(Reading time: 23 - 46 minutes)

ரு நர்சும், அவளுடன் ஒரு பெண்ணும் வந்தனர்…

இவங்க உங்களுக்குத் தெரிந்தவர்களாம்… ரொம்ப கெஞ்சி கேட்டுகிட்டாங்க… அதான் அழைத்து வந்தேன் என்றாள் நர்ஸ்…

சரிங்க சிஸ்டர்… நீங்க போங்க… நான் பேசிக்கிறேன்… என்று அவளை அனுப்பி வைத்தாள் சாகரி…

என்னை நினைவு இருக்கா சாகரிகா?....

இல்லையே…. நீங்க… ???...

உங்களுக்கு எல்லாம் சொல்கிறேன்… சொல்லத்தானே நான் இங்கே வந்திருக்கிறேன்… என்றவள் சாகரி என்ன என்று பார்க்கும் முன்பே மயக்க மருந்து தோய்த்த துணியை அவளின் முகம் அருகே வைத்து அவளை அரை மயக்க நிலைக்கு கொண்டு சென்றாள் வந்தவள்…

அதன் பின் அவளை தன் தோழிகளின் உதவியுடன் கீழே அழைத்துச் சென்றாள்… யார் நீங்க… என்னை எங்க கூட்டிட்டு போறீங்க…??? என்ற உளறலுடன் சாகரி கேட்க…

ஹேய்… அவள் முகத்தில் இந்த துணியை போடு… என்ற குரல் கேட்டதும், தன் முகத்தில் அந்த லேசான கண்ணாடித்துணி விழுந்ததை உணர்ந்தாள் அவள்…

எவ்வளவு நேரம்… சீக்கிரம் வா… யாராச்சும் பார்த்துடப்போறாங்க… காரில் ஏற்று… என்ற ஆணின் குரல் கேட்டதும், அது யார் என்ற கேள்வியுடன் சாகரி பார்க்க, அங்கே நின்றிருந்தது வேறு யாருமில்லை… இவர் தான்ம்மா உன்னை அன்று இங்கே வந்து சேர்த்து உன் உயிரை காப்பாற்றியது என்று காலையில் மருத்துவமனையில் ஹரீஷ் கைகாட்டிய திசையில் நின்றிருந்த அவ்னீஷ் தான்…

இவனா???... என்ற அதிர்ச்சியுடன் அவள் விழி மூடிக்கொண்டது…

ஒரு சில மணி நேரம் கழித்து தன்னுணர்வு பெற்றவள் விழித்த போது, அங்கே அவள் வாழ்வை புரட்டிப்போட்ட அந்த ராட்சஸன் நின்றிருந்தான்….

அவளுக்கு பழையது எதுவும் நினைவில்லை என்ற உண்மையை அறிந்து கொண்டு, அவளிடம் ஆதர்ஷ்-சாகரி காதல் கதையையும், அவள் பெற்றவர்கள் இறந்த கதையையும் கூறினான் அவன்….

மேலும், ஆதர்ஷைப் பிரிய நேர்ந்த கதையையும் சொல்லியவன், ஹ்ம்ம்… ஒரு வருடம் இங்கே இந்த ஊரில் வசித்துவந்தாய்… ஆனாலும் நான் உன்னை நெருங்கவில்லை… உன் மனம் மாற காத்திருந்தேன்… நீ விபத்தில் சிக்கியது…. நினைவுகளை இழந்தது எல்லாமே எனக்கு அதிர்ச்சி தான்… ஆனாலும், பரவாயில்லை…. உனக்கு அனைத்தையும் இன்று நினைவுபடுத்திவிட்டேன்… கூடவே நம் உறவையும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறேன் என்றவன், அவளை நெருங்க முற்பட, அவள் வேண்டாம் வேண்டாம் என்ற கதறலுடன் மயங்கி சரிந்தாள்… அதுவரை மட்டுமே அவளுக்கு நினைவு இருந்தது… அதன்பின் நினைவு வந்த போது, அவன் வெற்றி சிரிப்பைக் கண்டாள்…

