(Reading time: 23 - 46 minutes)

வள் பேயறந்ததுபோல் நிற்கவும், அப்புறம் என்ன சொன்ன, நம்பமாட்டியா?... ஹ்ம்ம்… நீ உடுத்திருக்கிற உடையே சொல்லுமே நான் பொய் சொல்லலைன்னு… 

இந்த வீட்டில் என்னைத் தவிர, இரண்டு வேலைக்காரங்க இருக்கிறாங்க… நான் உன்னை இங்கே என் கையில் தூக்கிகிட்டு வந்தேன்… இந்த அறைக்குள்ள உன்னோட நுழைந்ததை அவங்க பார்த்தாங்க… அப்புறம், இன்னும் இந்த அறையை விட்டு நீ வெளியே எட்டி கூட பார்க்கலை… இனி வாழ்க்கை முழுதும் நீ என்னுடன் தான் இருந்தாகணும்…

அப்படி நீ என்னுடன் இருக்க முடியாமல் போய், ஆதர்ஷ் உன்னை கல்யாணம் பண்ணிக்கிற நிலைமை வர நீ கொண்டு போகமாட்ட, அது எனக்கு தெரியும்… ஏன்னா, உன்னை காதலிச்சவன் இல்லையா அவன்… ஆனா, என்ன நீ அவனோட வாழ தான் முடியாம போச்சு… உண்மையில் பணம் இருந்து என்ன பிரயோஜனம்… உன்னோட வாழ அவனுக்கு விதி இல்லையே…  என்றவன் அவளைப் பார்க்கையில், அவள் கையில் கத்தி இருந்தது…

அவன் அவளுக்கு சாப்பிட பழங்கள் எடுத்து வந்திருந்தான்… அதனுடன் இருந்தது தான் அந்த கத்தி…

என்ன என்னை கொல்லப் போறியா?... ஹ்ம்ம்… கொல்லு… உன்னுடன் வாழ்ந்து உன் கையால் சாகவும் போகிறேன்…. உண்மையில் நான் கொடுத்து வைத்தவன் தான்… என்றவன் இரு கைகளையும் விரித்து, கொல்லு… என்றான் சாதாரணமாக…

அவள் அவனை நோக்கிப் பிடித்திருந்த கத்தியை தன்புறமாக திருப்பினாள்… அவன் பார்வை கூர்மையாக அவளிடம் பதிய, அவளோ, அவரோட வாழ எனக்கு தகுதி இல்லன்னு தெரிஞ்ச பின்னாடி இனி நான் உயிர் வாழ்வது வீண்… என்று மனதில் நினைத்தவாறு அவனைப் பார்த்தாள்…

அவன் சத்தமாக சிரித்தான்… கை தட்டி… நீ புத்திசாலின்னு நினைச்சேன்… ஆனா, இப்படி முட்டாள்தனமா முடிவெடுக்குறியே… அய்யோ… அய்யோ… என்னைக் கொன்னாலும் அதில் ஒரு நியாயம் இருக்கு… உன்னைக்கொன்னு ஆதர்ஷிற்கு ஆபத்து விளைவிக்கப் பார்க்குறியே… ஹாஹாஹா…. என்று அவன் இடைவிடாது சிரிக்க…

அவள் அவனை எரிப்பது போல் பார்த்தாள்…

இந்த கோப அக்கினியில் நான் எரிந்து போக மாட்டேன்… ஆனால், நீ உன்னை மாய்த்துக்கொண்டால், ஆதர்ஷிற்கு தான் ஆபத்து… என்ன புரியவில்லையா?... சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவன் அவன்… அதும் இளம் வயதில் சாதனை புரிந்துகொண்டிருக்கும் தொழிலதிபன்… அவனின் காதலி நீ… அது யாருக்கும் தெரியாது… உன்னையும் தினேஷையும் தவிர…. ஆனால், எனக்கு தெரியுமே… நீ அவனோட இங்கே மும்பை வந்திருந்த போது கடற்கரையில் சந்தித்த பொழுதுகள் உனக்கு நினைவிருக்கிறதா?... அப்போது உங்களுக்கே தெரியாமல் உங்கள் இருவரையும் புகைப்படம் எடுத்து வைத்திருக்கிறேன்… நீங்கள் இருவரும் அருகருகே இருப்பது போல் உள்ள புகைப்படத்தை இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தில் இன்னும் நெருக்கமாக இருப்பது போல் மாற்றியமைப்பது பெரிது இல்லையே…

