(Reading time: 40 - 79 minutes)

நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்:

நீல விசும்பினுடை நின்முகங் கண்டேன்;

திரித்த நுரையினிடே நின்முகங் கண்டேன்:

சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;

பாரதியார் சொன்ன மாதிரி எங்கே பார்த்தாலும் உன் முகம் தான் தெரியுது கண்ணம்மா.. அவனிடம் புன்னகையுடன் கலந்த ஒரு பெருமூச்சு எழுந்தது 'உன்னாலே எனக்குள்ளே புதுசு புதுசா எவ்வளவு மாற்றம் கண்ணம்மா.'

அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள் அவள்.

அவளை தனது கைகளுக்குள் சிறை பிடித்தவன் 'நிஜமாவே டா. நீ என் பக்கத்திலே வரலேன்னா என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் தெரியலை. சரியான நேரத்திலே நீ வந்து என்னை அழகா திசை திருப்பிட்டியேடா' அவன் அணைப்பு இறுகி தன்னை மறந்து அவள் கன்னத்தில் அவன் இதமாய் இதழ் பதிக்க, அவனது அன்பில் கண்கள் மூடி அவனுக்குள் அப்படியே கரைய முற்பட்டவள், சட்டென சுதாரித்து, அவனை கஷ்டப்பட்டு விலக்கினாள். 'ப்ளீஸ் கண்ணா..... சொன்னா சொன்னதுதான்'

அவனை விட்டு கொஞ்சமாக விலகி திரும்பி நின்றவளை, பின் பக்கத்திலிருந்து அணைத்து அவள் கன்னத்தில் கன்னம் வைத்து கேட்டான் 'உன்னை காக்க வெச்சுட்டேனாடா? மன்னிச்சுக்கோடா கண்ணம்மா.

சட்டென திரும்பியவள் 'கண்ணா. ப்ளீஸ். நான் உன்  பொண்டாட்டிப்பா. என்கிட்டே போய் மன்னிப்பெல்லாம்...... என்றாள்

இன்று காலையில் தான் நடந்தது அது. அவர்களது திருமணம் முடிந்த பிறகு அவனது சில நண்பர்களிடம் அவளை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு எல்லாருடனும் பேசிக்கொண்டிருந்தான் பரத், பேச்சினிடையே நிமிடத்திற்கு ஒரு முறை மலர்ந்து மகிழ்ந்து   சிரித்துக்கொண்டிருந்தான் அவன்.

நண்பர்கள் விலகியதும் அவர்கள் அருகில் வந்தாள் இந்துஜா. அபர்ணாவின் கையை பற்றி குலுக்கினாள்.  'கையை குடுங்க அண்ணி. எங்க அண்ணன் இப்படி சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு.. நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி இருக்கேன். என்னாலே முடியலை. அவரோட சிரிப்பை நீங்க திரும்ப கொண்டு வந்திட்டீங்க.

அவள் பேச பேச அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் பரத். 'நீங்க ரெண்டு பேரும் எப்பவும் இப்படியே  சிரிச்சிட்டு இருக்கணும். அப்படியே இருங்க உங்க ரெண்டு பேரையும் ஒரு போட்டோ எடுத்துக்கறேன். என்றபடி அவர்கள் இருவரது சந்தோஷத்தையும் தனது கைபேசியில் பதித்துக்கொண்டு விலகினாள் அவள்.

அதன் பிறகு பரத்திடம் சில நிமிட மௌனம். ஏதேதோ யோசனை. அபர்ணா  என்னவாயிற்று என்று கேட்க எத்தனிக்க அதற்குள் 'கண்ணம்மா என்றான் மெல்ல.

ம்?

உன்கிட்டே கொஞ்சம் பேசணும்டா.

அந்த மண்டபத்தின் ஓரத்தில் அவர்களுக்கு கிடைத்தது ஒரு சின்ன தனிமை. அவள் அருகில் அமர்ந்தவன், அவள் தோளை அணைத்துக்கொண்டு மெல்ல துவங்கினான்.

என் கண்ணம்மா எனக்காக கொஞ்ச நாள் காத்திருக்குமா?

ம்? புரியாமல் நிமிர்ந்தாள் அவள்.

'நிறைய தடவை யோசிச்சு பார்த்துட்டேன்டா. மனசுக்கேட்க மாட்டேங்குது'. மெல்ல கண்களை நிமிர்த்தினான் பரத். இந்துக்கு கல்யாணம் பண்ணாம, அவளை நிக்க வெச்சுட்டு நம்ம வாழ்கையை ஆரம்பிக்க மனசே வர மாட்டேங்குதுடா. பாவம்டா அது. அது மனசிலேயும் நிறைய ஆசை இருக்குடா. அதுக்கு முதல்லே கல்யாணம் பண்ணிட்டுதான் நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன். ஆனால் இப்போ விட்டுட்டா, நாம ரெண்டு வருஷம் காத்திருக்கணும் உங்க அப்பா சொன்னார். அது என்னாலே கண்டிப்பா முடியாதுடா. அதனாலே என் கண்ணம்மாவுக்கு சட்டுன்னு தாலி கட்டிட்டேன்'.

