(Reading time: 31 - 61 minutes)

" டடே நீங்க நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா நு குசலம் விசாரிக்கிரதுக்காக நான் மறைந்திருந்து பார்க்கணுமா?" என்று சலித்து கொண்டான் அவன் .. ஏனோ அவனது இயல்பான பேச்சு அவளை மனதை அசைத்து கொண்டிருந்தது ..

" ஆமா நீங்க எங்க இங்க ?"

" அது வந்து"

" என் கூட தான் வந்தாங்க சந்தோஷ் ..உனக்கு சத்யாவை தெரியுமா " என்று வினவினான் சிவா..

" வந்துட்டான்யா வில்லன் " என்று அவள் முணுமுணுத்ததை சந்தோஷ் கேட்டிருந்தான்.. சிவாவை அவளுக்கு பிடிக்கவில்லை என்பது அந்த எரிச்சலிலேயே தெரிந்தது .. சிவா அறிமுகம் செய்த ஒரு கனத்தை சுவாசம் நின்றது போல இருந்தாலும் அவளது எரிச்சல் சந்தோஷுக்கு ஒரு கூடை பூவை தலை மீது கொட்டியது [போல இருந்தது.. அந்த குதூகலத்தில் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளாமலே

" எனக்கு சாஹித்யாவை ரொம்ப நல்லா தெரியும் " என்றான் ..

" அப்படியா சத்யா ?" என்றான் சிவா

" ம்ம்ம் ..ஆங் .. ஆமா .." என்று விரல் பிசைந்தாள்  சத்யா..

"எப்படி "என்று சிவா அடுத்த கேள்வியை கேட்கும்போதே

" என்னை காப்பாற்று  " என்று பார்வையாலேயே இறைஞ்சினாள் அவள் .. உடனே சந்தோஷும் ,,

" அதை அப்பறமா சொல்லுறேன் ..சத்யூ .. நீ வெளில போகணும்னு சொன்னியே .. நான் டிராப் பண்ணவா ?" என்றான் .. " சத்யூ " என்ற அழைப்பில் அவன் தங்களின் நெருக்கத்தை காட்டி சிவாவை தள்ளி வைக்க முனைந்தான் .. சிவாவோ முகம் சிவக்க அவர்களை முறைத்தான் .. இருதலைகொள்ளி எறும்பு போல முழித்து கொண்டிருந்தவளின் கண்களில் அருளின் கார் வருவது தெரிந்தது .. வந்த இன்னல்கள் அனைத்தும் மறைந்து விட்டது போல  பிரகாசமாய் சிரித்தாள் அவள்..

" வேணாம் சந்து .. என் சாரதி வந்தாச்சு " என்றாள் .. கருப்பு நிற கார் கண்ணாடி சந்தோஷிற்கு அருளின் முகத்தை காட்டாமல் மறைத்தது..அருளும் காரை லாவகமாய் பார்க் செய்துவிட்டு போனில் யாருக்கு குறுந்தகவல் அனுப்பி கொண்டிருந்தாள்..

" ஓ  சரி டா டெக் கேர் " என்றான் சந்தோஷ் ..

சந்தோஷே எதிர்பார்க்காத தருணத்தில் அவனிடம்

" உங்க போன் கொடுங்க  சந்தோஷ் " என்றாள்  சாஹித்யா .. அவனும் உற்சாகமாய் எடுத்து நீட்ட அதில் தன் போனுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி கொண்டாள்  அவள்.. சிவா அருகில் இருப்பதனால் எதுவும் பேச விரும்பாதவள்

" வரேன் சந்தோஷ் .. பாய் சிவா அண்ணா " என்றுவிட்டு சென்றாள் .. அவள் கண்ணிலிருந்து மறையும்வரை கை காட்டி நின்றான்  சந்தோஷ் ..

அவள்  " என் சாரதி " என்று சொன்னது டிரைவரை தான் என்று நினைத்து கொண்டான் அவன் .. ஆனால் அவனுக்கு தெரியும் அர்ஜுனனுக்கு சாரதியாய் இருந்த கிருஷ்ணனை  போலதான் , இவளுக்கு சாரதியாய் இருக்கிறான்  அருள் ! என்று ?" எத்தனை நாட்கள் இந்த கண்ணாமூச்சி .. இதற்கு ஓர் முற்றுபுள்ளி வைத்தாக வேண்டும்  என்று இறைவனே நினைத்தார் போலும் .. சிவாவின் மனதினுள்  வன்மம் என்ற உணர்வினை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது  விதி !

சந்தோஷ் சிவாவின் முகம் பார்த்தான் .. அவன் ஏதோ சொல்வதற்கு முன்பே சிவாவே

" சாஹித்யா நான் கல்யாணம் பண்ணிக்க போகிற பெண் சந்தோஷ் .. அவளை எனக்கு ரொம்பவே தெரியும் .. உன்னை எப்படி  அவளுக்கு தெரியும்னு எனக்கு புரியலையே " என்று கேள்வி எழுப்பினான் .. அவனது கேள்விக்கு பதில் அளிக்கும் திறன் இல்லாமல் இருந்தான் சந்தோஷ் ..சிவா சொன்ன முதல்  பாதியே அவனது மூளையை ஸ்தம்பிக்க செய்தது .. ஆனால் அதே நேரம் " சிவா அண்ணா " என்று அவள் இறுதியாய் சொன்னதும் ஞாபகத்தில் வர

" என்னடா ? கல்யாணம் பண்ணிக்க போறன்னு சொல்ற ? ஆனா அவ உன்னை அண்ணான்னு தானே கூப்பிட்டா ? " என்றான்..

