(Reading time: 9 - 17 minutes)

ல்லாம் பேசி விட்டேன் என்பது போல எழுந்து கொண்டார் மதியழகன். அவருடைய ரூமிற்கு சென்று விட்டார்.

அன்னையுடன் பேசியபடி பாலை அருந்தியவன், அவர் சொன்னதை புன்னகையுடன் கேட்டு கொண்டிருந்தான்.

"அவ ரொம்ப அழகு டா, நாங்க பார்த்த கூட இந்த காலத்தில இப்படி நீலமா முடி இருக்க மாதிரி மாமியாருக்கு பயந்து சேர்ல ஒழுங்கா உட்கார கூட தயங்குற மாதிரி ஒரு பொண்ண பார்திருபோமோ என்னவோ? என்ன அடக்கம் அமைதி.. என்ன அத்தை நு கூப்பிட்ட ஏன் அம்மான்னு கூப்பிட மாட்டியா அப்படின்னு கேட்ட நல்லா யோசிச்சு அத்தம்மா நு கூப்பிடற"

'....."

"ரொம்ப நல்லா பொண்ணு டா பார்த்த உடனே எனக்கு பிடிச்சுருச்சு நம்ம சரோவ"

"சரோ வா?"

"ஆமாடா ஸ்ரவந்திய சுருக்கி அப்படி கூப்பிட்டேன், ரொம்ப பயந்து போயிருக்க போல டா உனக்கு சொல்ல வேண்டியது இல்ல ஆனாலும் கொஞ்சம் பொறுமையாய் நடந்துக்கோ துருவா"

"சரிம்மா போதும் உன் மருமக புராணம், அவளுக்கு சாப்பாடு என்கிட்டையே கொடு, நான் கொடுக்கிறேன்"

"இதோ வரேன்"

இரண்டே நிமிடத்தில் தட்டில் அனைத்தையும் நிரப்பி அவன் கையில் கொடுத்து விட்டு கணவனை சாப்பிட அழைக்க சென்று விட்டார் மதுமதி.

'ஸ்ரவந்தி'

அம்மா சொன்னதை எல்லாம் அசை போட்ட படி அவள் பெயரை மனதுள் சொல்லி பார்த்து கொண்டே மாடி படிகளில் ஏறினான் மிதுர்வன்.

அறையை திறந்து கொண்டு உள்ளே சென்றவன் சோபாவில் கால்களை குறுக்கி அவள் தூங்கி கொண்டிருப்பதை பார்க்க 'அவ குழந்தை மாதிரி இருக்கா டா' அம்மாவின் வார்த்தைகள் எதிரொலித்தன.

சாப்பாடை வைத்து விட்டு அவளை எழுப்பலாம் என அவன் நினைத்து திரும்ப ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவளை பார்த்து எண்ணத்தை மாற்றி கொண்டான்.

 படுக்கையில் ஏறி படுத்தவன் இரவு முழுவதும் அவள் அப்படியே உறங்கினால் என்ன ஆவது அவளை பார்த்து கொண்டே சிந்தித்து கொண்டிருந்தான்.

ரோஜா வண்ண அழகிய சுடிதாரில் நகைகள் அனைத்தையும் கழட்டி வைத்து விட்டு அவன் கட்டிய தாலி தொங்கி கொண்டிருக்க இவன் புறமாய் சாய்ந்து படுத்து கொண்டிருந்தவளை பார்க்க பார்க்க மிதுர்வனுக்குள் வியப்பு. ஒரே நாளில் வாழ்வே மாறி போக கூடுமா?

கூடும் என்பது தான் அவன் அறிந்தது ஆயிற்றே, ஆயினும் இது எவ்வகையான மாற்றம். அவள் நாளை காலையில் எழுந்து கேள்விகள் கேட்டாள் என்ன பதில் சொல்வான்?

வாழ்கையில் எத்தனையோ முறைகளில் ஜெயித்தவன் இரண்டாவது முறையாக தோற்க போகிறான் ஒரு பெண்ணிடம், முதல் முறை அவன் தோற்றது?!