ஒரு வேளை நீ இறந்தால், அந்த புகைப்படம் போலீசின் கையில் சிக்கும்… ஆதர்ஷின் சமூக அந்தஸ்து, மரியாதை, கௌரவம் அனைத்தும் அழியும்… அவனும் நீயும் காதலித்தீர்கள் என்றும், அவன் உன்னை ஏமாற்றிவிட்டு விலக நினைத்த போது, நீ நியாயம் கேட்டதாகவும், அந்த கோபத்தில் உன்னை அவன் கொன்று விட்டதாகவும் ஊர் சொல்லும்… அதற்கு சான்றாக அந்த புகைப்படம் அமையும்… ஆனால் அதைவிட வலுவானதான சான்று நீ தான்… ஒரு மருத்துவ சோதனை போதும்… நீ கெட்டுப்போனவள் என்று நிரூபிக்க…

எனினும், அந்த முடிவு அவனுக்கு சாதமாக அமையும்… ஏனெனில் அவன் அதற்கு காரணம் அல்ல என்றும் அந்த டெஸ்ட் சொல்லும்… ஆனால், நான் நினைத்தால், அதை எனக்கு தகுந்தவாறு மாற்றி அமைக்கலாம்… அவன் தான் அதற்கு காரணம் என்று என் பணத்தை, என் அந்தஸ்தத்தை வைத்து மாற்றி தவறான முடிவை கோர்ட்டில் சமர்ப்பிப்பேன்… அது ஒன்று போதுமே… உன்னை காதலித்தவன் தலை கவிழ….

அப்படி இல்லாமல், நான் உண்மையான டெஸ்ட் ரிப்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைத்தால், ஆதர்ஷிற்கு சாதகமான ரிப்போர்ட்டையே நான் கொடுத்தால் அவன் உன்னிடம் தவறாக நடக்கவில்லை என்று தெளிவாகிவிடும்… பணத்தைக்கொண்டு அவனின் குடும்பம் அவனை உன்னை கொலை செய்த கேஸில் இருந்து வெளிக்கொண்டு வந்து விடலாம்… ஆனால், அவன் இழந்த மரியாதை,???... சமூகத்தில் அவனுக்கு இருக்கும் பெயர்?... பதவி?... எல்லாம்?... காணாமல் போய்விடும் தானே… அவன் தவறு செய்தவன் இல்லை என்ற தீர்ப்பு வெளியானாலும், அவன் மேல் பழி விழுந்தது விழுந்தது தானே… ஒரு நாள் என்றாலும் அவன் அனைவரின் மனதிலும் உயரம் இறங்கியவன் தானே… அதன் பின் அவன் இழந்த அந்த கௌரவம் திரும்ப கிடைக்குமா அவனுக்கு?... கிடைத்தாலும் அதை அவன் அனுபவிக்க விடுவார்களா என்ன அவனைச் சுற்றியுள்ள இந்த பொல்லாத சமூகத்தின் மக்கள்…

அவன் சொன்னது அனைத்தையும் கேட்டவளுக்கு தலை சுற்றியது… இப்படி கூட நடந்திட முடியுமா என்று அவள் எண்ணி கூட பார்த்திடவில்லையே கொஞ்சமும்…

அவள் எண்ணங்களை அவள் விழிகள் பிரதிபலிக்க….

ஒகே… இந்த அதிர்ச்சியோடே இன்னும் நான் சொல்வதையும் கவனமாகக் கேள்… நீ இங்கு நடந்ததை யாரிடம் வேண்டுமானாலும் சொல்லலாம்… ஆனால் நீ சொன்னாலும் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது…. இங்கு நடந்த நிகழ்வை சொல்லி உன்னை நீயே அசிங்கப்படுத்திக்கொள்ள தயாராய் இருந்தால் சொல்லிக்கொள்… எனக்கொன்றும் இல்லை…

மேலும், நீ உன் குடும்பத்தோடு இருக்க வேண்டாம் இனியும்… இருந்தாலும் உனக்கு நிம்மதி இருக்கப்போவதில்லை… கொஞ்ச நாள் பொறுத்துக்கொள்… உனக்கு இங்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து விடுகிறேன்… அதன் பின் நீ இங்கே வந்து விடலாம்… அப்புறம் முக்கியமான விஷயம், இந்தா உன் போன்… நான் உனக்கு நிதமும் போன் செய்ய மாட்டேன்… ஆனால், பேசாமலும் இருக்க மாட்டேன்… என்றவன், சரி, சாயங்காலம் சென்னைக்கு போயிடலாம்… நீ ரெடியா இரு… வரேன்…. என்றபடி சென்றுவிட்டான்….

