(Reading time: 21 - 42 minutes)

"என்னவாயிற்று பாட்டிக்கு?" என்று கேட்டவனை ஒரு ஆழப் பார்வைப் பார்த்த டாக்டர். பாலாஜி "திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு விட்டது.. பிராண வாயு அளவு குறைந்து விட்டது. பி.பி. அதிகமாக இருக்கிறது.. எங்களால் முடிந்த அளவுக்கு போராடிக் கொண்டு இருக்கிறோம்.. பாட்டி, உன்னிடம் ஏதோ பேச வேண்டும் என்கிறார்கள்.. இன்று சாயங்காலத்துக்குள் உடல் தேறி விட்டால் நாளைக்கு காலை எமர்ஜென்சி ஆபரேஷன் செய்ய வேண்டும்" என்று சொல்கிறார் டாக்டர். சுதாகரன்".

பாட்டியின் அருகே சென்றவனை, தன் கலங்கிய கைகளால் நோக்கிய அந்த மூதாட்டி, "மாப்பிள்ளை என் மனம் ஏதோ சஞ்சலமாகவே இருக்கிறது.. ரொம்பவும் பயமாக இருக்கிறது.. மூச்சு திணறலோடு பேசியவர் கையைப் பிடித்தவன், "பாட்டி, நீங்கள் கவலை படாமல் உறங்குங்கள்.. உங்களுக்கு ஒன்றும் ஆகாது." என்று சொல்லி ஆறுதல் கூறினான்.

அதற்கு பாட்டி, "இல்லை. மாப்பிள்ளை.. எனக்கு ஏதேதோ தோன்றுகிறது.. நான் இனி பிழைக்கப் போவதில்லை என்று......என் பேத்தியை இப்படி நிராதரவாக விட்டு விட்டு போகிறேனே என என் மனம் அடித்து கொள்கிறது.. அவளை மணக் கோலத்தில் காண வேண்டும் என்று என் உயிரை பிடித்து கொண்டிருக்கிறேன்" என்று கூறியவர்,

"எனக்கு தெரியும், நான் இப்படி கேட்பது தவறென்று.. ஆனாலும், கேட்கிறேன்.. என் பேத்தியை இப்பொழுதே இங்கேயே என் கண்ணெதிரிலேயே மணந்து கொள்வாயா அப்பா? , அவளை ஒரு நல்ல இடத்தில் ஒப்படைத்துவிட்டேன் என்ற நிம்மதியும், மற்றும் நானும் ஒரு கன்னி கடன் கழிந்ததென நிம்மதியாக இருப்பேன் என்று கூறி விட்டு பார்த்தார்".

அதிர்ந்து நோக்கியவனை யாசிப்பவர் போல் பார்த்து, "உன்னை மடிப்பிச்சை கேட்கிறேனப்பா.. இந்தப் பொறுப்பை , இவளை மணந்து கொண்டு, எனக்கு நிம்மதியை கொடு" என்றார்.

துளசியோ அதிர்ந்து, "பாட்டி, என்ன பேசுகிறீர்கள் நீங்கள்.. எப்படியும், நாங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்.. நீங்களும் அதை பார்க்கத் தான் போகிறீர்கள்.. திடீர் என்று இப்படி திருமணம் என்று கூறினால், அவர் தான் என்ன செய்வார்.. அவரின் பெற்றோரும், உடன் பிறந்த சகோதரரும் வர வேண்டாமா? அவர் நிலையை சற்று யோசியுங்கள், என்றவள்,.. திடீரென்று எப்படி ஏற்பாடு செய்ய முடியும்?"

பக்கத்து வீட்டு மாமா உடனே, "அம்மா துளசி, பாட்டியின் நிலைமை உனக்குத் தெரியாதா? என்ன தான் அனைவரும் இருந்தாலும், தான் முன்னின்று உன் திருமணத்தை நடத்த வேண்டும் என நினைகிறார்.. எது எப்போது எப்படி நடக்க வேண்டும் என்று ஏற்கனவே ஒருவன் கணித்து வைத்து விட்டான்.. நீ சற்று பொறும்மா" என்று அவளுக்கு கடிவாளம் போட்டார்.

