(Reading time: 10 - 19 minutes)

பார்த்தீங்களாம்மா, இன்னும் அவன்தான் பண்ணி இருப்பான்னான்னு கூட தெரியலை, அதுக்குள்ள போட்டத் திட்டத்துலேர்ந்து பின்னடையறீங்க. இதுனாலதான் அவங்க கொழுப்பு எடுத்து அலையறாங்க. இந்த மக்களை லேசா ஒரு தட்டு தட்டினாப் போதும், அப்படியே அடங்கி உக்கார்ந்துடுவாங்கன்னு அவங்களும் ஆடறாங்க”

“சார் நீங்க ஒரு போலீஸ் ஆபீசர். நல்ல தைரியமாப் பேசலாம், ஆனா எங்களுக்கு எங்களை சுத்தி இருக்கறவங்க பாதுகாப்புதான் முதல்ல, அதுக்கப்புறம்தான் பொதுநலன் எல்லாம்”

“ஏம்மா போலீஸ் ஆபீசர்ன்னா எங்களுக்கு குடும்பம்லாம் இல்லைன்னு நினைச்சுட்டீங்களா. எங்களுக்கும் குடும்பம் இருக்கு, அந்தக் குடும்பத்து மேல நாங்களும் அபரிமிதமான ஆசை, பாசம் எல்லாம் வச்சிருக்கோம். நீங்க இத்தனை சொல்றீங்களே, சுதா அம்மா எப்படி இறந்தா தெரியுமா? ஸ்கூல்க்கு முன்னாடி நின்னு கஞ்சா வித்துட்டு இருந்த ஆள விட முடியாதுன்னு சொன்னதால அவ கோவிலுக்கு போய்ட்டு இருக்கும்போது சுத்தி நின்னு வெட்டிப் போட்டுட்டாங்க. ஒரு பொம்பளையை வெட்ட அஞ்சு பேர். எத்தனை வீரமானவங்க பாருங்க. இப்படி ஆகிப் போச்சேன்னு நான் வீட்டுல உக்கார முடியுமா”

“ஐயோ கேக்கவே கொடூரமா இருக்கே. பாருங்கோ, ஒரு போலீஸ் ஆபீசர் உங்க நிலைமையே இப்படி. அப்பறம் பொது மக்கள் நாங்க எப்படி இந்த மாதிரி ரவுடி கூட மோதறது”

“உங்களை யாரும் மோத சொல்லலைமா. அட்லீஸ்ட் ஒரு சாட்சியாவானும் ஒத்துழைப்பு கொடுங்க அப்படின்னுதான் கேக்கறோம். ஆனா அதுக்குக் கூட நிறைய பேர் தயாரா இல்லை”

“எப்படி சார் தயாரா இருப்பாங்க. இப்போ பாருங்கோ இன்னும் கேஸ் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள எங்காத்து மனுஷாளை இப்படி விபத்து பண்ணி படுக்க வச்சுட்டா.....” என்று ஜானகி பேசிக்கொண்டிருக்கும்போதே பாலுவின் கைபேசி அழைத்தது.

லோ யாரு ACP சாரா. நல்லா இருக்கீங்களா?”

“நான் நல்லா இருக்கறது இருக்கட்டும், சார் யார் பேசறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா”

“என்னா போலீஸ் நீங்க, நான் யார் பேசறேன் அப்படின்னு என் நம்பர் பாத்த உடனேயே தெரிஞ்சிருக்குமே. அப்படியும் கேக்கறீங்க”

“டேய் நாதாரி, நீ யாரு உன் ஜாதகம் என்ன எல்லாமே எனக்குத் தெரியும், நீ இப்போ எதுக்கு எனக்கு போன் பண்ணின , அதை முதல்ல சொல்லு”

“அச்சோ அச்சோ நீங்க என்ன சிரிப்பு போலீசா, சீரியஸ் போலீஸ் கிடையாதா. இந்நேரத்துக்கு அந்த ரெண்டு ஜோடிப் புறாக்களையும் வண்டிலேர்ந்து தள்ளி விட்டது நான்தான்னு கண்டு பிடிச்சிருப்பீங்கன்னு நினைச்சேன். இல்லையா. சினிமால வர்றா மாதிரி கடைசி நேரத்துல வர்ற ஆளுதானா நீங்களும்”

“போடாங் ...............”, சென்னையில் வழக்கில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் உபயோகித்து பாலு மினிஸ்டரின் சகலை ரவியைத் திட்ட ஆரம்பிக்க ஜானகி தன் காதுகளுடன் சேர்த்து ஹரியின் காதுகளையும் மூடினார். ராமன் பாலுவின் பக்கத்தில் உட்க்கார்ந்து இருந்ததால், வேறு வழி இல்லாமல் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்தார்.

