் சிறுபிள்ளை தண்டனையும் மறந்து போனது அவளுக்கு... அவளை தன்னோடு இறுக்கமாக அனைத்துகொண்டவன் அவள் முகமெங்கும் முத்தமழை தந்தான். அவனது தீண்டலில் தள்ளி போக துடிக்காமல், அவனை இன்னும் இறுக்கி அணைத்துக்கொண்டாள். சிறிது நேரம் அந்த மயக்கத்திலே இருந்த இருவரில் அஸ்வத் தான் முதலில் சுதாரித்தான். “அனு...”

“ம்ம்ம்ம்...”

“நீ ஏதோ தண்டனை தந்தியே நியாபகம் இருக்கா?”

அவன் முகத்தை நேரே பார்த்தவள் “அப்படியா? எனக்கு எதுவும் நியாபகம் இல்லையே..”

“மறந்து போனால் எனக்கு சந்தோஷம் தான்...”

“போடா...”

“சரி இன்னைக்கு லீவ் போடு நம்ம வெளிய படத்துக்கு போயிட்டு வரலாம்...”

“ம்ம்ம்ம் ஹ்ம்ம்... சொல்லாம போட கூடாது அஸ்வத்... வேணும்னா நம்ம ஈவெனிங் போகலாம் நீயும் கம்பனிக்கு போயிட்டு வந்திடு..” முடியாது என்று அடம்பிடித்தவனை ஒருவழியாக சமாதனம் செய்து கிளப்பினாள் அவள்.

“என்ன அனு உன் புருஷனை போல இருக்கும் நிழல்கிட்ட பேசியாச்சா?”

“நீங்களுமா மாமா? எல்லாரும் நல்லா நடுச்சிங்க” என்று கிண்டல் செய்து அன்று வேலைக்கு கிளம்பிவிட்டாள்.

“ஹாய் அனு...”

“என்ன?”

“என்னடி என்னனு கேட்குற?”

“பின்ன இதோட மூணு தடவை போன் பண்ணிட்ட... நான் இங்க வந்தே 1 மணி நேரம் கூட ஆகலை...”

“அதுக்கு என்ன பண்ணுறது உனக்கு கல் மனசு...”

அவன் பேசுவதை கேட்க கேட்க சிரிப்பாக இருந்தது வெளியே காட்டிகொள்ளாமல் இதழோர சிரிப்போடு பேசினாள். “இப்போ நீ வைக்க போறியா இல்லை நானே கட் பண்ணவா?”

“சீ போடி கல் மனசுகாரி... நான் ஈவெனிங் வந்து உன்னை கவனிச்சுகிறேன்...” என்று அவன் செல்ல கோவத்தோடு வைத்துவிட, அதை ரசித்தவண்ணம் நிகழ்ச்சியை தொடர்ந்தாள்.

“ஏய் மணி 5.30 ஆச்சுடா... நான் கிளம்புறேன்... நீ பார்த்துக்கோ” என்று நிருவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான் அஸ்வத். அவனுக்கு பிடித்த அடர் நீல புடவையில் தயாராகி இருந்தாள் அனு.... பார்த்து பார்த்து அலங்கரித்து அவனுக்காக காத்திருந்தாள். அவன் வந்தவுடன் சொல்லிக்கொண்டு இருவரும் கிளம்ப, “மழை வர மாதிரி இருக்கு குடை எடுத்திட்டு போயேண்டா... அதெல்லாம் கஷ்டம்மா... பைக்ல போறோம்... எப்படியும் புடிக்க முடியாது... சரி நேரம் ஆச்சு நாங்க கிளம்புறோம்” என்று சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டனர்.

அவர்கள் அந்த தெருவை கடந்த அடுத்த நொடியே மழை நன்றாக பிடித்துக்கொண்டது... “எந்த நேரத்தில் கிளம்பிநோமோ” என்று அனு புலம்பிக்கொண்டே வர, அஸ்வத், அந்த மழையில் ரசித்து நனைந்தவாறே வண்டியை ஓட்டினான்... எப்படியும் இப்படியே சென்று திரைபடம் பார்க்க முடியாது என்று தெரிந்துவிட, வீட்டுக்கே வந்தனர் தொப்பலாக நினைந்தபடி... அவசரமாக வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த இருவரையும் பார்த்து துளசி துவங்கினார்... “நான் அப்போவே சொன்னேன்... கார்ல போயிருக்கலாம்ல...”

“சரி விடுங்கம்மா... எங்களால ஊர்ல மழை பெய்யுதுன்னு நினைச்சுக்குறேன்” என்று கிண்டல் செய்தபடி அறைக்கு ஓடினர்...             

அவசரமாக அனு உடைமாற்ற துணியை எடுத்துக்கொண்டிருக்க, அஸ்வதோ பின்புறம் ரசித்து மழைக்கு ஏற்றார் போல கட்டின வராண்டாவிற்கு சென்றான்... கதவை திறந்ததும் இருக்கும் சிறிய இடத்தில் ஒரு ஊஞ்சல் அமைந்திருக்க, படிகளில் இறங்கி சென்றதும் பெரிய விரிந்த இடமாக மேலே சீளிங் இல்லாமல் அமைக்க பட்டிருந்தது. சுற்றி இருந்த தூண்களில் தொங்கிய மேட் போன்ற திரைகள் அவ்விடத்தை மறைத்துக்கொள்ள, சில்லென்று பெய்த மழையில் நன்றாக நினைந்தான். உடையை எடுத்துக்கொண்டு திரும்பியவள் அங்கு அஸ்வத் இல்லாததை உணர்ந்து வரண்டாவில் பார்க்க அங்கு மழையில் நினைந்து கொண்டிருந்தான்.

“என்ன அஸ்வத் பண்ணுற? சளி பிடுச்சுக்கும்... வா உள்ள போகலாம்...” என்று இறங்கிவந்து அவனை இழுக்க, அவனோ வர மறுத்தான். சேலை முந்தானை நினைந்து இருந்தாலும் அதை குடையாக நினைத்து தலைக்கு மேல் அவள் மறைக்க, “என்ன பொண்ணுடி நீ... ஸ்கிரிப்ட் படி பார்த்தால் பொண்ணுங்க தான் இப்படி மழையில் நினையனும் நான் வந்து தடுக்கணும்... அப்பறம்....” என்று நெருங்கி வந்தான்... “ஜுரம் வந்தால் யார் தவிக்குறது... ஒத்துக்காது உள்ள வாடா...” என்று அவள் கெஞ்சிக்கொண்டிருக்க... அவனது கைகள் அவள் இடையோடு சேர்த்து அனைத்து அவன் புறம் இழுத்துக்கொண்டான், கொடிபோன்று அவனோடு ஒட்டிகொண்டவள் பேச்சிழந்து போனாள்...மழை துளிகள் பட்டு மின்னிய இதழ்கள் அவன் இதழ்களில் சிறைபட்டது...

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.