(Reading time: 11 - 21 minutes)

"ன்னாச்சுடி?"

"நீ என்ன தனியா விட்டுட்டு போயிட்ட,என் கூட பேசாதே போ!"-சிறு குழந்தையைப் போல அவள் முகத்தை திருப்பி கொண்டாள்.

மென்மையாக வருடும் அவள் நினைவுகளை கலைத்தான் ராஜா.

"சித்தப்பா...!!!!"

"என்னடா?"

"கனவு காண்றீயா?"

"கனவா???ஒரு வகையில அப்படி தான்!"

"சரி தான் போ!! என் கூட யார் வந்திருக்காங்க சொல்லு!"

"அப்பா,அம்மா வந்திருப்பாங்க!"

"அப்பறம்?"

"பாட்டியா?"

"இல்லை..."

"பின்ன?"

"சித்தி!"-இடி இடித்தாற் போல ஆனது.

"யாரு?"

"கார்த்திகா சித்தி!"-மனம் இலேசானது.

"கார்த்திகாவா?சரி...சரி...!"

"பாட்டி...உன் கல்யாண விஷயமா வர வச்சிருக்காங்க!"

"................."

"நீ அவங்களை கல்யாணம் பண்ணிக்காதே சரியா?"-அவன் அப்படி கூறியதும்,மனதின் ஒரு மூலையில் மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது.

"நீ நான் சொல்ற பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கணும்!"

"ஆமாமா...சார் பெரிய ஜமீன்...நீ சொல்ற பொண்ணை தான் என் தம்பி கல்யாணம் பண்ணிப்பான் பாரு!"-என்றப்படி அங்கே வந்தான் கார்த்திக்.

"ஆமா...நான் சொல்ற பொண்ணை தான் என் சித்தப்பா கல்யாணம் பண்ணிப்பார்!!"-கார்த்திக்,ரஞ்சித்தை கூர்ந்து கவனித்தான்.

அவன் எதையோ யோசித்தப்படி நின்றான்.

"நீ போய் அம்மாக் கூட இரு!"

"சரிப்பா!"-என்று அங்கிருந்து நகர்ந்தான் குழந்தை.

"ரஞ்சித்!"

"என்னண்ணா?"

"நிலா உன் வாழ்க்கையில மறுபடியும் வருவான்னு நினைக்கிறீயா?"

"...................."

"நீ அந்தப் பேச்சு பேசினதுக்கு அப்பறமும் அவள் வருவாளா?"

".................."

"தப்பு அவ மேல நிச்சயமா இல்லை.ஆனா,அவ தண்டனையை அனுபவிச்சிருக்கா!"

"கார்த்திக்...நான் அவ மறுபடியும் என் வாழ்க்கையில வரணும்னு கேட்கலை.அதுக்கான தகுதியும் எனக்கில்லை....

பாவங்களை போக்கிற கங்கை நதியை கலங்கப்படுத்தினவன் நான்!!!

என்னால,அந்த நதிக்கிட்ட மறுபடியும் பாவத்தைப் போக்க சொல்லி கேட்க முடியாது!!!"

"பின்ன எதுக்காக பைத்தியக்காரன் மாதிரி அவளையே நினைச்சிட்டு இருக்க?"

"நான் நிலாக்கிட்ட கேட்க நினைக்கிறது எங்களோட கடந்த காலத்தை இல்லை.மன்னிப்பு...!!!

செய்த தவறுக்கு மன்னிப்பு!!!

ஆனா,அதுக்கான சந்தர்ப்பம் கூட எனக்கில்லை!!!"

"ரஞ்சித்!!!"

"நிலா இருந்த இடத்துல நிச்சயமா இன்னொரு பொண்ணு வரப் போறதில்லை.

அம்மாவோட முயற்சி வீண்!!!

அவள் கைப்பிடித்து நடந்த நான்,இன்னொரு பெண் கையை சத்தியமா செத்தாலும் பிடிக்க மாட்டேன்!!!"-அமைதியாக நகர்ந்தான் ரஞ்சித்.

அவனது உறுதியை எந்த ரகத்தில் சேர்ப்பது என்றே தெரியாமல் விழித்தான் கார்த்திக்.

ரஞ்சித் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான்.

எங்கே பார்த்தாலும் அவள் முகம்...

