(Reading time: 31 - 61 minutes)

" சார், இது அவங்க டிசைன் பண்ணதுதான். எனக்கு ரெண்டு நாளாக ஹெல்த் சரி இல்லை .. வானதிதான் இதெல்லாம் ரெடி பண்ணாங்க ..பட் என்னையே ப்ரெசென்ட் பண்ண சொல்லிட்டாங்க.. "

" ஏன் ?"

" முதல்முறை என்பதால தயங்குறாங்க நினைக்கிறேன் சார்.. "

" சரி நான் பேசிக்கிறேன் ..நீ முதலில் கெளம்புங்க " என்றான் அருள் அக்கறையாய்.. அவளை கால் டேக்சியில் அனுப்பி வைத்தவன் நேராய் வானதியின்  அறைக்கு சென்றான்.. அவனை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது முகபாவனையே காட்டி கொடுத்தது. மருண்ட விழிகளுடன் அவனைப் பார்த்தாள்  வானதி.. எப்போதும் நேர்கொண்ட பார்வையுடன் இருப்பவள் தன்னை பார்க்கும்போது மட்டும் தடுமாறுவதை பார்த்து மனதிற்கு சிலிர்த்துக் கொள்வான் அருள்.. இன்றும் அதேபோல் மனதிற்கும் மயங்கி நின்றாலும், முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் இருந்தான்..

" எம் டீ வந்தா, வாங்கன்னு கூட சொல்ல மாட்டிங்களா வா..நதி ..." என்று அவளது பெயரை பிரித்து பொறுமையாய் அழைத்தான் அருள். அவனது காந்தபார்வை உயிர்வரை ஊடுருவ தன்னையும் அறியாமல் எழுந்து நின்றாள்  வானதி...

" சாரி பாஸ் ..உங்களை எதிர்பார்க்காமல் இப்படி... வாங்க " என்றாள் ..

" எதிர்ப்பாக்காமல் எதையும் நிகழ்த்துவதுதான் அருளின் ஸ்டைல்" என்றான் அவன் இருபோருளில்.. அதை புரிந்து கொண்டாவளோ

" எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் பேசுவதுதான் வானதியின் ஸ்டைல் " என்றாள்  அமர்த்தலாய் ..

" குட் ஐ லைக் இட் ..அப்போ நானும் சொல்ல வந்ததை சொல்லிடுறேன் "என்றபடி அவள் புறம் இரண்டடி எடுத்து வைத்து விழி கலந்தான்  அருள்..

பாறையில் செய்தது என் மனம் என்று

தோழிக்கு  சொல்லி இருந்தேன்

பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய் 

நீ நெஞ்சில் நுழைந்துவிட்டாய்

என்றோ கேட்ட பாடல் வரி நினைவலையில் மின்னியது.. அவளது தவிப்பை உணர்ந்தவன், மந்தகாச புன்னகையுடன்

" வளர்மதிக்கு உடம்பு சரியில்லை .. சோ அவங்களுக்கு பதிலா நீங்கதான் மீட்டிங்ல ப்ரெசென்ட் பண்ணனும் " என்று விட்டு அவள் அறையிலிருந்து வெளியேற சென்றான் .. ஏதோ ஓர் உந்தலில்

" இதைதான் சொல்ல வந்திங்களா ?" என்று கேட்டே விட்டாள்  வானதி.. கேட்டு முடித்ததின் பின்தான் அதை உணர்ந்தவள் மானசீகமாய் தன்னை திட்டிக்கொண்டாள்..

