(Reading time: 40 - 79 minutes)

வன் முதலில் பார்த்தது மணப்பெண்ணின் பெயரை.

'இந்துஜா!!!!! வெரிகுட். வெரி குட். மிஸ்டர் விஷ்வா. ஐ யாம் ரியலி ஹாப்பி' அவனை நோக்கி கைநீட்டினான் சுதாகரன். 'ஆல் தி வெரி பெஸ்ட் மிஸ்டர் விஷ்வா.'

புன்னகைத்தான் விஷ்வா 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது....... அப்படின்னு நீங்க தான் இதுக்கு முதல் விதையை போட்டீங்க. ஏன்னு தெரியலை அன்னைக்கு எங்க அப்பாவே  என் முன்னாடி வந்து அப்படி சொன்ன மாதிரி இருந்தது.

புன்சிரிப்புடன் நிமிர்ந்தான் சுதாகரன்.

நீங்க என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தினீங்கன்னா நான் ரொம்ப சந்தோஷ படுவேன். வருவீங்களா? தயக்கத்துடன் கேட்டான் விஷ்வா.

'கண்டிப்பா வருவேன்.' என்றான் உறுதியான குரலில் 'வருவேன் இல்லை. வருவோம். நாங்க ரெண்டு பெரும் வந்து உங்களை மனசார வாழ்த்துவோம். டோன்ட் வொர்ரி' புன்னகைத்தான் சுதாகரன்.

மன நிறைவுடன் தலை அசைத்தான் விஷ்வா.

வந்தது அந்த நாள். அவர்கள் திருமணதிற்கு முன் தினம்.

ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துக்கொண்டிருந்தார்கள் அபர்ணாவும், பரத்தும்.

அன்று மாலை திருமண வரவேற்பு. மேடையில் ஒரு பக்கம் அஸ்வினியும் - அஸ்வினும் நின்றிருக்க, இன்னொரு பக்கம் இந்துவும் விஷ்வாவும் நின்றிருந்தனர்.

அஸ்வினை பார்த்த மாத்திரத்திலேயே எல்லாருக்கும் பிடித்துப்போனது. அவனது பேச்சும், புன்னகையும், அன்பும் சில நிமிடங்களிலேயே அனைவரையும் வசீகரித்து விட்டிருந்தது.

அஸ்வினியை அவன்  கண்கலங்காமல் பார்த்துகொள்வான் என்ற நம்பிக்கை எல்லார் மனதிலும் எழுந்து விட்டிருந்தது.

இந்த பக்கம் விஷ்வாவின் தோளை உரசியபடியே நின்றிருந்தாள் இந்துஜா. தான் விஷ்வாவின் அருகில் மணமேடையில் நிற்கிறோம் என்றே எண்ணமே அவளுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது.

திருமணம் முடிவான பிறகும் கூட அவளிடம் தேவைக்கு அதிகமாக எதுவும் பேசவில்லை. எந்த உரிமையும் எடுத்துக்கொள்ள முயலவில்லை.

'ஒரு 'ஐ லவ் யு வாவது' சொல்லுங்க விஷ்வா' என்பாள் அவள்.

'சொல்றேன். கல்யாணம் முடியட்டும் எல்லாம் சொல்றேன்.' என்பான் அவன்.

மேடையில் நின்றவள் நிமிடத்திற்கு ஒரு முறை அவனை பார்த்து பார்த்து ரசித்து மகிழ்ந்துகொண்டிருந்தாள்.

வரவேற்பு முடிந்து, சாப்பிடும் நேரத்தில் அவனருகில் அமர்ந்தாள் இந்துஜா.

நான் என் விஷ்வாவின் அருகில் அமர்ந்திருக்கிறேன். நாளை எனக்கும் அவனக்கும் திருமணம். என் இத்தனை வருட தவம் பலித்தே விட்டதா? அவனை திரும்பி பார்த்தவளின் கண்களில் நீர்கோடுகள்.

எதையோ உணர்ந்தவனாக அவள் பக்கம் சட்டென திரும்பினான் விஷ்வா 'நிலாப்பொண்ணு என்னாச்சுடா?'

'லவ் யு' விஷ்வா என்றாள் கண்களில் நீர் வழிய.  

ஹேய்... எதுக்குடா இப்போ கண்ணிலே தண்ணி...

ஒண்ணுமில்லை போ... கண்களை துடைத்துக்கொண்டாள் அவள்.

டேபிளுக்கு அடியில் அவள் கையை பிடித்து அழுத்திக்கொடுத்தான் விஷ்வா. 'இன்னும் கொஞ்ச நேரம்தான் அதுக்கப்புறம் என் நிலாப்பொண்ணு எனக்கு சொந்தமாகப்போறா. இப்போ போய் யாரவது அழுவாங்களா.??? போச்சு... போச்சு... பாரு. உன் மேக் அப் எல்லாம் கலையுது. உங்க அண்ணன் கல்யாணத்திலேயே நீ அசத்தலா இருந்தே. இப்போ கலக்க வேண்டாமா. எங்கே சிரி.' அவன் குனிந்து அவள் முகம் பார்த்து சொல்ல சட்டென சிரித்தாள் இந்துஜா.

மறுநாள் அழகாக விடிந்திருந்து இந்துஜா இத்தனை நாட்கள் தவமிருந்து காத்திருந்தது இந்த நாளுக்காகதானே.!!!!