" ஹ்ம்ம் அவளுக்கு இதில் சம்மதம் இல்லையாம் "

" அட கட்டையில் போறவனே, ஆளே இல்லாத கடையில்தான் நீ டீ ஆத்துரியா ?" என்று சிரித்தான் சந்தோஷ் மனதிற்குள் .. வெளியில் போலியான வருத்தத்துடன்

" அப்படியா மச்சான் ? ஏன் ? உனக்கென்ன குறை ?" என்றான் ..

பற்களை நறநறவென கடித்த  சிவா

" எனக்கு ஒன்னும் இல்லை ..அவளுக்கு தான் பேய் பிடிச்சிருக்கு "

" பேயா "

" ம்ம்ம் ஆமா இதோ வந்துட்டு போறானே .. அவன்தான் பெரிய பேய் .. எங்க கல்யாணத்துக்கு வில்லன் .. பேரு அருள்..அருள்மொழிவர்மன் " என்றான் ..

" அடடே உனக்கு வில்லன்னா அவன் எனக்கு நண்பனாச்சே " என்று மீண்டும் மனதிற்குள் இருந்து குரல் வந்தது .. ஏனோ சிவாவின் வன்மமான முகமும் பேச்சும் சந்தோஷை இந்த பேச்சில் இருந்து விலகும்படி உள்மனம் கட்டளையிட்டது ..

" விடு மச்சி பேயோ பிசாசோ .நமக்கென்ன வந்தது ? வேலையை கவனிப்போம் " என்று பேச்சை முடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..

காரில் மௌனமாய் வந்த தோழியை அதிசய பொருளை காண்பது போல பார்த்தான் அருள் ..முதலில் அதை கவனிக்காதவள் பிறகு

" என்னடா லுக்கு " என்றாள் ..

" இல்ல இது என் சது  தானான்னு பார்க்குறேன் .. கொஞ்ச நேரம் முன்னாடி வெந்நீர் கால்ல விழுந்த மாதிரி போனில் பேசின, நேரில் பார்க்கும்போது பிரிட்ஜ்ல வெச்ச ஐஸ் கிரீம் மாதிரி இருக்க .. இப்போ என்னடான்னா இவ்வளோ சைலெண்டா இருக்க ?" என்றான் ..

அது ஏனோ சந்தோஷை பற்றி முற்றிலுமாய் அவனிடம் அவளுக்கு கூற மனமில்லை .. என்ன சொல்வது என்று தெரியாமல் அவனை பார்த்தாள் .. பிறகு

" நான் என்ன பண்ணினாலும் அதில் ஒரு காரணம் இருக்கும்னு நீ நம்புற தானே அருள் ? " என்றாள் ..

" என்னடி இப்படி திடீர்னு கேக்குற ? ஒரு ரெண்டு நாள் டைம் கொடு நான் யோசிச்சு சொல்றேன் " என்றான் சிரிக்காமல் ..

" பல்லை உடைப்பேன் பாரு .. ப்ளீஸ் டா... விளையாடாம சொல்லு ..ஒருவேளை நான் உன்கிட்ட எதாச்சும் மறைச்சா நீ என்ன பண்ணுவ ? "

" மறைச்சு வச்சதை திருடி என்கிட்ட வெச்சுப்பேன் " என்றான்

" அருள் !!!!!"

" சரி சரி டென்ஷன் ஆகாதே .. நீ என்கிட்ட என்ன மறைக்க போற சத்யா ? உன் ஒளிவு மறைவுக்கு ஆயுட்காலம் ரொம்ப குறைவு .. அப்படியே நீ மறைச்சாலும் அதற்கான  புரிஞ்சுக்குற அளவு எனக்கு பொறுமை இருக்குடா .. என் சத்யாவுக்கு என்கிட்ட பொய் சொல்ல வராது.. அண்ட் அப்படி சொன்னாலும் நான் சந்தோசம் தான் படுவேன்..அட்லீஸ்ட் இப்போவாச்சும் நீ கொஞ்சம் வளர ஆரம்பிச்சு இருக்கியேன்னு " என்று கேலியும் அன்பும் மிகுதியான குரலில் சொன்னான் ..

" போதும் அருள் ... இதுக்கு மேல பேசி என்னை பீல் பண்ண வைக்காத .. நீ நல்லவந்தான் .. நீ என் உயிர்தான் .. அது எனக்கே தெரியும் .. இப்படி அடிக்கடி சஸ்வீட்  ஆ பிஹெவ் பண்ணி என்னை அருளின் கொள்கை பரப்பு செயலாளர் ஆக்காதே " என்றாள்  அவளை போல அன்பும் குறும்பும் மின்னும் குரலில்..

கடலில்  நதிகள்  பெயர்  கலந்தது

இந்த  நட்பில்  எங்கள்  உயிர்  கலந்தது

நட்பு  என்பது  எங்கள்  முகவரி

இது  வாழ்கை  பாடத்தில்  முதல்  வரி

இந்த  உலகில்  மிக  பெரும் ஏழை

நண்பன்  இல்லாதவன்  ஹே !

சூழ்நிலைக்கு ஏற்றது போல பாடல் ஒலிக்க, இணைந்து பாடினர் நண்பர்கள் இருவரும்..

அதே நாளில் அவசரமாய் வருணை போனில் அழைத்தாள்  கவிமதுரா.. பதட்டத்துடன் நடந்ததை அவள் சொல்லி முடிக்க , அதே பதட்டத்தில் கிரிதரனை அழைத்தான் வருண் ..

" நானே வரேன் வருண் "

" வேணாம் கிரி சொல்றதை கேளு "

" நோ ... !!" என்று அதிர்ந்து ஒலித்தது கிரிதரனின் குரல் ..

