(Reading time: 21 - 42 minutes)

தில் நீங்களே வைத்திருக்கீங்க!

இப்போக்கூட பதில் சொல்ல மாட்டேங்கற!

....

உனக்கு அவனை தெரியும். இரண்டு பேருக்கும் ஏதோ பிரச்சனை.. அதனால சண்டை! இதுவரைக்கும் நான் உங்க இரண்டு பேரையும் கவனிச்சதுல இருந்து என்னோட யூகம்!

நீங்க என்னோட அண்ணாங்கறத நிருபிச்சீட்டீங்க! என்னோட மூளை அளவு வேலை செய்யலனாலும்.. ம்ம்.. கொஞ்சமாவது செய்யுதே! பரவாயில்லை !

இதுக்கும் பதில் இல்லை?

உங்க தங்கையின் யூகம் சவேன்த் சேன்ஸ் என்னைகாவது தப்பாயிருக்கா? ம்ம்??!

சோ.. என்னோட யூகம் சரின்னு சொல்லற!

ஹி..ஹி...!

உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா!

அண்ணா! சர்ச்சுக்கு போலாமா இப்போ?

சரி கிளம்பு போகலாம். ஆனா ஒரே ஒரு பதில் மட்டும் வேண்டும்!

கேள்வி என்ன?

'இதுக்கு பதில் கண்டிப்பா வேண்டும்' என்றபடி ஐப்பேட்டை நீட்டினான்.

சொல்லு...நேத்து பதிவேற்றம் செஞ்சிருக்க! இதுக்கு அர்த்தம்? நடந்த சம்பவங்கள், இதுக்கு முன்னாடி எழுதப்பட்டது.. அப்புறம். நேத்து! எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சு பார்த்தா.. 1 + 1 = 2 னு தெளிவா புரியுது.

இல்லனா கிடையாது! கிடையவே கிடையாது! நீங்க நினைக்கிறா மாதிரி எதுவுமே கிடையாது!

நான் என்ன நினைச்சேனு நீ நினைக்கிற?

அண்ணா?!

சொல்லு. முன்னம் நடந்த கதையேல்லாம் வேண்டாம் எனக்கு. நேற்று ஏதோ வாக்குவாதம். என்ன ஆச்சு? அந்த பையனை கேட்டுக்கவா?

அண்ணா! ப்ளீஸ்...

....

நேத்து படுக்கலாம்னு போனா யாழினிக்கும் வெற்றிக்கும் ஏதோ பிரச்சனை. வார்த்தைகள் முற்றி யாழினி வெற்றியை அடிச்சிட்டா. சரி தடுக்கலாமனு போனா பிரபு கையை பிடிச்சு இழுத்து தடுத்து நிறுத்திட்டான். காரணம் என்னவோ சரிதான். ஆனால் செய்த காரியம் தப்பு. உள்ளே அவன் காட்டிய திசையில் வெற்றியை அடிச்சிட்டு யாழினி அவன் தோள் மீதே முகம் புதைத்து அழுதுக்கிட்டிருந்தா. இதை பார்த்துதான் பிரபு என்னை தடுத்தார். அதுக்கு கூப்பிட்டு சொன்னா போச்சு. எனக்கு இப்படி தொட்டு பேசறது பிடிக்காதுனு தெரியும்ல. அப்புறம் தெரிஞ்சே செய்தா கோபம் வராதா? அதனால தான் திட்டிவிட்டேன்.  செய்த காரியத்திற்கு அடிச்சிருக்கனும். ஆனால் விட்டுவிட்டேன். என்னையும் அவர் பழகற மற்ற பெண்களை போல மாறிட்டேனு நினைச்சிட்டார்.

அதுக்கு இவ்வளவு பேசனுமா?

அண்ணா ப்ளீஸ். நான் திட்டினது கொஞ்சம்தான். இத்தோட இதை விட்டுருங்கனா ப்ளீஸ்.

சரி கிளம்பு போகலாம்.

டீனா, டேவிட், குழலீ என மூவரும் சர்ச்சுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர். சாப்பிட்டு முடித்து அனைவரும் ஏர்போர்ட்க்கு கிளம்பினர். இரண்டு மணிக்கு சேக்கின் செய்து காத்துக்கொண்டிருந்தனர்.

வெற்றி எங்க டேவிட்?  - டீனா

வந்திருவான் டீனா டார்லிங்!

குழலீ இந்த வாட்டி ஒரு முடிவுக்கு வா. இதுக்கு மேல டிலே பண்ணாத. - டேவிட்.

சரி அண்ணா. எல்லார்காகவும் ஊருக்காகவும் ஒரு கல்யாணம் தேவை. எனக்காக? எனக்காக யாரு பார்க்க போறீங்க? உங்க எல்லாருக்காகவும் கண்டிப்பா ஒரு கல்யாணம் செய்துக்கிறேன். வேற எதுவும் என்கிட்ட எதிர்ப்பார்காதீங்க!

நீ ஆர்யன் சாரை மனசுல வைத்துதான் இப்படி எல்லாம் பேசற! அது காதல் இல்லை குழலீ. வெறும் attraction, crush! நீ இரண்டையும் போட்டு குழப்பிக்கிற.

