(Reading time: 23 - 46 minutes)

டேய்… என்னடா… எதுவும் சொல்லாம போற… ஆதி… டேய்…. என்றவாறு ஹரீஷ் ஆதியின் பின்னே ஓட,

தினேஷும், காவ்யாவும் சாகரியின் அறைக்குள் சென்றனர் வேகமாக…

சாகரி என்னாச்சும்மா, ஆதி ஏன் கோபமா போறான்?... என்னாச்சுடா… என்ற தினேஷின் கேள்விக்கு, தெரியலை அண்ணா அவர் கிட்ட பேசினேன் அப்போ அவர் அதை கேட்கலை… இப்போ நான் பேசலைன்னு கோபமா போறார்… அதுக்கு நான் என்னண்ணா பண்ண முடியும்?... விடுங்க… கோபப்பட்டா படட்டும்… ஆமா… நந்து சித்து எங்கண்ணா?... எந்திச்சிட்டாங்களா?... நான் போய் பார்க்கிறேன்… என்றவாறு சொல்லி சென்றவளை, என்ன நடக்கிறது இங்கே என்ற பாவனையில் இருவரும் பார்த்தபடி நின்றனர்…

அவள் சென்று நந்துவிடமும் சித்துவிடமும் பேசிவிட்டு, மரத்தயில் இருந்த பெஞ்சில் அமர்ந்தவள், அவனை விட்டுப் பிரிய வேண்டி வந்த அந்த கொடிய நாளின் நினைவில் மெல்ல கண்மூடினாள்…

டேய்… என்னாச்சுன்னு… கேட்குறேன்ல… நீ பாட்டுக்கு போயிட்டிருக்குற?... நில்லுடா… என்றபடி ஹரி அதட்ட…

அவன் அவளின் மௌனத்தை எண்ணி கோபம் கொண்டான்…

உன் தங்கை என்னிடம் பேசமாட்டாளாம்… நான் அவளை விட்டு விலகணுமாம்… நான் முடியாதென்றேன்… அதனால் என்னிடம் பேச மறுக்கிறாள்… என்றான் கலங்கியபடி…

சரி விடுடா… உன்னிடம் பேசாம இருக்க முடியாதுடா அவளால்… பேசுவாடா… என்றான் ஹரி அவனை சமாதானப்படுத்தும் எண்ணத்துடன்…

எல்லாத்துக்கும் காரணம், அன்னைக்கு நடந்த சம்பவம் தானே… அவளை நான் தனியே விட்டிருக்க கூடாது… சே… எல்லாத்துக்கும் காரணம் நான் தான்…. என் கழுத்துக்கு மேல கத்தி தொங்குதுன்னு தெரிஞ்ச பின்னாடியும்  அவளை நேசிச்சேனே…. அவளுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்தாம விட்டேனே… எல்லாம் என் தப்பு தான்… என் தப்பு தான்… என்றான் ஆதர்ஷ், அவள் டைரியில் எழுதியிருந்த நாட்களின் நினைவில்….

ன்று….

சாலையில் மயங்கி சரிந்தவள், கண் விழித்தபோது, விடிந்து விட்டிருந்தது…  ஆனாலும் அவளால் முழுதாய் கண்களை திறக்க இயலவில்லை… அரை மயக்க நிலையிலே இருந்தாள்…

மெல்ல எழுந்து கொள்ள முயற்சித்த போது முடியாமல் போனது… பாதி செறுகியிருந்த விழிகளுடன் அவள் அறையை சுற்றி பார்வையை செலுத்திய போது, அந்த அறை தனக்கு இதற்கு முன் பரிச்சயமானது போல் தெரியாதிருந்ததை உணர்ந்தாள் அவள்…