சங்கீதாவுடன் பேசிக்கொண்டே அன்பினொளி இல்லத்தினுள் நுழைந்தான் சந்தோஷ். அவனது  வரவிற்காகவே காத்திருந்தது போல " அப்பா " என்றபடி சிறுவர் சிறுமியர் அவனை தேடி ஓடிவர, அனைவரும் அனைத்து கொஞ்சி கதை பேசிக்கொண்டிருந்தான் சந்தோஷ்.. இதழில் புன்னகை அரும்ப அவனை ரசித்துக் கொண்டு நின்ற சாஹித்யா சிவாவின் குரல்கேட்டு தூக்கிவாரி போட திரும்பி நின்றாள்..

" ஹே சத்யா, என்னாச்சு பயந்துட்டியா ?"

" பின்ன இப்படி திடீர்னு கத்தினா, பயப்படாம என்ன பண்ணுவேன் அண்ணா ?" என்றவள் " அண்ணா " என்ற வார்த்தைக்கு மட்டும் அதிகமாய் அழுத்தம் தந்தாள். சிவா சந்தோஷின் நண்பன் மட்டுமல்ல..சாஹித்யாவின் உறவினனும் ஆவான்.   அண்மையில் சாஹித்யாவிற்கு சிவாவை மணம்  பேசவே அர்ஜுனனும் சுமித்திராவும் விரும்பினர். ஆனால் வழக்கம் போல சத்யா போர்க்கொடி ஏந்தி நிற்க, தற்பொழுது  திருமணப் பேச்சை நிறுத்தி வைத்திருந்தனர். எனினும் சிவாவின் பெற்றோர் நித்யா, கார்த்திகேயன்  இருவரின் மீது அன்பு பாராட்டும்  சத்யாவால் சிவாவை ஒரேடியாய் தள்ளி வைப்பதும் இயலாமல் போனது. அதனாலேயே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவனை " அண்ணா " என்று அழைத்து அவளது மனதை கோடிட்டு காட்டிவிடுவாள்.

சிவாவிற்கும் அவள் மீது காதல் என்ற உணர்வில்லைதான்.. எனினும் அவளை தனக்கு திருமணம் செய்து வைக்கவிருக்கிரார்கள் என்ற எண்ணத்தில் எழுந்த ஈர்ப்பு  அதிகமாகவே இருந்தது..எப்போதும்போல அன்றும் சிவா  வற்புறுத்த, வேறு வழியில்லாமல் அவனுடன்  அன்பினொளி இல்லத்திற்கு வந்தாள் .. அவன் பேச்சிற்காக கடமையை   செய்பவள்  போல வெறுமையாய் வந்தவள், சிறிது நேரத்திலேயே  அன்பினொளி இல்லத்துடன் ஒன்றிவிட்டாள்.. பழமையான ரசனைகளை ரசிப்பவளுக்கு முதியவர்களிடம் பேச பிடித்திருந்தது.. இன்றைய வாழ்வில், அன்றைய பாரம்பரியம், நாட்டு மருத்துவம், கிராமிய பாடல்கள்  இப்படி பலவற்றையும் வாய் வலிக்க பேசி  அங்கிருந்தவர்களின் மனம் கவர்ந்துவிட்டாள்  சாஹித்யா.. சிவாவிற்கும் அவளை தான்தான் அழைத்து வந்தோம் என்று சொல்லி கொள்வதில் ஒரு பெருமை.. அவனிடம் பேச்சு கொடுப்பதை தவிர்த்தபடி அந்த கண்ணாடி கதவின்வழி வாசலை பார்த்து கொண்டே நடந்தவள் சந்தோஷை பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டாள் .. சைந்தவியை அன்று மருத்துவமனையில் கடைசியாய் பார்த்தவள் அடிக்கடி அன்று நடந்ததை நினைத்து பார்ப்பாள் .. அப்படி நினைக்கும்போதெல்லாம் அனுமதி இல்லமாலே அவளது அகக்கண்ணில் ஆஜரானான்  சந்தோஷ்.. அன்று அவள் அழும்போது " என்னம்மா " என்று அவன் கனிவாய் கேட்டது  இன்னும் அவளது செவிகளுக்குள் ரீங்காரமிட்டது.. அதன்பிறகு இன்றுதான் அவனை பார்க்கிறாள்..அவனை பார்த்ததுமே சென்று  பேசிவிட வேண்டும் என்று ஒரு பக்கம் ஆவல் எழுந்தாலும், இன்னொருபுறம்   இது அவசியம் தானா ? என்ற கேள்வி அவளை தடுத்து நிறுத்தியது..

" எதையும் முளையிலேயே கில்லி எறிவது தான்  நல்லது சாஹித்யா.. அவன்மீது ஏற்கனவே உனக்கொரு ஈர்ப்பு இருக்கிறது!  இதில் நீயாய் அவனை நெருங்கி காதல் வலையில் விழ போகிறாயா ? " என்று எச்சரித்தது பெண்மனம்.. ஒரு பக்கம் சிவா , இன்னொரு புறம் சந்தோஷ், அவலக்கு மட்டும் மந்திர ஷக்தி இருந்திருந்தால் இந்நேரம் அவ்விடத்தில் இருந்து அப்போதே மறைந்திருப்பாள்.. அந்த நேரம்

" கொஞ்ச நேரம் இங்கயே இரு சத்யா.. சந்தோஷ் வந்துட்டான்.. நான் பேசிட்டு வரேன் " என்று விரைந்தான் சிவா.. அவன் சென்றவுடன்  ஏதோ விடுதலை பெற்றது போல சீராகமூச்செடுத்தாள்  சாஹித்யா.. செல்போனை அந்த அறையிலேயே விட்டுவிட்டு சென்றிருந்தான் சிவா.. சரியாய் அந்த நேரத்தில் அது சிணுங்கவும் சென்றவன் திரும்பி வந்துவிடுவானோ என்ற பயத்தில் தானே போனை எடுத்தாள் ..