நினைவுகள் பின்னோக்கி அவனை இழுத்து செல்ல வலுக்கட்டயமாக அதனோடு செல்ல மறுத்து விழிகளை திருப்பி மீண்டும் அவள் புறம் பார்த்தான்.

'அம்மா சொன்னது போல நல்லா பெண்ணாக தெரிகிறாள் சொன்னால் புரிந்து கொள்வாள்' என மனதிற்குள் சொல்லி கொண்டான்.

ஏதோ கனவு காண்பாள் போல, முகம் பல விதமான உணர்ச்சிகளை மாறி மாறி வெளிபடுத்தியது. அதை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான் மிதுர்வன். ஒரு கட்டத்தில் அவள் கால்களை நீட்ட இடம் போதாமல் திருபி படுக்க எத்தனிக்க சோபாவின் நுனிக்கு வந்து விட்டிருந்தாள்.

சிறிது அசைந்தாலும் விழுந்து விடுவாள் எழுப்புவதே மேல் என அவன் எழுந்து அருகில் செல்ல, சற்றே புரண்டவள் கீழே விழும் முன் தூக்கம் கலையாமல் மென்மையாக பிடித்து கொண்டான்.

சட்டென கீழ அமர்ந்து அவளை பிடித்ததில் அவன் கைகளில் மொத்தமாக விழுந்திருந்தாள் அவள். அருகில் அவளை சில வினாடிகள் பார்த்தவன். அவள் எழாத வண்ணம் மெதுவாக தூக்கி மெத்தையில் படுக்க வைத்தான். கையை எடுக்கும் போது திரும்பி படுத்தவள்

"ஸ்ஸ் ம்ம்ம் வலிக்குது"

என முகம் சுருங்கி சினுங்கியவளை புருவங்கள் முடிச்சிட பார்த்தவன் பின் சிரிப்புடன் அவள் தலை வருடி

"சாரி மா"

என கூறி விட்டு அவனும் அவள் அருகில் ஆனால் அவள் மேல் கை கூட படாத வண்ணம் படுத்து உறங்கி போனான்!!!

அதிகாலை வேளையின் நிசப்தத்தில் லேசான முனகல் மற்றும் சிணுங்கல் ஒலியில் தூக்கம் களைவதை உணர்ந்தவன் அவள் புறமாய் திரும்பி படுத்தான். சற்று நேரத்தில் அப்படியே உறங்கி போனான்.

சூரியனின் ஒளி ஜன்னல் வழியே உள்ளே நுழைய, தனக்கு எப்போதும் வரும் கனவு அன்றும் வர ஓடி கொண்டே இருந்தவள் ஒளி போல தெரிந்தவனின் முகம் காண இன்னும் வேகமாக ஓடுகிறாள்.

இதோ இதோ நெருங்கி விட்டாள். அவனும் இவளை நோக்கி நடக்க ஆதரமாய் இருக்கும் அவனை பற்றி கொள்ள எண்ணி அவன் சட்டையை இருக்கமாய் பற்றி கொண்டு நிம்மதி மூச்சு விடுகிறாள்!!!

மெதுவாக அவள் கன்னம் தட்டி யாரோ  எழுப்ப விழித்து பார்த்தது அருகில் மிதுர்வன் முகத்தை.

அவன் சட்டையை இறுக்கமாக பற்றி கொண்டு அவன் மெத்தையில் அவனுடன் அவன் கைகளுக்குள் இருக்கும் தன்னை மலங்க மலங்க பார்த்தவளை ரசிப்பது முகத்தில் தெரியாத வண்ணம் ரசித்து கொண்டிருந்தான் மிதுர்வன்.

மீண்டும் அவள் அவன் முகம் பார்க்க மென்மையாய் அவள் நெற்றியில் பட்டும் படாமல் முத்தமிட்டு அவள் கண்களுக்குள் பார்த்தான் மிதுர்வன்!!!!

தொடரும்…

Episode # 02

Episode # 04

{kunena_discuss:804}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.