(Reading time: 21 - 42 minutes)

பூ... பூ கொஞ்சம் நில்லு.

நின்றாள் பூங்குழலீ! அருகில் வந்தான்.

தயவுசெய்து அப்படி கூப்பிடாதீங்க ப்ளீஸ் !

என்னது? ம்ம் திரும்ப சொல்லு என்னது?!

தயவுசெய்து அப்படி கூப்பிடாதீங்க ப்ளீஸ் !

தப்புபண்றியே பூ! ம்ம் கம் அகேய்ன்!

மௌனமாக அவனை பார்த்தாள். எப்படியும் இவன் விடப்போறதில்லை என்று 'ம்ம்..தயவுசெய்து அப்படி கூப்பிடாதீங்க சீனியர்! ப்ளீஸ் !'

குட். அப்ப அதை இப்படி கொடு என்னோட லாப்டாப் லக்கேஜில இருக்கு. சோ ஐ கேன் ஹவ் ஒன் இன் ஹான்ட்! என்று அதை வாங்கிக்கொண்டான். 'உனக்கு முடி நல்லா கொட்டிரிச்சு போல?' என்றான்.

அதற்குள் போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு மற்ற விதிமுறைகளை முடித்தனர்.

கேட்ட கேள்விக்கு பதில் இல்லை?

பார்த்தா எப்படி தெரியுது?

1/5 th தான் இருக்கு!

ஆமாம். என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கா. சாரி காலையில நான் அப்படி பேசியிருக்கக்கூடாது. ஐ யம் எக்ஸ்ட்ரீம்லீ சாரி!  ப்ரியாவுக்கும் உங்களுக்கும் ப்ரேக்அப் ஆயிட்டுதுனு காலையில் தான் தெரியும்! சாரி வஹார் தட் டூ!' என்று விட்டு வெய்டிங் லாஞ்சில் சென்று அமர்ந்தாள்.

6174 ஐ எடுத்து பைக்குள் வைத்திருந்தாள். ஐப்பேட்ல் எதையோ படுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

உன்னை தெரியாம எப்படி. இங்ங் இந்த முகத்தை மறக்க முடியுமா? என்று ஏளனமாக கூறினான். திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தாள் குழலீ. மறுபடியும் தன் வேலையில் ஆழ்ந்தாள்.

இதுல ரிஜக்ட் செய்யப்பட்டோமேனு feelings வேற! போட்டோ குடுகறத்துக்கு முன்னால் யோசிச்சு கொடுத்திருக்கனும்! இதுல எக்ஸ்பக்டேஷன் பாரு கிரிக்கெட்டர் கிருஷ்ணா போல கணவன் வேண்டுமாம்!

Could you please shut up? It is none of your business Prabhu! இப்போ உங்களுக்கு என்ன தான் வேண்டும்? முதல்ல இப்போ சொன்ன பொய் இருக்குல அதுக்கு பதில் சொல்லுங்க? நியூயார்க் 11.50 நைட் பிளைட் லுவ்தான்ஸா தான்!  So Frankfurt break தான்! சில மணி நேர வித்யாசம் தான் ரெண்டுத்துக்கும்! எதுக்கு இந்த பொய்?

ஹலோ.. நான் டிக்கட் போட்டது இந்த பிளைட்ல தான். 11.50 பிளைட்ல வெற்றி தான் சென்னை வரான்!

என்னது? எதுக்கு?

தெரியாது!

இப்போ உங்களுக்கு என்ன தான் பிர்ச்சனைனு சொல்லறீங்களா? நான் எப்படியோ போறேன் உங்களுக்கென்ன? ப்ளீஸ் டிஸ்டர்ப் செய்யாதீங்க! அண்ட் என்னை அப்படி கூப்பிடாதீங்க அண்ட் அந்த பாட்டை திரும்பவும் என் முன்னாடி பாடாதீங்க!

உன்னை எச்சரிக்கை செய்யலாம் னு தான் வந்தேன். உதவியாய் கேட்கலாம்னு நினைச்சேன். பட். யூ...

பூ நான் சொல்றத கேட்டுக்கோ...

Don't call me like that! Just பூங்குழலீ!

ஒகே! நான் அப்படி கூப்பிடக்கூடாதுனா உன் பிரண்ட் அர்ஜுன் இருக்கானே.. பிரேசில்ல அவன் திருமணத்தை நிறுத்த சொல்லு! அதையும் மீறி நடந்தா அது கூடிய சீக்கிரமே ரத்தாகும்னு சொல்லு. ஏன்னா அவன் திருமணம் செய்ய போறது ப்ரியாவை!

சோ???- குழலீ

என்ன சோ? புரியலை. ப்ரியாவை  மிரட்டி ஒத்துக்க வெச்சிருக்கனும். இல்லைனா அவ இப்படி ஒரு முடிவுக்கு வரமாட்ட! நீ சொன்னா அவன் தட்டாம கேட்பான்னு எனக்கு தெரியும்.