" வேறென்ன " என்று ஒற்றை புருவம் உயர்த்தி வினவினான் அருள் .. அவள் அடுத்து என்ன சொல்ல என்ன யோசிக்குமுன்

" மீட்டிங் முடிஞ்சு மிச்சத்தை சொல்றேன் " என்றபடி அறையை விட்டு வெளியேறினேன்.. அதுவரை பிடித்துவைத்திருந்த சுவாசம் சீரானதை  உணர்ந்தாள்  வானதி .. சரியான கடுவன் பூனை என்று அவனை செல்லமாய் திட்டியவள் அவளது பாஸ் பெருமைப்படும் அளவிற்கு திறமையாய்  தன் பேச்சினால் அந்த மீட்டிங்கை நடத்தி முடித்தாள்.. அருளே அசந்துதான் போனான் ..

 இவள்தான் என்னவள் என்று என்றிலிருந்தொ  அவன் மனதில் தோன்றிய எண்ணம் மேலும் மேலும் வலுவானது.. அதே மகிழ்வில்,அனைவரின் முன்னும் அவள் கை பற்றி பாராடினான் அருள்மொழிவர்மன்..இஉடலெங்கும் புது ரத்தம் பாய்வதை போல உணர்ந்தாள்  வானதி. அவளை அதிகம் இம்சிக்காமல் கைகளை விடுவித்தவன் நிறைந்த புன்னகையுடன் கண்கள் பளபளக்க அவளை பார்த்தான்.. வானதியோ எங்கிருந்தோ மூண்ட எரிச்சலில் " எக்ஸ்கியுஸ் மீ "என்றபடி திரும்பி தனதரைக்கு நடந்தாள் .. அவனது பார்வை அவள் மீதே படிந்திருப்பதை அவளும் அறியாமல் இல்லை.. எனினும் திரும்பி பார்க்க தான் துணிவில்லை ..  ஒரு மனம் " இப்படி ஓவரா உரிமை எடுத்துக்காதே வானதி .. வீண்  ஆசையை வளர்க்காதே " என்று முரண்டு பிடித்தாலும் இன்னொரு மனமோ " அதற்காக என் உணர்வுகளை நான் எப்படி  மறைக்க முடியும் ?" என்று கேள்வி அனுப்பியது .. தனக்குள் எழும் போராட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் தனது மேஜையில் தலை கவிழ்ந்து கண்மூடி அமர்ந்திருந்தாள்  அவள்..

மீண்டும் அவள் அறைக்கு வந்தான் அருள். மெல்ல அவள் தலையை வருடி " வானதி " என்று மிருதுவாய் அழைத்தான்..

" பேசாதிங்க அருள் " என்றாள்  அவள் கண்ணீருடன்

" ஹே எதுக்கு டீ இப்போ இவ்வளவு டென்ஷன் "

" நீங்க எதுவும் பேச வேணாம்னு சொல்றேன்ல "

" சரி நான் பேசல ..நீயே பேசு !"

" நான் என்ன பேச ? நான் இங்க வந்து எவ்வளவு நாளாச்சு ? என்னைக்காச்சும் என்கிட்ட சிரிச்சு பேசி இருக்கிங்களா ? நீங்க சொல்லி தானே நான் சென்னை வந்தேன் ? ஆனா நீங்க வந்த முதல் நாளில் இருந்தே என்னை கண்டுக்கவே இல்லை "

" .."

" சரி நம்ம நாடகம் யாருக்கும் தெரிய வேணாம்னு நானும் பேசாம இருந்தேன் .. ஆனா ஆபீஸ் ??? ஆபீஸ்லயும் இதே தான் ! எப்போ பார்த்தாலும் சிடுசிடுன்னு .. யாரு யாருகிட்டயும் சிரிச்சு பேச தோணுது சாருக்கு .. ஆனா என்னை பார்த்தா மட்டும் சைலண்ட் ஆகிடுவிங்களே ...தினமும் உங்களை பார்க்குற சந்தோஷத்துல தான் நான் ஆபீஸ் வரேன் .. ஆனா நீங்க என்னை கண்டுக்கறதே இல்லை" என்று குறை பட்டுக் கொண்டாள் .. அவள் மேஜை மீது இருந்த பேப்பர்மேட்  ஐ கைகளில் வீசி பிடித்து விளையாடிகொண்டே சிரித்தவன்

