(Reading time: 21 - 42 minutes)

ங்க பாரு யாழினி... நான் சொல்லுறத தப்பா புரிஞ்சிக்க கூடாது! உனக்கு என்னோட லவ் ஸ்டோரி நல்லாவே தெரியும். பிரேக்அப், கன்டிஷன், அப்பாவோட பிடிவாதம் எல்லாமே! இது எல்லாத்தையும் தாண்டி ப்ரியா என்னை திருமணம் செய்ய ஒத்துக்கலைனா நான் என் அப்பா காட்ற பெண்ணை திருமணம் செய்யறதுனு ஒத்துகிட்டேன். ஆனா சேலஞ்சு அப்படியே தான் இருக்கு! யாரை கைபிடிச்சாலும் இதேதான்! உனக்கும் எனக்கும் நிறைய விஷயங்கள்ல ஒற்றுமை இருந்தாலும் எனக்கு உதவி செய்ய நினைத்தாலும் அதுக்காக உன்னை கல்யாணம் பண்ண முடியாது! எனக்கு உன் மேல் அப்படி ஒரு இன்ட்றேஸ்ட் இல்ல. அதையும் தாண்டி நீ என் உயிர்நண்பனின் உயிர்! கண்ணம்மா கண்ணம்மானு அவன் கவிதைகள் உருகறத படிச்சிட்டு அவன் உயிர் கண்ணம்மா யாருனு பார்க்கத்தான் வந்தேன்!

ஏன் பிரபு? பொய் சொல்லறீங்க? உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு! அதை ஏன் ஒத்துக்க மாட்றீங்க? என்கிட்ட அழகில்லையா அறிவில்லையா, திறமையில்லையா இல்ல பணம்தான் இல்லையா? எல்லாமே இருக்கு? என் லட்சியம் நிறைவேற உங்க துணையும் எனக்கு அவசியம் ! புரிஞ்சிக்கோங்க பிரபு!- யாழினி.

என்ன யாழினி இப்படி சொல்லிட்டீங்க? உங்ககிட்ட எல்லாமே இருக்கு ஆனா என்கிட்ட அதை அடைய எந்த தகுதியுமே இல்ல! புரிஞ்சிக்கோங்க! உங்களை உருகி உருகி காதல் செய்ய ஒருத்தன் இருக்கான்.  அவன் காதலைத்தாண்டி அவன் அன்பு ரொம்ப ரொம்ப உயர்வானது! என்னால அப்படிப்பட்ட அன்பு காதல் எல்லாம் உங்க மீது சொலுத்த முடியாது! ஏதோ ஒரு அக்ரிமன்ட் போல வாழ்க்கை எனக்கு விருப்பமில்லை! அப்படியே என்னைதான் கல்யாணம் செய்யவேனா நாளைவரை நான் நியூயார்க்ல தான் இருப்பேன். அங்க வந்த லீக்கலா எழுதிக்கோடு!

என்னனு??

என்ன நடந்தாலும் என்ன காரணத்தைக்கொண்டும் என்னை விட்டு பிரிந்து போக மாட்டேனு! இப்போவே உயிராய் இருக்கவனை விட்டு என்கூட வரேனு சொல்லற! திருமணத்திற்கு பிறகு என்னைவிட எல்லாவற்றிலும் பேட்டரா யாராவது வந்தா...

அடிப்பட்ட பூனையை போல் பார்த்தாள் யாழினி! வாக்கியத்தை முடிப்பதறகுள் வெற்றியின் கைகள் பிரபுவின் சட்டையை பிடித்திருந்தது!

மௌனத்தை கலைத்தான் வெற்றி!

என்ன டா நினைச்சுக்கிட்டு இருக்குற உன் மனசுல? யார பார்த்து என்ன வார்த்தை பேசிட்ட? கொஞ்சம் தடுமாறிட்டா.. ஆனா பத்திரைமற்று தங்கம்டா! இனி ஒரு வார்த்தை பேசின உன் ப்ரண்ட் வெற்றி உனக்கில்லை! உனக்கு பிடிக்கலனா விட்டுடு. ரொம்ப அதிகமா பேசாதே! ரிஜக்‌ஷன்ல வர்ற வர்த்தை! பார்த்து பேசுடா! அவ மனசு தாங்காது! சின்ன வயசிலேயிருந்து பார்க்கறேன் டா. சத்தியமா தாங்க மாட்டா! - என பொரிந்து தள்ளினான்.

என் முடிவு இதுதான். யாரை திருமணம் செய்தாலும் எனக்கு மறுபடியும் காதல் வர வாய்ப்பில்லை! வெறும் அக்ரிமன்ட் தான்! நாளைவரை டைம் இருக்கு! அதுக்கு மேல என் கையில எதுவுமேயில்லை.

அதற்குள் அனைவரும் வந்துவிட யாழினி வேகமாக மொட்டை மாடிக்கு சென்றாள். அவளை பின் தொடர்ந்தவாரே சென்றான் வெற்றி. அப்பொழுது தான் குழலீ டீனா காப்பியும் பஜ்ஜியும் எடுத்து வந்தார்கள்.

சாப்பிட்டு முடித்தவுடன் இவர்கள் பாட்டு கச்சேரி முடிந்து படுக்க சென்ற பிறகு யாழினி ரூமிற்கு சென்று விட்டாள். அவளை சமாதானப்படுத்த அவள் பின்னே சென்றான்.

இப்ப என்ன தான் வேணும் வெற்றி உனக்கு?

கண்ணம்மா...

அப்படிக்கூப்பிடாத ஆனந்த்! ப்ளீஸ்!

கண்ணம்மா இங்க பாரு!

எவ்வளவு பேசிட்டாரு பிரபு! நான் அவ்வளவு கேவலமா ஆயிடல!