" ஹெலோ "

" சஹி குட்டி "

" நித்து  அத்தை .. எங்க இருக்கீங்க ?"

"நான் இப்போதான் நம்ம பழனியாண்டவரை  தரிசுச்சிட்டு  வரேன் "

" ஓஹோ என்ன சொல்லுறார் உங்க காதல் மன்னன் முருகர் ?"

" அடிக் கழுதை ! கடவுளை அப்படி எல்லாம் பேச கூடாது "

"  ஹெலோ நானும் முருகாவும் பெஸ்ட் ப்ரண்ட்ஸ்  " என்றபடி சிரித்தாள் சாஹித்யா..

" ஆமா சிவா போன் உன்கிட்ட இருக்கு .. எங்க இருக்கீங்க ?"

" உங்க பையன் காலையிலே அப்பாவியா தூங்கிட்டு இருந்த என்னை அன்பினோளிக்கு  அழைச்சிட்டு வந்திட்டான் "

" அய்யயோ  டிஸ்டர்ப் பண்ணிட்டானா ?"

" நீங்க வேற நித்து  அத்தை.. இவ்வளவு நாளில் இன்னைக்குதான் உங்க பையன் ஒரு உருப்படியான இடத்திற்கு என்னை கூட்டிட்டு வந்திருக்கான் "

என்றாள்  சாஹித்யா எதார்த்தமாய்.. நித்யாவோ

" சிவா எப்பவும் உன் மனசுக்கு பிடிச்ச மாதிரிதான் நடந்துப்பான் சத்யாம்மா " என்றார் அவளது மனதை கரைக்க. அவரது குரலின் தோணி மாறியதிலேயே அவரது நோக்கத்தை உணர்ந்து கொண்டாள்  சாஹித்யா. ஏனோ அவளால் கார்த்திக் நித்யா இருவரிடமும் முகத்திற்கு நேராய் எதிர்த்து பேச முடியவில்லை. ஆனால் அந்த குணமே தனக்கு தடையாக இருக்கிறதோ என்று வருந்தினாள்  அவள்..

" சரி அத்தை .. நீங்க கால் பண்ணிங்கன்னு நான் சிவா கிட்ட சொல்றேன் .. இங்க சிக்னல் சரியா இல்லை .. அப்பறமா பேசறேன் " என்று போனை வைத்தாள் .. வைத்தவள் உடனே தனது போனில் அருளை அழைத்தாள் ..

" அருள் "

" சொல்லுடி "

" எங்கடா இருக்க?  மீட்டிங் இருக்குன்னு சொல்லிட்டுதானே போனேன் "

" ஓஹோ இன்னும் மீட்டிங் முடியலையா ? "

" இப்போதான் முடிஞ்சது என்னாச்சு டா ?"

" ப்ளீஸ் அருள் நீ நான் சொல்ற இடத்துக்கு இப்போவே வாயேன் ..எனக்கு மூச்சு முட்டுற பீல் ஆ இருக்கு டா " என்றாள்  கண்கலங்கிட...

" ஹே லூசு ... இரு நான் இப்பவே வரேன் " என்றபடி போனை வைத்தான் அருள்மொழிவர்மன். அவன் எதிரில்  அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்  வானதி. சில நிமிடங்களுக்கு  முன்பு தான் பட்டாசாய் வெடித்திருந்தாள்  வானதி. அப்படி என்னதான் நடந்துச்சு .. வாங்க நாமளும் ரிவர்ஸ்ல போயி பார்ப்போம் ..

அன்றைய முக்கியமான மீட்டிங்காக தயார் செய்து கொண்டிருந்த அருள்மொழிவர்மன் வளர்மதியை இண்டர்காமில் அழைத்து தனதறைக்கு  வர சொன்னான்.. மிகவும் அயர்வாக காணப்பட்டாள்  அவள்.. அதை முதலில் கவனிக்காத அருள் கணினியில் பார்வையை பதித்தபடியே

"  நம்ம புது ப்ரோக்ராம் ரெடி பண்ணிட்டிங்களா  வளர்மதி ? ப்ரெசென்ட் பண்ணுறதுக்கு முன்னாடி ஒரு டெமோ பார்க்கலாமா ?"என்றான்..

" நான் ஏற்கனவே உங்களுக்கு ஈமெயில் அனுப்பிட்டேன் சார் "

" ஓகே லெட்  மீ செக் நவ்  " என்றவன் முழுகவனத்தையும் அவள் அனுப்பிய ப்ரோக்ராம்மில் பதித்தான்.

" வெல்  டன்  வளர்மதி .. திஸ் இஸ்  யுவர் பெஸ்ட் ப்ரசன்டேஷன் எவர் " என்றபடி உற்சாகமாய் நிமிர்ந்தவன் அப்போதுதான் அவளது முகத்தை பார்த்தான் ..

" என்னாச்சு வளர்மதி ? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க ?"

" ஸ்லைட் பீவர் பாஸ் "

" ஸ்லைட் பீவரா பார்த்தா அப்படி தெரியலையே.. நீங்க உடனே டாக்டர் பாருங்க "

" இந்த மீட்டிங் முடிஞ்சதும் போறேன் பாஸ் "

" நோ நோ .. வானதிக்கு இந்த ப்ரோக்ராம் பத்தி தெரியும் தானே ?"

