(Reading time: 23 - 46 minutes)

" பாருடா, பழகியதுமே சான்றிதலா , என்ன ஒரு ஒற்றுமை மிதுவுக்கும் உங்களுக்கும் .. உங்களை எல்லாம் மியூசியம்  ல வைக்கணும் ஷக்தி " என்றான் எழில் ..

" அதை பிறகு பார்த்துக்கலாம் ..கதிர் உங்களை தேடுறான் " என்றபடி போனை கதிரிடம் கொடுத்தான் ஷக்தி ..

கல்யாண ஏற்பாட்டில் இருந்த சிறு சிறு சந்தேகங்களை கேட்டு கொண்டிருந்தான் கதிர் ..

" ஓகே கதிர் .. நான் இன்னும் பத்து நிமிஷத்தில் அங்க வரேன் " என்று போனை வைத்தான் அன்பெழிலன் ..

" சும்மா சொல்ல கூடாது காவி, உன் ஆளு செம்ம ஷார்ப் தான் .. எள்ளுன்னா எண்ணெய் யா இருக்கான் ?"

" பின்ன  எல்லாரும் உன்னை மாதிரி கல்யாணத்துக்கு அழைப்பு விடுத்த  சீமந்தத்துக்கு வந்து சேருற கேஸ் ஆ இருப்பாங்களா  ஹிட்லர் ?"

" சரி போதும் வாரினது .. நான் அப்பறமா வரேன் ..  அம்மா முகிலாவை பார்த்துகோங்க " என்று சொல்லி பார்வையாலேயே அவளிடமிருந்து  விடுபட்டான் .. கன்னத்தில் கை வைத்து கொண்டு அவர்களை ரசித்தனர் ராகவனும்  காவியாவும் ..

" இருந்தாலும் இதெல்லாம் அநியாயம் அப்பா , உங்க பையன் இன்னும் கொஞ்ச நேரத்தில் மறுபடி வர தானே போறான் ? டேய்லி காரிலும் டூயட் பாடிட்டு தானே இருக்காங்க ? அப்பறம் பெரிய காவியத்தலைவன் மாதிரி  இவர் லுக்  விடுரதென்ன,மேடம் அதற்கு தலையசைப்பதென்ன ?" என்று கேலி செய்தாள் ..

" ஐயோ பாருங்க அத்தை " என்றவாறே ராகவின் தோளில்  சாய்ந்து கொண்டாள்  முகில்மதி ..

" சும்மா இரு காவியா .. இவங்க காவியம் பிடிக்கலைன்னா என்ன , உனக்குத்தான் ஒரு காவியம் இருக்கே அதை எடுத்து விடு , கொஞ்சம் கதை கேட்போம் " என்று சொகுசாய் நாற்காலியில் அமர்ந்து கதை கேட்க தயாரானார் ராகவி .. ராகவன், முகில்மதி இருவருமே அவள் முகத்தை பார்க்க, நாணம் வெட்கம் காதல் என்ற உணர்வுகளை பிரதிபலிக்காமல் புன்னகையுடன் தன்னை பற்றி , தனது காதலை பற்றி சொல்லி தொடங்கினாள்  காவியா ..

" நீங்க நினைக்கிற மாதிரி, இது சந்தோஷமாய் தொடங்கிய ப்ளேஸ்  பேக் இல்லை ஆன்டி .." என்றவளின் கைகளை ஆதரவாய் பிடித்து கொண்டாள்  முகில்மதி .. அவளை பார்த்து சிரித்த காவியா

" பயப்படாதே அதுக்காக அழுது வடியவும் மாட்டேன் !" என்று சொல்லி நடந்ததை சொல்ல தொடங்கினாள் ..

" நான் அம்மா , அப்பாவுக்கு ஒரே  பொண்ணு.. நான் பிறந்தபோதே அம்மா இறந்துட்டாங்க .. ஆனா அந்த கவலையே இல்லாமல் வளர்த்தாரு என் அப்பா .. எந்த பெண்ணுக்குமே அப்பான்னா  ஸ்பெஷல் தான் .. அதுவும் எனக்கு  அம்மாவுமாகவே  மாறி போன அப்பா எனக்கு ரொம்ப ரொம்ப க்ளோஸ் .. "

" நானும் அப்பாவும் பெஸ்ட் ப்ரண்ட்ஸ்  மாதிரி .. கார் ரேசிங், டைவிங்ன்னு ரெண்டு பேரும்  சேர்ந்து அடிக்காத லூட்டியும் இல்லை .. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே டெல்லி தான் .. பட் அம்மா சென்னை வாசி .. சோ அம்மா நியாபகம்மா  மூணு மாசத்துக்கு ஒரு தடவை சென்னை ல தான் எனக்கும் அப்பாவுக்கும் ஹாலிடே ..!"

" ..."

" அப்படி ஒரு நாள் நாங்க ஷாப்பிங்ல இருந்தபோதுதான் , B + ரத்தம் அவசரமா தேவை படுதுன்னு அப்பாவுக்கு கால் பண்ணின்னாங்க .. நானும் அப்பாவும் அந்த ஹாஸ்பிடல் போயி ரத்தம் கொடுத்தது யாருக்கு தெரியுமா மதி ?"

" கதிர் அண்ணாவுக்கா ? சில மாசம் முன்னாடி ஏதோ சின்ன எக்சிடன்னு  சொன்னாங்களே ..!" என்று விழி அகல கேட்டாள்  அவள் ..

" ம்ம்ம்ம் ஆமா ... கதிர் மயக்கத்தில் இருந்ததினால எங்களை அவர் பார்க்கல  ..நான்தான் அவரை பார்த்தேன் .. உடனே எனக்கு காதல் எல்லாம் ஒன்னும் வந்திடல " என்று சொல்லி லேசாய் புன்னகைத்தாள் ..