சரி விடுடா! அவன் கிடக்கிறான்!

நீ ஏன்டா எனக்கு சப்போர்ட் பண்ண! நான் உனக்கு எத்தவ இல்ல. உன் ரசனை உன் திறமை... இதுக்கு வேற ஞானம் வேணும்டா! உன் எழுத்தை ரசிக்க அனுபவிக்க கவிதைல உரைய எனக்கு தெரியாது.. அந்த தகுதியும் இல்ல! உனக்கு சரியான ஜோடி குழலீ தான்! உங்க இலக்கிய ஆர்வம் பன்முகத்திறன் அதில் இருக்கிற அறிவு எல்லாமே ஒன்னு! நீங்க இரண்டு பேரும் தான் சரியான ஜோடி!

நிறுத்து அனி! என்ன நினைக்கிற உன்மனசுல? எனக்கும் குழலுக்கும் எவ்வளவு ரசனை ஒற்றுமையிறுந்தாலும் அந்த ரசனைக்கு காரணமாக இருக்கிறது நீதான் அனி! என் கண்ணம்மாவை பார்த்த பிறகுதான் இந்த ரசனையெல்லாம்! கவிதை இலக்கியம் எல்லாம்! அதனால முதல்ல நிறுத்து. எனக்கு நீதான் முக்கியம். உன்மனசு தான் முக்கியம். உனக்கு யாரை பிடிச்சிருக்கோ அவனை கல்யாணம் பண்ணிக்கோ.. ஆனா என்னை வற்புறுத்தாதே! எனக்கு மண வாழ்க்கைனு ஒன்னு இருந்தா அது என் கண்ணம்மாவோட தான்.. இல்லைனா பரம்மசாரி தான்!

ஏன்டா உனக்கு இந்த பிடிவாதம்? எனக்கு உன்னை பிடிக்கலை!

சரி பரவாயில்லை...அனி!

கோபமாய் அவனை முறைத்தாள். 'சத்தியமா எனக்கு உன்னை பிடிக்கலை! போ இங்கிருந்து போயிடு. என்னை விட்டுடூ. தனியா விடு. போ.. போயிறு..' என்று அவன் சட்டையை பிடித்து உலுக்க தொடங்கினாள்.

'கண்ணம்மா... சட்டையை பிடிச்சிக்கிட்டு போ போ னு சொன்னா போகாதேனு அர்த்தமா?! அனி...' என்றான் மந்தகாச புன்னகையுடன்! அன்பு மட்டுமே இருந்தது அதில்!

டேய் நா ரொம்ப குழம்பிருக்கேன்! இப்படி சிரிச்சுக்குடே இருந்த அடிதான் வாங்கப்போற! போயிடு! என்னை கொஞ்சம் தனியா யோசிக்கவிடு!

யோசி... ஆனா தனியா இல்ல! தனியா விட்டா உன்மனசு தாறுமாற யோசிக்கும். ஒன்னு நான் இருக்கனும் இல்ல குழல் இருக்கனும். உன்னை தனியா விடக்கூடாதுனு தான் குழலை உன்கூடவே எப்போதும் இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டேன். இரண்டு பேர்ல யாராவது ஒருத்தர் உன்கூடவே இருந்தோம். இருப்போம். அச்சச்சோ! உளரிட்டேனா?

போ...! இங்கிருந்து போயிடு. எனக்கு இத்தெல்லாம் திருப்பித்தர தெரியாது! போ போ!' என்று அவனை அடிக்க தொடங்கினாள். சிறு சிறு அடிகளை ஆனந்தமாய் வாங்கிக்கொண்டான் ஆனந்த்! சிரித்துக்கொண்டே நின்றவனை பார்த்து கோபம் தலைக்கு ஏரி பளார் என்று கன்னத்தில் அறைந்தாள். ஒரு நோடி திகைத்தவன் மீண்டும் அதே புன்னகையுடன்.

இதை பார்த்தவளோ 'என்ன அன்பு டா உன்னுடையது! இதற்கு நான் தகுதியனவள் தானா? ஏன் டா இப்படி கொல்லுற? பலனே எதிர்பாராமல் என்ன டா காதல். இதற்கு பதில் நான் எப்படி செய்யப்போறேன்? என்ன செய்யறதுனு தெரியலியேடா?! தயவுசெய்து போயிடு டா.. ப்ளீஸ்!' என்று அவன் தோள் மீது சாய்ந்து அழுதாள்.

அவளை ஒரு நிலைக்கு கொண்டுவந்தவிட்டு அவள் அருகிலேயே இருந்து அவளை உறங்கச்செய்தான். அவள் உறங்குகிறாள் என்று எண்ணி அவள் தலையை மெல்ல வருடி விட்டு உச்சியில் இதழ் பதித்து சட்டென்று எழுந்து சென்றுவிட்டான்! இதை யாழினி உணர்ந்துதான் இருந்தாள்! தூங்கினால் தானே!

'இவன் அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்?! எனக்கு எப்போதுமே தனிமை மட்டும் தானா? இந்த பிரபு?! என்னை வேண்டாம்னு சொல்லிட்டான்ல ... பாடம் கற்றுக்கொடுக்காம விடமாட்டேன்! இருடா வர்றேன்! யாரை எப்படி திருமணம் செய்யறனு பார்க்கிறேன். என்ன செய்யனும்னு எனக்கு தெரியும்!'

இப்படி முடிவு செய்து புறப்பட்டு இதோ பயணப்பட்டுக்கொண்டிருக்கிறாள்! சென்று பிரபு புறட்டப்போகிறோம் என நினைத்திருந்தாள். ஆனால் அங்கே காணப்போவது வெற்றியை தான் என அவளுக்கு தெரியாது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.