அவன் மெதுவாக பேச, அவன் சொல்ல வருவது மெல்ல புரிய, புன்னகை மாறாமல் அவனையே பார்த்திருந்தாள் அபர்ணா. தங்கையின் மீதிருந்த பாசம் அவன் கண்களில் ஒளிர, தனது கன்னத்தில் கைவைத்துக்கொண்டு  அதை ரசித்தபடியே  அமர்ந்திருந்தாள் அவள்.

மாக்சிமம் ஒண்ணு, ஒன்றரை  மாசம் அதுக்குள்ளே நான் அவ கல்யாணத்தை முடிச்சிடுவேன் அதுக்கப்புறம்......

அசைவில்லை அவளிடத்தில். 'எத்தனை அழகான மனம் என் கண்ணனுக்கு?'

எனக்கு புரியுதுடா. உன் மனசிலேயும் நிறைய ஆசை இருக்கும். உன்னை காக்க வைக்கறதும் தப்புதான்.....

பதிலில்லை....

நான் என்ன சொல்றேன்னு புரியுதா கண்ணம்மா?  ஏதாவது சொல்லுடா..... அவள் என்ன நினைக்கிறாள் என்றே புரிந்துக்கொள்ள முடியாமல் கேட்டான் பரத்.

லவ் யூ..... என்றாள் அபர்ணா.

ம்?

லவ் யு சோ மச்டா கண்ணா.... சொல்லிவிட்டு அவன் கேசத்தை செல்லமாக கலைத்துவிட்டு அங்கிருந்து ஓடியே விட்டிருந்தாள் அபர்ணா.

சில நிமிடங்கள் கழித்து அவன் சொன்னதை மனம் மறுபடியும் அலசிப்பார்க்க அவள் மனதிற்குள் இன்னுமொரு எண்ணமும்  பிறந்தது. இது ஒரு தவம். அவளுக்காக  தனது சந்தோஷத்தை தொலைத்த நண்பனுக்கு நல்வாழ்கை அமையும் வரை ஒரு தவம். சின்னதாய் ஒரு தவம். ஒரு நிறைவான  புன்னகை எழுந்தது அவளிடத்தில்.

மொட்டை மாடியின் சிலு சிலு காற்று இருவரையும் தழுவி செல்ல அழகான புன்னகையுடன் அவன் முகத்தை கையில் ஏந்திக்கொண்டு சொன்னாள் அபர்ணா 'இந்த  மாதிரி யோசிக்கவே தனி மனசு வேணும். நிஜமாவே எனக்கு உங்களை பார்த்தா பெருமையா இருக்கு.'

அவள் முகத்துக்கு மிக அருகே வந்து கேட்டான் ' என்னை பார்த்தா பெருமையா மட்டும்தான் இருக்கா? வேறெதுவும் இல்லையா....

வேறெதுவும் இல்லை. இப்போ நான் கீழே போய் தூங்க போறேன்.

தூங்க போறியா? வாய்ப்பே இல்லை. அவள் எதிர்பாராத நிமிடத்தில் அவளை அப்படியே தூக்கி சுழற்றினான் பரத். இன்னைக்கு நைட் பூரா .நோ தூக்கம் 

'அய்யோ!!! விடுங்க ப்ளீஸ். யாரவது இப்போ மாடி ஏறி வரப்போறாங்க.'

அதெல்லாம் யாரும் வர மாட்டங்க. இன்னைக்கு நைட் பூரா இங்கேயேதான் இருக்கபோறோம்.' அவளை இறக்கி விட்டான் பரத்.

இங்கே எதுக்கு?

'சொல்றேன் வா. இப்படி வந்து உட்கார்' என்றபடி அங்கே தரையில் அமர்ந்தான்.

அவள் அவனருகில் வந்து அமர, அவள் எதிர்ப்பார்க்காத நொடியில் அவளை அப்படியே மடியில் சாய்த்துக்கொண்டான் அவன். அவளை இடையோடு வளைத்து தனது கைகளில் அள்ளிக்கொண்டான். 'நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேண்டா' என்றான் அவன்.

என்ன இருக்கிறது அவன் கைச்சிறையில்? அதில் எங்கிருந்து பிறக்கிறது இப்படி ஒரு நிம்மதி புரியவே இல்லை அவளுக்கு. ஆனால் இரவு முழுதும் அப்படியே இருந்துவிட மட்டும்  தவித்தது மனம்.

கவிதை பாடி ,கதை சொல்லி, காதல் பேசி,  எப்போது உறங்கினாள் என்றே தெரியாமல் அவன் மடியிலேயே உறங்கிப்போனாள் அபர்ணா. 

திருமணம் முடிந்து பத்து, பன்னிரண்டு நாட்கள் கடந்திருந்தன. அன்று இரவு உணவிற்காக அனைவரும் பரத்தின் வீட்டில் கூடி இருந்தனர்.

இத்தனை நாட்களுக்கு பிறகும் விஷ்வா பரத்துடன் பெரிதாக எதுவும் பேசிவிடவில்லை. அவனால் பேசவும் முடியவில்லை. என்ன பேசுவதாம்? நான் உன்னை புரிந்துக்கொண்டேன் என்று சொல்வதா? என்னை மன்னித்துவிடு என்று சொல்வதா? நீ என் கண்ணன் என்று சொல்வதா? எங்கிருந்து எப்படி துவங்குவது என்றே புரியவில்லை அவனுக்கு.

எல்லாரும் சாப்பாட்டு மேஜையில் கூடி இருக்க, விஷ்வாவின் அருகில் வந்து அமர்ந்தான் கண்ணன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.