Page 02

" சார், இது அவங்க டிசைன் பண்ணதுதான். எனக்கு ரெண்டு நாளாக ஹெல்த் சரி இல்லை .. வானதிதான் இதெல்லாம் ரெடி பண்ணாங்க ..பட் என்னையே ப்ரெசென்ட் பண்ண சொல்லிட்டாங்க.. "

" ஏன் ?"

" முதல்முறை என்பதால தயங்குறாங்க நினைக்கிறேன் சார்.. "

" சரி நான் பேசிக்கிறேன் ..நீ முதலில் கெளம்புங்க " என்றான் அருள் அக்கறையாய்.. அவளை கால் டேக்சியில் அனுப்பி வைத்தவன் நேராய் வானதியின்  அறைக்கு சென்றான்.. அவனை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது முகபாவனையே காட்டி கொடுத்தது. மருண்ட விழிகளுடன் அவனைப் பார்த்தாள்  வானதி.. எப்போதும் நேர்கொண்ட பார்வையுடன் இருப்பவள் தன்னை பார்க்கும்போது மட்டும் தடுமாறுவதை பார்த்து மனதிற்கு சிலிர்த்துக் கொள்வான் அருள்.. இன்றும் அதேபோல் மனதிற்கும் மயங்கி நின்றாலும், முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் இருந்தான்..

" எம் டீ வந்தா, வாங்கன்னு கூட சொல்ல மாட்டிங்களா வா..நதி ..." என்று அவளது பெயரை பிரித்து பொறுமையாய் அழைத்தான் அருள். அவனது காந்தபார்வை உயிர்வரை ஊடுருவ தன்னையும் அறியாமல் எழுந்து நின்றாள்  வானதி...

" சாரி பாஸ் ..உங்களை எதிர்பார்க்காமல் இப்படி... வாங்க " என்றாள் ..

" எதிர்ப்பாக்காமல் எதையும் நிகழ்த்துவதுதான் அருளின் ஸ்டைல்" என்றான் அவன் இருபோருளில்.. அதை புரிந்து கொண்டாவளோ

" எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் பேசுவதுதான் வானதியின் ஸ்டைல் " என்றாள்  அமர்த்தலாய் ..

" குட் ஐ லைக் இட் ..அப்போ நானும் சொல்ல வந்ததை சொல்லிடுறேன் "என்றபடி அவள் புறம் இரண்டடி எடுத்து வைத்து விழி கலந்தான்  அருள்..

பாறையில் செய்தது என் மனம் என்று

தோழிக்கு  சொல்லி இருந்தேன்

பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய் 

நீ நெஞ்சில் நுழைந்துவிட்டாய்

என்றோ கேட்ட பாடல் வரி நினைவலையில் மின்னியது.. அவளது தவிப்பை உணர்ந்தவன், மந்தகாச புன்னகையுடன்

" வளர்மதிக்கு உடம்பு சரியில்லை .. சோ அவங்களுக்கு பதிலா நீங்கதான் மீட்டிங்ல ப்ரெசென்ட் பண்ணனும் " என்று விட்டு அவள் அறையிலிருந்து வெளியேற சென்றான் .. ஏதோ ஓர் உந்தலில்

" இதைதான் சொல்ல வந்திங்களா ?" என்று கேட்டே விட்டாள்  வானதி.. கேட்டு முடித்ததின் பின்தான் அதை உணர்ந்தவள் மானசீகமாய் தன்னை திட்டிக்கொண்டாள்..

" வேறென்ன " என்று ஒற்றை புருவம் உயர்த்தி வினவினான் அருள் .. அவள் அடுத்து என்ன சொல்ல என்ன யோசிக்குமுன்

" மீட்டிங் முடிஞ்சு மிச்சத்தை சொல்றேன் " என்றபடி அறையை விட்டு வெளியேறினேன்.. அதுவரை பிடித்துவைத்திருந்த சுவாசம் சீரானதை  உணர்ந்தாள்  வானதி .. சரியான கடுவன் பூனை என்று அவனை செல்லமாய் திட்டியவள் அவளது பாஸ் பெருமைப்படும் அளவிற்கு திறமையாய்  தன் பேச்சினால் அந்த மீட்டிங்கை நடத்தி முடித்தாள்.. அருளே அசந்துதான் போனான் ..

 இவள்தான் என்னவள் என்று என்றிலிருந்தொ  அவன் மனதில் தோன்றிய எண்ணம் மேலும் மேலும் வலுவானது.. அதே மகிழ்வில்,அனைவரின் முன்னும் அவள் கை பற்றி பாராடினான் அருள்மொழிவர்மன்..இஉடலெங்கும் புது ரத்தம் பாய்வதை போல உணர்ந்தாள்  வானதி. அவளை அதிகம் இம்சிக்காமல் கைகளை விடுவித்தவன் நிறைந்த புன்னகையுடன் கண்கள் பளபளக்க அவளை பார்த்தான்.. வானதியோ எங்கிருந்தோ மூண்ட எரிச்சலில் " எக்ஸ்கியுஸ் மீ "என்றபடி திரும்பி தனதரைக்கு நடந்தாள் .. அவனது பார்வை அவள் மீதே படிந்திருப்பதை அவளும் அறியாமல் இல்லை.. எனினும் திரும்பி பார்க்க தான் துணிவில்லை ..  ஒரு மனம் " இப்படி ஓவரா உரிமை எடுத்துக்காதே வானதி .. வீண்  ஆசையை வளர்க்காதே " என்று முரண்டு பிடித்தாலும் இன்னொரு மனமோ " அதற்காக என் உணர்வுகளை நான் எப்படி  மறைக்க முடியும் ?" என்று கேள்வி அனுப்பியது .. தனக்குள் எழும் போராட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் தனது மேஜையில் தலை கவிழ்ந்து கண்மூடி அமர்ந்திருந்தாள்  அவள்..