கண்முன் விரிந்து இம்சை படுத்துக்கின்றது.

என்ன தான் மாயம் செய்தாளோ???

வீரனாய் சுற்றியவனை மண்டியிட வைத்துவிட்டாள் ராட்ஸஸி!!!

ஆனால்,தனிமையில் தவிக்கவிட்டு எங்கோ இருக்கிறாள்......

இன்னும் என் நினைவுகளை அவள் சுமந்துக் கொண்டிருப்பாளா???

நிச்சயம்...

இல்லை என்றால்???

அன்று...என்னைப் பார்த்ததும் ஏன் கண்ணீர் விட வேண்டும்!!!!

நினைக்கும் போதே சிலிர்த்தது அவனுக்கு!!அதனையே நினைத்தப்படி, உறங்கி போனான் ரஞ்சித்.

அவன் நினைவுகளில் தத்தளித்த நிலாவின் மனமோ தன்னை நொந்து கொண்டிருந்தது.

எத்தனை முறை பட்டாலும் புத்தி வராதா மனமே  உனக்கு??

எதற்காக முடிந்துப் போனதை கிளருகிறாய்???

நெருப்பென காயப்படுத்தி விட்டான் அல்லவா???

இன்னும் ஏன்??

அன்று அவனிடத்தில் உன்னையே முழுவதுமாக இழக்க துணிந்தாய்.ஆனால்,அவன்???

(மறுபடியும் ப்ளாஷ் பேக்)

அன்று...

"நிலா!!!கொஞ்சம் டீ போட்டு தாடி செல்லம்!!!"

".............."

"நிலா!"

"..............."

"அடியே...!!!எங்கேடி இருக்க?"-அவளைத் தேடி அவர்கள் அறைக்கு சென்றான்.

அங்கு அவள் ஜன்னல் வழியாக நிலவை இரசித்துக் கொண்டிருந்தாள்.

(ம்...இவர்களின் காதலுக்கு பல இடங்களில் நிலவு சாட்சியாய் இருக்கின்றது.)

ஏதோ அவளிடத்தில் வித்தியாசமாய் தெரிந்தது அவனுக்கு!!!

"நிலா!"-              தலைக்குனிந்தப்படியே திரும்பினாள்.

அவன் மெதுவாக அவள் அருகில் சென்றான்.

அவள் நெற்றியில் படர்ந்த ஒற்றை முடிக்கீற்றை விலக்கி,

"என்ன இன்னிக்கு ஏதோ வித்தியாசமா இருக்க?"-என்றான்.

அவள் மெதுவாக சிரித்தப்படியே,அவன் மீது சாய்ந்தாள்.

அவன் கைகள் அவனை அறியாமல் அவளை அணைத்தன.

சிறிது நேரம் சிலையாக இருந்தனர்.

மௌனத்தை கலைக்கும் விதமாக,

"இனி...உன்னை காக்க வைக்கலை ரஞ்சு!!!"என்றாள்.

புரியாமல் விழித்தவனிடம்,

"இனி நான் உன்னுடையவள்.

உனக்கு சொந்தமாக போகிறவள்."-என்றாள்.

அவள் கூற வந்ததன் அர்த்தம் விளங்க,

அவன் கரம் தன்னிச்சையாக அவளின் கன்னத்தை வருடியது.

நிலா தலை குனிந்தப்படி நின்றாள்.

சில நொடிகள் தான்,

ஏதோ உணர்ந்தவன்,

அவளிடம் இருந்து விலகினான்.

"என்னாச்சு?"

"இல்லை...வேணாம்...நிலா!"

".................."

"நமக்கு கல்யாணம் ஆனது.நமக்கு மட்டும் தெரிந்த விஷயம்.

அது வேற யாருக்கும் தெரியாது.அப்படி இருக்க,நான் உன்னை...

தப்பும்மா!!!"

".................."

"உனக்கு எந்த விதத்திலும் கெட்ட பேர் வர விட மாட்டேன்."-அவனது வார்த்தைகளை கேட்டதும்,பெருமிதத்தில் கண்ணீர் வெளி வந்தன.

"காத்திருந்தது இருந்தாச்சு. இன்னும் கொஞ்ச நாள்...

எங்கே போயிட போறா என் நிலா???"-என்று மெதுவாக அவளை அணைத்துக் கொண்டான்.

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.