காதல் இல்லாம ஒரு marital relationship எனக்கு வேண்டாம் அண்ணா. நீங்க சொல்லறா மாதிரி நான் கல்யாணம் பண்ணறவர் மேல காதல் வரனுமே. நான் ஆர்யன் மீது கொண்டது காதல் இல்லைனா வேற என்ன? இப்பவும் அவர் நல்லா இருக்கனும்னு தான் நினைக்கிறேன். அப்படியும் எனக்கு காதல் வரனும் னா என்னை மணப்பவர் அவர் அன்பால் காதலால் தலைகீழாக யோசிக்கவே முடியாத அளவுக்கு என்னை கவிழ்த்து போடனும். He should totally sweep me off my feet leaving me stunning and astounded. இது நடந்தா நீங்க எதிர்பார்க்கிற மாற்றம் குழலீகிட்ட நிச்சயமா வரும்.

சரி சரி. டிக்கட் மற்றது எல்லாம் எடுத்துக்கிட்டல? இந்த புக் வேற எதுக்கு கையில? பையில வை! சொன்னா கேட்க மாட்டியா? – டீனா

'அர்ச்சனை பண்ணாதீங்க டீனா! கொடுங்க நான் வேண்ணா இதை...' என்றவாறு கையை நீட்டியபடி வந்து சேர்ந்தான் பிரபு வெற்றியுடன்.

என்ன பிரபு இங்க? இன்னைக்கு நைட் பிளைட்ல? இங்க என்ன பண்ணற நீ? உன்னை பார்க்கனு யாழினி நியூயார்க் போயிருக்கா! – டீனா

இல்ல எனக்கு Frankfurt ல கொஞ்சம் வேலை இருக்கு. அதனால அந்த பிளைட்ஐ கேன்சல் பண்ணிட்டு இதுல போறேன். – பிரபு

ஆங்ங்.. எவ்வளவு பொய்! என அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் குழலீ.

சரி சரி. பத்திரமா போயிட்டு வாங்க. போய் போர்டிங் பாஸ் வாங்குங்க. நாங்க புறப்படுறோம். Have safe journey guys!' என்று இவர்களை வழியனுப்பிவிட்டு அனைவரும் புறப்பட்டனர். அதற்குள் குழலீ வெற்றியை தனியே அழைத்து சென்று ஏதோ வேகமாக பேசி அனுப்பிவிட்டாள். அவனும் சரி சரி என்று தலையை ஆட்டிவிட்டு வந்து சேர்ந்தான்.

முதுகில் ஒரு ஏர்பேக், கையில் ஒரு ஹாண்ட் பேக், தோள்களில் ஒரு லாப்டாப் பேக் இதை தவிர மற்றொரு கையில் ஐப்பேட் மற்றும் சுதாகர் கஸ்தூரியின் 6174 நாவல். இதுதவிர ஒரு அமேரிக்கன் டூரிஸ்டர் லக்கேஜில்!

கையில் இருக்கிறத இப்படி கொடு குழலீ! சொன்னா கேளு!' ஒருமையில் ஒலித்தது பிரபுவின் குரல்.

ஒருமையை உணர்ந்த மாத்திரத்தில் நின்று அவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் நடக்கத் தொடங்கினாள். அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான் பிரபு.

அந்த நீளமான முடியை இழுத்து இறுக்கமாக பின்னலிட்டிருந்தாள். அவள் நடக்க நடக்க அதற்கேற்றவாறு அசைந்தாடியது முழங்கால் வரை நீண்டிருந்த அந்த பின்னல். சராசரியான ஐந்தரை அடி உயரம். முன்பு இருந்ததைவிட கொஞ்சம் சதை பிடித்த பருமனான உடல். ஒட்டி ஒடுங்கிய கன்னங்களை விட இப்போது பிடித்து கிள்ளக்கூடய அளவுள்ள கன்னங்கள். நேர்த்தியான புருவங்கள். இதனுடன் இடது புற புருவமுனையில் ஒரு கடுகளவு மச்சம். பெரிய காதுகள் அதற்கேற்ப பெரிய தோடுகள் உடைக்கு ஏற்ற நிறத்தில்! முட்டை போல பெரிய விழிகள். அந்த கூர்மையான பார்வை. ஏதோ எல்லாம் துறந்தது போல ஒரு இனம் புரியாத உணர்வு கண்களில்! புன்னகையே இல்லாத அதரங்கள். கழுத்தில் மெல்லிய வெள்ளிச்சங்கிலி. இரண்டு கைகளிலும் உடைக்கு ஏற்றவாறு வளையல்கள்! நிமிர்ந்த நன்நடை. நேர் கொண்ட பார்வை! ஆகா ஓகோ என்று அழகில்லை! ஏதோ ஒன்று குறையுதே? என்று யோசித்தான். ஏதோ உணர்ந்தவனாக கால்களை பார்த்தான். அவள் அணியும் கொலுசுகள் இல்லை. மிஸ்ஸிங்!

அதை கொடு குழலீ. இத்தனை எலக்ட்ரானிக்ஸ் எடுத்துட்டு போக விடமாட்டாங்க.

...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.