மீண்டும் அவள் அறைக்கு வந்தான் அருள். மெல்ல அவள் தலையை வருடி " வானதி " என்று மிருதுவாய் அழைத்தான்..

" பேசாதிங்க அருள் " என்றாள்  அவள் கண்ணீருடன்

" ஹே எதுக்கு டீ இப்போ இவ்வளவு டென்ஷன் "

" நீங்க எதுவும் பேச வேணாம்னு சொல்றேன்ல "

" சரி நான் பேசல ..நீயே பேசு !"

" நான் என்ன பேச ? நான் இங்க வந்து எவ்வளவு நாளாச்சு ? என்னைக்காச்சும் என்கிட்ட சிரிச்சு பேசி இருக்கிங்களா ? நீங்க சொல்லி தானே நான் சென்னை வந்தேன் ? ஆனா நீங்க வந்த முதல் நாளில் இருந்தே என்னை கண்டுக்கவே இல்லை "

" .."

" சரி நம்ம நாடகம் யாருக்கும் தெரிய வேணாம்னு நானும் பேசாம இருந்தேன் .. ஆனா ஆபீஸ் ??? ஆபீஸ்லயும் இதே தான் ! எப்போ பார்த்தாலும் சிடுசிடுன்னு .. யாரு யாருகிட்டயும் சிரிச்சு பேச தோணுது சாருக்கு .. ஆனா என்னை பார்த்தா மட்டும் சைலண்ட் ஆகிடுவிங்களே ...தினமும் உங்களை பார்க்குற சந்தோஷத்துல தான் நான் ஆபீஸ் வரேன் .. ஆனா நீங்க என்னை கண்டுக்கறதே இல்லை" என்று குறை பட்டுக் கொண்டாள் .. அவள் மேஜை மீது இருந்த பேப்பர்மேட்  ஐ கைகளில் வீசி பிடித்து விளையாடிகொண்டே சிரித்தவன்

" அட மக்கு செல்லமே .. எனக்கு மட்டும் உன்னை மிஸ் பண்ணுற மாதிரி இல்லையா ? அதனால் தானே உன்னை மத்த கம்பனி ஆபர் எல்லாத்தையும் விட்டுட்டு இங்கு வர வெச்சேன்.. இன்னும் கொஞ்சம் நாள் பொறுத்துக்கோ செல்லகுட்டி .. நாம நெனச்சது நடக்கட்டும் .. அதன்பிறகு ஊரறிய உன்னை பார்த்து ஜொள்ளு விடுறேன் .. அண்ட் இன்னொரு காரணம் சத்யா தான் .. நான் சது கிட்ட எதையும் மறைச்சது இல்லை .. அவளும் அப்படிதான் .. அப்படி இருக்கும்போது நம்ம விஷயம் இன்னும் அவளுக்கு நான் சொல்லலியே எனக்கு கஷ்டமா இருக்குடா ..."

" எனக்கு புரியுது அருள்.. நான் அதை தப்பு சொல்ல மாட்டேன்"

" இதுவரைக்கும் நல்லா நடிச்சிட்டு இப்போ சொதப்பாதடி என் வா ...நதி .... "

" எவ்வளோ நாள் ஆச்சு நீங்க இப்படி வா ...நதி ன்னு கூப்பிட்டு "

" பின்ன சாதாரண பேரா என் செல்லத்துக்கு .. வான் , நதி , தி (தீ ) பஞ்ச பூதத்ததில் மூணு பூதத்தை பேர்ல வெச்சுருக்குற மை டியர் பூதம் ஆச்சே  நீ " என்றான் அவன் நக்கலாய் ..

" வாய் ஜாஸ்த்தி ஆச்சு பாஸ் உங்களுக்கு , இப்போவே சத்யாவுக்கு கால் பண்ணி போட்டு கொடுக்குறேன் " என்றாள்  அவள் ..அதே நேரம் தான் அருளை அழைத்திருந்தாள்  சாஹித்யா (இதுதான் நடந்தது .. ஷாக்கு  போதுமா ஜீ ? நானும் எவ்வளவு நாளுதான் நல்ல பொண்ணாவே இருக்குறது ?)

அருளை எதிர்பார்த்து வாசலருகே நிற்க சென்றாள்  சாஹித்யா..

" ஓ  வந்தது பெண்ணா ? வானவில் தானா ?

பூமியிலே பூ பறிக்கும் தேவதை தானா " என்று பாடிக்கொண்டே அவளருகில் நின்றான் சந்தோஷ் ,.. சந்தோஷமும் அதிர்ச்சியும் சேர்த்து தூக்கி வாரி போட திரும்பி நின்றவளை பார்த்து சிநேகமாய் புன்னகைத்தான் சந்தோஷ் .. சட்டென சிவாவை தேடினாள்  அவள்  .. அவன் அங்கு இல்லை என்றதில் கொஞ்சம் நிம்மதியானவள்

" ஹாய் .. சந்தோஷ் " என்று தன்னை இயல்பாய் காட்டிக் கொண்டாள் ..

" ஹை .. உங்க கை இப்போ எப்படி இருக்கு சத்யா ?"

" காயம் போயி போச்சு சந்தோஷ் ...சைந்தவி அக்கா, சுபாஷ் சார் நல்லா இருக்காங்களா ?"

" எல்லாரும் நல்லா இருக்காங்க .. நான் எப்படி இருக்கேன்னு கேட்கமாட்டிங்களா  ? "

" ம்ம்ம்ம் மாட்டேன் ..அதான் நீங்க கண் முன்னாடியே நின்னுட்டு இருக்கிங்களே ..அப்பறம் ஏன் கேட்கணும் ?"