“சார் சார் மரியாதை, நான் உங்களுக்கு மரியாதை கொடுத்துத்தானே பேசறேன்”

“உன்னை மாதிரி கேப்மாரி, மொள்ளமாரிக்கெல்லாம் நான் மரியாதை கொடுக்கறதா இல்லை. இப்போ நீ எதுக்கு போன் பண்ணினியோ அந்த சொல்லி முடி”

“இங்க பாரு சார், ஒழுங்கா என் வழில கிராஸ் பண்ணாமப் போய்டு. இல்லைனா இப்போ அதுங்க ரெண்டுத்தையும் லேசாத் தட்டி ரூம்லதான் படுக்க வச்சிருக்கோம். இனிமேயும் சொன்னதக் கேக்காம ஆடுனீங்க வச்சுக்கோங்க, அடுத்து அதுங்க ரெண்டும் படுக்கற எடம் மார்ச்சுவரியாதான் இருக்கும் சொல்லிட்டேன். இந்த ரவி எப்பவுமே சொல்றதைத் தான் செய்வான். செய்யறதைத்தான் சொல்லுவான்”

“ஆமாம் இவரு பெரிய பிஸ்த். மூடிட்டு போடா. இன்னைக்கு உனக்கு, உன் மாமனுக்கு ரெண்டு பேருக்கும் சேர்ந்தே மஞ்சத் தண்ணி தெளிக்க வரேன். ரெடியா இருங்க”

“யோவ் போலீஸ் நானும் பார்த்துட்டே இருக்கேன். ரொம்பப் பேசறியே. இப்படியே பேசிட்டே இரு, உன்னோட வேலையே இருக்கப் போறதில்லைப் பாரு.   உன்னை எல்லாம் தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்தினாதான் நீ எல்லாம் அடங்குவ”

“போடா டேய், தமிழ் நாட்டுல எல்லா இடமுமே தண்ணி இல்லாக் காடுதான். இதுல நீ எங்க மாத்தினாலும் எனக்கு நஷ்டம் இல்லை. இதுக்கெல்லாம் பயந்துட்டு உன்னை மாதிரி நாய்ங்களுக்கு சாமரம் வீச நான் போலீஸ் வேலைக்கு வரலை. உன்னை மாதிரி எத்தனை ஆளுங்களை நான் பார்த்திருப்பேன். இப்போவே போய் நல்லா சாப்டுக்கோ. இதுதான் நீ சாபிடற கடைசி வீட்டு சாப்பாடு. இதோட உனக்குக் களிதாண்டி மாப்பிள்ளை. ரெடியா இரு”, என்று கைப்பேசியை வைத்தார்.

“சார், என்ன சார் நீங்க இப்படி அவனை உசுப்பேத்தி விடரா மாதிரி பேசிட்டீங்க. நீங்க பேசினதை வச்சுப் பார்த்தா அவன்தான் இந்த விபத்துக்குக் காரணம்ன்னு நினைக்கிறேன். அவன் நீங்க பேசினதுல கோவம் ஆகி இன்னும் ஏதானும் அதிகமாப் பண்ணிடப் போறான் சார்”

“கவலைப்படாதீங்க ராமன். எப்போ இந்த மோசடில ஈடுபட்டிருக்கறது இந்த ஆள்ன்னு தெரிஞ்சுதோ, அப்போலேர்ந்து அவன் குடும்பத்து மொத்த பேர் தொலைபேசி பேச்சுக்களையும் நேத்து ராத்திரிலேர்ந்து ரெகார்ட் பண்ண ஆரம்பிச்சாச்சு”

“சார் அப்போக் கூட நம்ம பிளான் எப்படி சார் அவனுக்குத் தெரிஞ்சிருக்கும். நாமளே இன்னைக்கு மதியம்தானே எல்லாம் பேசி தீர்மானம் பண்ணினோம்”

“இல்லை இந்த விஷயம் எங்க ஆபீஸ்லேர்ந்துதான் வெளிய போய் இருக்குன்னு நினைக்கறேன். ஏன்னா ராமுக்கும், ஆனந்தனுக்கும் விஷயம் உங்க வீட்டுக்கு வந்தப்பறம்தான் தெரியும். அதனால அவங்க வழியா லீக் ஆக வாய்ப்பு இல்லை. பார்க்கலாம் நான் இது வரை ரெகார்ட் பண்ணின தகவல் எல்லாத்தையும் கேட்டுப்பார்த்தா ஒரு ஐடியா கிடைக்கும். அவங்களும் இன்னைக்கு விஷயம் தெரிஞ்சு அவசர அவசரமாதான் பிளான் போட்டு இருக்காங்க. அதனால கண்டிப்பா ஏதானும் ஒரு இடத்துல ஓட்டை இருக்கும். உங்களுக்கு யார் போன் பண்ணி அடிபட்டிருக்குன்னு சொன்னாங்க ராமன்”

“எனக்கு ஹாஸ்பிடல்லேர்ந்து கால் வந்தது. அங்க இருக்கற ரிஷப்ஷன்லேர்ந்து பேசினாங்க பாலு சார். கௌஷிக், கௌரி ரெண்டு பேரையுமே உடனே உள்ள கூட்டிட்டு போய்ட்டாங்க போல. கூட வந்தவங்க கௌஷிக் போன் பார்த்து எங்க நம்பர் கொடுத்து தகவல் சொல்ல சொல்லி இருக்காங்க”, என்று கூற அதற்குள் மருத்துவமனை வந்திருக்க காரை பார்க் செய்துவிட்டு அனைவரும் உள்ளே வேகமாகச் சென்றார்கள். ICUவில் கௌரியும், கௌஷிக்கும் அனுமதிக்கப்பட்டிருக்க எல்லாரும் உள்ளிருந்த டாக்டரின் வருகைக்காக பதைபதைக்கும் மனதுடன் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

தொடரும்

Episode # 21

Episode # 23

{kunena_discuss:780}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.