மேலும், உடலின் ஒவ்வொரு பாகமும் வலிப்பதும் புரிந்தது அவளுக்கு… எனக்கு என்ன ஆயிற்று என்ற எண்ணத்துடன், அவள் அவளையேப் பார்த்தபோது புரிந்தது, அவள் வேறு இடத்தில் இருப்பது மட்டுமல்ல, தான் வேறொரு உடையையும் அணிந்திருந்ததை… இதெப்படி சாத்தியம்?... நான் நேற்றிரவு புடவை தானே உடுத்தியிருந்தேன்… ??? இன்று எப்படி சுடிதாரில்?... என்றவளின் எண்ணத்திற்கு முடிவு கட்டும் விதமாக, அறையின் கதவு திறந்தது… ஒரு ஆணின் உருவம் அங்கே வருவது புரிந்தது… தினேஷ் அண்ணன் போல் இல்லையே…. பின்னே யார்?... என்று சிந்தித்தவளுக்கு அதற்கு மேல் நினைவில்லை… மயக்கம் கொண்டு விட்டாள்…

அடுத்த நாளும் அதே போலவே நகர்ந்தது… சிறிதொரு மாற்றமும் இல்லாமல்… மூன்றாம் நாள் அவள் விழித்த போது உடலில் வலி இருந்தாலும், மயக்க நிலை இல்லை அவளுக்கு… எனவே சற்று தெம்போடே காணப்பட்டாள்…

அவள் தெம்புக்கு முடிவு கட்டும் விதமாக, அறைக்குள் நுழைந்தவன், அவளிடம், நலம் விசாரித்தான்…

இப்போ எப்படி இருக்கிறாய்?... வலி எதும் இருக்கா?

அவள் பேசாமல் இருந்தாள்…

இந்த மௌனம் தான், இந்த மூணு நாளும், சும்மா சொல்லக்கூடாது… நல்லாவே ஒத்துழைச்ச மௌனமா….

அவன் சொல்வது புரியாமல் அவள் பார்வை கூர்மையாய் அவனை ஏறிட்டது…

கலகலவென்று நகைத்தவன், எதற்கு இந்த துளைக்கும் பார்வை… எல்லாம் சொல்வதற்கு தானே நான் இருக்கிறேன்…. கவலை வேண்டாம் என் காதலி….

என்ன!!!!!!!!!!!!!!!...... என்றவள் எழுந்தே விட்டாள்… எழுந்தவள் நிற்க முடியாமல் தள்ளாட,

ஹேய்… பார்த்துமா…. ஏன் அவசரம்?... என்றவாறு அவளருகில் வந்தவனை கையமர்த்தி தடுத்தவள், யார் நீங்க?... என்றாள் துளிர்த்த கோபத்துடன்….

அடடா… கோபத்திலும் அழகா தான் இருக்குற?...

பச்…. வீண் பேச்சு வேண்டாம்… யார் நீங்க…?...

அவளின் பதிலில் அவன் உரக்க நகைத்தான்… நான் பக்கத்தில் வந்தா ஆகாதா உனக்கு?... ஹ்ம்ம்… ஆனா, அந்த ஆதர்ஷ் வந்தா மட்டும் ஆகுமா?....

சீ… அவர் பேரை கூட சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை…

தகுதியா?... தகுதியா?... அது இனி உனக்கு தான் இல்லை என் காதலி…

சீ…. அப்படி கூப்பிடாதீங்க என்னை… என்ன தகுதி எனக்கு இல்லை???...

எந்த தகுதியுமே உனக்கு இல்லை இனி… அப்புறம் என்ன சொன்ன… அப்படி கூப்பிடாதன்னு தானே சொன்னே…. இனி என்னைத் தவிர உன்னை யாரும் அப்படி கூப்பிடவே முடியாது என்றவன் மேலும் நகைக்க, அவள் மனம் லேசாக கலங்கியது…

அவள் அவனிடம் பேசாமல் அங்கிருந்து நகர முயன்றாள்….

எங்கே போகிறாய்?...

அதை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை… என்றவள் நிற்காமல் தொடர்ந்து செல்ல,

சொல்ல வேண்டிய அவசியமும் வந்துவிட்டது… உன் வீட்டிற்கு செல்வதாய் இருந்தால், இன்னும் சில மணி நேரம் நீ காத்திருக்க வேண்டும்… இல்லை அந்த ஆதர்ஷைப் பார்க்க போவதாய் இருந்தால், அதற்கு நீ பல நாள் காத்திருக்க வேண்டும்…

அதை சொல்ல நீங்கள் யார்?...