Page 03

" அடடே நீங்க நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா நு குசலம் விசாரிக்கிரதுக்காக நான் மறைந்திருந்து பார்க்கணுமா?" என்று சலித்து கொண்டான் அவன் .. ஏனோ அவனது இயல்பான பேச்சு அவளை மனதை அசைத்து கொண்டிருந்தது ..

" ஆமா நீங்க எங்க இங்க ?"

" அது வந்து"

" என் கூட தான் வந்தாங்க சந்தோஷ் ..உனக்கு சத்யாவை தெரியுமா " என்று வினவினான் சிவா..

" வந்துட்டான்யா வில்லன் " என்று அவள் முணுமுணுத்ததை சந்தோஷ் கேட்டிருந்தான்.. சிவாவை அவளுக்கு பிடிக்கவில்லை என்பது அந்த எரிச்சலிலேயே தெரிந்தது .. சிவா அறிமுகம் செய்த ஒரு கனத்தை சுவாசம் நின்றது போல இருந்தாலும் அவளது எரிச்சல் சந்தோஷுக்கு ஒரு கூடை பூவை தலை மீது கொட்டியது [போல இருந்தது.. அந்த குதூகலத்தில் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளாமலே

" எனக்கு சாஹித்யாவை ரொம்ப நல்லா தெரியும் " என்றான் ..

" அப்படியா சத்யா ?" என்றான் சிவா

" ம்ம்ம் ..ஆங் .. ஆமா .." என்று விரல் பிசைந்தாள்  சத்யா..

"எப்படி "என்று சிவா அடுத்த கேள்வியை கேட்கும்போதே

" என்னை காப்பாற்று  " என்று பார்வையாலேயே இறைஞ்சினாள் அவள் .. உடனே சந்தோஷும் ,,

" அதை அப்பறமா சொல்லுறேன் ..சத்யூ .. நீ வெளில போகணும்னு சொன்னியே .. நான் டிராப் பண்ணவா ?" என்றான் .. " சத்யூ " என்ற அழைப்பில் அவன் தங்களின் நெருக்கத்தை காட்டி சிவாவை தள்ளி வைக்க முனைந்தான் .. சிவாவோ முகம் சிவக்க அவர்களை முறைத்தான் .. இருதலைகொள்ளி எறும்பு போல முழித்து கொண்டிருந்தவளின் கண்களில் அருளின் கார் வருவது தெரிந்தது .. வந்த இன்னல்கள் அனைத்தும் மறைந்து விட்டது போல  பிரகாசமாய் சிரித்தாள் அவள்..

" வேணாம் சந்து .. என் சாரதி வந்தாச்சு " என்றாள் .. கருப்பு நிற கார் கண்ணாடி சந்தோஷிற்கு அருளின் முகத்தை காட்டாமல் மறைத்தது..அருளும் காரை லாவகமாய் பார்க் செய்துவிட்டு போனில் யாருக்கு குறுந்தகவல் அனுப்பி கொண்டிருந்தாள்..

" ஓ  சரி டா டெக் கேர் " என்றான் சந்தோஷ் ..

சந்தோஷே எதிர்பார்க்காத தருணத்தில் அவனிடம்

" உங்க போன் கொடுங்க  சந்தோஷ் " என்றாள்  சாஹித்யா .. அவனும் உற்சாகமாய் எடுத்து நீட்ட அதில் தன் போனுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி கொண்டாள்  அவள்.. சிவா அருகில் இருப்பதனால் எதுவும் பேச விரும்பாதவள்

" வரேன் சந்தோஷ் .. பாய் சிவா அண்ணா " என்றுவிட்டு சென்றாள் .. அவள் கண்ணிலிருந்து மறையும்வரை கை காட்டி நின்றான்  சந்தோஷ் ..

அவள்  " என் சாரதி " என்று சொன்னது டிரைவரை தான் என்று நினைத்து கொண்டான் அவன் .. ஆனால் அவனுக்கு தெரியும் அர்ஜுனனுக்கு சாரதியாய் இருந்த கிருஷ்ணனை  போலதான் , இவளுக்கு சாரதியாய் இருக்கிறான்  அருள் ! என்று ?" எத்தனை நாட்கள் இந்த கண்ணாமூச்சி .. இதற்கு ஓர் முற்றுபுள்ளி வைத்தாக வேண்டும்  என்று இறைவனே நினைத்தார் போலும் .. சிவாவின் மனதினுள்  வன்மம் என்ற உணர்வினை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது  விதி !

சந்தோஷ் சிவாவின் முகம் பார்த்தான் .. அவன் ஏதோ சொல்வதற்கு முன்பே சிவாவே

" சாஹித்யா நான் கல்யாணம் பண்ணிக்க போகிற பெண் சந்தோஷ் .. அவளை எனக்கு ரொம்பவே தெரியும் .. உன்னை எப்படி  அவளுக்கு தெரியும்னு எனக்கு புரியலையே " என்று கேள்வி எழுப்பினான் .. அவனது கேள்விக்கு பதில் அளிக்கும் திறன் இல்லாமல் இருந்தான் சந்தோஷ் ..சிவா சொன்ன முதல்  பாதியே அவனது மூளையை ஸ்தம்பிக்க செய்தது .. ஆனால் அதே நேரம் " சிவா அண்ணா " என்று அவள் இறுதியாய் சொன்னதும் ஞாபகத்தில் வர

" என்னடா ? கல்யாணம் பண்ணிக்க போறன்னு சொல்ற ? ஆனா அவ உன்னை அண்ணான்னு தானே கூப்பிட்டா ? " என்றான்..

