(Reading time: 21 - 42 minutes)

"ப்புறம் என்ன மாப்பிள்ளை, எங்களுக்கு இதில் திருப்தியே.. மேற் கொண்டு ஆக வேண்டியதை நீங்கள் தான் எடுத்து செய்ய வேண்டும்.. எங்கள் பக்கம் யாருமில்லை.. உங்கள் பெற்றோர் ஊரிலிருந்து வந்தவுடன் அவர்கள் சம்மதத்துடன் எது எது எப்படி என்று பேசலாம்.. அதற்குள் என் ஆபரேஷனும் முடிந்து விடும்"

"சரி பாட்டி.. நீங்கள் ஓய்வெடுங்கள்.. இந்த திருமணம் பற்றி அனைத்தையும் முடிவு செய்து விட்டு உங்களிடம் கூறுகிறேன்.. நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்.. எல்லாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்.. நீங்கள் துளசியை மட்டும் அனுப்பினால் போதும்.. திருமணத்திற்கு பிறகு நீங்களும் எங்களுடன் வந்து விட வேண்டும்" என்றான் கரண்.

"ஆகட்டும்" என்ற பாட்டியிடம் விடை பெற்று கொண்டு எழுந்து வெளியே சென்றான்.. அவனைத் தொடர்ந்த சரணும் பாட்டியிடமும், துளசியிடமும் தலையாட்டி விட்டு தமையனை பின் பற்றினான்.

அவர்கள் பின்னால் சென்ற டாக்டர். பாலாஜி, "சரண் ஒரு நிமிடம் எனது அறைக்கு வா." என்று கூறி சென்று விட்டார். சரண் டாக்டரை சந்தித்து விட்டு மீண்டும் அலுவலகம் செல்லுவதால், கரணை டிரைவருடம் வீட்டிக்குச் செல்லுமாறும், பின்னர் அலுவலகத்திற்கு காரை அனுப்பி விடுமாறும், இங்கிருந்து தான் ஆட்டோவில் போய் விடுவதாக சொல்லி விட்டு, டாக்டரின் அறைக்குள் நுழைந்த சரண், அங்கே டாக்டர். சுபாவும் அமர்ந்திருப்பதைக் கண்டான்.

ந்த இரவு நேரத்தில், தனிமையில் அமர்ந்திருந்த கரண், .. அன்றைய நிகழ்வுகளை மனதில் ஓட விட்டவாறு இருந்தான்.. துளசியின் பாட்டியை பார்த்தவன் ஏதோ ஒரு வித மனகலக்கத்திற்கு ஆளானான்.. 'பாவம் பாட்டி, அவர்களும் என்னனப் போலத்தானே.. வாழ்வா சாவா என்று தெரியாமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பெண் துளசி தான் எவ்வளவு பெரிய மனது படைத்தவள்.. கொஞ்சமும் தன்னலம் இன்றி பிறருக்காக யோசிக்கிறாள்.. இவ்வளவு பெரிய மனம் படைத்தவள் இந்த திட்டத்திற்கு சம்மதித்ததே என் பாக்கியம்.. எப்படியும் இவள் நினத்ததை முடிக்கும் அளவுக்கு திறமை படைத்தவள்.. என் பிரதியை உலகுக்கு, நிச்சயம் அளித்து விடுவாள்.. என் தாயின் முகத்தில் இன்று கூட எவ்வளவு வாட்டம்.. அவர்கள் நிச்சயம் என் குழந்தையைப் பார்த்தால் சந்தோஷப்படுவார்கள்'.

'ஆமாம், நாம் முதலில் முடிவு செய்தது தான் சரி.. பெயரளவில் துளசியை முதலில் ஒரு பதிவு கல்யாணம் செய்யலாம், அது கூட அவள் மீண்டும் வற்புறுத்தினால்.. பிறகு, துளசி என் குழந்தையை சுமப்பது உறுதியானவுடன், நம் பெறோருக்கு அவளை அறிமுகப் படுத்தி எல்லாவற்றையும் கூறி, அவர்கள் சம்மதத்துடன், பாட்டியின் முன் ஊரறிய கல்யாணம் செய்வோம்.. ஒரு வேளை, ஏதோ காராணத்தினால் அவள் கருதரிக்கா விட்டால், பிரச்சனை அத்துடன் முடிந்து விடும்.. துளசியும் சுதந்திரமாகி விடுவாள்.. பரவாயில்லை, நமக்கு வாரிசு கிடைக்க வில்லையென்றாலும், போகும் முன் ஓர் நல்ல காரியம் செய்தோம் என எண்ணி, பாட்டிக்கு கொடுத்த பணத்தை நம் புண்ணிய லிஸ்ட்டில் சேர்த்து விட வேண்டியது தான்'..