உன்னோடு வாழ்ந்தவன்……

இரண்டு வார்த்தைகள் தான்… அது ஏற்படுத்திய தாக்கம் தான் பெரியது… சுவரோடு சாய்ந்து நின்றவள் அவன் சொன்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தை தன்னைப் பார்த்து தெரிந்து கொள்ள முயற்சித்தாள்… அவள் அன்று அணிந்திருந்த புடவை இன்று மீண்டும் தான் அணிந்திருப்பதைக் கண்டாள்… எனில் இரண்டு நாள் தான் அணிந்திருந்த அந்த வேறு உடை???....

இல்லை…. பொய்… எல்லாமே பொய்…. இப்போ நான் கேட்டது எல்லாமே பொய்யா தான் இருக்கணும்…. என் ஆதர்ஷிற்கு தான் நான்….. எனக்கு எதும் ஆகலை… ஆகலை…. என்றவள் உதடுகள் ராம்…. ராம்… என்று முணுமுணுக்க…

உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா?... அவன் பேரை இனி நீ சொல்லக்கூடாது… என் பேரை தான் சொல்லணும்…. ஏன்னா அவன் உன்னை காதலிச்சிருக்கலாம்… ஆனா, நான் உங்கூட வாழ்ந்தவன்… என்று அவன் சொல்லி முடிக்கும் முன்…

இல்ல… நான் எதையும் நம்ப மாட்டேன்…. இந்த பிறவி நான் எடுத்ததே என் ராம் கூட வாழத்தான்… என்று அரற்றினாள் அவள்..

ஹாஹாஹா…. இன்னும் சின்னப்பிள்ளைத்தனமாவே இருக்குறியே காதலி… ஹ்ம்ம்… இது கூட நல்லா தான் இருக்கு…. பட் இது எதையுமே என்னை ரசிக்க விடலையே நீ இந்த மூணு நாளா… மயக்கத்திலேயே இருந்த…. அதுக்கும் காரணம் இருக்கு… உனக்கு கொஞ்சம் போதை மருந்து கொடுத்து மயக்கத்திலேயே வச்சிருந்தேன்… அப்பதானே நீ முரண்டுபிடிக்காம இருப்ப… அதான்…

இல்லை… இல்லை….….. என்று அவள் கத்தினாள்…

நீ கத்தினாலும் உண்மை பொய்யாகிட முடியாது காதலி… மூணு நாள் உன்னோட இந்த அறையில் நான் இருந்தேன்….

என் ராம் நம்ப மாட்டார்…. என்னையும் என் ராமையும் பிரிக்கிறதுக்கான முயற்சி தான் இதெல்லாம்…

ஓ… உன் ராம் நீ கெட்டுப் போனவளா இருந்தாலும் உன்னை ஏத்துக்கறேன்னு தான் சொல்லுவான்… ஆனா, ஊர் உலகத்தை நினைச்சிப் பாரு கொஞ்சம்… உனக்கே தெரியும் ஆதர்ஷ் எவ்வளவு மரியாதையும் புகழும் உள்ளவன்னு… அவன் மரியாதையை நீ கெடுக்கப் போறியா?... இன்னொருத்தன் கூட வாழ்ந்தவ, இப்படி ஆதர்ஷை கல்யாணம் பண்ணியிருக்கியேன்னு ஊர் உலகம் உன்னை தூற்றாதா?... அவ்வளவு ஏன் உன் மனசாட்சி அதை முதலில் ஏற்குமா?  சீதைன்னு பேர் வச்சிக்கிட்டு உன்னால அவனோட வாழ முடியுமா இனி???... இல்ல அப்படி நினைக்க தான் முடியுமா இனியும்?... என்றவன் அவள் பேயறந்தது போல் நிற்கவும் மேலும் தொடர்ந்தான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.