தனது அவல நிலையை எண்ணி நொந்தாள்… தன் உடல் முழுவதும் வலி எடுக்க, தான் மீண்டும் அவனால் கசக்கி எறியப்பட்டு விட்டோம் என்றெண்ணி துடித்தாள்…

அங்கிருந்த மூன்று நாட்களும் அழுது கரைந்தாள்… அவள் இருந்த இடம், பெண்கள் பலரை தவறான வழியில் பயன்படுத்தும் இடம்…. நீ என்னால் கெட்டுப்போனவள், மேலும், இந்த மாதிரி இடத்தில் நீ இருந்திருக்கிறாய் இந்த மூன்று நாட்களும்… அதனால் ஆதர்ஷைப் பார்த்து அவனுடன் மீண்டும் காதலில் விழலாம் என்று கனவிலும் எண்ண மாட்டாய் என்று நம்புகிறேன்…

அதையும் மீறி அவன் கண்ணில் நீ பட்டு, உன்னை திருமணம் செய்ய அவன் எண்ணினால், நீ இந்த மாதிரி இடத்தில் இருந்ததை அவன் குடும்பத்திற்கு தெரியப்படுத்துவேன், மேலும் நம்மைப் பற்றியும் சொல்லுவேன்… என்ன சரிதானே?... என்று அவன் கேட்க… அவள் இயலாமையோடு அவனை வெறித்துப் பார்த்தாள்…

நீ சும்மாப் பார்த்தாலும் அழகா தான் தெரியுற… ஹ்ம்ம்… என்றவன் அவளை நெருங்க முற்பட, அவள் அவனிடமிருந்து தப்பித்தாள்… செடி கொடி முள் அனைத்திலும் புகுந்து அவள் ஓடினாள்… ஏற்கனவே உடலில் கொண்டிருந்த காயங்கள், இப்போது இந்த முள் காயங்களும் சேர்ந்து அவளை தடுமாற வைக்க, தட்டு தடுமாறி அந்த கோவிலை அடைந்தாள்…  

அதன்பின் ஹரீஷ் அவளைப் பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்து முதலுதவி செய்து அவனின் கீழ் பணிபுரியும் பெண்ணின் உதவியால் அவள் உடல் காயங்களையும், அவள் உடலில் பதிந்திருந்த விரல் தடங்களையும் தெரிந்து கொண்டவன், சாகரியிடம் அவைகளைப் பற்றி கேட்டு துன்புறுத்தாமல் விட்டுவிட்டான்….

ஆனால், அவள் போகிறேன் என்று சொன்னதும், தாங்க மாட்டாமல் தன் தங்கையைப் பற்றிக்கூறினான் அவன்…  

தன்னை அவனின் உடன்பிறந்தவளாக பார்ப்பதை உணர்ந்து அவனிடம் மறைக்க முடியாது, தான் காதலித்தவனை கைப்பிடிக்கும் தகுதி இழந்தவள் என்பதையும், கசக்கி தூக்கி எறியப்பட்ட மலர் தான் தானும்…. என்பதையும் சொல்லி அழுதாள்…. வேறெதையும் சொல்லாமல்…

டந்த நாட்களின் நினைவில் உழன்று கொண்டிருந்தவள், மெல்ல சுதாரித்து நனவுலகுக்கு வந்தாள்… அங்கு வந்த சித்துவிடம் கதை பேசியவாறு அகன்றாள் சாகரி… உதட்டில் உருவாக்கிக்கொண்ட செயற்கை புன்னகையுடன்…

அவள் உடம்பில் இருந்த காயங்கள் அனைத்தும் ஆணின் விரல் தடம் போல் இல்லை என அந்த நர்ஸ் சொன்னதை கேட்ட ஹரீஷ், ஏதோ சூழ்ச்சி தன் தங்கையை சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டான்… அந்த பெண்ணின் உதவியுடன், சாகரி பவித்ரமானவள் என்பதை அறிந்ததும், கண்டிப்பாக இது சதி வேலை தான் என்று புரிந்து கொண்டான்…