'இப்பொழுதே நம் பெறோருக்கு, துளசியை அறிமுகப் படுத்தினால், இந்த நிகழ்வை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்ளுவார்களோ? .. நம் தாயார், என்ன தான் படித்த பண்புள்ள புத்திசாலியாக இருந்தாலும், இதை எப்படி எதிர் கொள்ளுவார்கள் எனத் தெரியவில்லை.. ஊராருக்கு குழந்தை உருவானதை அறிவிக்கும் முன் திருமணம் , இது தானே அவள் நிபந்தனை.. இதில் தேவையில்லாமல், இப்பொழுதே நம் பெற்றோர்களிடம் எதற்கு கூற வேண்டும்?.. என்று சிந்தித்து கொண்டிருந்தவனின் தன் அறை கதவு தட்டப் படுவது கேட்டு, "யெஸ், கம் இன்" என்றான்.

உள்ளே நுழைந்த சரணக் கண்டவன், "வாடா.. ஹாஸ்பிடலில் இருந்து, நேராக அலுவலகம் சென்று விட்டாய்.. ஹௌ வாஸ் யுவர் டே?" என்று கேட்டான்.. அதற்கு சரண்,

"ஓ.கே. டா. எது என்னவானாலும் கொஞ்சம் நாட்களாகவே என்னால் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடிய லில்லை.. உன்னை நினைத்து, நினைத்து ஒரு வேலையும் செய்ய பிடிக்க வில்லை.. அதை விடு, நீ பாட்டியுடன் டயம் ஸ்பென்ட் செய்தாயே? என்ன நினைக்கிறாய்? கல்யாணம் குறித்து ஏதாவது யோசித்தாயா?.. என்ன டிசெட் செய்து இருக்கிறாய்?..டாக்டர் ப்ராசஸ் துடங்கி விட்டார்கள் போல, என்னை அழைத்து பேசினார்" என்று கூறியவனைப் பார்த்த கரண்,

"ஆமாம் டா.. துளசிக்கும் டிரிட்மெண்ட் ஸ்டார்ட் ஆக ஆரம்பித்து விட்டது என்றார் டாக்டர்.. இந்த மாதம் பார்பார்கலாம், மற்றபடி இதில் வேறு எதுவும் எனக்கு புரியவில்லை " என்றான் சோர்வாக.

"அப்படியா, என்ற சரண், டாக்டர். சுபா என்னை அழைத்தவர், இதன் சாத்திய கூறுகளைப் பற்றி விளக்கினார்.. இந்த சுழற்சியில் இது சாத்தியப்படுமா? என்பதைத் தெரிந்து கொள்ள அட்லீஸ்ட் 20 நாட்கள் தேவை என்றார்.. மற்றபடி எப்படியும் உன் விந்தணுக்களை சேகரித்து பத்திரப்படுத்தி வைத்திருப்பதால் இன்னும் ஓர் முறை முயற்சி செய்யக் கூடும்.. பார்க்கலாம்"