நான் ஏன் அவன்கிட்ட சொல்லனும்?

இது அவனோட வாழ்க்கை!

சரி நீங்க கூப்பிட்ட உடனேயே அவங்க வந்திருவாங்களா?

Sure!

வாட் நான்சேன்ஸ் இட் இஸ்? இதுக்கு பெயர் காதலா? அதுக்கு அவங்க கல்யாணம் செய்யாம இருக்கலாமே?

நான் போட்ட கண்டிஷன் என் அப்பாவோட சாலேஞ்சு தான் காரணம்.

அதுக்கு இப்படியா?

நான் சினிமாவில் ஜெயிக்கிற வரைக்கும் திருமணம் வேண்டாம்னு சொன்னேன். காரணம் ப்ரியா.

'ப்ரியாவை தாராளமா திருமணம் செய்துக்கோ ஆனா அதுக்கப்புரம் பத்து பைசா என்கிட்ட இருந்து எதிர்பார்க்காதே! சொத்தையும் சேர்த்துத்தான். நீ சம்பாதிப்பியோ இல்ல உன் மனைவி உனக்காக உழைப்பாளோ? உங்க வழியை நீங்களே பார்த்துக்கோங்க' னு சொல்லிட்டார் என் அப்பா. இப்போ எனக்கு ஒரு பெரிய பட வாய்ப்பு வர இருக்கிறது. அது கிடச்சிட்டா பிரச்சனை இல்ல. ஆனா நான் அதுக்கு வேலையை விடனும் நான் சக்சீட் ஆகிறவரை எனக்காக அவ வேலையை விடக்கூடாது னு கண்டிஷன் வெச்சேன். இது அவங்க வீட்டினருக்கும் பிடிக்கலை அவளுக்கும் பிடிக்கலை! அதுவும் என் அப்பா சொத்து எதுவுமில்லை னு சொன்னதும் அவங்களுக்கு தெரியும்.

ச்ச்ச.. நான் ஏன் உன்கிட்ட இதேல்லாம் சொல்லறேன். இதேல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம்! அர்ஜுன் கிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்த சொல்லு!

ப்ச்ச்...பிரபு...உங்களை பார்த்தா எனக்கு பாவமா இருக்கு பிரபு! காதல் னா என்னவென்று தெரியாமல் இத்தனை நாளாய் ஏமாந்து போயிருக்கீங்க! அதுவும் கேவலம் பணத்துக்காக ரிஜக்ட் செய்யப்பட்டு...ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லையே! அச்சச்சோ!!

ஏய் பூ... என்றான் கோபமாய்.

சும்மா மிரட்டாதீங்க பாஸ்! உன்மையான காதல் இருந்திருந்தா உங்களுக்கு சப்போர்ட்டா உங்கக்கூட நின்றிருக்கனும் ப்ரியா. நிக்கலியே? உங்களைவிட உங்க பணம் ரொம்ப முக்கியம் இல்ல? அடுத்து உங்களுக்காக உழைக்கனும்.. நீங்க சக்சீட் ஆகிறவரை பொறுத்துக்க முடியல்ல?  Next is the worst! நீங்க ஜெயித்த பிறகு உங்க பெயர் புகழ்காக உங்கக்கூட ... கட்டினவனை விட்டு... ச்ச சொல்லவே எனக்கு நாக்கு எழவில்லை! இது எதுவுமே இல்லாம நீங்க மட்டும் இருந்தா போதும்னு தோணவேயில்லை இல்ல?! சொல்லுங்க சீனியர்? இதற்கு பெயர் காதலா?

பேச்சிழந்து குழலீயை வைத்தக்கண் வாங்காமல் பார்த்திருந்தான் பிரபு! கேட்ட கேள்விகளுக்கு பதில் அவனிடம் இல்லையே! 'அதுவும் கேவலம் பணத்துக்காக ரிஜக்ட் செய்யப்பட்டு...' என்று குழலீ கூறிய இந்த வார்த்தைகள் மட்டும் அவன் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. 'எனக்கு தெரிந்த பெண்கள் எல்லோரும் ப்ரியா பக்கம் தான் பேசினாங்க.. இவ மட்டும் இப்படி பேசறாளே? சரி என்னதான் சொல்ல வர்றா?' என்று யோசித்தான்.

அதற்குள் போர்டிங் கால் வந்தது. சென்னை நோக்கிய அவர்களது பயணம் தொடங்கியது.

வீட்டிலிருந்து கிளம்பிய யாழினி நியூயார்க் நோக்கி சென்றுக்கொண்டிருந்தாள். நேற்று நடந்த உரையாடல் மீண்டும் அவள் மனக்கண்முன்!

நீங்க பேசுங்க.. ஆனா என் எந்த தங்கைக்கும் மனசு கஷ்டப்பட்டக்கூடாது என்று கூறிவிட்டு உள்ளே சென்றான் டேவிட். பிரபு தான் பேசத்தொடங்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.