இரண்டு ஜோடிகளும் மணமேடையில் இருந்தனர். விஷ்வாவின் திருமணத்தில் எந்த சம்பிரதாயமும் இடம்  பெறவில்லை. அவன் எண்ணங்களுக்கு மாறாக, செயல் பட யாருக்கும் விருப்பம் இல்லை. அஸ்வினியின் திருமணத்தில் எல்லா சம்பிரதயங்களும் நடந்துக்கொண்டிருந்தன.

அப்போது வந்தது அந்த கார். அதிலிருந்து கையில் குழந்தையுடன் இறங்கினார்கள் அவர்கள்.

சட்டென திரும்பிய அபர்ணாவின் கண்களில் தென்பட்டார்கள் அவர்கள். ஓடிச்சென்று அவர்களை வரவேற்றாள் அபர்ணா.

'வா அர்ச்சனா.... வாங்க வசந்த் சார்.' என்றாள் அவள்.

அவள் கையை பாசத்துடன் பற்றிக்கொண்டாள் அர்ச்சனா. அவள் அபர்ணா - விஷ்வாவின் கல்லூரி தோழி.

ஓ! நீங்கதான் அபர்ணா தி கிரேட்டா??? உங்களை பத்தி நிறைய சொல்லி இருக்கா உங்க friend என்றான் வசந்த்.

யாரு?? நான் கிரேட்டா நீங்க வேறே. உங்களை பத்தி எனக்கு எல்லாம் தெரியும் சார் என்றாள் அபர்ணா. உங்க மனசுக்கு முன்னாடி நாங்க எல்லாரும் ஒண்ணுமே இல்லை என்றவள், அர்ச்சனாவை பார்த்து அப்பா எப்படி இருக்கார்? என்றாள்.

ம். புன்னைகைத்தாள் அர்ச்சனா. 'இப்போ எங்களோடதான் இருக்கார்.'

குழந்தை பையன்னா.....? டேய் குட்டி பையா... என்று அந்த இரண்டு மாத குழந்தையின் கன்னம் தொட்டு முத்தமிட்டாள் அபர்ணா.

நியாயமா உன்கிட்டே பேசவேக்கூடாதுன்னு நினைச்சேன். நீ என் கல்யாணத்துக்கு வரவே இல்லை பார்த்தியா? பொய் கோபம் காட்டினாள் அபர்ணா.

அவனை என்கிட்டே குடு என்று குழந்தையை வாங்கிக்கொண்டான் வசந்த். நீங்க ரெண்டு பேரும் ஜாலியா கொஞ்ச நேரம் பேசிட்டிருங்க என்றபடி விலகினான் அவன்..

உன் கல்யாணத்துக்கு வரக்கூடாதுன்னு இல்லைடா என்றாள் அர்ச்சனா. இவன் பிறந்து அப்போ ஒரு மாசம் கூட ஆகலை. நான் எப்படிம்மா வர்றது. அதுதான் இப்போ விஷ்வா கல்யாணத்தையும் பார்த்திட்டு உன்னையும் விஷ் பண்ணிட்டு போகலாம்னு தான் வந்தேன்.

'சரி மன்னித்தோம் விடு.' சிரித்தாள் அபர்ணா.

உங்க அண்ணனுக்கு குழந்தை பிறந்திடுச்சா? பையனா பொண்ணா கேட்டாள் அபர்ணா.

பொண்ணு..... புன்னகையுடன் சொன்னாள் அர்ச்சனா. அப்புறம் விவேக்கும் கல்யாணம் ஆயிடுச்சு என்ற அர்ச்சனாவின் பார்வை அங்கே யாருடனோ பேசிக்கொண்டிருந்த வசந்தை தேடி அடைந்தது.

'நூத்தி எண்பது' என்றாள் அபர்ணா.

என்னது?

'இல்லை. நான் செகண்ட்ஸ் கவுன்ட் பண்ணிட்டே இருக்கேன். சரியா 3 நிமிஷத்துக்கு ஒரு தடவை ரெண்டு பெரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கறீங்க. எப்படி லவ் பண்றதுன்னு உங்ககிட்டேர்ந்துதான்பா  கத்துக்கணும்' சிரித்தாள் அபர்ணா.

ஹேய்... வெட்க சிரிப்புடன் அவளை பிடித்து தள்ளினாள் அபர்ணா. போய் கல்யாண வேலைகளை பாரு, எங்களை அப்புறம் வேடிக்கை பார்க்கலாம்.

அந்த நேரத்தில் உள்ளே நுழைந்தார்கள், ஜனனியும் சுதாகரனும். அவர்களை ஓடிச்சென்று வரவேற்றாள் அபர்ணா.

அவர்களை ஜோடியாக பார்த்த மாத்திரத்தில் வியந்து போனாள் இந்து. இவன் ஜனனியின் கணவனா? அப்படி இருந்தும் எங்கள் இருவரையும் இணைத்து வைக்க முயற்சி செய்தானா?

அபர்ணா, பரத், வசந்த் அர்ச்சனா என அனைவரும் மேடையில் கூடி நிற்க, தாத்தாவும் மைதிலியும் தாலியை எடுத்துகொடுக்க மலர்கள் மழையாக பொழிய  இந்துவின் கழுத்தில் அதை அணிவித்தான் விஷ்வா. அதே நேரத்தில், அஸ்வினியின் கழுத்தில் தாலி கட்டினான் அஸ்வின்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.