"யெஸ் மேம்... டெக்ஸாஸ்ல யூனிவர்சிட்டி செலக்ட் செய்திருக்கேன். போலீஸ் விசா வெரிஃபிகேஷன் முடிஞ்சதுன்னு ஒரு நோ ட்யூ லெட்டர் கொடுத்தால், எல்லா ஃபார்மாலிட்டியும் முடிஞ்சிடுச்சு..."
"குட்! இது என்னோட கார்ட்! படிச்சு முடிச்சப்புறம் இல்லை இன்டர்ன்ஷிப் இப்படி ஏதாவது ஹெல்ப் தேவை பட்டால், தயங்காமல் இந்த நம்பருக்கு கால் செய், நான் ஹெல்ப் செய்றேன்"
"தேங்க்ஸ் மேம்!!!" என்றாள் நந்தினி முகம் மலர.
"யூ ஆர் வெல்கம். சரி எல்லோரும் கிளம்புவோமா? நீ போன் செய்ததில் எஸ்.கே மூஞ்சி போன போக்கை பார்த்து அப்படியே கிளம்பி வந்தேன்..." என்றாள் வள்ளி சாந்தியிடம்.
"நீ வேற வள்ளி, அனாம்ஸ் மட்டுமில்லை நானே கூட அந்த சிடுமூஞ்சி வால்ட் பேசினதில் கொஞ்சம் அரண்டு போயிட்டேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ே வாங்க..."
ஸ்வேதாவின் அரை குறை வரவேற்ப்பை ஏற்று இருவரும் உள்ளே செல்ல அங்கே வீடு காலி செய்யும் அறிகுறியாக பொருட்கள் அட்டை பெட்டியில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.
ஒருவரை விட்டு மற்றவர் பிரிய வேண்டுமே என்று சோகமாக இருக்கிறார்களா? என்ற கேள்வியுடனே அறையை சுற்றி பார்த்தாள் சாந்தி.