" அட மக்கு செல்லமே .. எனக்கு மட்டும் உன்னை மிஸ் பண்ணுற மாதிரி இல்லையா ? அதனால் தானே உன்னை மத்த கம்பனி ஆபர் எல்லாத்தையும் விட்டுட்டு இங்கு வர வெச்சேன்.. இன்னும் கொஞ்சம் நாள் பொறுத்துக்கோ செல்லகுட்டி .. நாம நெனச்சது நடக்கட்டும் .. அதன்பிறகு ஊரறிய உன்னை பார்த்து ஜொள்ளு விடுறேன் .. அண்ட் இன்னொரு காரணம் சத்யா தான் .. நான் சது கிட்ட எதையும் மறைச்சது இல்லை .. அவளும் அப்படிதான் .. அப்படி இருக்கும்போது நம்ம விஷயம் இன்னும் அவளுக்கு நான் சொல்லலியே எனக்கு கஷ்டமா இருக்குடா ..."

" எனக்கு புரியுது அருள்.. நான் அதை தப்பு சொல்ல மாட்டேன்"

" இதுவரைக்கும் நல்லா நடிச்சிட்டு இப்போ சொதப்பாதடி என் வா ...நதி .... "

" எவ்வளோ நாள் ஆச்சு நீங்க இப்படி வா ...நதி ன்னு கூப்பிட்டு "

" பின்ன சாதாரண பேரா என் செல்லத்துக்கு .. வான் , நதி , தி (தீ ) பஞ்ச பூதத்ததில் மூணு பூதத்தை பேர்ல வெச்சுருக்குற மை டியர் பூதம் ஆச்சே  நீ " என்றான் அவன் நக்கலாய் ..

" வாய் ஜாஸ்த்தி ஆச்சு பாஸ் உங்களுக்கு , இப்போவே சத்யாவுக்கு கால் பண்ணி போட்டு கொடுக்குறேன் " என்றாள்  அவள் ..அதே நேரம் தான் அருளை அழைத்திருந்தாள்  சாஹித்யா (இதுதான் நடந்தது .. ஷாக்கு  போதுமா ஜீ ? நானும் எவ்வளவு நாளுதான் நல்ல பொண்ணாவே இருக்குறது ?)

அருளை எதிர்பார்த்து வாசலருகே நிற்க சென்றாள்  சாஹித்யா..

" ஓ  வந்தது பெண்ணா ? வானவில் தானா ?

பூமியிலே பூ பறிக்கும் தேவதை தானா " என்று பாடிக்கொண்டே அவளருகில் நின்றான் சந்தோஷ் ,.. சந்தோஷமும் அதிர்ச்சியும் சேர்த்து தூக்கி வாரி போட திரும்பி நின்றவளை பார்த்து சிநேகமாய் புன்னகைத்தான் சந்தோஷ் .. சட்டென சிவாவை தேடினாள்  அவள்  .. அவன் அங்கு இல்லை என்றதில் கொஞ்சம் நிம்மதியானவள்

" ஹாய் .. சந்தோஷ் " என்று தன்னை இயல்பாய் காட்டிக் கொண்டாள் ..

" ஹை .. உங்க கை இப்போ எப்படி இருக்கு சத்யா ?"

" காயம் போயி போச்சு சந்தோஷ் ...சைந்தவி அக்கா, சுபாஷ் சார் நல்லா இருக்காங்களா ?"

" எல்லாரும் நல்லா இருக்காங்க .. நான் எப்படி இருக்கேன்னு கேட்கமாட்டிங்களா  ? "

" ம்ம்ம்ம் மாட்டேன் ..அதான் நீங்க கண் முன்னாடியே நின்னுட்டு இருக்கிங்களே ..அப்பறம் ஏன் கேட்கணும் ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.