கைகளில் பிடித்திருந்த கத்தி நழுவி கீழே விழ, அவளும் தரையில் விழுந்தாள்…. அதன் பின் அவளிடம் சொன்னது போல் சென்னைக்கு அழைத்து வந்தான்…

அவள் ஒதுங்கி போனாள் அனைவரிடமிருந்தும்… ஆதர்ஷிடம் பேசாமல் இருப்பது அவளுக்கு சுலபமாயில்லை…

அவள் தாயும் தந்தையும் விபத்தில் இறந்த பின் ஒரு நாள், அவனிடமிருந்து அழைப்பு வந்தது…

உன் அம்மாவும் அப்பாவும் இறந்து போனதில் நீ மிக உடைந்து போயிருப்பாய் என்று தெரியும்…. நீ இங்கே வந்திடேன்… உன் அண்ணன் அங்கிருந்து பாவம் உனக்கு எப்படி ஆறுதல் சொல்ல முடியும்?... உனக்கு அவனாவது உறவென்று இருக்கட்டுமே… சற்று தூரத்தில்…

மேலும் உன்னை காதலித்தவனின் பிறந்தநாள் வேறு வரப்போகிறது அல்லவா…. அதற்கு அங்கிருந்து நீ என்ன பண்ணப் போகிறாய்…?... நீ இங்கே வந்திடு… என்றவன், ஆதர்ஷின் நினைவாய் நீ நிறைய பொருட்கள் வைத்திருக்கிறாய் என்று தெரியும்… நம் உறவை மனதில் வைத்து அதை எல்லாம் ஒப்படைக்க வேண்டிய ஆளிடம் ஒப்படைப்பாய் என்று நம்புகிறேன் என்றவன், விரைவில் உன்னை இங்கே சந்திக்கிறேன்… குட்பை…. என்றபடி துண்டித்துவிட்டான் அழைப்பை…

அதன் பின், தினேஷை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தவள், ஆதர்ஷிடமும் அதையே பின்பற்றினாள்… ஆதர்ஷ் இங்கேயே இருந்தால், அவன் மேலும், தன்னை எண்ணி நொந்து போவான் என்று தெரிந்து அவனைப் பார்த்து பேசி, அவனிடம் அவன் சம்மந்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு, அவனை சென்னையிலிருந்து வெளியேற சொன்னாள்…. கட்டளைப் பிறப்பித்தாள், ஒரு வருட பிரிவை அவனுக்கு கொடுத்தாள்…. அந்த ஒரு வருடத்தில் அவன் தன்னை மறந்திட வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்… அவளுக்கு தெரியும் உலகமே அழிந்தாலும், அவளின் நினைவை ஆதர்ஷின் மனதிலிருந்து அழிக்க முடியாது என்று… இருந்தும் என்ன செய்வது விதி ஆடும் ஆட்டத்தில் அவள் சிக்கிவிட்டாளே…

இதெல்லாம் பொய்யாக இருக்கக்கூடாதா?... என்று என்ணியவளுக்கு, கோவிலில் சுவாமி சொன்னது நினைவுக்கு வர, சொல்பவர்கள் சொல்லெல்லாம் கருத்தில் பதிய வைத்துக்கொள்ளக்கூடாது தாயே… என்ற வார்த்தைகள் ஒலித்தது அவளுள்… ஆதர்ஷைப் பார்த்து பேசிய அன்றே, மருத்துவமனைக்கு சென்றாள்… ஆனால், அங்கே அவளுக்கு சாதகமான முடிவு கிட்டவில்லை… ஓய்ந்து போனவளாய், ஆதர்ஷை விமான நிலையம் சென்று வழி அனுப்பி வைத்துவிட்டு, மயூரியிடம் கூட சொல்லாமல் மும்பைக்கு சென்றாள்… ஒரு வருடம் அங்கே நடைபிணமாய் வாழ்ந்தாள்…

வாழ விரும்பவில்லை தான் அவள்…. எனினும் உயிரோடு வாழ்ந்தாக வேண்டுமே ஆதர்ஷின் நலனிற்காக….

விதியின் பிடியில் அகப்பட்டுக்கொண்டவளாய் அவள் தனித்திருந்த போது தான் மும்பையில் அந்த விபத்து நேர்ந்தது அவளுக்கு….

அவள் கண்விழித்து குணமாகிக்கொண்டிருந்த வேளையில் மறுநாள் ஹரீஷின் வீட்டிற்கு செல்லப் போகிறோம் என்ற எண்ணத்தில் உறங்கி கொண்டிருந்தவள், அறைக்கதவு தட்டப்படும் ஓசைக் கேட்டு விழித்தாள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.