(Reading time: 11 - 21 minutes)

பேசிவிட்டு திரும்புகையில் அவள் கையில் இருந்து கால் சாவி அப்பெண்மணியின் பாதங்களில் விழுந்தது.

சற்று கூர்ந்துப் பார்த்தால் அது யுகேந்திரனின் தாய் என்பது நமக்கு தெரியும்!!!

கீழே விழுந்த சாவியை எடுக்க குனிந்தவளின் கரங்கள் அவர் பாதங்களைத் தொட்டன.

பதறியவர்,

"நல்லா இரும்மா!"-என்று வார்த்தைகளை உதிர்த்தார் அவர்.

எழுந்தவள் கண்கள்,அவர் கண்களை சந்தித்தன.

ஏதோ ஒரு பிணைப்பு ஏற்பட்டார் போல உணர்வு இருவருக்குள்ளும்!!!

ஏதோ ஒரு பந்தம் இருக்கிறார் போன்ற நினைவு!!!

வெண்ணிலா ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு நகர்ந்தாள்.

அன்றிரவு....

விஷ்வாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

மகேந்திரன் எடுத்துப் பேசினார்.

"மாமா வீட்டுக்கு வந்துட்டீங்களா?"

"வந்துட்டோம் விஷ்வா!!!"

"சரிங்க மாமா...நிலாவை பிடிச்சி வைங்க...அடிக்கடி ஆஸ்பிட்டல் பக்கம் ஓடிவிட போறா!!!"

"சரிடா..."

"அப்பறம் என் அக்காக்கிட்ட போன் கொடுங்க!"

"யாருடா அது?"

"நிலாக்கிட்ட மாமா!"

"என்ன புதுசா அக்கான்னு மரியாதை?"

"சும்மா மாமா!"

"ம்...என்னமோ சரியில்லை கவனிச்சிக்குறேன்!"-வெண்ணிலாவிடம் போன் தரப்பட்டது.

"சொல்லுடா தடியா!"

"அக்கா...!"

"புரியுது...வைஷ்ணவி விஷயம் தானே! பார்த்துக்கலாம்!"

"எப்படி அம்மூ கண்டுப்பிடிச்ச?"

"என்ன?என்ன பேர் சொன்ன?"

"அம்மூ...ஏன்?"-பழங்கால கதைகள் கண் முன் விரிந்தன.

"நிலா...ஓய்! என்னாச்சு?"-மூன்றாவது முறையாக விஷ்வா அழைத்து சுய நினைவுக்கு வந்தாள்.

"ஆ...சொல்லு!"

"என்னடி கனவு லோகத்துல சஞ்சரிச்சிட்டியா?"

"அதெல்லாம் இல்லை..."

"அப்பறம் நம்ம மேட்டர்?"

"முதல்ல வைஷுக்கிட்ட விஷயத்தை சொல்லுடா!"

"அதையும் நீ தான் சொல்லணும்!"

"எது?டேய்...மாக்கா?லவ் பண்றது நீ தானே?"

"அது என்னன்னு தெரியலை...      எல்லாரிடமும் தைரியம் இருக்கு...அவக்கிட்ட லவ் சொல்லும் போது மட்டும் பம்ப் அடிக்குது!"

"நிறைய முறை ட்ரை பண்ணி இருக்கியோ?"

"ம்.."

"நீ முதல்ல ஊருக்கு வா!பார்க்கலாம்..."-என்றப்படி மொட்டை மாடிக்கு வந்தாள்.

எதேர்ச்சையாக ரஞ்சித் வீட்டின் முன் பார்வை போனது.

புதியதாக ஒரு கார் வீட்டின் முன் நின்றிருந்தது.

யாரோ வந்திருப்பார்கள்.

"சரி...விஷ்வா ஒழுங்கா சாப்பிடு! நேரத்துக்கு தூங்கு! கம்ப்யூட்டரை கட்டிட்டு அழாதே புரியுதா?"

"சரிங்க ராஜகுமாரி உத்தரவு!"

"வச்சிடுறேன்!"-இணைப்பைத் துண்டித்தாள்.

மீண்டும் ஒருமுறை கண்பார்வை எதிர் வீட்டை உரசியது.

மனம் வந்திருப்பது அவன் மனைவியாக இருக்குமோ??

என்றது.

அவளை பொறுத்தவரை அவன் மறுமணம் புரிந்தவன் அல்லவா???

ஒன்றையும் அறியா மனம்,கசந்த புன்னகையை வெளிக்கொணர்ந்தது.

உண்மையில் வந்திருப்பது யாராக இருக்கும்???

வந்திருப்பது...

கார்த்திக்,ராஜா,காயத்ரி, மற்றும் கார்த்திகா இவர்களே!!!

அங்கே என்ன நடக்கிறது???

அவர்கள் வந்தவுடன்,

"சித்தப்பா!"-என்று ஓடிவந்து ரஞ்சித்தை கட்டிப்பிடித்துக் கொண்டான் ராஜா.

"ராஜா...!!!டேய்!!!எப்போடா வந்த???எப்படிடா இருக்க?"-கவலைகள் மறந்து ஆனந்தம் அடைந்தது அவன் மனம்.

ராஜா அவன் கன்னத்தில் முத்தமிட்டு,

"நீ தான் என்னை விட்டுட்டு வந்துட்டல...நான் உன் கூட பேச மாட்டேன்!!! உன் பேச்சு டூ...!!!"-முகத்தை திருப்பிக் கொண்டான்.

அவனுக்கு அவன் மனைவியின் நினைவு வந்தது.

அன்று ஒருமுறை.....

"ரஞ்சு!!!கரண்ட் போயிடுச்சு! அந்த கேண்டில் எடு!!!"

"..................."

"ரஞ்சு!!!"

"................."

"ரஞ்சு!"-இருட்டில், தனிமையில் பயந்துப் போனாள் நிலா.

"ரஞ்சு!!!"-கண்களில் கண்ணீர் முட்டியது.

குரல் தழுதழுத்தது.

அந்நேரம் சரியாக மின்சாரம் வந்தது.

அவன் கையில் வையரோடு வந்தான்.

அவனை பார்த்தவள், அழுதப்படி அவனை வந்து அணைத்துக் கொண்டாள்.

அதை எதிர்ப்பார்க்காத அவன் பதறினான்.

"அம்மூ???என்னடி ஆச்சு???"

"எங்கே போன நீ??"

"ப்யூஸ் போயிடுச்சு!!! மாற்ற போனேன்!!"-அவள் அழுதாள்.

"செல்லம்...என்னாச்சும்மா??இங்கே பாரு...ஏன் அழுகிற?"

-அவள் பதில் பேசவில்லை. பிறகு,தான் நினைவு வந்தது அவளுக்கு இருட்டு என்றால் பயம் அல்லவா??

"ஐயோ...!!!ஸாரிடி...மறந்தே போயிட்டேன்.ஸாரி ஸாரி தப்பு பண்ணிட்டேன்!"-ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டான்.

"செல்லம்....இங்கே பாரு!"

"................"

"கெட்டதுலையும் ஒரு நல்லது நடந்திருக்கு பார்!"

"என்ன?"

"நீயாகவே வந்து என்னை கட்டிப்பிடிச்சிட்ட!!"-அப்போது தான் தன்னிலை உணர்ந்தவள்,அவனிடம் இருந்து அவசரமாக விலகினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.