அதன் பின் துரிதமாக செயல்பட்ட ஹரீஷ், ஆதியைப் பற்றிய அவள் வாய்மொழி உளறல் மூலம் அறிந்தவன், அவளை ஷன்வியின் வீட்டில் கொண்டு விட்டான் ஊட்டியில்… அதன் பின் அனைத்தும் அவன் நினைத்தது போலவே நடக்க ஆரம்பித்தது…

ஆனால் அவன் எதிர்பாராதது அவளின் டைரியில் இருந்த பக்கங்கள் தான்…

ஆனால், அதை படித்த பின்பு தான் தெரிந்தது அவளை எவ்வளவு தூரம் அந்த ராட்சஸன் காயப்படுத்தியிருக்கிறான் என்பது… ஹரீஷீற்கு மட்டும் அந்த பெண், ரிகாவின் உடம்பில் இருந்த விரல் தடங்களை பற்றி சொல்லியிருக்காவிட்டால், இந்நேரம் ஆதியும், ஹரீஷும் கூட ரிகா நினைப்பது போல் தான் எண்ணியிருப்பார்கள்…  ஆனால் இன்று புரிந்து விட்டதல்லவா அவர்களுக்கு,,, அவளை ஏமாற்றவே அந்த ராட்சஸன் அவளிடம் பொய் சொல்லியிருக்கிறான் என்பது…   

அவன் மேல் இருந்த கோபத்தில் ஆதி அருகில் இருந்த கல்லில் கைகளை குத்தினான் ஓங்கி…. கூர்மையான கல் கிழித்து அவன் குருதி வெளிவந்தது… ஹரீஷ் சட்டென அவன் கையைப் பிடித்து, லூசாடா நீ?... ஏன் இப்படி பண்ணுற… உனக்கு வலிக்கலையா?... என்று கேட்க…

விடுடா… என்னவள் பட்ட காயத்துக்கும் வலிக்கும் முன்னாடி இதெல்லாம் ஒன்னுமே இல்லை… பாவம்டா அவ…. என்னை காதலிச்ச பாவத்துக்கு என்னவெல்லாம் கஷ்டம் பட்டிருக்கா… முடியலைடா… என்னால… அவளை விட்டு நான் பிரிய முடியாதுடா இனியும்… அவ புரிஞ்சிக்க மாட்டிக்கிறாடா… அவளை விட்டு இனி ஒருநொடி கூட என்னால விலகி இருக்க முடியாதுடா… அவளை ரொம்ப விரும்புறேண்டா… விரும்புறேன்… அவ இல்லன்னா எனக்கு வாழ்க்கையே இல்லடா… என்றவன் உடைந்து போனவாறு சொல்ல…

ஹரீஷிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை… காதல் தான் ஒரு மனிதனை எப்படி எல்லாம் கதற வைக்கிறது… சிறுபிள்ளைத்தனமாய் நடக்க வைக்கிறது… நண்பனின் தோளில் ஆதரவாக கை வைத்த ஹரீஷ், அவனைப் புரிந்து கொண்டதற்கு பதிலாக கண் மூடி இமைத்தான்…

ஹரி, உன் தங்கையிடம் புரிய வைக்கணும்டா நடந்த உண்மையை… அதை அந்த ராட்சஸன் வாயாலே சொல்ல வைக்கணும்…

அதெப்படிடா முடியும்?...  அவனை எங்கே போய் தேடுறது?... அவன் ஏன் இப்படி பண்ணினான் என்ற காரணம் கூட தெரியவில்லையே சரியா…. பின் எப்படி ஆதி?... என்று ஹரி கேட்க…

ஆதியோ ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான்…. அவ்னீஷ்…. என்று….

சென்ற வார பதிவை தாமதமாக இந்த வாரம் தந்ததற்கு மன்னிக்கவும்…

காதல் நதியில் சீதை-ராமின் பயணம் விரைவில் முடியப்போகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்…

தொடரும்

Go to episode # 23

Go to episode # 25

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.