(Reading time: 21 - 42 minutes)

சென்னையில்...

அருள்மொழி கோபத்தில் இங்கும் அங்கும் நடந்துக்கொண்டிருந்தான்.

லஷ்மி வந்தார். 'டேய் அருள்..'

என்ன மா' எரிச்சலுடன் வந்தது குரல்.

'அருள்...'

பேசாதே மா! என்ன நினைச்சுக்கிட்டு இருக்காங்க உங்க சுந்தரி அக்கா? ம் கேட்கறதுக்கு ஆளில்லலைனு நினைப்போ? அறிவேயில்லையா? அப்பா இல்லாத பொண்ணுனா இரண்டாம் தாரமா போகனுமா? அதுவும் ஆறு வயசுல பெண் குழந்தையும் வேற! அதையும் தாண்டி.. நாற்பது வயசுமா அவங்க கொண்டு வந்த மாப்பிள்ளைக்கு! சொந்தம் வேற! ஏன் முதல் கல்யாணம் செய்தப்போ இந்த வீட்டுல ஒரு பொண்ணு இருக்கிறது தெரியாதா? பன்னிரெண்டு வயசு வித்தியாசம் மா! இது எல்லாத்தையும் விடு! ஒரு விட்டோயர் மறுமணம் செய்யக்கூடாதானு கேட்கலாம். நான் தப்பு சொல்லலை! ஆனா முதல் மனைவி தற்கொலை செய்துகிட்டு இறந்திருக்காங்க! எப்படி மா? என் அக்காவை இப்படி கேட்க மனசு வருது! கல்யாணமே ஆகலைனாலும் பரவாயில்லை! அக்காவை கடைசி வரைக்கும் நான் பார்த்துக்கிறேன்! இன்னோரு வாட்டி இது பற்றி பேசாதே மா!'

கனகராஜ் அவரது நண்பர் நாகராஜன் வீட்டில்..

நாகராஜ் சார். நீங்க காட்டின இந்த பொண்ணு வேண்டாமே. இப்போ எடுத்து வந்த ஜாதகத்தை பாருங்களேன்.

ஏன் சார்? ரொம்ப நல்ல பெண் சார். உங்க பையனுக்கு பொறுத்தமான ஜோடி சார். இந்த திருமணம் நடந்தா இரண்டு பேருக்குமே ராஜயோகம் சார். ஒரு முறை பெண்ணை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க.

எல்லாம் சரி சார். இந்த பெண்ணை நான் பார்த்திருக்கிறேன் சார். பரவாயில்லை. ஆனா இந்த பெண்ணோட நண்பர்கள் சரியில்லை சார். பஸ்சில் வருவாங்க சார் ஒரே ரவுடி கும்பல் அது. எப்பவுமே ஆட்டம் தான்.

என்ன சார் இது. நீங்க பார்த்தது எப்போ? இப்போவா? அந்த பொண்ணு பஸ்சில போகாதே!

ஒரு பத்து வருடத்திற்கு முன்னாடி சார்! 2006-07 இருக்கும்னு நினைக்கிறேன்?

சார் 2007 ல இருந்து அந்த பொண்ணு டூவீலர் தான் உபயோகிக்குது! எப்போவோ பார்த்தது வைத்து முடிவு பண்ணாதீங்க! ஒரு முறை பாருங்க அப்புறம் உங்க முடிவுக்கு சம்மதம்! மிஸ் பண்ணாதீங்க. பிரபுவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை தவறவிடாதீங்க!

சரி சார். ஏதோ சொல்றீங்க. நாளைக்கு வந்திடுவான். இரண்டு நாளில் போய் பார்திடலாம் சார். அந்த பொண்ணு வீட்டுல சொல்லிடுங்க. திரும்பவும் போய் பொண்ணு கேட்க சங்கடமாயிருக்கு சார்!

பிரபுவின் வீட்டில் அவனுக்கு பெண் பார்க்கும் படலம்!. குழலீக்கோ இரண்டாம் தாரமாய் கேட்டு வரன் எடுத்து வந்த அவள் தாய்வழி பெரியம்மா!. குழப்பமான மனநிலையில் பிரபுவும் யாழினியும்! அடுத்து என்ன என்று யோசித்துக்கொண்டிருந்தார்கள் குழலீயும் வெற்றியும்!

அர்ஜுனின் திருமணத்தை நிறுத்த போகிறாளா குழலீ? யாருடன் அவளுக்கு திருமணம்? ப்ரியாவை கைபிடிப்பானா பிரபு? இல்லை தந்தை பார்த்திருக்கும் பெண்ணா? பிரபுவிற்கு என்ன எப்படி பாடம் கற்றுக்கொடுக்கப் போகிறாள் யாழினி? தன் கண்ணம்மாவை கைதலம் பற்றுவானா வெற்றி ஆனந்தன்? எல்லா கேள்விகளுக்கும் காலம் நிச்சயம் பதில் சொல்லும் என நம்பி காத்திருப்போம்!

தொடரும்...

Episode # 03

Episode # 05

{kunena_discuss:833}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.