இவர்கள் சம்பாஷனைகளைக் கேட்டவன், "பாட்டி, என் அம்மா, அப்பா கூட இங்கு இல்லை.. அவர்களை இங்கு உடனே வர வழிக்கலாம் என்றால் கூட , அவர்கள் ஊரிலேயே இல்லை.. மற்றபடி, தாலி, மாலை என்று எங்கே போவது? என்றவனை இடை மறித்த பாட்டி,

"துளசி, என் பையின் உள்ளே ஒரு சிறிய பர்ஸ் இருக்கிறது.. அதை எடுத்து வா." என்றார்.

மறுத்து பேசாமல் பர்ஸை கொடுத்த துளசியிடம், அதை திறந்து கொடு என்றவர், அவள் கொடுத்தவுடன் அதிலிருந்த பொன் தாலியை கையில் எடுத்தவர், திகைப்புடன் பார்த்திருந்த துளசியிடம்,

"துளசி, இது உன் தாயின் தாலிக் கொடி.. என் மகனின் விருப்பப்படி உனக்கென விட்டு விட்டு சென்றது.. இதை உரிய நேரத்தில் உன்னிடம் கொடுக்குமாறு என்னிடம் சத்தியம் வாங்கியிருந்தார்கள்.. அதனால் தான் நான் எந்த கஷ்டத்திலும் இதை விற்கவோ, வைக்கவோ மனம் வரவில்லை எனக்கு.. இங்கு நீ என்னை அழைத்து வரும் போதே இதை மாமியிடம் கூறி எடுத்து வைக்கச் சொல்லி விட்டேன்.. ஆபரேஷன் போகும் முன் இதை உன்னிடம் ஒப்படைக்க நினைதிருந்தேன்.. இப்போது வேளை வந்து விட்டது, இந்த திருமாங்கல்யதிற்கு " என்றவர்

"துளசி, இந்தத் தாலியை மாமா, மாமியிடம் கொடு.. ஒன்றும் பேசாமல் அவர் சொன்னதை செய்தாள் துளசி.. மாமாவிடம் திரும்பிய பாட்டி, நன்கு மங்களகரமாக வாழ்பவர்கள் நீங்கள்.. நீங்கள் இருவரும் இந்த பொன் தாலியை ஆசிர்வதித்து மாப்பிள்ளையிடம் கொடுங்கள்.. மாப்பிள்ளை, இதை என் மன சாந்திக்காக துளசியின் கழுத்தில் அணிவிப்பீர்களா?.. உங்கள் பெற்றோர் வந்த பின் முறையாக பதிவு திருமணம் செய்து கொள்ளுங்கள்".. என்று நா தழுதழுக்க கூறினார்.

திகைத்து நின்றவனின் கையில் திரு மாங்கல்யத்தை பய பக்தியோடு கொடுத்தார் மாமா.. பின் அனைவரையும் பார்த்து , டாக்டர் நீங்கள் குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் செய்யுங்கள்.. கையில் தாலியுடன் செய்வதறியாது நின்றிருந்தவன், பாட்டி துளசியின் கழுத்தில் அணிவிக்குமாறு கோர, எதைப் பற்றியும், யோசிக்க அவகாசம் இல்லாமல், அனைவரையும் ஒரு வெற்று பார்வை பார்த்தவன், மெல்ல துளசியின் கழுத்தில் அந்த மாங்கல்யத்தை அணிவித்தான்.

டாக்டர்கள் இருவரும், "கங்கராஜுலேஷன்ஸ், உங்கள் இருவருக்கும்.. நீங்கள் பல காலம் ஒன்றாய் நன்றாய் வாழ வேண்டும் " என்று கூறி,

"பாட்டி, இப்போது சந்தோஷம் தானே" என்று கேட்டவர்களை நிதானமாக நோக்கிய பாட்டி.. "ஆமாம், மிகவும் சந்தோஷம்" என்று அதை கூறி முடிக்கும் முன்னரே சரிந்தது அவர் தலை.

இனி....

Episode # 04

Episode # 06

{kunena_discuss:881}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.