கரணோ "எனக்கு ஒரே குற்ற உணர்ச்சியாகவே இருக்கிறதுடா.. மிகவும் நல்ல பெண்.. ஒரு வயதான பாட்டிக்காக இவ்வளவு பாடுபடுகிறாளே, இவளை நான் நல்ல முறையில் சந்தித்து இருக்கக் கூடாதா?.. இறைவன் எனக்காகவே அனுப்பிய தேவதை என்று தான் நினைக்க வேண்டும்.. மற்றபடி என் வாரிசு அவள் வயிற்றில் உருவாகி விட்டால், அவளை நல்ல படியாக கவனித்து அவளின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.. இதற்கு நடுவில் நான் இறந்து போய் விட்டால் கூட , நீ தான் அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.. அவள் கருத்தரித்து விட்டால், அவள் விருப்பப்படி, நம் பெறோரிடம் உண்மையை கூறி விடலாம்.. அவர்கள் நிச்சயம் அவளை ஏற்றுக் கொள்ளுவார்கள்.. ஒரு வேளை, நான் குழந்தை பிறக்கும் முன் இறந்து விட்டாலும், அவர்கள் அவளை கை விட மாட்டார்கள்.. பிறகு, அவளுக்கு ஒரு வேலையோ, அல்லது, வேறு ஒரு திருமணமோ அவள் விருப்பப் படி கேட்டு நீதான் செய்ய வேண்டும்.. பின்னர், என் குழந்தையையும் சிறிய தகப்பன் என்ற முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.. எனக்குத் தெரியும் நீ வித்யாசம் பார்க்க மாட்டாய் என்று".. ஏதேதோ பேசியவாறு இருந்தான்.

அதற்கு சரண், "ஏண்டா, இவ்வளவு டிப்ரஸ்டாக இருக்கிறாய்?.. இன்று உனக்கு என்னவாயிற்று?.. ஹாஸ்பிடலிலேயே கவனித்தேன்.. உன் நடையில் சிறு தள்ளாட்டத்தை.. சில நாட்களாக நானும் கவனித்து தான் வருகிறேன்"

"ஆமாம்டா, நீ யூகித்தது சரி தான்.. டாக்டர் சொன்னபடி என் நேரம் சீக்கிரமாகவே முடியப் போகிறது.. எனக்கு இப்பொழுதுதெல்லாம், கொஞ்சம் மூச்சு திறணல் வேறு தொடங்கி விட்டது.. அதனால் தான் இன்று டாக்டரிடம் சென்றேன்.. கவுண்ட் டவுன் ஸ்டார்ட்டட், என்றார்.. எது எப்படியோ, என் குழந்தை உருவாகி விட்டால், அதை வளர்ப்பது உன் பொறுப்பு.. எனக்கு சத்தியம் செய்".. என கை நீட்டியவனின் கையை பிடித்த சரண்,

"இதை நீ கேட்கவும் தான் வேண்டுமா?.. நீ என்னில் பாதியல்லவா.. அந்த விதத்தில் என் ரத்தத்தை நான் எப்படி கை கழுவுவேன்.. எதையேனும் சிந்தித்து மனதை உழப்பிக் கொள்ளதே.. நிம்மதியாக தூங்கு.. வரும் விடியல் உனக்கு நல்லதாக இருக்கட்டும்".. என்று கூறி கனத்த மனத்துடன் தன் அறைக்கு திரும்பினான்.

நாட்கள் மெதுவாக ஊர்ந்தன.. பதினைந்து நாட்கள் கழிந்த பின், அந்த காலை பொழுதின் பரபபரப்பில் சர்ரென்று வேகமாக நுழைந்தது அந்த கார்.. ஓட்டியவன் மனமோ, அதைவிட வேகமாக சிந்தித்து கொண்டிருந்தது.. அன்று காலையில், டாக்டர் பாலாஜின் போன் காலில் உறக்கம் விழித்தவனுக்கு, அவர் சொன்ன விஷயத்தை உள் வாங்கிக் கொள்ளவே சில வினாடிகள் பிடித்தன.. பின் கடவுளே, ஒன்றும் ஆகக் கூடாது.. இப்பொழுது ஏதாவது ஏடாகூடம் ஆகி விட்டால், மொத்த காரியமும் கெட்டு விடுமே.. என்று நினைத்தவன்,..டாக்டரிடம் நான் உடனே அங்கு வருகிறேன்..என்று வேகமாகக் கிளம்பினான்.. யாரிடமும் சொல்லாமல் காரை எடுத்து கொண்டு விரைந்து ஹாஸ்பிடல் சென்றடைந்தான்..

அந்த ஸ்பெஷல் வார்டின் ரூமிற்கு உள்ளே நுழைந்தவனை, கவலை ததும்பிய முகங்கள் எதிர் கொண்டன. கண்களில் நீர் ததும்ப துளசி, பக்கத்தில் நின்றிருந்தனர் அந்த தம்பதிகள்.. எதிர்புறம், டாக்டர் சுதாகரும், பாலாஜியும், சுபாவும் நின்றிருந்தார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.