" நான் ரொம்ப கலகலன்னு சிரிச்சுகிட்டே இருக்கேன்னு கடவுளுக்கே பொறாமை போல ஆன்டி .. அதான் சரியாய் ஒரு வாரத்தில் அப்பா , தூக்கத்துலே  எங்க அம்மா கிட்ட போயி சேர்ந்துட்டார் " என்றவள் எவ்வளவு முயற்சித்தும் துயரம் கண்களை பனிக்க வைத்தது ..

" தனி ஆளாய் இருந்து , என் அப்பாவுக்கு செய்ய வேண்டிய ஈமக்கடன் எல்லாமே செய்து முடிச்சேன் !.. அடுத்து என்ன ??? அப்படின்னு ஒரு கேள்வி என்னை துரத்திகிட்டே இருந்துச்சு . அப்பா இல்லாமல் ரொம்பவே சிரமப்பட்டேன் ..டெல்லி வீட்டில் அவர் இல்லாமல் இருக்கவே முடியல .. அதான் பெட்டி படுக்கை கட்டிட்டு சென்னை வந்தேன் .. வந்ததும் உங்க அண்ணாவை தான் தூரத்தில் இருந்து பார்த்தேன் .. அதுக்கு பிறகு தன்னிச்சையா அடிக்கடி கதிரை பார்க்க முடிஞ்சது ... கதிரை பார்க்க பார்க்க அப்பா நியாபகம் ரொம்ப வரும் ... நடக்குறது, கை நீட்டி பேசறது, தலை முடி கோதுறது  இப்படி எல்லாமே அச்சு அசல் அப்பாதான் .. "

"இதுக்காகவே உங்க அண்ணாவை, காளை  படத்தில் வர்ற வேதிகா மாதிரி பின்தொடர்ந்திருக்கேன் .. அதைதான்  அவர் ப்ரண்ட்ஸ்  எல்லாம் கேலி பண்ணிருக்காங்க .. மனசு ரொம்ப தவிக்கும்போது கதிரைபார்த்த எனக்கு நிம்மதி ஆகிடும் ..அதுக்காகத்தான் கதிர் வேலை செய்யுற இடத்தில் நானும் ஜாய்ன்  பண்ணேன் .."

இதுவரை சுலபமாய் பேசியவள் இப்போது லேசாய் வெட்கபுன்முருவலுடன்

"ஆனா, கதிரோடு பழகப் பழக என் மனசு அவர் பக்கம் சாய ஆரம்பிச்சிருச்சு .. இந்த ஒரு காரணத்திற்காகத் தான் எனக்கு கதிரை பிடிக்கும்னு சொல்ல முடியாத அளவு நான் அவரை நேசிக்க ஆரம்பிச்சுட்டேன் .. " என்றவளின் முகத்தில் காதலின் ஜ்வாலை ...

" நாங்க ரொம்ப லக்கி, இப்படி ஒரு அழகான, ஸ்வீட்டான அண்ணி கிடைச்சதுக்கு " என்று சொல்லி காவியாவை கட்டி கொண்டு கன்னத்தில்  முத்தம் பதித்தாள்  முகில்மதி ..

(இந்த முத்தத்தோடு நாம பிளேஷ்  பேக்கை முடிச்சுக்குவோம் .. இவ்வளவு நாள் காவியாவுக்கு எப்படி காதல் வந்தது, முகில்மதியின்  சோகத்தின் காரணம் என்னனு கடந்த எபிசொட் ல யும் இந்த எபிசொல்டல யும் சொல்லியாச்சா .. வாங்க நம்ம ஆதி - வைஷு , சங்கமித்ரா - ஷக்தி இரு மணமக்களும் உங்களை இந்த திருமண  வைபவத்திற்கு வருக வருகவென வரவேற்கிறார்கள் !

தனது கைகளில் தங்க வளையல்களை அணிவிக்க வந்த அக்காவை தடுத்தாள்  சங்கமித்ரா ..

" என்னம்மா நடுக்குது இங்க ? என்னை உட்காரவெச்சு எதுக்கு அலங்காரம் பண்ணுறிங்க  ?"

" நல்லா இருக்குடி , கல்யாணத்துக்கு கல்யாண பெண்ணை அலங்காரம் பண்ணாமல் யாரை பண்ணுவாங்களாம் ?"

" யாருக்கு கல்யாணம் ?" என்றாள்  மித்ரா வெடுக்கென

"ஹான் கல்யாண வயசுல உன்னையும் உன் அக்காவையும் வெச்சுகிட்டு நாந்தான் உங்கப்பாவை கட்டிக்க போறேன் " என்றார் சித்ரா விளையாட்டாய் ..அவரிடம் பேசி பிரோஜனம் இல்லையென உணர்ந்தவள் வைஷுவிடம் திரும்பினாள் ..

" அக்கா நீ சொல்லு கா ? கல்யாணம் உனக்கு தானே ? அப்பறம் என்னை ஏன் அலங்காரம் பண்ணுறிங்க  ?"

அவளுக்கு நகைகளை அணிவித்து கொண்டே

" கல்யாணம் எனக்கு மட்டுமில்லை உனக்கும் தான் " என்றாள் ..

" வாட் ??? மாப்பிளை யாரு ?"

" ஷாருக் கானா இருந்தா ஓகே யா டி ?" என்று கேட்டபடி உள்ளே வந்தான் அன்பெழிலன் ..

" இன்னுமா இவ கெளம்பல ? மாப்பிளை அங்க மேடையில் பொண்ணை  கண்ணுல காட்ட மாட்டிங்களான்னு  டென்ஷன் ஆகி இருக்கார்  " என்றபடி வைஷ்ணவிக்கு உதவி செய்தான் எழில் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.