" ஹ்ம்ம் அவளுக்கு இதில் சம்மதம் இல்லையாம் "

" அட கட்டையில் போறவனே, ஆளே இல்லாத கடையில்தான் நீ டீ ஆத்துரியா ?" என்று சிரித்தான் சந்தோஷ் மனதிற்குள் .. வெளியில் போலியான வருத்தத்துடன்

" அப்படியா மச்சான் ? ஏன் ? உனக்கென்ன குறை ?" என்றான் ..

பற்களை நறநறவென கடித்த  சிவா

" எனக்கு ஒன்னும் இல்லை ..அவளுக்கு தான் பேய் பிடிச்சிருக்கு "

" பேயா "

" ம்ம்ம் ஆமா இதோ வந்துட்டு போறானே .. அவன்தான் பெரிய பேய் .. எங்க கல்யாணத்துக்கு வில்லன் .. பேரு அருள்..அருள்மொழிவர்மன் " என்றான் ..

" அடடே உனக்கு வில்லன்னா அவன் எனக்கு நண்பனாச்சே " என்று மீண்டும் மனதிற்குள் இருந்து குரல் வந்தது .. ஏனோ சிவாவின் வன்மமான முகமும் பேச்சும் சந்தோஷை இந்த பேச்சில் இருந்து விலகும்படி உள்மனம் கட்டளையிட்டது ..

" விடு மச்சி பேயோ பிசாசோ .நமக்கென்ன வந்தது ? வேலையை கவனிப்போம் " என்று பேச்சை முடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..

காரில் மௌனமாய் வந்த தோழியை அதிசய பொருளை காண்பது போல பார்த்தான் அருள் ..முதலில் அதை கவனிக்காதவள் பிறகு

" என்னடா லுக்கு " என்றாள் ..

" இல்ல இது என் சது  தானான்னு பார்க்குறேன் .. கொஞ்ச நேரம் முன்னாடி வெந்நீர் கால்ல விழுந்த மாதிரி போனில் பேசின, நேரில் பார்க்கும்போது பிரிட்ஜ்ல வெச்ச ஐஸ் கிரீம் மாதிரி இருக்க .. இப்போ என்னடான்னா இவ்வளோ சைலெண்டா இருக்க ?" என்றான் ..

அது ஏனோ சந்தோஷை பற்றி முற்றிலுமாய் அவனிடம் அவளுக்கு கூற மனமில்லை .. என்ன சொல்வது என்று தெரியாமல் அவனை பார்த்தாள் .. பிறகு

" நான் என்ன பண்ணினாலும் அதில் ஒரு காரணம் இருக்கும்னு நீ நம்புற தானே அருள் ? " என்றாள் ..

" என்னடி இப்படி திடீர்னு கேக்குற ? ஒரு ரெண்டு நாள் டைம் கொடு நான் யோசிச்சு சொல்றேன் " என்றான் சிரிக்காமல் ..

" பல்லை உடைப்பேன் பாரு .. ப்ளீஸ் டா... விளையாடாம சொல்லு ..ஒருவேளை நான் உன்கிட்ட எதாச்சும் மறைச்சா நீ என்ன பண்ணுவ ? "

" மறைச்சு வச்சதை திருடி என்கிட்ட வெச்சுப்பேன் " என்றான்

" அருள் !!!!!"

" சரி சரி டென்ஷன் ஆகாதே .. நீ என்கிட்ட என்ன மறைக்க போற சத்யா ? உன் ஒளிவு மறைவுக்கு ஆயுட்காலம் ரொம்ப குறைவு .. அப்படியே நீ மறைச்சாலும் அதற்கான  புரிஞ்சுக்குற அளவு எனக்கு பொறுமை இருக்குடா .. என் சத்யாவுக்கு என்கிட்ட பொய் சொல்ல வராது.. அண்ட் அப்படி சொன்னாலும் நான் சந்தோசம் தான் படுவேன்..அட்லீஸ்ட் இப்போவாச்சும் நீ கொஞ்சம் வளர ஆரம்பிச்சு இருக்கியேன்னு " என்று கேலியும் அன்பும் மிகுதியான குரலில் சொன்னான் ..

" போதும் அருள் ... இதுக்கு மேல பேசி என்னை பீல் பண்ண வைக்காத .. நீ நல்லவந்தான் .. நீ என் உயிர்தான் .. அது எனக்கே தெரியும் .. இப்படி அடிக்கடி சஸ்வீட்  ஆ பிஹெவ் பண்ணி என்னை அருளின் கொள்கை பரப்பு செயலாளர் ஆக்காதே " என்றாள்  அவளை போல அன்பும் குறும்பும் மின்னும் குரலில்..

கடலில்  நதிகள்  பெயர்  கலந்தது

இந்த  நட்பில்  எங்கள்  உயிர்  கலந்தது

நட்பு  என்பது  எங்கள்  முகவரி

இது  வாழ்கை  பாடத்தில்  முதல்  வரி

இந்த  உலகில்  மிக  பெரும் ஏழை

நண்பன்  இல்லாதவன்  ஹே !

சூழ்நிலைக்கு ஏற்றது போல பாடல் ஒலிக்க, இணைந்து பாடினர் நண்பர்கள் இருவரும்..

அதே நாளில் அவசரமாய் வருணை போனில் அழைத்தாள்  கவிமதுரா.. பதட்டத்துடன் நடந்ததை அவள் சொல்லி முடிக்க , அதே பதட்டத்தில் கிரிதரனை அழைத்தான் வருண் ..

" நானே வரேன் வருண் "

" வேணாம் கிரி சொல்றதை கேளு "

" நோ ... !!" என்று அதிர்ந்து ஒலித்தது கிரிதரனின் குரல் ..

என்ன ஆச்சுன்னு அடுத்த எபிசோட்ல சொல்றேன் ..

தவம் தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:838}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.