(Reading time: 23 - 46 minutes)

" டேய் இங்க என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியுமா ?"

" அதெப்படி தெரியாமல் போகும் , உனக்கு கல்யாணம் .. என் சிறு வயது தோழிக்கு நான் அலங்காரம் பண்ண ஹெல்ப் பண்றேன் " என்றபடி அவள் வலது கைகளில் வளையல் மாட்டினான் ..

" யாரை கேட்டு இதெல்லாம் பண்ணுறிங்க  ? நீயும் இவங்க கூட சேர்ந்து கிட்டியா ? எனக்கு இதில் இஸ்டம் இல்லைன்னு உனக்கு தெரியாதா ?" என்று சீறினாள் மித்ரா.. அவளுக்கு தோடு அணிவிப்பது போல அருகில் வந்தவன்

" நீ மட்டும் என் கிட்ட சொல்லிட்டுதான் வீட்டை விட்டு போனியா ? அவ்வளவு வேண்டாதவன் ஆகிட்டேனா நான் ?" என்று கேட்டு வைத்தான் .. இந்த திருமண ஏற்பாடு விட அவனது கோபம் தான் அவளை அதிகம் பாதித்தது .. முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்தாள்  அவள் ..

" இப்ப ஏன் உன் மூஞ்சி இப்படி இருக்கு ? அதெல்லாம் உன்னை எப்பவோ மன்னிச்சிட்டேன் .. சும்மா அஞ்சு காசு முகத்தை காட்டி  ஆளை ஏமாத்தாதே " என்றான் அவன் ..

" ப்ளீஸ் டா.. என்னால எப்படி முடியும் ?" என்றாள்  மித்ரா தாழ்ந்த குரலில் ..

" மித்ரா இட்ஸ் டூ லேட் .. இது இப்போ நம்ம சந்தோசம் மட்டும் இல்லை .. இன்னொரு குடும்பத்துடைய கௌரவமும் இருக்கு .. புரட்சி பண்றேன் அது இதுன்னு சீன்  போடாமல் கல்யாணம் பண்ணிக்கோ .. உனக்குத்தான் உன் காதல் ஜெயிக்கல, அட்லீஸ்ட் அந்த மாப்பிள்ளையாவது  பெரியவங்களா முடிவெடுத்த உன்னை கல்யாணம் பண்ணிக்கட்டுமே .. உலகத்துல எல்லாரும் நினைச்சவங்களை மணக்குறாங்களா ? உன் சந்தோஷத்துக்காக அவங்களை கலங்க விடாதே மித்ரா .. " என்றான் அவன் ..

சற்று முன்பு காரில், மதியழகன் சொன்னதை நினைவு கூர்ந்தாள் சங்கமித்ரா.. "உன் சந்தோசம் இனி உனக்கில்லைன்னு ஆனபோதிலும் மத்தவங்க சந்தோஷத்துக்காக  நீ ஏதாவது செய்ய முடிஞ்சா அதை மனசார ஏற்றுக்கோ! " என்றாரே ...

" ஐயோ அண்ணா, அப்போ நான் இனி நீங்க சொன்னதை தான் செய்யணுமா ? என் சந்தோஷமும் மொத்தமும் அழிந்து விட்டதா " மௌனமாய் மனதிற்குள் போராடினாள் சங்கமித்ரா.

" என்ன அன்பு, உன் தோழி அமைதியா இருக்கா ? ஏதாச்சும் ஆர்ப்பாட்டம் பண்ணி கல்யாணத்தை நிறுத்தலாம்னு பார்க்கிறாளா ? நான் போயிட்டா அவங்க அப்பா தனியா ரொம்ப கஷ்டப்படுவார்ன்னு  அவ கிட்ட சொல்லிடுப்பா .. ஏன்னா என் பொண்ணு இன்னொரு குடும்பத்தின் தலைகுனிவுக்கு காரணமா இருப்பான்னு அதை பார்த்துகிட்டு நான் உயிரோடு எப்படி இருப்பேன் " என்று அவர் சொல்லும்போதே அவரது வாயை கைகளால் மூடினாள் மித்ரா.

" ஏனம்மா இப்படி எல்லாம் பேசுறிங்க ? மிரட்டினால்தான் உங்க பொண்ணு சொன்ன பேச்சை கேட்பான்னு முடிவு பண்ணிட்டிங்களா ? எனக்கு எப்பவும் நம்ம குடும்பம் சந்தோசம் தான் முக்கியம் .. இப்போ என்ன நீங்க பார்த்து வெச்சுருவனுக்கு மறுப்பு சொல்லாமல் நான் கழுத்தை நீட்டனும் அவ்வளவு தானே ?" என்றாள் மித்ரா . அதற்குள் அறைக்குள் நுழைந்தனர் நம்ம பஞ்சபாண்டவிகள் .. கீர்தானா, மது , மீனா, மலர் ப்ரியா அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டனர் .. இவளோ உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன்

" ஹே வாங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?" என்று வரவேற்றாள் ..

" எங்களுக்கென்ன குறை பேபி ? அப்படியே தேவதைங்க மாதிரி இருக்கோம் " என்றாள் கீர்த்தனா ..

" ஆனா நீதான் இளைச்சுட்ட, பசலை நோயா ? " என்று கேட்டு அவளது கன்னத்தை கிள்ளினாள் ப்ரியா ..

" அடடே ப்ரீ, நீ எப்பவும் சைலண்டா காதல் கனவு காணுற ஆளாச்சே ? இப்போ நீயும் இதுங்களை மாதிரி ஆரம்பிச்சுட்டியா ?" என்றாள்...

" எப்படி இருக்க மலர் ?" - மித்ரா ..

" நான் சூப்பரா இருக்கேன்..உனக்காக லட்டு கொண்டு வந்தேன் இந்த நித்யா லூசு தூக்கிட்டு போயிட்டா .. இட்ஸ் ஓகே சுஜி பாயாசம் கொடுத்து அனுப்பினா " என்றவள் சொல்லவும் அன்றைய நினைவில் சிரித்தாள் மித்ரா ..

" அய்யயோ பாயாசமா வேணாம் செல்லம் " என்றவளை பார்த்து சிரித்த மீனா

" மலர் செஞ்ச லட்டு விட பாயாசம் பெட்டரா தான் இருக்கும் ... நிதியா எதுக்கு இவ செஞ்ச லட்டை தூக்கிட்டு போனா நினைச்சே நீ ? சாப்பிடுரதுக்கா ? இல்லவே இல்லை .. கார்த்தி ரொம்ப ஜொள்ளு விடுறாராம்.. சோ லட்டால அவரது மண்டையை உடைக்கலாம்னு பிளான்  " என்று சொல்லவும் அனைவரும் சிரித்தனர் .,..மது மட்டும் அமைதியாய் இருந்தாள்... மித்ராவின் கண்களில் நிறைந்த சோகத்தை பார்க்கவே அவளுக்கு உவப்பாக இருந்தது ..

" மாப்பிளை ஷக்தி தான் " என்று கூற எத்தனித்தவளை மற்றவர்கள் அடக்கி வைக்க, அவளிடம் உண்மையை சொல்லும் வகையறியாது  தவிர்த்தாள்..மித்ராவிற்கு என்ன தோன்றியதோ , சட்டென மதுவை கட்டி கொண்டாள்..

" உன் மனசுக்கு , நீ ஆசை பட்டது மட்டும்தான் நடக்கும் மித்ரா " என்று சூசகமாய் பேசினாள் அவள் ..ஆனால் அதை ஆராயும் நிலையில் இவள் இல்லையே ! 

இங்கு பெண்கள் அனைவரும் வைஷ்ணவி, மித்ராவை கலாய்க்க, ஆதி போனில் வைஷ்ணவியை அழைத்தான் ..

" ஹெலோ "

" ஆதி என்னதிது ?"

" ரெடி ஆகிட்டியா ?"

" ம்ம்ம்ம் "

" ம்ம்ம்ம் "

" என்ன இப்ப போன் ?

" கல்யாணத்துக்கு முன்னாடி  உன்கிட்ட ஒன்னு சொல்லணும் வையூ "

" என்ன "

" சொல்லிடவா ?"

" ம்ம்ம்ம்"

"  ஐ லவ் யூ "

" ஓகே "

" ஒய் என்னடி ?"

"  நான் கல்யாணத்துக்கு அப்பறம் தான் சொல்லுவேன் "

" எனக்காக ஒரு தடவ சொல்ல மாட்டியா " என்றான் அவன் காதலுடன்

" வாழ்நாள் முழுக்க சொல்றேன் ஆதி .. ஐ லவ் யூ " என்று சொல்லி வெட்கத்துடன் போனை வைத்தாள் வைஷ்ணவி.. அனைவரின் கவனமும் மித்ரா மீது இருந்ததால் தப்பித்தோம் என்று நினைத்து பெருமூச்சு விட்டவள் முகில்மதியின் குறும்பான பார்வையில் முகம் சிவந்தாள்.. முகில்மதியும் மித்ராவிடம் உண்மையை சொல்ல துடித்தாள்..என்னதான் இருந்தாலும் செல்ல அண்ணியாச்சே!

அட என்னம்மா இப்படி பண்ணுறிங்கலேம்மா! பூனைக்கு யாருத்தான் மணி கட்ட போறீங்க என்று நினைத்த ப்ரோகிதர் " பெண்ணை அழைச்சிட்டு வாங்க " என்ற வார்த்தையில் தானே அந்த பொறுப்பை ஏற்றுகொண்டார்.. விழிகளால் தேன்நிலாவை தேடினாள் சங்கமித்ரா .. அவள் நினைத்த பொழுதில் நிற்பேன் என்பதுபோல மதியுடன் மித்ரா அருகில் வந்தாள்..

" தேனு "

" சங்கு ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்வ் ... " என்று அவளை அணைத்து கொண்டாள்.. தாயின் அரவணைப்பு, தோழியின் உரிமை சகோதரியின் ஆதரவு அனைத்தையும்  அவள் அணைப்பே அளித்தது .. மதியழகன் பாதம் பணிய சென்றாள் மித்ரா ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.